மவுண்ட் பிளசன்ட் பகுதியில் கூட்டுறவு பண்டகசாலை கட்டுமான பணிகள் தீவிரம்

அந்த பகுதி கவுன்சிலரும், நகர தி.மு.க செயலாளருமான ராமசாமி முயற்சிக்கு வெற்றி பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் பணிகள் நடந்து வருகிறது
மவுண்ட் பிளசன்ட் பகுதியில் கூட்டுறவு பண்டகசாலை கட்டுமான பணிகள் தீவிரம்
Published on

அருவங்காடு,

குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட மவுண்ட் பிளசன்ட் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள கூட்டுறவு பண்டகசாலைக்கு சொந்த கட்டிடம் இல்லை. இதுகுறித்து பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுகுறித்து அந்த பகுதி கவுன்சிலரும், நகர தி.மு.க செயலாளருமான ராமசாமி, நீலகிரி எம்பி ராசாவிடம் வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து மவுண்ட்பிளசன்ட் பகுதியில் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் கூட்டுறவு பண்டகசாலை கட்டும் பணி நடந்து வருகிறது. இதனை அந்த பகுதி கவுன்சிலர் ராமசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com