search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போட்டி"

    கீழப்பழுவூர் மீரா மகளிர் கல்லூரியில் , மாவட்ட அளவிலான மேடை நாடகப் போட்டி

    அரியலூர், 

    அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அடுத்த மீரா மகளிர் கலைக் கல்லூரியில் , மாவட்ட சுகாதாரத் துறை, தமிழ்நாடு எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான மேடை நாடகப் போட்டி நடைபெற்றது.

    இளைஞர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இப்போட்டிக்கு கல்லூரி செயலர் எம்.ஆர்.கமல்பாபு தலைமை வகித்தார். மாவட்ட திட்ட மேலாளர் சுமதி, கல்லூரி முதல்வர் விஜி தொடக்கி வைத்து பேசினார்.

    தொடர்ந்து மாணவ, மாணவிகளின் மேடை நாடகப் போட்டிகள் நடத்தப்பட்டது. பிற்பகலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட சுகாதாரப்

    பணிகள் இயக்குநர் அஜிதா கலந்து கொண்டு பேசினார்.

    அதன்பின்னர், போட்டிகளில் வெற்றிப் பெற்ற அணி விவரங்களை அறிவித்தார். அதில் மேடை நாடகப் போட்டியில் மீரா மகளிர் கல்லூரி முதல் இடத்தையும், அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி இரண்டாம் இடத்தையும், தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலைக் கல்லூரி மூன்றாம் இடத்தையும் பெற்றது.

    • சிலம்பம் போட்டி நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை சிவம் மார்ஷியல் ஆர்ட்ஸ் மாஸ்டர் பரமசிவம் செய்திருந்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் சிவம் மார்ஷியல் ஆர்ட்ஸ், இ.சி.ஏ. அகாடமி மற்றும் நேரு யுவ கேந்திர இணைந்து மாவட்ட அளவில், சிலம்ப கிரேடிங் போட்டி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடத்தியது. இந்த போட்டியை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணா தொடங்கி வைத்தார். இப்போட்டியில் சிவ கங்கை, காளையார் கோ வில், கல்லல், மானா மதுரை, திருப்புவனம், சிங் கம்புணரி, திருப்பத்தூர், காரைக்குடி ஆகிய பகுதி களில் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் களுக்கு பதக்கங்கள் வழங் கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சிவம் மார்ஷியல் ஆர்ட்ஸ் மாஸ்டர் பரமசிவம் செய்திருந்தார்.

    • 14 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் ஸ்ரீ சாய் கிருஷ்ணன் 3-ம் இடம் பிடித்தார்.
    • மாணவி செரினா சோபி பட்டர்பிளை 50 மீட்டர், 100மீட்டர், 200 மீட்டரில் முதலிடம் பிடித்தார்.

    தென்காசி:

    தென்காசி அச்சம்பட்டியில் எவரெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான ஜீடோ போட்டி நடைபெற்றது.

    இதில் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். 14 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் ஸ்ரீ சாய் கிருஷ்ணன் 3-ம் இடமும், 17 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் ஜேக்கப் ஜாய் குமார் 2-ம் இடமும், ஜெபின் 3-ம் இடமும் பெற்றனர். அதேபோன்று தென்காசி வருவாய் மாவட்ட அளவிலான மாணவிகளுக்கான நீச்சல் போட்டி குற்றாலம் செய்யது மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் 17 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் மாணவி செரினா சோபி பட்டர்பிளை 50 மீட்டர், 100மீட்டர், 200 மீட்டரில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் ரெ.ஜே.வே.பெல், செயலாளர் கஸ்தூரி பெல்,முதல்வர் டாக்டர் அலெக்சாண்டர், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.

    • உடுமலையில் நிக் நேம் சுபாஷ் சேனா தேவி அறக்கட்டளை சார்பில் மாநில அளவிலான மகளிர் கைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.
    • உடுமலை அமராவதி சைனிக் பள்ளி ஆங்கில ஆசிரியர் இளமுருகு, டிரஸ்டிகள் கணேஷ் , பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

     உடுமலை:

    உடுமலையில் நிக் நேம் சுபாஷ் சேனா தேவி அறக்கட்டளை சார்பில் மாநில அளவிலான மகளிர் கைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. ரேணுகாதேவி பிறந்தநாளை முன்னிட்டு தன்னம்பிக்கை வாரம் கொண்டாடப்படுவதை ஒட்டி அவர் நினைவாக மாநில அளவிலான மகளிர் கைப்பந்து போட்டி உதவியுடன் 3 ம் தேதி முதல் 5ம் தேதி வரை இரவு பகல் போட்டிகளாக நடக்கிறது. இதில் எஸ்டிஏடி. எக்ஸ்எல்என்சி கல்லூரி, ஜேபிஆர். கல்லூரி ,பாரதியார் கல்லூரி, பனிமலர் கல்லூரி, பி .ஆர் .கே .கல்லூரி, போஸ்டல் டிபார்ட்மென்ட் ஆகிய மகளிர் அணிகள் பங்கேற்றுள்ளன.

