search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திசையன்விளையில் அகில இந்திய மின்னொளி கபடி போட்டி கால்நாட்டு விழா
    X

    கால்நாட்டு விழா, நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமையில் நடந்த காட்சி.


    திசையன்விளையில் அகில இந்திய மின்னொளி கபடி போட்டி கால்நாட்டு விழா

    • தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 69-வது பிறந்தநாளை முன்னிட்டு அகில இந்திய அளவிலான மாபெரும் மின்னொளி கபடி போட்டி திசையன்விளையில் வருகிற 11, 12, 13, 14-ந்தேதிகளில் நடக்கிறது.
    • இப்போட்டியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் வெற்றிபெறும் அணிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சுழற்கோப்பைகள் வழங்கப்பட உள்ளன.

    திசையன்விளை:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 69-வது பிறந்தநாளை முன்னிட்டு அகில இந்திய அளவிலான மாபெரும் மின்னொளி கபடி போட்டி திசையன்விளையில் வருகிற 11, 12, 13, 14-ந்தேதிகளில் நடக்கிறது.

    இப்போட்டியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் வெற்றிபெறும் அணிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சுழற்கோப்பைகள் வழங்கப்பட உள்ளன.

    நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

    இப்போட்டிக்கான கால்நாட்டு விழா, நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமையில் நடந்தது. இதில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, ராதாபுரம் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கமலா நேரு, முன்னாள் அப்புவிளை பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.சுரேஷ், முன்னாள் லயன்ஸ் கவர்னர் சுயம்புராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    போட்டிக்கான ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் செய்துள்ளார்.

    Next Story
    ×