search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீலகிரி"

    • தேவா்சோலை பேரூராட்சி மன்றத் தலைவா் வள்ளி திறந்துவைத்தாா்
    • ரூ.30 லட்சம் செலவில் கான்கிரீட் சாலையாக சீரமைக்கப்பட்டு உள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கூடலூா் அடுத்த தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள செம்பக்கொல்லி சாலை, பல ஆண்டுகளாக மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்தது.

    எனவே அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனா். இந்தநிலையில் செம்பக்கொல்லி சாலை தற்போது ரூ.30 லட்சம் செலவில் கான்கிரீட் சாலையாக சீரமைக்கப்பட்டு உள்ளது.

    இதற்கான திறப்பு விழா நடந்தது. இதில் தேவா்சோலை பேரூராட்சி மன்றத் தலைவா் வள்ளி கலந்துகொண்டு கான்கிரீட் சாலையை திறந்துவைத்தாா்.

    நிகழ்ச்சியில் துணைத் தலைவா் யூனஸ்பாபு, பேரூராட்சி உறுப்பினா்கள் மாதேவ், நாசா், ஹனீபா, முகாஷ், ஜோஸ், ரசீனா, ஷாஹினா, ஷாதியா, ரம்ஷீனா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    • தனிப்படை போலீசார் தேடுகிறார்கள்
    • 4 பேரும் நேற்று இரவு சேலாஸ் பகுதியில் சுற்றி திரிந்ததாக தகவல்

    அருவங்காடு,

    குன்னூர் அருகே உள்ள கிளிஞ்செடா எம்.ஜி.ஆர் காலனி சதீஷ் மகன் டேவிட் ஜான் (வயது 15), பாரதி நகர் பாலகிருஷ்ணன் மகன் தர்ஷன் (வயது 15), கிருஷ்ணன் மகன் குணா (வயது 15), முரளி மகன் கதிரேசன் (வயது 15 ) ஆகிய 4 பேரும் சேலாஸ் பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அவர்கள் சம்பவத்தன்று பள்ளிக்கூடத்துக்கு புறப்பட்டு சென்றனர். பின்னர் அவர்கள் மீண்டும் வீடு திரும்ப வில்லை. எனவே அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உறவினர்களின் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர்.

    இதற்கிடையே மாயமான ஒரு மாணவனின் வீட்டில் இருந்து கைப்பட எழுதிய ஒரு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், எங்கள் பெற்றோர்கள் ஒழுங்காக படிக்க வேண்டுமென கூறி அடிக்கடி தொந்தரவு செய்து வருகின்றனர். இதற்காக அவர்கள் எங்களை திட்டுவதுடன் அடிக்கவும் செய்கின்றனர்.

    எனவே எங்களுக்கு வீட்டில் இருக்க பிடிக்கவில்லை. இதனால் நாங்கள் 4 பேரும் வீட்டை விட்டு வெளியேறுகிறோம். எங்களைத் தேட வேண்டாம், மேலும் போலீ சாரிடம் கூறி எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர் கொலகொம்பை போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் தனிப்படை அமைத்து மாயமான 4 மாணவர்களையும் தேடி வருகின்றனர்.

    போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் அவர்கள் 4 பேரும் நேற்று இரவு சேலாஸ் பகுதியில் சுற்றி திரிந்ததாகவும், பின்னர் அங்கு வந்த ஒரு பஸ்சில் ஏறி வெளியூர் சென்றதாகவும் தெரியவந்து உள்ளது.

    எனவே தனிப்படை போலீசார் நீலகிரி மட்டு மின்றி கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம், ஊட்டி ஆகிய பகுதிகளில் உள்ள போலீசாருடன் ஒருங்கிணைந்து மாயமான 4 மாணவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
    • குழந்தைகளின் பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    அருவங்காடு,

    அருவங்காடு கார்டைட் பேக்டரி பகுதியில் உள்ள அங்கூர் வித்யாமந்திர் பள்ளியில் குழந்தைகள் தின விழாவை சிறப்பிக்கும் வகையில், ப்ரீ-கே.ஜி, எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி படிக்கும் குழந்தைகளுக்கான பேச்சுப்போட்டி, கையெழுத்து போட்டி, உச்சரிப்பு போட்டி, மாறுவேடப் போட்டி மற்றும் ஓவிய போட்டிகள் ஆகியவை நடத்தப்பட்டன.