    இரண்டாம் நாள் போட்டியில் சென்னை ஜே .பி .ஆர் .கல்லூரி, பாரதியார் கல்லூரி ஆகியவை கலந்து கொண்டு விளையாடின. இதில் அதிக புள்ளிகளை பெற்று ஜே. பி .ஆர் .கல்லூரி வெற்றி பெற்றது. இதில் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்ட ஜேபிஆர். கல்லூரி மாணவி ஆதர்யராய்க்கு காசோலை மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. இதில் உடுமலை சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை நிறுவனர் கே.ஆர்எஸ். செல்வராஜ் ,உடுமலை அமராவதி சைனிக் பள்ளி ஆங்கில ஆசிரியர் இளமுருகு, டிரஸ்டிகள் கணேஷ் , பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் பரிசு வழங்குகிறார்
    • ஏற்பாடுகளையும் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணியினர் செய்து வருகின்றனர்.

    மார்த்தாண்டம்:

    கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கால்பந்து போட்டிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நாளை நடைபெறுகிறது. மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் இந்த கால்பந்து போட்டிகள் நாளை (4-ந்தேதி) காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

    தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினர் ரெமோன் மனோதங்கராஜ் கால்பந்து போட்டிகளை தொடங்கி வைக்கிறார். மாலையில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வைத்து நடைபெறும் விழாவில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்குகின்றார். பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் கால்பந்தாட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் மெடல்கள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    இந்நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பா ளர்கள், விளை யாட்டு அலுவலர்கள், ஆர்வலர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொள்கின்றனர். கலைஞர் நூற்றாண்டு விழா கால்பந்தாட்ட போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணியினர் செய்து வருகின்றனர்.

    • சிவகங்கையில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா தொடங்கியது.
    • வருகிற 21 முதல் 24-ந்தேதி வரை மாநில அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் பங்குபெறுவார்கள்.

    சிவகங்கை

    சிவகங்கையில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா தொடங்கியது. இதில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஒன்றியங்களைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 5500 பேர் பங்கு பெறுகின்றனர். நவம்பர் 3-ந் தேதி வரை மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடைபெறுகின்றன. வட்டார அளவில் நடந்த கலைப் போட்டிகளில் 12 ஒன்றியங்களைச் சேர்ந்த 54,000 அரசு பள்ளி மாணவர்கள் பங்கு பெற்றனர். இதில் ஒன்றிய அளவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கலைத்திறன் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மொத்தம் 188 போட்டிகள் நடைபெற உள்ளன. 6 முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9-10-ம் வகுப்பு ஒரு பிரிவாகவும், பிளஸ்-1- பிளஸ் டூ மாணவர்கள் ஒரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.

    சிவகங்கை மாவட்டத்தில் புனித ஜஸ்டின் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித ஜஸ்டின் மேல்நிலைப்பள்ளி, புனித மைக்கேல் மேல்நிலைப்பள்ளி, மன்னர் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மருது பாண்டியர் நகர் ரோஸ்லின் கல்லூரி ஆகிய 7 இடங்களில் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நாலுகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பாக கிராமிய நடனமாடி பாராட்டு பெற்றனர்.

    போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகள் வரும் 21 முதல் 24-ந்தேதி வரை மாநில அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் பங்குபெறுவார்கள்.

    • ஒற்றுமை தின ஓட்டம் நடைபெற்றது.
    • முடிவில் பயிற்றுனர் ஜெயக்கொடி நன்றி கூறினார்.

    திருத்துறைப்பூண்டி:

    இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் தேசிய ஒற்றுமை தினம் மற்றும் தூய்மையே சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மக்கள் கல்வி நிறுவன இயக்குனர் பாலகணேஷ் தலைமை தாங்கினார்.

    ஸ்கார்டு செயலாளர் பாபுராஜன் முன்னிலை வகித்தார்.

    தேசிய ஒற்றுமை தினத்தில் நாம் அனைவரும் விருப்பு வெறுப்புகளை கடந்து முன்னேற்ற பாதையில் செல்லவும், தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பை காக்க வேண்டும் என உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    பின்னர், ஒற்றுமை தின ஓட்டம் நடைபெற்றது.

