search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழிப்பறி"

    • அடையாளம் தெரியாத 2 பேர் அவரது வாகனத்தை நிறுத்தி லிப்ட் கேட்டுள்ளனர்.
    • மயக்கம் தெளிந்து அந்த வழியே சென்றவர்களிடம் நடந்தவற்றை கூறியுள்ளார்.

    விழுப்புரம்:

    திருக்கோவிலூர் அடுத்த அருங்குருக்கை கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் மகன் தமிழ்(வயது23). இவர் நேற்று இரவு சென்னையிலிருந்து தனது சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.அவர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலையில் சென்றுக் கொண்டிருந்தபோது,அங்கு அடையாளம் தெரியாத 2 பேர் அவரது வாகனத்தை நிறுத்தி லிப்ட் கேட்டுள்ளனர். பின்னர் வரும் வழியில் திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டை அருகே வந்து கொண்டிருந்த போது லிப்ட் கேட்டு வந்த இளைஞர்கள் தாங்கள் சிறுநீர் கழிப்பதாக கூறி வாகனத்தை நிறுத்த சொன்னதாக தெரிகிறது.

    அங்கு மறைவில் நின்றிருந்த மற்றும்3 பேர் சேர்ந்து 5 பேர் வாலிபர் தமிழை மடக்கி பிடித்து அவர் வைத்திருந்த செல்போனை கேட்டுள்ளனர். செல்போ னை தர மறுத்ததால் மறைத்து வைத்திருந்த கத்தியால் முதுகில் ஒருவர் குத்த மற்றவர்கள் அவரின் முகத்தில் ஓங்கி அடித்துள்ளனர் . இதில் நிலை குலைந்த தமிழ் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். உடனே அந்த கும்பல் அவரிடம் இருந்து செல்போன் மற்றும் மணி பர்ஸ் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மயங்கி விழுந்த தமிழ் அதிகாலை 4.30 மணியளவில் மயக்கம் தெளிந்து அந்த வழியே சென்றவர்களிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். உடனே 108 ஆம்புலன்ஸ் மூலமாக அவரை திண்டிவனம் அரசு மரு த்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டிய ம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வழிப்பறி சம்பவம் குறித்து மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணைசெய்து வருகின்றனர்.

    • வட மாநில தொழிலாளகளிடம் பணம் பறித்த 2 பேர்
    • அரசு மருத்துவமனையில் வட மாநில தொழிலாளகளிடம் பணம் பறித்த 2 பேர் கைது

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் வட மாநில தொழிலாளர்கள் கட்டிட பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜெயங்கொண்டம் வடக்கு தெருவை சார்ந்த வசீகரன் (21), மற்றும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை தெருவை சேர்ந்த முகமது யாசிக் (20), ஆகியோர் அங்கு பணியில் ஈடுபட்டு வரும் 2 வட மாநில தொழிலாளர்களிடம் பணம் பறித்துள்ளனர். இதுகுறித்து ஒப்பந்ததாரர் லட்சுமண சாமி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வசீகரன் மற்றும் முகமது ஆசிக் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வ.உ.சி. நகரை சேர்ந்த நரேஷ் குமார், ஆகாஷ் என்கிற குள்ள பெட்டா, சந்தோஷ் ஆகிய 3 பேரை புது வண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் கைது செய்தனர்.
    • சேணி அம்மன் கோவில் தெருவில் வழிப்பறியில் ஈடுபட்டு துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ராயபுரம்:

    புதுவ.உ.சி. நகரை சேர்ந்த நரேஷ் குமார், ஆகாஷ் என்கிற குள்ள பெட்டா, சந்தோஷ் ஆகிய 3 பேரை புது வண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் கைது செய்தனர்.

    வண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் நேற்று அதே பகுதியில் உள்ள அம்மணி அம்மன் தெருவில் சென்று கொண்டிருந்தபோது மர்ம கும்பல் அவரை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி பணத்தை பறித்து தப்பிச் சென்றனர்.

    இதுதொடர்பாக அதே பகுதி வ.உ.சி. நகரை சேர்ந்த நரேஷ் குமார், ஆகாஷ் என்கிற குள்ள பெட்டா, சந்தோஷ் ஆகிய 3 பேரை புது வண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் மற்றும் போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் சேணி அம்மன் கோவில் தெருவில் வழிப்பறியில் ஈடுபட்டு துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த நரேஷ், லோகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    • கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபடும் கும்பல்கள் அதிகரித்துள்ளனர்.
    • மேலும் வழிப்பறி கும்பலை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    மேலூர்

    மதுரை மாவட்டம், மேலூர் முகமதியாபுரம் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா. இவர் ஒத்தக்கடையில் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை பூட்டி விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டி ருந்தார்.

