search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stabbing"

    • வாலிபர்களுக்கு கத்திக்குத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை

    பழங்காநத்தம் உழவர் சந்தை பகுதியை சேர்ந்தவர் ஆதிமூலம். இவரது மகன் சிவகுரு 19. ஆட்டோ ஓட்டி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த ராஜாவுக்கும், ஆதிமூலத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் மாடக்குளம் பெரியார் நகர் 2-வது தெரு அருகே சிவகுரு சென்று கொண்டி ருந்தார். அப்போது ராஜா உள்பட 5 பேர் அவரை வழிமறித்தனர். அவர்கள் சிவகுருவை அவதூறாக பேசி கத்தியால் குத்தி யுள்ளனர். இதுகுறித்து சிவகுரு எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மார்நாடு கஞ்சிமணி மகன் வேல்முருகன் (வயது21) என்பவரை கைது செய்தனர். மேலும் தலை மறைவாக உள்ள மதன், கருணாமூர்த்தி, கருப்பு, ராஜா ஆகியோரை தேடி வருகின்றனர்.

    ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் புலிபாண்டியன் முதல் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் பால முருகன் (27). இவர் பைபாஸ் ரோட்டில் உள்ள இடியாப்பம் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் கடை முன்பாக நின்று கொண்டிருந்தபோது பொன்மேனி முதல் தெருவை சேர்ந்த பாலு மகன் ரமேஷ் (21) என்ற வாலிபர் அவரிடம் கத்திய காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார். ஆனால் பாலமுருகன் பணம் தர மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ், பாலமுருகனை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றார்.

    இந்த சம்பவம் குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில் பாலமுருகன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர்.

    • ஒருவர் கைது
    • ஜெயிலில் அடைத்தனர்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை பேகோபுரத் தெருவை சேர்ந்தவர் சீனுவாசன் மகன் பிரேம்குமார் (29) தனது நண்பர்களுடன் திருவண்ணாமலை தேரடி வீதி அருகில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து மது அருந்தி உள்ளார்.

    பின்னர் பிரேம்குமார் மற்றும் அவரது நண்பர்க ளுடன் தேரடி வீதியில் நடந்து சென்ற போது ஏற்பட்ட சண்டையில் வெங்கடேசன் நடைபாதை பழக்கடையில் பழம் அறுக்க வைத்திருந்த கத்தியை எடுத்து பிரேம்குமார் கழுத்தில் குத்தியுள்ளார்.

    இதில் பிரேம்குமார் நிலைதடுமாறி கீழே விழுந்தார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பிரேம்குமாரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு பிரேம்குமாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக நேற்று இரவு சென்னை ராஜூவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து திருவண்ணா மலை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேம்குமாரை கத்தியால் குத்திய புத்தேரி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசனை (35) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    திருவண்ணாமலை நகரின் கூட்ட நெரிசல் மிகுந்த இடத்தில் நடைபெற்ற கத்தீகுந்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கோவிலுக்கு அருகில் சிகரெட் பிடிக்க கூடாதென சற்குணராஜ் குடும்பத்தார் ஈஸ்வரனிடம் கூறியுள்ளனர்.
    • ஈஸ்வரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் சற்குணராஜை வழிமறித்து கத்தியால் வெட்டினர்.

    கள்ளக்குறிச்சி:

    தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு இறால் மீன்களை ஏற்றிக்கொண்டு மினி லாரி நேற்று இரவு புறப்பட்டது. இந்த மினி லாரியை நாகை மாவட்டத்தை சேர்ந்த அசாருதீன் (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார். இந்த வாகனம் உளுந்தூர்பேட்டையில் உள்ள சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை வந்தது. அப்போது சாலையோரம் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் ரோந்து வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ரோந்து வாகனத்தில் வந்த அதிகாரிகள் எதிர்புறத்தில் நின்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    இறால் மீன் மீன் ஏற்றிவந்த மினி லாரி எதிர்பாராத விதமாக, ரோந்து வாகனத்தின் மீது மோதியது. இதில் மினி லாரி தீப்பிடித்து எரிந்தது. அவ்வழியே சென்றவர்கள், மினி லாரியில் இருந்த டிரைவர் அசாருதீனை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனும தித்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய லாரி டிரைவர், லேசான தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உளுந்தூ ர்பேட்டை தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் மினி லாரி மற்றும் அதிலிருந்த இறால் மீன்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த விபத்து தொடர்பாக உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடிபோதையில் தகராறு செய்த மகனை ஆத்திரமடைந்த தந்தை கத்தியால் குத்தினார்.
    • வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் தெய்வ சிகாமணிபுரத்தைச் சேர்ந்த வர் வளன் பிராங்கிளின். கூலித் தொழிலாளி. இவரது மகன் பிரகாஷ் (வயது20). மது போதைக்கு அடிமை யானவர். பிரகாஷ் குடித்து விட்டு மது போதையில் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு வருவது வழக்கம்.