    இந்த போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. முன்னதாக தலைவர் ஸ்ரீமதி ராஷிகோயல், துணைத் தலைவர் மெளஸ்மி மல்லிக் ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    இதில் குழந்தைகளின் பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்
    • 10 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை

    ஊட்டி,

    கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கே.பி.டி.எல் பவுண்டேஷன், ஆல் த சில்ரன் ஒயிட் அரோ டிரஸ்ட், நீலகிரி உதவும் கரங்கள் ஆகியவை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம், கரியசோலை அரசு உயர்நிலை பள்ளியில் நடைபெற்றது. ஆல் த சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் தலைமை தாங்கினார். நீலகிரி உதவும் கரங்கள் அமைப்பு நிர்வாகி சாரதா முன்னிலை வகித்தனர்.

    கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் முகாமினை துவக்கி வைத்தார்.

    ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ குழுவினர் அந்தோனியமமாள், ராகுல் உள்ளிட்டோர் கண் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர். முகாமில் 50க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களில் 10 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    • இந்த ஆண்டு மட்டும் 32 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சம் கடன் வழங்கப்பட்டு உள்ளதாக தகவல்
    • 841 மகளிா் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.59.16 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    ஊட்டி,

    ஊட்டியில் 70-ஆவது கூட்டுறவு வார விழா கலெக்டர் அருணா தலைமையில் நடைபெற்றது. சுற்றுலா அமைச்சா் கா.ராமசந்திரன், ஆ.ராசா எம்.பி. ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடர்ந்து 64 குழுக்களைச் சோ்ந்த 964 பயனாளிகளுக்கு ரூ.6.39 கோடி மதிப்பில் கடனு தவிகள் வழங்கப்பட்டன.

    தொடா்ந்து அமைச்சா் கா.ராமசந்திரன் நிகழ்ச்சியில் பேசியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவு துறை சாா்பில் 20,838 பயனாளிகளுக்கு ரூ.70.57 கோடி மதிப்பில் நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. அதேபோல 3,179 சுய உதவி குழுக்களைச் சோ்ந்த 31,996 பயனாளிகளுக்கு ரூ.89.53 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் 2022-2023-ம் நிதியாண்டில் 28,565 விவசாயிகளுக்கு ரூ.240.74 கோடி பயிா்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது. 2023-2024 நிதியாண்டில் 31.10.2023 வரை மட்டும் 12,072 விவசாயிகளுக்கு ரூ.112 கோடி பயிா்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது.

    இதுதவிர மாற்றுத்திறனா ளிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. உரிய காலத்தில் திருப்பி செலுத்துபவா்க ளுக்கு வட்டி முழுவதும் மானியமாக வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு மட்டும் 32 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சம் கடன் வழங்கப்பட்டு உள்ளது.

    24 விதவைகளுக்கு ரூ.6 லட்சம் கடன் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 841 மகளிா் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.59.16 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    கூட்டுறவுத்துறை மூலம் 258 முழுநேர நியாய விலைக் கடைகள், 77 பகுதி நேர கடைகள் என மொத்தம் 335 ரேஷன் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் 34 நடமாடும் நியாய விலைக் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடா்ந்து தெங்குமரஹாடா, எடப்பள்ளி கூட்டுறவுச் சங்கங்களுக்கு பொருட்களை கொண்டுச் செல்ல வசதியாக 2 புதிய லாரிகள் வழங்கப்பட்டன. பின்னர் அமைச்சரும், எம்.பி.யும் அங்கு அமைக்க ப்பட்டு இருந்த பல்வேறு கண்காட்சி அரங்குகளை பாா்வையிட்டனா்.

    நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், மாவட்ட ஊராட்சித் தலைவா் பொன்தோஸ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதி வாளா் வாஞ்சிநாதன், ஊட்டி ஊராட்சி.ஒன்றிய தலைவர் மாயன், நகராட்சி துணைதலைவர் ரவிக்குமார் உள்பட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

    • கோத்தகிரி ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர் ராஜேஷ்சந்தர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
    • டானிங்டனில் இருந்து புறப்பட்ட ஊர்வலம்காமராஜர் சதுக்கத்தை அடைந்தது

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, எருமாடு ஆகிய பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

    இதன்ஒருபகுதியாக கோத்தகிரி டானிங்டன் பகுதியில் இருந்து புறப்பட்ட அணிவகுப்பு ஊர்வலத்தை கோத்தகிரி ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர் ராஜேஷ் சந்தர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    நிர்வாகிகள் கணேசன், கன்னாவரை ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டானிங்டனில் இருந்து புறப்பட்ட ஊர்வலம், காமராஜர் சதுக்கம், மார்கெட்திடல், பஸ்நிலையம், தாலுகா அலுவலக சாலை, ராம்சந்த் சதுக்கம் வழியாக காமராஜர் சதுக்கத்தை அடைந்தது. தொடர்ந்து அங்குள்ள தனியார் அரங்கில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

    ஆர்.எஸ்.எஸ் பேண்டு வாத்தியத்துடன் சீருடை அணிந்து சென்ற அணிவகுப்பு ஊர்வலத்தில் பெண்கள் உள்பட சுமார் 250 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    ஊர்வலத்தில் ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் உருவப்படம் மற்றும் பாரதா மாதா புகைப்படம் ஆகியவை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது.

    முன்னதாக ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் செல்லும் பாதையை மாவட்ட எஸ்.பி. சுந்தரவடிவேல் ஆய்வு செய்தார்.

    ஊர்வலம் நடை பெறுவதையொட்டி குன்னூர் துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் தலைமையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் என சுமார் 200 மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    • காட்சி முனைக்கு சென்று கிடுகிடு பள்ளத்தாக்கு, நீர்வீழ்ச்சிகளை பார்வையிட்டு மகிழ்ச்சி
    • பகல் நேரத்தில் பனிமூட்டமும் அதிகரித்து இருப்பதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றன

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் தற்போது வெண்மையான மேகமூட்டமும். லேசான சாரல் மழையும், இதமான குளிர்ச்சியும் நிலவுகிறது.

    எனவே தீபாவளி விடுமுறை முடிந்த நிலையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மராட்டிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், குன்னூர் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்து செல்கின்றனர்.

    குன்னூரில் உள்ள லாம்ஸ்ராக் பகுதியில் உள்ள காட்சி முனைக்கு சென்று கிடுகிடு பள்ளத்தாக்கு, ராட்சத பாறைகள், பெண் உறங்குவது போல அமைந்திருக்கும் மலைகள், நீர்வீழ்ச்சிகளை பார்வையிட்டு புகைப்படம் எடுத்து கொள்கின்றனர்.

    தொடர்ந்து அங்கு நிலவும் இதமான தட்பவெப்ப நிலையை அனுபவித்து மகிழ்ந்து வருகின்றனர். குன்னூரில் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது.

    பகல் நேரத்தில் பனிமூட்டமும் அதிகரித்து இருப்பதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மலைப்பாதையில் செல்கின்றன.

    • யானைகளை கையாளும் முறை குறித்து கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் விளக்கம்
    • யானைகள் வழித்தடத்தில் உள்ள தடைகள் குறித்து கல்லூரி பேராசிரியர் பேச்சு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், நாடுகாணி பகுதியில் உள்ள தமிழக வனத்துறைக்கு சொந்தமான ஜீன்பூல் காா்டனில், ஊட்டி அரசு கலைக்கல்லூரி வனஉயிரின உயிரியல்துறை, இந்திய வனஉயிரின அறக்கட்டளை சாா்பில் யானைகள் பாதுகாப்பு கருத்தரங்கு நடைபெற்றது.

