search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீலகிரி"

    • மூடுபனியுடன் கடும்குளிர் கொட்டுகிறது
    • பொதுமக்கள் முன்னெச்சரிகை நடவடிக்கையுடன் செயல்பட வேண்டுமென சுகாதாரத்துறையினர் கூறியுள்ளனர்.

    ஊட்டி, 

    நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்தது. அங்கு தற்போது சாரல் மட்டுமே பெய்கிறது. மேலும் ஊட்டியில் பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக மாலை நேரங்களில் கடுங்குளிர் காணப்படுகிறது.

    எனவே ஊட்டியில் தற்போது நிலவி வரும் மாறுபட்ட காலநிலை கார ணமாக பொதுமக்களுக்கு தலைவலி, காய்ச்சல் மற்றும் வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் அங்கு உள்ள மருத்துவமனை மற்றும் கிளினிக்குகளில் நோயாளி களின் கூட்டம் அதிகளவில் காணப்படு கிறது.

    இதுகுறித்து நீலகிரி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் மாறுபட்ட காலநிலை நிலவுவதால் பொதுமக்க ளுக்கு காய்ச்சல், தலைவலி மற்றும் சளித்தொல்லை போன்ற நோய் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

    எனவே மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மேலும் சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால், பாதிக்கப்ப ட்டோர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.

    மேலும் மாறுபட்ட காலநிலையால் ஏற்படும் நோய் பாதிப்புகளில் இருந்து தங்களை காத்து கொள்ள குடிநீரை நன்றாக காய்ச்சி குடிக்க வேண்டும். சூடான உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதுதவிர காதுகளில் குளிர் காற்று புகாதவகையில் தொப்பி அல்லது மப்ளர் ஆகியவற்றை பயனபடுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    • திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • பொதுமக்கள் வீடுகளிலும் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்

    ஊட்டி, 

    ஊட்டி எல்கில் பகுதியில் முருகன் கோவில் அமைந்துள்ளது.

    இங்கு உலக புகழ் பெற்ற மலேசியா பத்துமலை முருகன் போலவே, 40 அடி உயரத்தில் முருகப்பெருமான் வெளிப்புறத்தில் கம்பீரமாக வேலூன்றி காட்சி அளிக்கிறார்.

    மேலும் இந்த கோவிலில் முருகப்பெருமானின் 6 படைவீடுகளை குறிக்கும் வகையில் 6 மண்டபங்கள், 108 திருநாமங்களை நினைவு கூறும் வகையில் 108 படிகள் ஆகியவை உள்ளன.

    கார்த்திகேயன் பிறந்த நாளே கார்த்திகை தீபமாகக் கொண்டாடப்படுகிறது என்கின்றன புராணங்கள்.

    அதன்படி இந்த திருத்தலம் கார்த்திகை தீபத்திருநாளுக்கு மிகவும் பிரசித்திபெற்ற தலம் ஆகும்.

    ஊட்டி எல்கில் முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்-ஆராதனைகள் நடைபெற்றன. அப்போது திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் மாலை நேரத்தில் திருக்கோவில் வளாகத்தில் தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து மலை உச்சியிலும் மகாதீபம் ஏற்றி வைக்கப்பட்டது.

    தொடர்ந்து ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், தங்களின் வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடுகளை நடத்தினர்.

    • குன்னூரில் தொடர்மழை எதிரொலி
    • சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

    அருவங்காடு,

    குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருவதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    தொடர் மழை காரண மாக மலைப்பா தையில் அவ்வப்போது பாதிப்புகள் ஏற்பட்டு வருவதால் சுற்று லாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வருவதை தற்போது தவிர்க்க வேண்டு மென மாவட்ட நிர்வாகம் அறிவு றுத்தி உள்ளது.

    இந்நிலையில் ஆந்திரா, கர்நாடகா,கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தற்போது கூடலூர் மார்க்க மாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்ப்பதற்காக வருகி றார்கள். இதில் குன்னூர் சிம்ஸ் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்கு ள்ள மினி படகு இல்லத்தில் படகு சவாரி செய்வதற்காக ஆர்வத்துடன் சென்றனர்.

    ஆனால் மழை காரணமாக அங்குள்ள ஏரியில் தண்ணீர் நிரம்பி வழிந்து ஓடுவதால் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதேபோல் குன்னூர் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்த்து ரசிக்க இயலாமல் திரும்பி சென்றனர்.

    • அதிகாலை நேரத்திலும் விரைந்து வந்து நடவடிக்கை
    • தீயணைப்பு படையினருக்கு பொதுமக்கள் பாராட்டு

    அருவங்காடு, 

    குன்னூரில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதில் குன்னூர் நகரப்பகுதி மட்டுமல்லாமல் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.