    அதன்படி நேற்று இரவு தந்தையுடன் போதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது கோபமடைந்த தந்தை வளன் பிராங்களின், கத்தியால் பிரகாசை குத்தினார்.

    இதில் தாடையில் விழுந்த கத்தி குத்துடன் ரத்த வெள்ளத்தில் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரகாஷ் அனுமதிக்க ப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச் சம்பவம் குறித்து நகர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுபாஷினிக்கு கும்பகோணத்தை சேர்ந்த வெற்றி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
    • ஆத்திரம் அடைந்த வெற்றி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுப்பிரமணியின் வயிற்றின் சரமாரியாக குத்தியுள்ளார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே கோட்டலாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 50). இவரது மனைவி சத்தியாவதி (49). இவர்களின் மகள் சுபாஷினி (28). கடந்த சில வருடங்களுக்கு முன்பு மோகன் என்பவருக்கு சுபாஷினியை திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் சுபாஷினி வேலைக்கு சென்றார். அங்கு கும்பகோணத்தை சேர்ந்த வெற்றி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் அப்பகுதியில் ஒரு வீடு வாடகை எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.

    சில காலங்களுக்கு பிறகு இருவருக்குமிடையே தக ராறு ஏற்பட்டது. இதையடுத்து சுபாஷினி வீட்டை விட்டு சென்றுவிட்டார். அவர் எங்கும் கிடைக்காததால், சுபாஷினியின் அம்மா வீடான பண்ருட்டி அருகே கோட்டலாம்பாக்கத்திற்கு வெற்றி வந்தார். அங்கு இருந்த சுபாஷினி யின் பெற்றோரிடம் எனது மனைவி சுபாஷினி எங்கே என கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது இதில் ஆத்திரம் அடைந்த வெற்றி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுப்பிரமணியின் வயிற்றின் சரமாரியாக குத்தியுள்ளார். மேலும் தடுக்க வந்த சத்தியாவதியின் வயிற்றிலும் குத்தியுள்ளார். மயங்கி விழுந்த இருவரையும் பொதுமக்கள் முண்டி யம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து வெற்றியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு
    • கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த திமிரி தென்கழனி பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 43). இவர் ஆற்காட்டில் ஸ்கூட்டர் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளார். உப்புப்பேட்டை அருகே செல்லும்போது குடிபோதையில் இருந்த மூன்று நபர்கள் சுந்தர்ராஜை வழிமறித்து அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

    அப்போது அவர்கள் சுந்தர்ராஜை கத்தியால் குத்தி உள்ள னர். இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக வேலூர் தனி யார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்து வருகின்றனர்.

    • விருதுநகர் அருகே கடன் பிரச்சினையில் ெதாழிலாளிக்கு கத்திக்குத்து ஏற்பட்டது.
    • முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருச்சுழி

    திருச்சுழி அருகே நரிக்குடியை அடுத்துள்ள புல்வாய்கரை அய்யனார்புரத்தை சேர்ந்தவர்் முருகன்(வயது55). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நாகராஜன்(21) என்பவருக்கு பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று முருகன் நரிக்குடி-திருப்புவனம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்த நாகராஜ் தகராறு செய்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார். படு காயமடைந்த முருகன் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • துறையூர் அருகே கோவில் திருவிழாவில் கத்திக்குத்து
    • 2 பேர் கைது, 2 பேர் தலைமறைவு

    துறையூர்,

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீரம்பூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோயிவிலில் தற்சமயம் திருவிழா நடைபெற்று வருவதால், அப்பகுதியை சேர்ந்த ஒரு சில நபர்கள் அம்மனுக்கு சிறப்பு செய்வதற்காக ஊர்வலம் சென்றுள்ளனர். அப்பொழுது அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் பட்டாசு வெடித்துள்ளனர். இதற்கு அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு தரப்பினரான அரவிந்த் (வயது20), சங்கர் (18), ஆனந்த் (21), ராபின் (22) ஆகிய நான்கு பேரும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஊர் மக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் நான்கு இளைஞர்களும் சேர்ந்து கூட்டத்தில் இருந்த வெங்கடேசன் (23), கார்த்திக் (23) ஆகிய இரு இளைஞர்களை கட்டையால் அடித்து காயப்படுத்தியதோடு, மறைத்து வைத்திருந்த கத்தியால் வெங்கடேசனை குத்தி உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கிராம தலைவர் தமிழ்ச்செல்வன் துறையூர் போலீசில் புகார் செய்தார். இப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த துறையூர் போலீசார், அரவிந்த், சங்கர் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டு பின்னர் தலைமறைவான ஆனந்த், ராபின் ஆகிய இருவரையும் துறையூர் போலீசார் தேடி வருகின்றனர். துறையூர் அருகே கோயில் திருவிழாவில் கத்திக்குத்து நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இளம் பெண்ணை கேலி செய்த விவகாரத்தில் கத்தி குத்து
    • காதலன் உட்பட 14 பேர் கும்பல் ஆத்திரம்