    மேலூர் 4 வழிச்சாலையில் உள்ள கட்டப்பட்டி பகுதியில் வந்தபோது மற்றொரு மோட்டார் வந்த வாலிபர் ஒருவர் வழிகேட்பதுபோல் பேச்சு கொடுத்தார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி வந்தபோது திடீரென அந்த நபர் ஷேக் அப்துல்லாவை மறித்தார். அப்போது அவரது கூட்டாளிகள் 2 பேர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். தொடர்ந்து 3 பேரும் கத்தியை காட்டி மிரட்டிய அந்த கும்பல் ஷேக் அப்துல்லா விடம் பணம் கேட்டனர். ஆனால் அவர் தர மறுத்தார். இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் கத்தியால் கையில் வெட்டி செல்போன், பணத்தை பறித்து சென்றது.

    இந்த சம்பவம் நடந்த சில மணிநேரத்தில் அதே பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த சொக்கம்பட்டியை சேர்ந்த மணிவாசகம் என்பவரிடம் இதே கும்பல் கத்திமுனையில் மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டது. குற்றவாளிகள் அனைவரும் 20 வயதுக்குட்பட்டவர்கள்.

    இதுதொடர்பாக 2 பேரும் மேலூர் போலீசில் புகார் கொடுத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ேஜாதி, தனிப்பிரிவு ஏட்டு தினேஷ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி கொள்ளையர்களை ேதடி வருகின்றனர்.

    மேலூர் 4 வழிச்சாலையில் இரவு நேரங்களில் தனியாக செல்வோரை குறிவைத்து அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடக்கிறது. ஒரு குறிப்பிட்ட கும்பல் நோட்டமிட்டு இதனை செயல்படுத்தி வருகின்றனர். எனவே போலீசார் மேற்கண்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    மேலும் வழிப்பறி கும்பலை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    • இரவு நேரங்களில் வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுகிறது.
    • சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் போலீஸ் நிலைய எல்லை க்குட்பட்ட கள்ளக்குறிச்சி-கச்சிராயபாளையம் சாலை யில் நல்லாத்தூர் பெட்ரோல் பங்க் - தனியார் பள்ளிக்கு இடையே இடையே இரவு நேரங்களில் வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுகிறது. இங்குள்ள புளிய மரத்தின் பின்புறம் மறைந்து நிற்கும் மர்ம நபர்கள் சாலைக்கு வந்து கையை காட்டி வாகனத்தை நிறுத்துகின்றனர். வாகன ஓட்டிகளை திசை திருப்பி, அவர்களை தாக்கி பணம், பொருள் பறிக்கும் செயலில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கும் வழிப்பறி நடந்துள்ளது.

    கள்ளக்குறிச்சி-கச்சிரா யபாளையம் சாலையில் இரவு 12 மணியிலிருந்து அதிகாலை 3 மணிக்குள் மர்ம நபர்களின் கைவரிசை நடைபெறுவது வழக்கமாக உள்ளது. எனவே, இந்த சாலையில் ரோந்து பணிக்காக கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும். அவர்கள் மூலம் வழிப்பறி சம்பவங்களை தடுத்து, பொதுமக்களின் அச்சத்தையும், பீதியையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • விக்னேஷ் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நண்பரின் தந்தையை பார்க்க சென்றார்.
    • கைதான வேலாயுதம் மீது 15 குற்ற வழக்குகள் உள்ளன.

    சென்னை:

    பெரம்பூர் நெட்டல் கார்டனை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நண்பரின் தந்தையை பார்க்க சென்றார்.

    ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள அவசரகால சிகிச்சை பிரிவின் பின்புறத்தில் விக்னேஷ் வந்தபோது அங்கு நின்ற 2 வாலிபர்கள் திடீரென விக்னேஷை வழிமறித்து செல்போன், பணம், புளூடூத் ஹெட்போனை மிரட்டி பறித்து தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசர் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது பெரம்பூர் திரு.வி.க. நகரை சேர்ந்த வேலாயுதம் பாடியநல்லூர் மகாமேடு நகரை சேர்ந்த வெங்கடேசன் ஆகிய இருவரும் செல்போன், பணம் பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் கைதான வேலாயுதம் மீது 15 குற்ற வழக்குகள் உள்ளன. வெங்கடேசன் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார்.

