search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "South Korea"

    • வடகொரியா இன்று கிழக்கு கடல் பகுதியில் இருந்து 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியது
    • எல்லை பகுதியருகே வடகொரியா 12 போர் விமானங்களை அனுப்பியதால் பதிலடி என தகவல்

    சியோல்:

    அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது. ஜப்பான் கடற்பகுதி மீது கடந்த 1-ந்தேதி 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை நடத்தியது. இன்று கிழக்கு கடல் பகுதியில் இருந்து 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஏவுகணை சோதனையைத் தொடர்ந்து வடகொரியா 12 போர் விமானங்களை அனுப்பியதால் பதற்றம் உருவானது.

    இதற்கு பதிலடியாக எல்லையில் தென்கொரியா 30 போர் விமானங்களை அனுப்பியது பதற்ற சூழலை அதிகரித்துள்ளது.

    இதுபற்றி தென்கொரிய ராணுவம் கூறும்போது, பரஸ்பர எல்லை பகுதியருகே வடகொரியா, 8 போர் விமானங்கள் மற்றும் 4 குண்டுவீச்சு விமானங்கள் என 12 போர் விமானங்களை அனுப்பியது. வானில் இருந்து தரையை நோக்கி தாக்குதல் நடத்துவதற்கான பயிற்சிகளை வடகொரிய விமானங்கள் நடத்தக் கூடும் என நம்பப்படுகிறது. எனவே, அதற்கு பதிலடி தரும் வகையில் எங்களது 30 போர் விமானங்களை எல்லையையொட்டிய பகுதிக்கு அனுப்பியுள்ளோம் என தெரிவித்து உள்ளது.

    வடகொரியாவின் தூண்டுதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் உறுதியான நடவடிக்கையின் ஒரு முயற்சியாகவே இந்த போர் விமானங்கள் அனுப்பப்பட்டன எனவும் தென்கொரிய ராணுவம் தெரிவித்து உள்ளது.

    • ஏ.இ.பி.சி., ஏற்றுமதியாளர் வர்த்தகர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
    • 2 ஆண்டுகளாக கொரியாவின் ஆடை இறக்குமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    திருப்பூர் :

    தென்கொரியாவின் மொத்த ஆயத்த ஆடை இறக்குமதியில் இந்தியாவின் பங்களிப்பு 0.67 சதவீத அளவிலேயே உள்ளது. அந்நாட்டுக்கான ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்வதற்காக ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,), ஏற்றுமதியாளர் வர்த்தகர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.தென்கொரிய தலைநகர் சியோலில் வருகிற செப்டம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.

    கொரோனா பரவல் இருந்தபோதும்கூட கடந்த 2 ஆண்டுகளாக கொரியாவின் ஆடை இறக்குமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.வர்த்தக வாய்ப்புகள் மிகுந்த தென்கொரிய சந்தையை கைப்பற்ற ஏதுவாக திருப்பூர் உள்பட நாடு முழுவதும் உள்ள ஆடை ஏற்றுமதியாளர்கள் வர்த்தகர் சந்திப்பில் பங்கேற்க ஏ.இ.பி.சி., அழைப்புவிடுத்துள்ளது. பங்கேற்க விரும்பும் நிறுவனத்தினர் வரும் 30ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியுள்ளது.
    • தொற்று பாதிப்பு அதிகரித்தாலும் உயிரிழப்பு குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சியோல் :

    சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் ஆல்பா, காமா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என உருமாற்றம் அடைந்து 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலக நாடுகளை அச்சுறுத்தி கொண்டிருக்கிறது.

    அந்த வகையில் ஒமைக்ரான் தொற்றின் வருகையால் உலகின் பல நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. குறிப்பாக ஜப்பான், சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் ஒமைக்ரான் பாதிப்பு தீவிரமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் கிழக்கு ஆசிய நாடான தென்கொரியாவில் பல மாதங்களுக்கு பிறகு திடீரென கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் புதிதாக 1 லட்சத்து 80 ஆயிரத்து 803 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

    நேற்று முன்தினம் 84,128 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒரே நாளில் பாதிப்பு இரு மடங்காக உயர்ந்துள்ளது. இது அங்கு கடந்த ஏப்ரல் 13-ந்தேதிக்கு பிறகு பதிவான அதிகபட்ச பாதிப்பு எண்ணிகையாகும். ஏப்ரல் 13-ந்தேதி 1 லட்சத்து 95 ஆயிரத்து 387 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

    நேற்றை பாதிப்பை தொடர்ந்து தென்கொரியாவில் இதுவரை கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 16 லட்சத்து 82 ஆயிரத்தை கடந்துள்ளது.

    தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தாலும், உயிரிழப்பு குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது. அதே சமயம் வைரசை கட்டுப்படுத்த தேசிய அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து விளக்கம் அளிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

    • மாநகரப் பகுதியில் 300 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் என எச்சரிக்கை
    • தலைநகர் பகுதியில் உள்ள 230 குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன.

    சியோல்:

    தென்கொரியா நாட்டின் தலைநகர் சியோலில் மற்றும் மேற்கு துறைமுக நகரமான இன்சியான் பகுதிகளில் நேற்று வரலாறு காணாத மழை பதிவானது. ஒரு மணி நேரத்தில 100 மில்லிமீட்டர் மழை பெய்ததாக அந்நாட்டைச் சேர்ந்த யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    கனமழைக்கு குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 6 பேரை காணவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மழை பாதிப்பு காரணமாக தலைநகர் பகுதியில் உள்ள 230 குடும்பங்களைச் சேர்ந்த 391 பேர் பாதுகாப்பான பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

    சாலைகள், ஆற்றங்கரை வாகன நிறுத்துமிடங்கள், ஐந்து தேசிய மலைப் பூங்காக்கள் பாதுகாப்புக்காக மூடப்பட்டன. எட்டு பயணிகள் படகுகளில் இருந்த எண்பத்தெட்டு பேர் மீட்கப்பட்டனர்.

    மேலும் மாநகரப் பகுதியில் 300 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் என தென்கொரியா வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. வெள்ள சேதம் குறித்து கண்காணித்து வருவதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
    • வட கொரியா ஒரே நாளில் 8 ஏவுகணைகளை ஏவி பரிசோதித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சியோல் :

    வட கொரியா ஒரே நாளில் 8 ஏவுகணைகளை ஏவி பரிசோதித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களையும், உலக நாடுகளின் எதிர்ப்பையும் கண்டுகொள்ளாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. மேலும், தென்கொரியாவுடன் போர் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அமெரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியமாகவும் இந்த சோதனைகள் அமைந்துள்ளன.

    இந்த ஏவுகணை சோதனைகளையொட்டி அதன் அண்டை நாடுகளான தென்கொரியாவும், ஜப்பானும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கி உள்ளன. இதனிடையே, வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு பதிலடியாக அமெரிக்கா மற்றும் தென்கொரியா, 8 ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அதன்படி, இன்று அதிகாலை தென் கொரியாவும் அமெரிக்காவும் தென் கொரியாவின் கிழக்கு கடற்கரையில் இருந்து எட்டு நிலப்பரப்பு ஏவுகணைகளை ஏவியது என்று தென் கொரிய பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். திங்கள்கிழமை அதிகாலை 4.45 மணிக்கு தொடங்கி சுமார் 10 நிமிடங்களுக்கு தென் கொரியா மற்றும் அமெரிக்க ராணுவத்தினர் ஏவுகணைகளை சோதனைகளை நடத்தினர்.

    தென்கொரியாவில் கத்திக்குத்து தாக்குதலில் 12 வயது சிறுமி உள்பட 5 பேர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். #SouthKorea #Apartment #FireAccident
    சியோல்:

    தென்கொரியாவின் ஜியோங்சங் மாகாணத்தில், ஜின்ஜூ நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது தளத்தில் வசித்து வந்த 42 வயதான நபர் ஒருவர் நேற்று காலை தனது வீட்டுக்கு தானே தீவைத்தார். அதன் பின்னர் கத்தியுடன் வீட்டில் இருந்து வெளியேறிய அவர், 2-வது தளத்துக்கு சென்று நின்றார். இதற்கிடையில், அவரது வீட்டில் வைக்கப்பட்ட தீ, அருகில் இருந்த மற்ற வீடுகளுக்கும் பரவியது. இதனால் அந்த வீடுகளில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு கீழே ஓடிவந்தனர். அப்போது, அவர்களை 2-வது தளத்தில் நின்று கொண்டிருந்த அந்த நபர் கத்தியால் சரமாரியாக குத்தினார்.

    இதில் 12 வயது சிறுமி உள்பட 5 பேர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அந்த அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிவளைத்தனர். பின்னர் 4-வது மாடியில் எரிந்த தீயை அணைத்தனர். அதனை தொடர்ந்து, தாக்குதல் நடத்திய நபரை சுற்றிவளைத்த போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். போலீசாரிடம் அவர் தனக்கு சம்பளம் கிடைக்க தாமதமானதால் விரக்தியில் இப்படி செய்ததாக போலீசாரிடம் கூறினார். ஆனால் வேலை எதுவும் பார்க்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. எனவே அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கக்கூடும் என சந்தேகிக்கும் போலீசார், அந்த கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.   #SouthKorea #Apartment #FireAccident 
    66 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் கருக்கலைப்பு தடைச் சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என தென்கொரியா அரசியலமைப்பு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. #SouthKorea #AbortionBan
    சியோல்:

    தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு வளர்ந்த நாடுகளில் கருக்கலைப்பு என்பது தண்டனைக்குரிய குற்றமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், தென்கொரியாவில் 1953-ம் ஆண்டு முதல் கருக்கலைப்பு தடைச் சட்டம் அமலில் உள்ளது.