    திருச்சி,

    திருச்சி மேலகல்கண்டார் கோட்டை விவேகானந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகன் தர்மராஜ் (வயது 22). இவரின் நண்பர் சரவணன் மேலகல்கண்டார் கோட்டை அர்ஜூன் நகர் பகுதியை சேர்ந்த விஸ்வா என்பவரது காதலியை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த விஷ்வா தனது நண்பர்கள் கார்த்திக், ஜெகதீசன், ராமு, ரவி, ஆட்டோ பிரபு, பிரபாகரன், லியோ, முரளி, ராம் பிரசாத், சுதாகர், சின்னத்தம்பி, சேவாக் உள்ளிட்டவர்களை அழைத்துக் கொண்டு விவேகானந்த நகருக்குச் சென்றார். அப்போது தர்மராஜ் தனது வீட்டில் இன்னொரு நண்பர் சுதாகருடன் பேசிக்கொண்டு இருந்தார்.இதைத் தொடர்ந்து அந்த 14 பேர் கும்பலும் அத்துமீறி அவரது வீட்டுக்குள் புகுந்து இருவரையும் கத்தி மற்றும் பீர் பாட்டிலால் குத்தினர்.மேலும் தென்னை மட்டையால் அவர்களை தாக்கியதோடு வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் இருசக்கர வாகன த்தை அடித்து நொறுக்கி விட்டு தப்பி சென்றனர்.இதில் தர்மராஜூக்கு தலையிலும் கண்ணிலும், சுதாகருக்கு தலை மற்றும் கையிலும் காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.இதுகுறித்து தர்மராஜ் கொடுத்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் மேற்கண்ட 14 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கார்த்திக், இன்னொரு சுதாகர், பிரபாகரன், லியோ, முரளி ஆகிய 5 பேரை கைது செய்தனர். மீதமுள்ள 9 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.இதேபோன்று திருச்சி செந்தண்ணீர்புரம் அரசு பள்ளி அருகில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக இரு வேறு தரப்பைச் சேர்ந்த 13 பேர் மீது பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முன் விரோதம் காரணமாக விபரீதம்
    • வாலிபரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் சான்றோர் குப்பம் அன்னை மேரி தெரு பகுதியை சேர்ந்த வால்டர் மகன் விஜய் (வயது 27). அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணி மகன் கார்த்தி (33) என்பவருக்கு முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் கார்த்தி, விஜய்யை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். பொதுமக்கள் விஜயை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்தியை கைது செய்தனர். பின்னர் அவரை ஜெயிலில் அடைத்தனர்.

    • வங்கி ஊழியரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி சதீஷ்குமாைர கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அப்பயநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அசோக் (வயது 21). கோவையில் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும்போது ஸ்ரீவில்லி புத்தூர் அருகே உள்ள குக்குச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுடன் பேசி வந்ததாக கூறப்படு கிறது.

    இதை அறிந்த உறவி னர்கள், அந்த பெண் தங்கை முறை என்று அசோக்கிடம் தெரியப் படுத்தினர். இதையடுத்து அந்த பெண்ணுடன் பேசி பழகுவதை அசோக் நிறுத்தி விட்டார்.

    இந்த நிலையில் அசோக்கின் சகோதரிக்கு வளைகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக அசோக் ஊருக்கு வந்தி ருந்தார். அப்போது ஊர் திருவிழாவும் நடந்து கொண்டிருந்தது.

    பாட்டி வீட்டிற்கு செல்வதற்காக அசோக் அந்த வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் இளம்பெண்ணின் உறவினர் சதீஷ்குமார் நின்று கொண்டிருந்தார். அவர் அசோக்கை வழி மறித்து இளம்பெ ண்ணுடன் பேசி பழகுவதை நிறுத்தி யதை கண்டித்து ள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது.

    அப்போது சதீஷ்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அசோக்கை கத்தியால் குத்தினார். அருகில் இருந்தவர்கள் திரண்டதால் கொலை மிரட்டல் விடுத்து விட்டு சதீஷ்குமார் தப்பி சென்றார். இதில் காயம் அடைந்த அசோக் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து அவர் கொடுத்தபுகாரின்பேரில் ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி சதீஷ்குமாைர கைது செய்தனர்.

    இலங்கை அகதிகள் முகாமில் பீர் பாட்டிலால் குத்தி வாலிபர் உயிரிழந்தார்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராஜன் (வயது 25), கூலித்தொழிலாளி. இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 

    கடந்த 5 ஆண்டுகளாக கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ராஜனின் மனைவி வனிதா கணவரிடம்  கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.  இதனால் மனமுடைந்த ராஜன் கடந்த 1-ந் தேதி அதிக அளவில் மது அருந்திவிட்டு மது பாட்டிலை உடைத்து  கழுத்தில் குத்தி உள்ளார். 

    இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள்  வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

    பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமணையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த  ராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

    சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×