search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுசீந்திரம் அருகே மின்சாரம் தாக்கி மாணவன் படுகாயம்
    X

    சுசீந்திரம் அருகே மின்சாரம் தாக்கி மாணவன் படுகாயம்

    • மின் ஊழியர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்கு
    • அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    என்.ஜி.ஓ.காலனி :

    சுசீந்திரம் அருகே உள்ள பரப்புவிளையை சேர்ந்தவர் ஜெயசிங், கட்டிட தொழிலாளி. இவரது மகன் விஷ்வா (வயது 15). இவன் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    நேற்று இவன், தனது நண்பர்களுடன் பழை யாற்றில் பெருக்கெ டுத்து ஓடும் வெள்ளத்தை பார்க்க சென்றான். வேகமாக சென்றபோது எதிர்பாராத விதமாக சறுக்கி விழுந்த விஷ்வா, அருகில் உள்ள மின் கம்பத்தை பிடித்துள் ளான். அப்போது மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்தான்.

    அவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மின் ஊழியர்களின் கவனக் குறைவே, மாணவன் விஷ்வா மின்சார தாக்குத லுக்கு ஆளானதற்கு கார ணம் என அந்தப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

    மேலும் அவர்கள் நாகர் கோவில்-கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் ஆசிராமம் சந்திப்பு பகுதி யில் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்ட னர். அப்போது அங்கு வந்த சுசீந்திரம் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் செயல்படும் கட்டிடத்திற்கு மின் இணைப்பு கொடுத்த போது, ஒரு வயர் கீழே விழுந் துள்ளது. அதனை முறையாக சரி செய்யாமல், மின் கம்பத்தில் மின் ஊழியர்கள் சுற்றி வைத்துச்சென்றனர். இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்ட போதும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. அந்த மின்கம் பத்தை மாணவன் விஷ்வா தொட்டதால் தான் மின்சா ரம் தாக்கி உள்ளது. எனவே மின் ஊழியர்களின் கவ னக்குறைவே இந்த விபத் துக்கு காரணம் என்றனர்.

    இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துச்சாமி விசாரணை நடத்தி மின் ஊழியர்கள் ஆண்டாள்புரம் கெர்வின் (26), குலசேகரன்புதூர் சதீஷ் (40) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    Next Story
    ×