    முன்னதாக மக்கள் கல்வி நிறுவன பயிற்றுநர் சத்தியகலா அனைவரையும் வரவேற்றார்.

    முடிவில் பயிற்றுனர் ஜெயக்கொடி நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் கனகதுர்கா, பயிற்றுனர்கள், பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • திருவாரூர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 4-ம் இடம் பிடித்தது.
    • இறுதி போட்டியில் வெற்றிபெற்று ரூ.1 லட்சம் ரொக்க பரிசை தட்டிச்சென்றது.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி அக்.27-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. இதில், சென்னை, கோயமுத்தூர், திருச்சி, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 40-க்கும் மேற்பட்ட அணியினர் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சிக்கு, தி.மு.க. மாவட்ட செயலாளர் நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் குத்தாலம் பி.கல்யாணம், முன்னாள் எம்எல்ஏக்கள் குத்தாலம் க.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் க.அறிவுச்செல்வன் போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தார். ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் வரவேற்றார்.

    முதல்நாள் போட்டியை மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம் துவக்கி வைத்தார்.நாக்-அவுட் முறையில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில், தமிழ்நாடு காவல்துறை அணியும் வெண்ணங்குழி கனகு பிரதர்ஸ் அணியும் மோதின. இதேபோல், சென்னை கட்டங்குடி பிர்ஸ்ட் யுனிவர்சிட்டி அணியும், திருவாரூர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் மோதின. போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணியும், பிர்ஸ்ட் யுனிவர்சிட்டி அணியும் வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.

    இப்போட்டியை சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தொடங்கி வைத்து பேசினார்.

    தொடர்ந்து நடைபெற்ற போட்டியின் முடிவில், தமிழ்நாடு காவல்துறை அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று ரூ.1 லட்சம் ரொக்க பரிசை தட்டிச் சென்றது.

    சென்னை கட்டங்குடி பிர்ஸ்ட் யுனிவர்சிட்டி அணி இரண்டாம் இடம் பிடித்து ரூ 70ஆயிரம் ரொக்கப் பரிசினையும், வெண்ணங்குழி கனகு பிரதர்ஸ் அணி மூன்றாம் இடம் பிடித்து ரூ 60,000 ரொக்க பரிசினையும், திருவாரூர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி நான்காம் இடம் பிடித்து ரூ. 40,000 ரொக்க பரிசை பெற்றன. மேலும் காலிறுதிப் போட்டியில் வெளியேறிய நான்கு அணிகளுக்கு தலா ரூ.10,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

    பரிசுகளை திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ வழங்கி பாராட்டி பேசினார்.

    இதில், முன்னாள் எம்எல்ஏக்கள் சத்தியசீலன், ஜெகவீரபாண்டியன், மாவட்ட துணை செயலாளர்கள் ஞானவேலன், செல்வமணி மற்றும் ஒன்றிய, நகர மற்றும் பேரூர் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    • வேலாயுதம் பாளையத்தில் மாவட்ட அளவிலான மல்யுத்த போட்டி நடைபெற்றது
    • நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பஙகேற்பு

    கரூர், 

    மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையேயான மல்யுத்த போட்டிகள் புகழூர் நகராட்சி அரசு காந்தியார் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் கலந்து கொண்டு மல்யுத்த போட்டியைத் தொடங்கி வைத்தார்.

    காலை முதல் மாலை வரை நடைபெற்ற மல்யுத்த போட்டியில் நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 8 வயது முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு வகையான போட்டிகளில் விளையாடினார்கள். மல்யுத்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம், கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் புகழூர் நகராட்சி கவுன்சிலர்கள் நவீன், நந்தினி, தலைமை ஆசிரியை தமிழரசி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மல்யுத்த போட்டி நடுவர்கள், ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த வாரம் பள்ளி அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றது.
    • கலைத்திருவிழாவில் பங்கேற்கும் மாணவிகள் சாலையில் திரளாக சென்றதைப் பார்த்து பொதுமக்கள் ரசித்தனர்.

