என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சாரம் தாக்கி குழந்தை சாவு
    X

    லோகிதா.

    மின்சாரம் தாக்கி குழந்தை சாவு

    • மழை நின்றபின் குழந்தை லோகிதா வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தது.
    • அருகில் இருந்த கம்பியை தொட்ட போது மின்சாரம் தாக்கி குழந்தை தூக்கி வீசப்பட்டது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அடுத்த பெருமகளூர் பேரூராட்சி கல்யாண ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த கதிரவன் - பிரியா தம்பதியரின் குழந்தை லோகிதா ( வயது 2).

    பெருமகளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை பலத்த மழை பெய்து வந்தது.

    மழை நின்றபின் குழந்தை ேலாகிதா வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தது.

    அப்பொழுது எதிர்பாராத விதமாக வீட்டின் அருகில் இருந்த கம்பியை தொட்ட போது அதிலிருந்து மின்சாரம் தாக்கி குழந்தை யோகிதா தூக்கி வீசப்பட்டது.

    உடனடியாக குழந்தையை மீட்ட அக்கம் பக்கத்தினர் பெருமகளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    தகவல் அறிந்த பேராவூ ரணி போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×