search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அஸ்லான் ஷா ஆக்கி - இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி
    X

    அஸ்லான் ஷா ஆக்கி - இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி

    அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டியில் தென்கொரியா அணி இந்தியாவை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. #India #SouthKorea #AzlanShahHockey
    இபோக்:

    6 அணிகள் இடையிலான 28-வது அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா-தென்கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    விறுவிறுப்பான இந்த ஆட்டம் வழக்கமான நேரம் முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. இந்திய வீரர் சிம்ரன்ஜீத் சிங் 9-வது நிமிடத்தில் பீல்டு கோல் அடித்தார். தென்கொரியா அணி தரப்பில் ஜங் ஜோங் ஹியூன் 47-வது நிமிடத்தில் பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பை பயன்படுத்தி பதில் கோல் திருப்பினார். இரு அணிகளும் சமநிலை வகித்ததால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

    இதில் தென்கொரியா அணி 4-2 என்ற கோல் கணக்கில் (5-3) இந்தியாவை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. 5 முறை சாம்பியனான இந்திய அணி 2010-ம் ஆண்டுக்கு பிறகு இந்த போட்டியில் பட்டம் வென்றதில்லை என்ற சோகம் தொடருகிறது. முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் மலேசியா அணி 4-2 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தியது. #India #SouthKorea #AzlanShahHockey
    Next Story
    ×