கடன் பிரச்சினையில் ெதாழிலாளிக்கு கத்திக்குத்து

விருதுநகர் அருகே கடன் பிரச்சினையில் ெதாழிலாளிக்கு கத்திக்குத்து ஏற்பட்டது.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கடன் பிரச்சினையில் ெதாழிலாளிக்கு கத்திக்குத்து
Published on

திருச்சுழி

திருச்சுழி அருகே நரிக்குடியை அடுத்துள்ள புல்வாய்கரை அய்யனார்புரத்தை சேர்ந்தவர்் முருகன்(வயது55). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நாகராஜன்(21) என்பவருக்கு பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று முருகன் நரிக்குடி-திருப்புவனம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்த நாகராஜ் தகராறு செய்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார். படு காயமடைந்த முருகன் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com