    நாடுகாணி வனச்சரக அலுவலா் வீரமணி வரவேற்றாா். கருத்தரங்கில் யானைகள் பாதுகாப்பு, மனிதன்- யானை மோதல், முரண்படும் யானைகளை கையாளும் விதம், களைச்செடிகளால் ஏற்படும் பாதிப்பு, களை மேலாண்மை மற்றும் யானைகளின் வாழ்வியல் முறை போன்ற தலைப்புகளில் கலந்தாய்வு நடைபெற்றன.

    இதன்அடிப்படையில் கூடலூா் வனக் கோட்டத்தில் மனிதன்-யானை மோதலை களைய கருத்துரு வழங்கப்பட்டது. ஊட்டி அரசு கலைக் கல்லூரி வனஉயிரின உயிரியல்துறை தலைவா் ராமகிருஷ்ணன் பேசுகையில், கூடலூா் கோட்டத்தில் 1976-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை வனப்பரப்பில் ஏற்பட்டு உள்ள மாற்றம், பாதிப்புகள், யானைகள் வழித்தடத்தில் உள்ள தடைகள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தாா்.முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் பேசுகையில், மனிதன்-யானை மோதல் ஏற்படும்போது யானைகளை கையாளும் முறை குறித்தும் விளக்கி கூறினார்.

    தொடர்ந்து வன உயிரின மோதல் குறித்த தெளிவுரை, கருத்து பரிமாற்றமும் நடைபெற்றது.

    • ஒவ்வொரு பூத்கமிட்டியிலும் ஆய்வு செய்து புத்தகத்தில் கையெழுத்திட்டனர்
    • சிறப்பாக செயல்பட்ட ஊட்டி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுக்கு பாராட்டு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் ஊட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூத் கமிட்டி, மகளிர் குழு இளைஞர்-இளம்பெண்கள் பாசறை ஆகிய பணிகள் நிறைவுபெற்றன.

    தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகள் அனைத்து பகுதிகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு நடத்தினர்.மாவட்ட பூத்கமிட்டி பொறுப்பாளரும், புரட்சித்தலைவிஅம்மா பேரவை மாநில இணை செயலாளருமான பொன்ராஜா தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் முன்னிலை வகித்தார்.தொடர்ந்து அனைத்து ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகி மற்றும் பொறுப்பாளர்கள் முன்னிலையில் ஒவ்வொரு பூத்கமிட்டியிலும் பொறுப்பாளர் ஆய்வு செய்து புத்தகத்தில் கையெழுத்திட்டார்.

    பின்னர் சிறப்பாக செயல்பட்ட ஊட்டி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாநில எம்.ஜி.ஆர் இளைஞர்அணி பாலநந்தகுமார், மாநில எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தேனாடு லட்சுமணன், மாவட்ட துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் டி.கே.தேவராஜு, பாசறை மாவட்ட செயலாளர் அக்கீம்பாபு, ஊட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் பா.குமார், குந்தா மேற்கு ஒன்றிய செயலாளர் சக்சஸ் சந்தின், பேரூராட்சி செயலாளர் கேத்தி கண்ணபிரான், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் எப்பநாடு கண்ணன், மீனவரணி மாவட்ட செயலாளர் விஷாந்த் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • வரும் நிதியாண்டில் முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க நெடுஞ்சாலைதுறை கோட்டப்பொறியாளர் உத்தரவு
    • மத்திய-மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுகோள்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கூடலூர் தாலுகா, ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட சுண்ணாம்பு பாலம் அருகே பழுதடைந்து கிடக்கும் நெடுஞ்சாலையை சீரமைக்க வலியுறுத்தி ஓவேலி மக்கள் இயக்கம் சார்பில் நீலகிரி மாவட்ட கலெக்டர், தமிழக முதல்-அமைச்சர் மற்றும் பிரதமருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது. அந்த மனுவில் அவர்கள் கூறி இருப்பதாவது:-

    நீலகிரி மாவட்டம் ஓவேலி பகுதியில் கூடலூரில் இருந்து ஆரோட்டுப்பாறை செல்லும் நெடுஞ்சாலையில், சுண்ணாம்பு பாலம் அருகே 500 மீட்டர் தொலைவுக்கு தார்சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.