    • அரியலூர் மாவட்டத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த வாலிபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்
    • கடலூர் ,சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கைவரிசை


    அரியலூர்,

    அரியலூர் ராஜாஜி நகர், ஆர்.கே.காலனித் தெருவைச் சேர்ந்த பொன்சேகர் மனைவி பொன்ராணி என்பவர் கடந்த 18 ஆம் தேதி பிற்பகல் ஓ. கிருஷ்ணாபுரம் பகுதியில் இரு ஸ்கூட்டரில் சென்ற போது, பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், பொன்ராணி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துத்துக் கொண்டு தப்பியோடினர். இதுகுறித்து அவர் அரியலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து, அரியலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர்கணேஷ் தலைமையில் அரியலூர் காவல் நிலைய ஆய்வாளர் சகாய அன்பரசு, உதவி ஆய்வாளர் ராஜவேலு உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் புதன்கிழமை அவர்கள் அம்மாக்குளம் பிரிவுப் பாதையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போது, சந்தேகப்படும் வகையில் நம்பர் பிளேட் பாதி அழிக்கப்பட்ட கருப்பு மற்றும் சிவப்பு நிறங்கள் கலந்த பல்சர் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பெரம்பலூர் வடக்குமாதவி சாலை, ஏரிக்கரையைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் வெங்கடேஷ்(22), அதே பகுதி சமத்துவப் புரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் அஜித்(19) ஆகியோர் என்பதும், இவர்கள் கடந்த 18 ஆம தேதி பொன்ராணியின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றவர்கள் என்பதும், தொடர்ந்து இவர்கள் கடலூர் மாவட்டத்தில் இரண்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு, சேலத்தில் ஒரு செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். குறுகிய காலத்தில் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டினார்.




    • கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபடுகின்றனர்.
    • வழிப்பறி கொள்ளையர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரை

    மதுரை அருகே உள்ள சிலைமான் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (39). இவர் சம்பவத்தன்று ஆரப்பாளையம் சோனையாகோவில் தோப்பு பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டில் பழனிவேலிடம் ரூ.1300-ஐ பறித்து சென்றார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் வழிப்பறியில் ஈடுபட்டது ஆரப்பாளையம் கிராஸ் ரோடு கிருஷ்ணாபாளையம் 2-வது தெருவை சேர்ந்த மாடசாமி மகன் ஆனந்த குமார் (24) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    மதுரை மேலத்தொப்பு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(31). இவர் சம்பவத்தன்று புதுமா காளிப்பட்டி ரோடு சந்திப்பில் நின்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி செல்போன், பணத்தை பறித்து சென்றனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் வழிப்பறியில் ஈடுபட்டது சோலை அழகுபுரம் முதல் தெரு பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சேகர் மகன் உமையகுமார் என்ற பெரிய எலி (23), சோலையழகுபுரம் ஜானகி நகர் முதல் தெரு சுரேஷ்குமார் மகன் மணிகண்டன் என்ற பாட்டில் மணி (22), சோலை அழகுபுரம் பாண்டி மகன் மாரிச்செல்வம் (22) என தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மதுரை நகரில் அண்மை காலமாக வழிப்பறி, நகைப்பறி போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பட்டப்ப கலிலும் தனியாக செல்லும் பெண்கள், முதியவர்களை குறிவைத்து தைரியமாக வழிப்பறியில் ஈடுபடு கின்றனர். மேலும் கத்தியை காட்டி மிரட்டு வதும் சில சமயங்களில் ஆயுதங்களால் பொதுமக்களை தாக்கு வதும் நடந்து வருகிறது. எனவே போலீசார் கூடுதல் ரோந்து சென்று வழிப்பறி கொள்ளையர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கத்தியை காட்டி மிரட்டி ஓட்டல் அதிபர்- வாலிபரிடம் பணம் பறிக்கப்பட்டது.
    • ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    மதுரை செல்லூர் மீனாம் பாள்புரம் பாரதிதாசன் ரோட்டை சேர்ந்தவர் மகுதுரபீக்ஒலி(வயது43). இவர் பி.பி.குளம் முல்லை நகரில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலுக்கு வந்த 6 பேர் அவரை கத்தியை காட்டி மிரட்டி அவரை தாக்கினர். பின்னர் அவரிடம் இருந்த ரூ.5ஆயிரத்தை பறித்துச் சென்று விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து ஓட்டல் உரிமையாளர் மகுதுரபீக்ஒலி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பி.பி.குளம் யோகராஜ் (31), கார்த்திகேயன் என்ற வெள்ளையன் கார்த்திக் (31), கோகுல் விஜய் (29), அனிபாண்டி ராஜா (46), கிருஷ்ணன் என்ற ஜப்பான் ராஜா (31), சுரேஷ் (31) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் உசிலம் பட்டியை சேர்ந்தவர் ஒச்சு காளை (30). இவர் ஜெய் ஹிந்துபுரம் 2-வது மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அவரை 3 வாலிபர்கள் வழிமறித்தனர். அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி ஒச்சுக்காளையிடம் இருந்து பணத்தை பறித்து சென்றனர். இது குறித்து ஒச்சுக்காளை ஜெய்ஹிந்து புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த சஞ்சய் (23), ஜாகிர் உசேன் (22), சூர்யா என்ற ஆட்டோ பாஸ்கர் (21) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • பீகாரைச் சேர்ந்த வாலிபர்கள் சிலர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • பாதிக்கப்பட்டவர் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    பல்லடம்:

