search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டி எல்கில் முருகன் கோவிலில் மகாதீபம்
    X

    ஊட்டி எல்கில் முருகன் கோவிலில் மகாதீபம்

    • திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • பொதுமக்கள் வீடுகளிலும் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்

    ஊட்டி,

    ஊட்டி எல்கில் பகுதியில் முருகன் கோவில் அமைந்துள்ளது.

    இங்கு உலக புகழ் பெற்ற மலேசியா பத்துமலை முருகன் போலவே, 40 அடி உயரத்தில் முருகப்பெருமான் வெளிப்புறத்தில் கம்பீரமாக வேலூன்றி காட்சி அளிக்கிறார்.

    மேலும் இந்த கோவிலில் முருகப்பெருமானின் 6 படைவீடுகளை குறிக்கும் வகையில் 6 மண்டபங்கள், 108 திருநாமங்களை நினைவு கூறும் வகையில் 108 படிகள் ஆகியவை உள்ளன.

    கார்த்திகேயன் பிறந்த நாளே கார்த்திகை தீபமாகக் கொண்டாடப்படுகிறது என்கின்றன புராணங்கள்.

    அதன்படி இந்த திருத்தலம் கார்த்திகை தீபத்திருநாளுக்கு மிகவும் பிரசித்திபெற்ற தலம் ஆகும்.

    ஊட்டி எல்கில் முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்-ஆராதனைகள் நடைபெற்றன. அப்போது திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் மாலை நேரத்தில் திருக்கோவில் வளாகத்தில் தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து மலை உச்சியிலும் மகாதீபம் ஏற்றி வைக்கப்பட்டது.

    தொடர்ந்து ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், தங்களின் வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடுகளை நடத்தினர்.

    Next Story
    ×