    எனவே அவற்றை உடனடியாக சீரமைப்பு செய்ய வேண்டும் என அரசுக்கு பல முறை கோரிக்கை விடுத்து உள்ளோம். ஆனாலும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே கூடலூரில் இருந்து ஆரோட்டுப்பாறை செல்லும் அரசு பஸ்கள் மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மேற்கண்ட பழுதடைந்த சாலையின்வழியாகதான் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சென்று வருகின்றன.

    கூடலூர்-ஓவேலி நெடுஞ்சாலையில் பழுது ஏற்பட்ட பகுதிகளை மேம்படுத்த வரும் நிதியாண்டில் முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலைதுறை கோட்டப்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.

    ஆனால் பல மாதங்கள் கடந்தபிறகும் மேற்கண்ட பழுதான சாலைகள் சீரமைக்கப்படவில்லை. எனவே மத்திய-மாநில அரசுகள் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி ஓவேலி சுண்ணாம்பு பாலம் அருகே பழுதடைந்த நிலையில் உள்ள நெடுஞ்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    • பிரதான புல்தரை மைதானத்தில் குடும்பத்தினருடன் நடனமாடி மகிழ்கின்றனர்
    • ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஒரே நாளில், 18 ஆயிரம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தின் முக்கிய வாழ்வாதாரமே சுற்றுலாதான். இதனை நம்பி அங்கு லட்சக்கணக்கானோர் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இங்கு கடந்த சில ஆண்டுகளாக சுற்றுலா வணிகம் களைகட்டி வருகின்றது.

    ஊட்டியில் ஆண்டுக்கு இரண்டு சீசன் என்பது போய் தற்போது வாரஇறுதி. நாட்கள் எல்லாம் சீசன் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.

    அந்தளவுக்கு ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வார இறுதி நாட்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

    அதிலும் குறிப்பாக கேரளா, கர்நாடகா சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஊட்டிக்கு வந்திருந்து அங்கு நிலவும் குளுகுளு சீசனை அனுபவித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    பின்னர் அவர்கள் அங்குள்ள பிரதான புல்தரை மைதானத்தில் குடும்பத்தினருடன் நடனமாடி மகிழ்கின்றனர்.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் விடுமுறை நாளான சனிக்கிழமை ஒரே நாளில், 18 ஆயிரம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    மேலும் ஊட்டி படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா காட்சிமுனை, ஷூட்டிங் மட்டம் உள்ளிட்ட பிற சுற்றுலா தலங்களிலும் கணிசமான அளவில் சுற்றுலா பயணிகளை பார்க்க முடிந்தது.

    நீலகிரி மாவட்டத்துக்கு நவம்பர் மாத குளிரிலும் சுற்றுலாபயணிகள் படை யெடுத்து வருவதால், அங்கு உள்ள வியாபாரிகள் மற்றும் தொழில்முனைவோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • அந்த பகுதி கவுன்சிலரும், நகர தி.மு.க செயலாளருமான ராமசாமி முயற்சிக்கு வெற்றி
    • பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் பணிகள் நடந்து வருகிறது

    அருவங்காடு,

    குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட மவுண்ட் பிளசன்ட் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள கூட்டுறவு பண்டகசாலைக்கு சொந்த கட்டிடம் இல்லை. இதுகுறித்து பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதுகுறித்து அந்த பகுதி கவுன்சிலரும், நகர தி.மு.க செயலாளருமான ராமசாமி, நீலகிரி எம்பி ராசாவிடம் வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து மவுண்ட்பிளசன்ட் பகுதியில் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் கூட்டுறவு பண்டகசாலை கட்டும் பணி நடந்து வருகிறது. இதனை அந்த பகுதி கவுன்சிலர் ராமசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ×