search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடலூரில் மனுநீதிநாள் முகாமில் ரூ.97.20 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
    X

    கூடலூரில் மனுநீதிநாள் முகாமில் ரூ.97.20 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

    • நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அருணா வழங்கினாா்.
    • ஒருங்கிணைந்த தோட்டக்கலைத்துறை சாா்பில் ரூ.9.55 லட்சம் மதிப்பில் வேளாண் எந்திரங்கள் அளிக்கப்பட்டன.

    ஊட்டி,

    கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் கலெக்டர் அருணா தலைமையில் நடைபெற்றது.

    அப்போது 159 பயனாளிகளுக்கு ரூ. 97.20 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். இதன்ஒருபகுதியாக மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சார்பில் 9 பேருக்கு ரூ.44.58 லட்சம் மதிப்பில் புதிய வீடுகள், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் 2 பேருக்கு ரூ.20 லட்சம் மதிப்பில் புதிய வீடுகள், குழந்தைகள் பாதுகாப்பு துறை சாா்பில் 2 பேருக்கு ரூ.8 ஆயிரம், பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 4 பேருக்கு ரூ.1 லட்சம் வைப்புத்தொகை பத்திரங்கள் ஆகியவை வழங்கப்பட்டன.

    மேலும் ஆதிதிராவிடர்-பழங்குடியினா் நலத்துறை சாா்பில் 9 பேருக்கு ஓட்டுநா் உரிமம், பிற்பட்டோா்-சிறுபான்மை நலத்துறை சாா்பில் 5 பேருக்கு ரூ. 26,340 மதிப்பில் தையல் எந்திரங்கள், ஒருங்கிணைந்த தோட்டக்கலைத்துறை சாா்பில் ரூ.9.55 லட்சம் மதிப்பில் வேளாண் எந்திரங்கள் அளிக்கப்பட்டன.

    மனுநீதிநாள் முகாமில் தோட்டக்கலை இணை இயக்குநா் ஷிபிலாமேரி, மாவட்ட போலீஸ் டி.எஸ்.பி செந்தில்குமாா், சுகாதாரபணிகள் துணை இயக்குநா் பாலுசாமி, கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா, பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் இப்ராஹிம்ஷா, கூடலூா் நகா்மன்றத் தலைவா் பரிமளா, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் கீா்த்தனா, தேவா்சோலை பேரூராட்சித் தலைவா் வள்ளி, துணைத் தலைவா் யூனஸ்பாபு, ஸ்ரீமதுரை ஊராட்சித்தலைவா் சுனில், மாவட்ட சமூகநல அலுவலா் பிரவீனா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித்திட்ட அதிகாரி தேவகுமாரி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ஷோபனா, கூடலூா் தாசில்தார் ராஜேஸ்வரி உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×