    இதில் மண் மற்றும் மரங்கள் விழுந்தும் குடியிருப்பு வாசிகள் பெரிதும் பாதிப்புள்ளாகி வருகின்றனர் இதனிடையே குன்னூர் தீயணைப்புத் துறையினர் ஒன்றிணைந்து தனித்தனி குழுவாக பிரிந்து மீட்பு பணிகளில் நேரம் காலம் பாராமல் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    மலைப்பாதை மட்டு மல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் இடர்பாடு களுக்கு இடையே சிக்கி தவிக்கும் பொதுமக்களை மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்கின்றனர்.

    இதில் இன்று அதிகாலை 1 மணி அளவில் குன்னூர் பகுதியில் உள்ள புருக்லேண்ட்ஸ் பகுதியில் ராட்சத மரம் மின் கம்பி மீது சாய்ந்ததால் அப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது.

    அந்த இருட்டு நிறைந்த நேரத்திலும் தீயணைப்புத் துறையினர் நான்கு மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் மரத்தை அகற்றினர். இதனைத் தொடர்ந்து இந்தக் குழுவினர் மாறி மாறி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அதிகாலை நேரத்திலும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறையினரை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

    • பந்தலூரில் சுற்றி திரியும் கரடியை பிடிக்க வனத்துறை மும்முரம்
    • வனச்சரக அலுவலா் சஞ்சீவி தலைமையில் ஊழியர்கள் நடவடிக்கை

    ஊட்டி, 

    நீலகிரி மாவட்டம் பந்தலூா் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் சமீபகாலமாக கரடி நடமாட்டம் அதிகளவில் உள்ளது. எனவே அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனா்.

    இதனால் அவர்கள் ஊருக்குள் திரியும் கரடியைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனா். தொடா்ந்து பந்தலூா் வனச்சரக அலுவலா் சஞ்சீவி தலைமையில் ஊழியர்கள் ரிச்மண்ட் பகுதியில் கூண்டு வைத்து கரடி நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

    • தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தவர் கலைஞர்.
    • கலைஞர் ஆட்சி காலத்தில் அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நகர தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, ஊட்டி பிங்கர்போஸ்ட் திரேசா பள்ளி வளாகத்தில் நடந்தது. நகரசெயலாளர் ஜார்ஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முபாரக், துணை செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் நாசர்அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நீலகிரி எம்.பி. ராசா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, ரூ.2 லட்சம் மதிப்பிலான ப்ரீசர் பாக்ஸ், மருத்துவ உபகரணங்கள் மற்றும் ரூ.6 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    தொடர்ந்து அவர் நிகழ்ச்சியில் பேசுகையில் கூறியதாவது:-

    தமிழக மக்களுக்கு கலைஞர் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். அவரது ஆட்சி காலத்தில் அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டன.

    மேலும் மருத்துவ காப்பீடு, பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றினார். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தவர். அவரது வழியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். எனவே நாம் அவருக்கு துணை நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் அணிகளின் அமைப்பாளர்கள் எல்க்ஹில் ரவி, தீபக், ஊட்டி நகர துணை செயலாளர் கார்ட்ன் கிருஷ்ணர், அவைத்தலைவர் ஜெயகோபி, கவுன்சிலர்கள் தம்பிஇஸ்மாயில், கீதா, வனிதா, செல்வராஜ், மேரிபுளோரினா, அபுதாகீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அருணா வழங்கினாா்.
    • ஒருங்கிணைந்த தோட்டக்கலைத்துறை சாா்பில் ரூ.9.55 லட்சம் மதிப்பில் வேளாண் எந்திரங்கள் அளிக்கப்பட்டன.

    ஊட்டி,

    கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் கலெக்டர் அருணா தலைமையில் நடைபெற்றது.

    அப்போது 159 பயனாளிகளுக்கு ரூ. 97.20 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். இதன்ஒருபகுதியாக மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சார்பில் 9 பேருக்கு ரூ.44.58 லட்சம் மதிப்பில் புதிய வீடுகள், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் 2 பேருக்கு ரூ.20 லட்சம் மதிப்பில் புதிய வீடுகள், குழந்தைகள் பாதுகாப்பு துறை சாா்பில் 2 பேருக்கு ரூ.8 ஆயிரம், பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 4 பேருக்கு ரூ.1 லட்சம் வைப்புத்தொகை பத்திரங்கள் ஆகியவை வழங்கப்பட்டன.

    மேலும் ஆதிதிராவிடர்-பழங்குடியினா் நலத்துறை சாா்பில் 9 பேருக்கு ஓட்டுநா் உரிமம், பிற்பட்டோா்-சிறுபான்மை நலத்துறை சாா்பில் 5 பேருக்கு ரூ. 26,340 மதிப்பில் தையல் எந்திரங்கள், ஒருங்கிணைந்த தோட்டக்கலைத்துறை சாா்பில் ரூ.9.55 லட்சம் மதிப்பில் வேளாண் எந்திரங்கள் அளிக்கப்பட்டன.

    மனுநீதிநாள் முகாமில் தோட்டக்கலை இணை இயக்குநா் ஷிபிலாமேரி, மாவட்ட போலீஸ் டி.எஸ்.பி செந்தில்குமாா், சுகாதாரபணிகள் துணை இயக்குநா் பாலுசாமி, கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா, பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் இப்ராஹிம்ஷா, கூடலூா் நகா்மன்றத் தலைவா் பரிமளா, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் கீா்த்தனா, தேவா்சோலை பேரூராட்சித் தலைவா் வள்ளி, துணைத் தலைவா் யூனஸ்பாபு, ஸ்ரீமதுரை ஊராட்சித்தலைவா் சுனில், மாவட்ட சமூகநல அலுவலா் பிரவீனா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித்திட்ட அதிகாரி தேவகுமாரி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ஷோபனா, கூடலூா் தாசில்தார் ராஜேஸ்வரி உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

    • வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் சுமார் 25 பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    • மேட்டுப்பாளையம் சாலையில் ஏற்பட்ட மண்சரிவினை உரிய நேரத்தில் அப்புறப்படுத்தி, வாகனங்கள் செல்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில், குன்னூர் வட்டத்தில் மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட குயின்ஹில்ஸ் பகுதி தடுப்புச்சுவர், மவுண்ட்பிளசன்டில் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளை சுற்று லாத்துறை அமைச்சர்

    கா.ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி எம்.பி. ஆ.ராசா ஆகியோர் நேரில் பார்வையிட்டு, முத்தாலம்மன் பேட்டை அங்கன்வாடி மையத்தில் தங்கியுள்ள பொதுமக்களை சந்தித்து, அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள்.

    பின்னர், நீலகிரி எம்.பி. ஆ,ராசா நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் சுமார் 25 பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அத்தயாவசிய தேவைகள் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் மாவட்ட நிர்வாகம் 24 மணிநேரமும் மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் சாலையில் ஏற்பட்ட மண்சரிவினை உரிய நேரத்தில் அப்புறப்படுத்தி, வாகனங்கள் செல்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரிய தர்சினி, குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார், குன்னூர் வட்டாட்சியர் கனிசுந்தரம் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சிறுதானிய உணவு திருவிழாவும் நடைபெற்றது
    • 128 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

    அரவேணு, 

    நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டாரத்துக்கு உட்பட்ட அரக்கோடு, கடினமால் மற்றும் குமரமுடி கிராமத்தில் தேயிலை வாரியம் மற்றும் யூ.என்.சி.எஸ் ஆகியவை சார்பில் பழங்குடியினர் பாரம்பரிய விழா அனுசரிக்கப்பட்டது.

    இதில் தேயிலை வாரிய வளர்ச்சி அலுவலர் உமாமகேஸ்வரி, கோத்தகிரி தாசில்தார் கோமதி, கிராம நிர்வாக அலுவலர்கள் தருமன், ஹேமா மற்றும் யூ.என்.சி.எஸ் அமைப்பினர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடந்த கூட்டத்தில் பழங்குடியினருக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    பின்னர் ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு புதிதாக ஆதார் அட்டைவழங்குதல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை வழங்குதல் தொடர்பாக சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

    இதில் 128 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். தொடர்ந்து சிறுதானிய உணவு திருவிழா நடைபெற்றது. இதில் பல்வேறு வகை உணவுப்பொருட்கள் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டன. பின்னர் சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • மஞ்சள் நிறத்தில் கொத்து கொத்தாக வசீகரிக்கிறது
    • சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

    அரவேணு, 

    கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்நாட்டு, வெளிநாட்டு தாவரங்கள் வளர தேவையான காலநிலை நிலவுகிறது. மேலும் இங்கு ஆங்கிலேயர் காலத்தில் நிலச்சரிவை தடுக்கும் வகையில் காட்டு சூரிய காந்தி விதைகள் தூவப்பட்டன.

    இவை தற்போது மண்ணின் உறுதி தன்மையை அதிகரித்து உள்ளன. மேலும் நிலச்சரிவையும் கட்டுப்படுத்தி வருகிறது. கோத்தகிரியில் வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் காட்டு சூரிய காந்தி மலர்கள் பூக்க தொடங்கும். அதன்படி இவை தற்போது கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் வரையிலும், அரவேனு முதல் குஞ்சப்பனை வரையிலும் சாலையோரங்களில் மஞ்சள் நிறத்தில் கொத்து கொத்தாக பூத்துக்குலுங்குகின்றன.

