search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சாரம்"

    • மின்சாரம் தாக்கியதில் செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே கரிக்குளம் எம்.ஆர்.எம் காலனி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 55).

    தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் உள்ள மின்விசிறியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென செல்வத்தை மின்சாரம் தாக்கியது.

    இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருவிடைமருதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து செல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், இதுகுறித்து திருவி டைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 4 பேரும் பெரியசாமியின் உடலை அருகில் உள்ள முட்புதரில் மறைய வைத்துவிட்டு சென்றனர்.
    • தலைமறைவாக உள்ள ராஜகுருநாதனை போலீசார் வலை வீசி தேடி வருகின்ற னர்.

    கள்ளக்குறிச்சி,அக்.22-

    கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே ஜா. ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகுருநாதன் (வயது 61). விவசாயி. இவருக்கு தியாக துருகம் அருகே அசகளத்தூர் கிராம எல்லையில் விவசாய நிலம் உள்ளது. இவர் நேற்று முன்தினம் ஜா.ஏந்தல் பகுதி யைச் சேர்ந்த பெரியசாமி (40), மணிகண்டன் (41) அசகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் (55), ராஜேந்திரன் (46) ஆகியோ ரை தனது விவசாய நிலத்திற்கு வேலைக்கு அழைத்துச் சென்றார். வேலை முடிந்ததும் அனை வரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் ராஜகுருநாதன் மின் மோட்டாரில் இருந்து ஒயர் மூலம் மின்சாரம் எடுத்துச் சென்று அருகில் உள்ள மயூரா ஆற்றில் மின்சாரம் செலுத்தி 5 பேரும் மீன்பிடித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி யதில் பெரியசாமி கீழே கல்லின் மீது விழுந்ததில் தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து போனதாக கூறப்படு கிறது. 

    இதனைத் தொடர்ந்து ராஜகுருநாதன், மணி கண்டன், காமராஜ், ராஜேந்திரன் ஆகிய 4 பேரும் பெரியசாமியின் உடலை அருகில் உள்ள முட்புதரில் மறைய வைத்துவிட்டு சென்றனர். மீண்டும் நள்ளிரவில் ராஜகுருநாதன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் மயூரா ஆற்றிற்கு சென்று அங்கு முட்புதரில் மறைய வைத்திருந்த பெரியசாமி யின் உடலை மோட்டார் சைக்கிளின் நடுவே உட்கார வைத்துக்கொண்டு சென்றனர். ராஜகுருநாதன் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். மணிகண்டன் பின்னால் அமர்ந்து கொண்டு உடலை பிடித்துக் கொண்டு அசகளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் உடலை போட்டுவிட்டு சென்று விட்டனர். இறந்து கிடந்த பெரிய சாமி யின் உடலைப் பார்த்த அப்பகுதி மக்கள் வரஞ்சரம் போலீசாருக்கு தகவல் தெரி வித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று பெரிய சாமியின் உடலை கைப்பற்றி கள்ளக்கு றிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசா ரணை செய்ததில் ராஜகுரு நாதன் நிலத்திற்கு விவசாய வேலைக்கு ஆட்களை அழைத்து சென்றதும். வேலை முடிந்ததும் ஆற்றில் மின்சாரம் செலுத்தி மீன் பிடிக்கும் போது இறந்து போனதும் தெரியவந்தது. இதுகுறித்து பெரியசாமி மனைவி சுமதி கொடுத்த புகாரின் பேரில் காமராஜ், ராஜேந்திரன், மணிகண்டன் ஆகிய 3- பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலை மறைவாக உள்ள ராஜகுருநாதனை போலீசார் வலை வீசி தேடி வருகின்ற னர்.

    • நரிக்குடி அருகே லாரியில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • இந்த சம்பவம் குறித்து அ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நரிக்குடி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள எழுவணி - ரெட்டைகுளம் கிராமத்திற்கு இடையே 3 கி.மீ., தொலைவிற்கு சாலை புதுப்பிக்கும் பணிக்காக ஜல்லிக்கற்கள் விரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.இதற்காக டிப்பர் லாரிகள் மூலம் ஜல்லிக்கற்கள் கொண்டு வரப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை எழுவணி அழகு நாச்சியம்மன் கோவில் அருகே நடைபெ றும் சாலைப்பணிக்காக டிப் பர் லாரியில் கொண்டு வரப்பட்ட ஜல்லிக்கற்களை ரோட்டில் விரிப்பதற்காக டிப்பர் லாரியின் டிரைவ ரான அருப்புக்கோட்டை முத்துராமலிங்கபுரம் பகுதி யை சேர்ந்த சரவணக்குமார் என்பவர் அங்கிருந்த டிரான் ஸ்பார்மரின் மேலே சென்ற உயர் அழுத்த மின் வயரை கவனிக்காமல் டிப்பர் லாரி யின் ஜாக்கியை தூக்கியவா றே லாரியை இயக்கியதாக கூறப்படுகிறது.