    பல்லடம் கொசவம்பாளையம் ரோட்டில் முத்துக்குமாரசாமி என்பவருக்கு சொந்தமான இடத்தில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதில் பணிக்கம்பட்டியைச் சேர்ந்த விஜயகுமார் மேஸ்திரியாக உள்ளார் .அவரிடம் பீகாரைச் சேர்ந்த வாலிபர்கள் சிலர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று விடுமுறை என்பதால் அங்கு பணி புரியும் சுஜித் குமார், ராஜேந்திர யாதவ், புசன் குமார் ஆகிய 3 பேர் பொருட்கள் வாங்குவதற்காக பல்லடத்தை நோக்கி வந்துள்ளனர். அப்போது அவர்களை வழிமறித்த 3 வாலிபர்கள் அவர்களை மிரட்டி அவர்கள் வைத்திருந்த ரூ .3 ஆயிரத்தை வழிப்பறி செய்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    மொழி தெரியாததால் தவித்த அவர்கள் மீண்டும் வேலை செய்யும் கட்டிடத்திற்கு திரும்பிச் சென்று விட்டனர். இது குறித்து அவர்கள் மேஸ்திரி விஜயகுமாரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து அவர் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரஸ்வதி,சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    இந்த நிலையில், நேற்று பல்லடம் - மாணிக்காபுரம் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியே வந்த சந்தேகத்திற்கிடமான 3 வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் பீகார் வாலிபர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    விசாரணையில் அவர்கள் பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையத்தைச் சேர்ந்த மகுடீஸ்வரன் என்பவரது மகன் அருண் குமார் (வயது 23) ,பல்லடம் அண்ணா நகரைச் சேர்ந்த சேதுராமன் மகன் ரமேஷ் குமார் ( 32) அதே பகுதியைச் சேர்ந்த பாபு என்பவரது மகன் பார்த்திபன் ( 25) என்பது தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • திருமங்கலம் அருகே தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்கள் விருதுநகரை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அடுத்த கள்ளிக்குடி லாலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாயகிருஷ்ணன் மகன் அருண்பாண்டியன்(வயது 25). இவர் காரியாபட்டியில் உள்ள சாம்சங் கம்பெனியில் ஏ.சி. மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார் .

    சம்பவத்தன்று அருண் பாண்டியன் காரியாபட்டியில் வேலையை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டார்.

    கள்ளிக்குடி- டி.கல்லுப்பட்டி ரோட்டில் வடக்கம் பட்டி பிரிவு அருகே சென்ற போது 3 பேர் திடீரென வழிமறித்து மிரட்டினர். பின்னர் அருண் குமார் பையில் இருந்த ரூ.500 பறித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்து தப்பினர்.

    கள்ளிக்குடி காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சரவணன்(38). லோடு மேனான இவர் வில்லூர் கிராமத்தில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று மோட்டார் சைக்கிள் வந்த இவரை 3 பேர் மிரட்டி ரூ. ஆயிரம் பறித்து சென்றனர்.

    இதுகுறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் 2 வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டது ஒரே கும்பல் என தெரியவந்தது. இதைய டுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட விருதுநகர் ஆலம்பட்டியை சேர்ந்த கிஷோர், பிரவீன் குமார், மாரீஸ்வரன் ஆகியோ ரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் பல்வேறு இடங்களில் நகை -பணம் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங் களில் ஈடுபட்டிருக்கலாம் என ெதரிகிறது. இதன் அடிப்படை யில் விசாரணை நடந்து வருகிறது.

    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டியனை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
    • மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி அவரை 10-வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்து உத்தரவிட்டார்.

    சேலம்:

    சேலம் பள்ளப்பட்டி சினிமா நகரை சேர்ந்தவர் பாண்டியன் (35), இவர் கடந்த மே மாதம் 28-ந்தேதி சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்து சென்ற வீராணத்தை சேர்ந்த முருகன் என்பவரை வழி மறித்து மிரட்டி ரூ.450-ஐ பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டியனை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், செவ்வாய்ப்பேட்டை, அன்னதானப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் வீடுகளில் புகுந்து திருடுதல், மோட்டார் சைக்கிள்கள் திருட்டு உள்பட தொடர் குற்றங்களில் ஈடுபட்டதும், பாண்டியன்மீது சேலம் மாநகர போலீஸ் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதும் இதனால் 9 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதும் தெரிய வந்தது.

    இந்நிலையில் பாண்டியன் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என டவுன் போலீசார் சேலம் மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர்.

    இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி அவரை 10-வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்து உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு சேலம் சிறையில் உள்ள அவரிடம் வழங்கப்பட்டது.

    ×