    உடுமலை:

    உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உடுமலை வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் கடந்த 18 ந்தேதி முதல் இன்று வரை நடைபெறுகிறது. உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த வாரம் பள்ளி அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றது. பள்ளி அளவில் சுமார் 400 மாணவிகள் கலந்து கொண்டனர்.ஒவ்வொரு பிரிவிலும் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் வட்டார அளவிலான கலைத் திருவிழாவில் பங்கேற்கின்றனர்.நேற்று நடைபெற்ற 9-ம்,10 ம் வகுப்பிற்கான போட்டிகளில் மொத்தமாக 74 மாணவிகள் பங்கேற்றனர்.பள்ளி தலைமை ஆசிரியர் ப. விஜயா ஆலோசனையின் பேரில் தமிழ் ஆசிரியர்கள் வே.சின்னராசு,ஆர். ராஜேந்திரன், ஆசிரியை வை.விஜயலட்சுமி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தனர்.கலைத்திருவிழாவில் பங்கேற்கும் மாணவிகள் சாலையில் திரளாக சென்றதைப் பார்த்து பொதுமக்கள் ரசித்தனர்.

    • அண்ணா சைக்கிள் போட்டி சிக்கண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் தொடங்கியது.
    • முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் 4 முதல் 10 இடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.250 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

    திருப்பூர்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பூர் மாவட்ட விளையாட்டு பிரிவின் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் மாவட்ட அளவிலான அண்ணா சைக்கிள் போட்டி சிக்கண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் தொடங்கியது.

    13 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் பெரியபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தீக்ஷனா, விஜயலட்சுமி, ஜெய்ஸ்ரீராம் அகாடமி மாணவி பொன்ரிகாஷினி ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர். 15 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் பெரியபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி திவ்யா முதலிடத்தையும், சன்மதி 2-வது இடத்தையும், அவினாசிபாளையம் ஜெய்ஸ்ரீராம் அகாடமி பள்ளி மாணவி நேகா 3-வது இடத்தையும் பெற்றனர். 17 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் அஞ்சலி சில்வி, மதுமிதா, ராகவர்த்தினி ஆகியோர் முறையே முதல் 3 இடங்களை பிடித்தனர்.

    மாணவர்கள் பிரிவில் 13 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் திருப்பூர் சின்னச்சாமியம்மாள் மாநகராட்சி பள்ளி மாணவர் சாம் பிரசாத் முதலிடத்தையும், காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் விஸ்வா 2-வது இடத்தையும், ஜீவானந்தம் 3-வது இடத்தையும் பிடித்தனர். 15 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் காங்கயம் எஸ்.ஆர்.ஆர். மெட்ரிக் பள்ளி மாணவர்கள் முகுந்தன் முதலிடத்தையும், அஸ்வின் 2-வது இடத்தையும், காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஹரிஷ் 3-வது இடத்தையும் வென்றனர். 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் பள்ளி மாணவர் மணிபிரசாத் முதலிடத்தையும், பெருமாநல்லூர் அரசு பள்ளி மாணவர் கோடீஸ்வரன் 2-வது இடத்தையும், நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி மாணவர் முகமது இப்ராகிம் வாசிக் 3-வது இடத்தையும் வென்றனர்.

    வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. சிக்கண்ணா அரசு கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், உடற்கல்வி இயக்குனர் ராஜாராம், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன், மாவட்ட கபடி நடுவர் குழு தலைவர் முத்துசாமி, நேரு யுவகேந்திரா ராஜேந்திரன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.

    முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் 4 முதல் 10 இடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.250 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    • மாநில அளவிலான வீல்சேர் கிரிக்கெட் போட்டி 17-ந் முதல் 19-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • போட்டிக்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு நிதிஉதவி செய்யும்படி கோரிக்கை.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு வீல் சேர் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் வேலூரில் மாநில அளவிலான வீல் சேர் கிரிக்கெட் போட்டி 17-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்தப் போட்டியில் தஞ்சையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான வீல் சேர் கிரிக்கெட் வீரர் அருண்குமார் என்பவர் கலந்து கொண்டு விளையாடுகிறார்.

    அவருக்கு போட்டிக்குத் தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு நிதி உதவி செய்யும்படி அனைத்திந்திய சட்ட உரிமைகள் மற்றும் மக்கள் பாதுகாப்பு கவுன்சில் சார்பாக மாநிலத் தலைவர் சாலமன், மாவட்டத் தலைவர் மோகனசுந்தரம் ஆகியோர் தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனிடம் கோரிக்கை வைத்தனர்.

    அந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மாற்றுத்திறனாளியான அருண்குமாருக்கு போட்டிக்குத் தேவையான உபகரணங்கள் வாங்க ரூ.15 ஆயிரம் உதவித்தொகையை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் வழங்கினார்.

    அப்போது மாவட்டத் தலைவர் மோகனசுந்தரம், மாவட்ட செயலாளர் விஷ்ணு தேவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×