    அப்போது எதிர்பாராத விதமாக டிரான்ஸ் பார் மரின் மேலே சென்று கொண்டிருந்த மின் வயரில் டிப்பர் லாரி உரசியதில் லாரி முழுவதும் மின்சாரம் பாய்ந்து முன்பக்க டயர்கள் இரண்டும் பயங்கர சத்தத்து டன் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் லாரி டிரைவர் சரவணக்குமார் பலத்த காயமடைந்தார்.இதனையடுத்து விபத்தில் சிக்கி படுகாயமடைந்த அரை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.மேலும் அங்கு நிறுத்தி வைக் கப்பட்டிருந்த காண்ட்ராக்ட ருக்கு சொந்தமான டூவீல ரும் இந்த சம்பவத்தில் திடீ ரென தீப்பிடித்து எரிந்தது.

    இந்த சம்பவம் குறித்து அ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மழை நின்றபின் குழந்தை லோகிதா வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தது.
    • அருகில் இருந்த கம்பியை தொட்ட போது மின்சாரம் தாக்கி குழந்தை தூக்கி வீசப்பட்டது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அடுத்த பெருமகளூர் பேரூராட்சி கல்யாண ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த கதிரவன் - பிரியா தம்பதியரின் குழந்தை லோகிதா ( வயது 2).

    பெருமகளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை பலத்த மழை பெய்து வந்தது.

    மழை நின்றபின் குழந்தை ேலாகிதா வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தது.

    அப்பொழுது எதிர்பாராத விதமாக வீட்டின் அருகில் இருந்த கம்பியை தொட்ட போது அதிலிருந்து மின்சாரம் தாக்கி குழந்தை யோகிதா தூக்கி வீசப்பட்டது.

    உடனடியாக குழந்தையை மீட்ட அக்கம் பக்கத்தினர் பெருமகளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    தகவல் அறிந்த பேராவூ ரணி போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • வியாழக்கிழமை நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் நடைபெற்று வருகிறது.
    • மின் நுகர்வோர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின், நேரில் வந்து தெரிவிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தஞ்சாவூர் செயற்பொறியாளர் கலைவேந்தன் வெளியிட்டு ள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தஞ்சாவூர் மின் பகிர்மான வட்டத்தில், மேற்பார்வை பொறியாளர் தலைமையில், ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை அன்று நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் நடைபெற்று வருகிறது.

    அதன்படி நாளை ( வியாழக்கிழமை ) நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை தஞ்சாவூர் செயற்பொறியாளர் அலுவலகம், எண்.1 வல்லம் ரோடு, தஞ்சாவூர் அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் நடைபெற உள்ளது.

    எனவே வல்லம், மின்நகர், செங்கிப்பட்டி, வீரமரசன்பேட்டை, சுள்ளப்பெரம்பூர், திருக்கானூர்பட்டி வடக்கு தஞ்சாவூர், குருங்குளம், மருங்குளம், மெலட்டூர், புறநகர் திருவையாறு, நகர் திருவையாறு, புறநகர் திருக்காட்டுப்பள்ளி, நகர் திருக்காட்டுப்பள்ளி, நடுக்காவேரி பகுதி அலுவலக ங்களைச் சார்ந்த மின் நுகர்வோர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின், நேரில் வந்து தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மின் ஊழியர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்கு
    • அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    என்.ஜி.ஓ.காலனி :

    சுசீந்திரம் அருகே உள்ள பரப்புவிளையை சேர்ந்தவர் ஜெயசிங், கட்டிட தொழிலாளி. இவரது மகன் விஷ்வா (வயது 15). இவன் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    நேற்று இவன், தனது நண்பர்களுடன் பழை யாற்றில் பெருக்கெ டுத்து ஓடும் வெள்ளத்தை பார்க்க சென்றான். வேகமாக சென்றபோது எதிர்பாராத விதமாக சறுக்கி விழுந்த விஷ்வா, அருகில் உள்ள மின் கம்பத்தை பிடித்துள் ளான். அப்போது மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்தான்.

    அவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மின் ஊழியர்களின் கவனக் குறைவே, மாணவன் விஷ்வா மின்சார தாக்குத லுக்கு ஆளானதற்கு கார ணம் என அந்தப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

    மேலும் அவர்கள் நாகர் கோவில்-கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் ஆசிராமம் சந்திப்பு பகுதி யில் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்ட னர். அப்போது அங்கு வந்த சுசீந்திரம் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் செயல்படும் கட்டிடத்திற்கு மின் இணைப்பு கொடுத்த போது, ஒரு வயர் கீழே விழுந் துள்ளது. அதனை முறையாக சரி செய்யாமல், மின் கம்பத்தில் மின் ஊழியர்கள் சுற்றி வைத்துச்சென்றனர். இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்ட போதும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. அந்த மின்கம் பத்தை மாணவன் விஷ்வா தொட்டதால் தான் மின்சா ரம் தாக்கி உள்ளது. எனவே மின் ஊழியர்களின் கவ னக்குறைவே இந்த விபத் துக்கு காரணம் என்றனர்.

    இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துச்சாமி விசாரணை நடத்தி மின் ஊழியர்கள் ஆண்டாள்புரம் கெர்வின் (26), குலசேகரன்புதூர் சதீஷ் (40) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    • உளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி பலியானார்.
    • கணபதி பாண்டூர் பகுதியில் உள்ள சக்திவேல் என்பவர் வீட்டில் கட்டிட வேலை பார்த்து வந்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா உ.நெமிலி பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது 28)கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று வழக்கம் போல் நெமிலி அருகே பாண்டூர் பகுதியில் உள்ள சக்திவேல் என்பவர் வீட்டில் கட்டிட வேலை பார்த்து வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கொடுத்த புகாரின்பேரில் உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குணபாலன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாளை 13ந் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
    • திருப்பூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் பங்கேற்று, மின்நுகா்வோா் குறைகளைக் கேட்டறிந்து நிவா்த்தி செய்கிறாா்.

    அவிநாசி:

    அவிநாசி மங்கலம் சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், மின்கோட்டசெயற்பொறியாளா் அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நாளை 13ந் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

    இதில், திருப்பூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் பங்கேற்று, மின்நுகா்வோா் குறைகளைக் கேட்டறிந்து நிவா்த்தி செய்கிறாா்.

    இதில், மின்நுகா்வோா் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அவிநாசி மின் கோட்ட செயற்பொறியாளா் பரஞ்சோதி தெரிவித்துள்ளாா். 

    • மின்சாரம் தாக்கியதில் கபிலேஷ் சம்பவ இடத் திலேயே இறந்தார்.
    • அவர்களது குடும்பத்தினரிடம் மேல் சிகிச்சைக்காக நிதி உதவிகளை வழங்கி னார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாட்டம் பரமக்குடி அருகே உள்ள மேலாய்க்குடி கிராமத்தில் கடந்த 7-ம் தேதி இரவு நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழா உறியடி நிகழ்ச்சியில் பரமக்குடி சோமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன்கள் கோகுல், ராகுல் (10) கபி லேஷ் (7) ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கிய தில் கபிலேஷ் சம்பவ இடத் திலேயே இறந்தார். இதில் படுகாயம் அடைந்த கோகுல், ராகுலை மதுரை தனியார் மருத்துவ மனையில் அனு மதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். அவர்களை அமைச்சர் ராஜகண்ண ப்பன் சார்பில் அவரது மகன் மருத்துவர் திலீப் ராஜகண்ணப்பன் இறந்த கபிலேஷ் குடும் பத்தினிரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள கோகுல், ராகுலை பார்த்து விட்டு அவர்களது குடும்பத்தினரி டம் மேல் சிகிச்சைக்காக நிதி உதவிகளை வழங்கி னார்.

    இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • புது வீட்டுக்கு வந்த உமாபதி, ஈரக்கையோடு சுவிட்ச் போர்டில் பிளக்கை சொறுகினார்.
    • சிகிச்சை பலனின்றி உமாபதி பரிதாபமாக இறந்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த பிரதாபராபுரம் ஊராட்சி நடுத்தெருவை சேர்ந்தவர் தியாகராஜன்.

    இவரது மனைவி உமாபதி (வயது 45).

    இவர்கள் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் அந்த வீட்டில் மின்விசிறி போடுவதற்கு சுவிட்ஜ் அமைக்கப்பட்டது.