    இந்தச் சட்டத்தின்படி தடையை மீறி கருக் கலைப்பு செய்துகொள்ளும் பெண்களுக்கு 1 ஆண்டு சிறைத்தண்டனையும், கருக்கலைப்பு செய்யும் டாக்டர்களுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்படுகிறது.

    அதே சமயம் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டதால் கரு உருவாகி இருந்தாலோ அல்லது வயிற்றில் இருக்கும் கருவால் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்திலோ மட்டும் கருக்கலைப்பு செய்வதற்கு அனுமதி வழங்கப்படும்.

    இந்த கருக்கலைப்பு தடைச்சட்டம் பெண்ணுரிமைக்கு எதிரானது என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். இதனால் இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என நீண்டகாலமாக அங்கு போராட்டம் நடந்து வந்தது.

    இந்த நிலையில், திடீர் திருப்பமாக கருக் கலைப்பு தடைச் சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என அந்நாட்டு அரசியலமைப்பு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

    அடுத்த ஆண்டு (2020) இறுதிக்குள் இந்தச் சட்டம் திருத்தியமைக்கப்பட வேண்டும் என்றும், அந்த காலக்கெடுவுக்குள் திருத்தியமைக்கப்படவில்லை என்றால் அந்தச் சட்டம் செயலற்றதாகும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    கருக்கலைப்பு தடைச்சட்டத்தை எதிர்த்து போராடி வந்த பெண்ணுரிமை ஆர்வலர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை கொண்டாடி வருகிறார்கள்.  #SouthKorea #AbortionBan
    அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டியில் தென்கொரியா அணி இந்தியாவை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. #India #SouthKorea #AzlanShahHockey
    இபோக்:

    6 அணிகள் இடையிலான 28-வது அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா-தென்கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    விறுவிறுப்பான இந்த ஆட்டம் வழக்கமான நேரம் முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. இந்திய வீரர் சிம்ரன்ஜீத் சிங் 9-வது நிமிடத்தில் பீல்டு கோல் அடித்தார். தென்கொரியா அணி தரப்பில் ஜங் ஜோங் ஹியூன் 47-வது நிமிடத்தில் பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பை பயன்படுத்தி பதில் கோல் திருப்பினார். இரு அணிகளும் சமநிலை வகித்ததால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

    இதில் தென்கொரியா அணி 4-2 என்ற கோல் கணக்கில் (5-3) இந்தியாவை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. 5 முறை சாம்பியனான இந்திய அணி 2010-ம் ஆண்டுக்கு பிறகு இந்த போட்டியில் பட்டம் வென்றதில்லை என்ற சோகம் தொடருகிறது. முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் மலேசியா அணி 4-2 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தியது. #India #SouthKorea #AzlanShahHockey
    இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக தென்கொரியா சென்ற இந்திய பிரதமர் மோடியை, இந்திய வம்சாவளியினர் உற்சாகமாக வரவேற்றனர். #PMModi #SouthKorea
    சியோல்:

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக தென்கொரியா சென்றார். தென்கொரிய தலைநகர் சியோல் சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சியோல் நகரில் உள்ள லாட்டி ஓட்டலில், அவரை இந்திய வம்சாவளியினர் உற்சாகமாக வரவேற்றனர்.

    தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி, அந்நாட்டுக்கு சென்றுள்ளார். பிரதமர் மோடியின் 2-வது தென்கொரிய சுற்றுப்பயணம் இதுவாகும். பிரதமர் மோடியின் இந்த சுற்றுப்பயணத்தின் போது, இருநாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.