    வாசம் இல்லாத மலராக இருந்தபோதிலுலும் அவை தற்போது காண்போரின் கண்களுக்கு குளிர்ச்சி தரும் வகையில் மலர்ந்து நிற்கின்றன. எனவே அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் காட்டு சூரியகாந்தி மலர்கள் பூத்துக்குலுங்குவதை ரசிப்பதுடன், புகைப்படம் எடுத்தும் மகிழ்ச்சியை பரிமாறி வருகின்றனர்.

    • நீலகிரி மாவட்ட தி.மு.க ஆலோசனை கூட்டம், அவைதலைவர் போஜன் தலைமையில் நடைபெற்றது
    • டேன்டீ தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்-ஆ.ராசா பேச்சு

    ஊட்டி, 

    நீலகிரி மாவட்ட தி.மு.க ஆலோசனை கூட்டம், மாவட்ட அவைதலைவர் போஜன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர்கள் ரவிகுமார், லட்சுமி, மாவட்ட பொருளாளர் நாசர்அலி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் வாசிம் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கழக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி எம்.பி.யுமான ஆ.இராசா கலந்துகொண்டு பேசினார். பின்னர் நடந்த கூட்டத்தில் டேன்டீ தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ், திருத்தப்பட்ட தினசம்பளம் 438 ரூபாய் அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆ.ராசா எம்.பி.க்கு பாராட்டு தெரிவிப்பது,

    கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை தொடர்ந்து சிறப்புடன் நடத்துவது, எம்.பி தேர்தலில் கழக வெற்றிக்கு பாடுபடுவது, சேலத்தில் டிசம்பர் 17-ந்தேதி நடக்க உள்ள தி.மு.க இளைஞரணியின் 2-வது மாநில உரிமை மாநாட்டில் திரளாக கலந்துகொள்வது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் நகர செயலாளர்கள் ஜார்ஜ், ராமசாமி, இளஞ்செழியன், ஒன்றிய செயலாளர்கள் லியாகத் அலி, பரமசிவன், காமராஜ், லாரன்ஸ், நெல்லை கண்ணன், பிரேம்குமார், பீமன், சுஜேஷ், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கருப்பையா, சதக்கத்துல்லா, பில்லன், தொரை, ஷீலாகேத்ரின்,

    பேரூர் கழக செயலாளர்கள் பிரகாஷ்குமார், உதயகுமார், சதீஷ்குமார், நடராஜன், கண்டோன்மென்ட் நகரிய செயலாளர் மார்டின், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் இமயம் சசிகுமார், கோமதி, விவேகானந்தன், வெங்கடேஷ், காந்தல் ரவி, எல்கில் ரவி,

    மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் நவுபுல், பாபு, நாகராஜ், பத்மநாபன், பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள் ராம்குமார், சுனிதா, கீர்த்தனா, மாயன், நகராட்சி தலைவர்கள் வாணீஸ்வரி, ஷீலாகேத்ரின், பரிமளா, சிவகாமி,

    பேரூராட்சி தலைவர்கள் கௌரி, கலியமூர்த்தி, சத்தியவாணி, ஹேமாமாலினி, பேபி, ராதா, ஜெயகுமாரி, சித்ராதேவி, வள்ளி, பங்கஜம் உட்பட நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் தலைமை செயற்குழு உறுப்பினர் திராவிடமணி நன்றி கூறினார்.

    • தேவா்சோலை பேரூராட்சி மன்றத் தலைவா் வள்ளி திறந்துவைத்தாா்
    • ரூ.30 லட்சம் செலவில் கான்கிரீட் சாலையாக சீரமைக்கப்பட்டு உள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கூடலூா் அடுத்த தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள செம்பக்கொல்லி சாலை, பல ஆண்டுகளாக மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்தது.

    எனவே அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனா். இந்தநிலையில் செம்பக்கொல்லி சாலை தற்போது ரூ.30 லட்சம் செலவில் கான்கிரீட் சாலையாக சீரமைக்கப்பட்டு உள்ளது.

    இதற்கான திறப்பு விழா நடந்தது. இதில் தேவா்சோலை பேரூராட்சி மன்றத் தலைவா் வள்ளி கலந்துகொண்டு கான்கிரீட் சாலையை திறந்துவைத்தாா்.

    நிகழ்ச்சியில் துணைத் தலைவா் யூனஸ்பாபு, பேரூராட்சி உறுப்பினா்கள் மாதேவ், நாசா், ஹனீபா, முகாஷ், ஜோஸ், ரசீனா, ஷாஹினா, ஷாதியா, ரம்ஷீனா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    ×