மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கியதில் செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
Published on

கும்பகோணம்:

கும்பகோணம் அருகே கரிக்குளம் எம்.ஆர்.எம் காலனி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 55).

தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் உள்ள மின்விசிறியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அப்போது திடீரென செல்வத்தை மின்சாரம் தாக்கியது.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவிடைமருதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து செல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து திருவி டைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com