    முன்னதாக, தென்கொரியா புறப்படும் முன் பிரதமர் மோடி தனது டுவிட்டரில் இந்த பயணம் பற்றி வெளியிட்ட பதிவில், “மேக் இன் இந்தியா உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய முன்னெடுப்பு திட்டங்களில், தென்கொரியா முக்கிய கூட்டாளியாக திகழ்கிறது. இரு ஜனநாயக நாடுகளும் பிராந்திய மற்றும் சர்வதேச அமைதி ஆகிய விவகாரங்களில் மதிப்பு மிக்க கொள்கைகளையும் தொலைநோக்கு பார்வையையும் கொண்டுள்ளன” என தெரிவித்தார். #PMModi #SouthKorea
    பிரபல கார் நிறுவனமான பிஎம்டபிள்யூ-க்கு ரூ.99 லட்சம் டாலர்களை அபராதமாக விதிக்க தென்கொரிய அரசு முடிவு செய்துள்ளது. #BMW



    தென்கொரியாவில் பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் சுமார் 40 கார்களில் தீப்பிடித்து எரிந்தது. இந்த ஆண்டு முழுக்க பி.எம்.டபுள்யூ. விற்பனை செய்த கார்களில் கோளாறு இருந்து வந்தது.

    இது தொடர்பாக தென்கொரியாவின் போக்குவரத்து அமைச்சகம் ஆய்வு நடத்த முடிவு செய்தது. ஆய்வில் காரில் உள்ள இ.ஜி.ஆர். எனும் பாகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாகனங்களில் தீபிடித்து எரிந்ததும், பிரச்சனையை மூடி மறைக்க பி.எம்.டபுள்யூ. நிறுவனம் முயற்சித்ததும் ஆய்வில் தெரியவந்துள்ளது.


    பி.எம்.டபுள்யூ. கார்களின் இ.ஜி.ஆர். (எக்சாஸ்ட் கியாஸ் ரீசர்குலேஷன்) பாகத்தில் கண்டறியப்பட்ட கோளாறு, கார் தொடர்ச்சியாக அதிவேகத்தில் இயக்கப்படும் போது, தீப்பிடிக்க காரணமாக அமைந்தது.

    கார்களில் ஏற்பட்ட கோளாறை விரைந்து சரி செய்யாத காரணத்தால் பி.எம்.டபுள்யூ. நிறுவனத்திற்கு சுமார் ரூ.99 லட்சம் டாலர்கள் அபராதம் விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

    இது தொடர்பாக பி.எம்.டபுள்யூ. கொரியாவின் அதிகாரி கூறியதாவது:-

    போக்குவரத்து அமைச்சகம் தங்கள் நிறுவனம் மீது நேரடியாக குற்றம் சாட்டவில்லை என்றும் இது தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.  #BMW
    தென்கொரியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வை சரிசெய்யாத காரணத்தால் நிதி மந்திரி மற்றும் நிதி கொள்கை செயலாளர் ஆகியோரை அதிபர் மூன் ஜே பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். #SouthKorea #MoonJae
    சியோல்:

    கொரிய தீபகற்பத்தில் வடகொரியாவின் செல்வாக்கு நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இதனால் தென் கொரியாவின் செல்வாக்கு சரிந்து வரும் நிலையில் உள்ளது.

    இதையடுத்து, தென் கொரியாவின் பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. அந்நாடு பொருளாதார ஏற்றத்தாழ்வை சந்தித்து வருகிறது.



    இந்நிலையில், பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலையை சரிசெய்யாத காரணத்தால் தென் கொரியா நிதி மந்திரி கிம் டாங் யென் மற்றும் நிதி கொள்கை செயலாளர் ஜங் ஹா சங் ஆகியோரை அதிபர் மூன் ஜே பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் என அதிபரின் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #SouthKorea #MoonJae
    அயோத்தி நகரில் ராமர் பெயரில் விமான நிலையமும் தசரத மன்னர் பெயரில் மருத்துவ கல்லூரியும் அமைக்கப்படும் என உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் தெரிவித்துள்ளார். #YogiAdityanath
    லக்னோ:

    கொரியா நாட்டு மன்னரை மணந்த அயோத்தி இளவரசிக்கு உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அயோத்தி நகரில் அமைக்கப்பட்டுள்ள நினைவகத்தை தென்கொரியா அதிபரின் மனைவி கிம் ஜங்-சூக் மற்றும் உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் இன்று திறந்து வைத்தனர்.

    இந்த திறப்பு விழாவின்போது உரையாற்றிய யோகி ஆதித்யாநாத், அயோத்தி நகரம் அமைந்துள்ள ஃபைஸாபாத்  மாவட்டத்துக்கு அயோத்தி மாவட்டம் என பெயர் சூட்டப்படும் என அறிவித்தார்.

    அயோத்திக்கு யாராலும் அநீதி இழைக்க முடியாது. நமது பெருமை, கவுரவம், பெருமிதம் ஆகியவற்றின் அடையாளமாக திகழும் அயோத்தியில் ராமர் பெயரில் விமான நிலையமும் தசரத மன்னர் பெயரில் மருத்துவ கல்லூரியும் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். #Ayodhyamedicalcollege #KingDasharatha #KingDasharathamedicalcollege #YogiAdityanath
    ×