search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nigiris"

    • குன்னூரில் தொடர்மழை எதிரொலி
    • சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

    அருவங்காடு,

    குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருவதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    தொடர் மழை காரண மாக மலைப்பா தையில் அவ்வப்போது பாதிப்புகள் ஏற்பட்டு வருவதால் சுற்று லாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வருவதை தற்போது தவிர்க்க வேண்டு மென மாவட்ட நிர்வாகம் அறிவு றுத்தி உள்ளது.

    இந்நிலையில் ஆந்திரா, கர்நாடகா,கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தற்போது கூடலூர் மார்க்க மாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்ப்பதற்காக வருகி றார்கள். இதில் குன்னூர் சிம்ஸ் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்கு ள்ள மினி படகு இல்லத்தில் படகு சவாரி செய்வதற்காக ஆர்வத்துடன் சென்றனர்.

    ஆனால் மழை காரணமாக அங்குள்ள ஏரியில் தண்ணீர் நிரம்பி வழிந்து ஓடுவதால் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதேபோல் குன்னூர் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்த்து ரசிக்க இயலாமல் திரும்பி சென்றனர்.

    • மேற்கு தொடர்ச்சி மலையில் சுமார் 3122 வரையாடுகள் உள்ளதாக தகவல்
    • வரையாடுகளின் வாழிடத்தை பாதுகாத்து மேம்படுத்த வனத்துறை நடவடிக்கை

    ஊட்டி,

    அருவங்காடு கிளை நூலகத்தில் தமிழக வரையாடு தினம் அனுசரிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கிளைமாவட்ட வாசகர் வட்டம் செய்திருந்தது.

    நிகழ்ச்சியில் ஓங்கில் இயற்கை அறக்கட்டளை நிறுவனர் ஆசாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில்,"தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி வரையாட்டை பாதுகாக்கவும், வாழ்விடங்களை மேம்படுத்தவும் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் நீலகிரி வரையாடு பாதுகாப்பு திட்டம் சுமார் 25.14 கோடி செலவில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சுமார் 3122 வரையாடுகள் உள்ளன. அவை 1500 மீட்டர் உயரத்திற்கும் மேல் உள்ள மலைகளில் மட்டும்தான் வாழும். அந்நிய களைச்செடிகள் ஆக்கிரமிப்பு, காட்டுத்தீ ஆகியவை காரணமாக புல்வெளி பரப்புகள் மிகவும் குறைந்து உள்ளதால் வரையாடுகளின் வாழிடம் பாதிக்கப்பட்டு உள்ளது. அதை மேம்படுத்த வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். முடிவில்நூலகர் ஜெயஸ்ரீ நன்றி கூறினார்.

    ×