    அப்போது புது வீட்டுக்கு வந்த உமாபதி, ஈரக்கையோடு சுவிட்ஸ் போர்டில் பிளக்கை சொறுகினார்.

    இதில் மின்சாரம் தாக்கி உமாபதி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி உமாபதி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கீழையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவியின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு ரூ.25 ஆயிரம் வழங்கினார்.
    • ஜோஸ்லின் ஹெனியா செரங்காட்டில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    திருப்பூர்:

    திண்டுக்கல் மாவட்டம் குட்டத்துபட்டியை சேர்ந்தவர் டேவிட்ராஜ்-ரூபிஜெனிபர். இந்த தம்பதியின் மகள் ஜோஸ்லின் ஹெனியா (வயது 14). டேவிட்ராஜ் தனது குடும்பத்துடன் திருப்பூர் செரங்காட்டில் குடியிருந்து வருகிறார்.

    இவருடைய மகள் ஜோஸ்லின் ஹெனியா செரங்காட்டில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளி கழிவறைக்கு சென்ற போது மின்சாரம் தாக்கி காயம் அடைந்து திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மாணவிக்கு செவித்திறன் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

    மேலும் கழுத்து, கை பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த மேயர் தினேஷ்குமார் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து மருத்துவ செலவை முழுமையாக ஏற்றுக்கொண்டார். அது மட்டுமின்றி அந்த மாணவியின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு ரூ.25 ஆயிரம் வழங்கினார்.

    • இருமத்தூர் துணைமின் நிலையத்தில் நாளை 24-ந்தேதி வியாழக்கிழமை மாதாந்திர பரா மரிப்பு பணிகள் நடைபெறு கிறது.
    • நாளை 24-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார விநி யோகம் நிறுத்தம் செய்யப் படுகிறது.

    மொரப்பூர்,  

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் மின்வாரிய கோட்ட செயற் பொறி யாளர் ரவி வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறப்பட்டு ள்ளதாவது:-

    இருமத்தூர் துணைமின் நிலையத்தில் நாளை 24-ந்தேதி வியாழக்கிழமை மாதாந்திர பரா மரிப்பு பணிகள் நடைபெறு கிறது. அதனால் கம்பைநல்லூர், பூமி சமுத்திரம், க. ஈச்சம் பாடி, சொர்ணம்பட்டி, மாவடிபட்டி, மல்ல சமுத்தி ரம், செங்குட்டை, சமத்துவ புரம், அக்ரஹாரம், முத்தம் பட்டி, மல்லம்மா புரம், பள்ளம்பட்டி, பெரிச்சா கவுண்டம்பட்டி, காட்ட னூர், சொர்னம்பட்டி, பட்டாக பட்டி, பெரம் மாண்டப்பட்டி, கெலவள்ளி, கொங்கரப் பட்டி, கூடு துறைபட்டி, பள்ளத்தூர், மரியம்பட்டி, கோணம்பட்டி, காடை யாம்பட்டி, வகுரப்பம்பட்டி, பள்ளிப்பட்டி, இருமத்தூர், வாடமங்கலம், கொன்றம் பட்டி மற்றும் திப்பம்பட்டி ஆகிய கிராமங்களுக்கும் நாளை 24-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார விநி யோகம் நிறுத்தம் செய்யப் படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதே போல் கடத்தூர், ஆர்.கோபிநாதம்பட்டி ஆகிய துணை நிலையத்தில் நாளை மாதாந்தி பராமரிப்பு பணிகள் நடக்கிறது. அதனால் கடத்தூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கடத்தூர், புளியம் பட்டி, ரேக அல்லி, சுங்கர அள்ளி, தேக்கல்நாயக்கன் பட்டி, நத்த மேடு, புதுரெட்டியூர், நல்ல குட்டல அள்ளி, முத்தனூர், மணியம்பாடி, கதிர் நாயக்கன் அல்லி , ராணி மூக்கனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களிலும், ஆர்.கோபிநாதம்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பொம்பட்டி, நவலை, ஆண்டிப்பட்டி, கருத்தங்குளம், சுந்தரம் பள்ளி ஆகிய கிராமங்கள் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கிராமங்களிலும்மின் கம்பிகளின் தரம் உயர்த்தும் வேலைகள் நடைபெறு வதால், நாளை வியாழக் கிழமை 24-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தும் செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறி யாளர் சுரேஷ் தெரிவித்து ள்ளார்.

    ×