search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Smriti Mandhana"

    • காமன்வெல்த் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக மந்தனா 63 ரன்கள் எடுத்தார்.
    • டி20 தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா முதல் முறையாக 3-வது இடத்துக்கு முன்னேறினார்.

    துபாய்:

    பெண்கள் டி20 போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது. இதில் பேட்டிங் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் மெல் லானிங் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பெத் மூனி இரண்டாம் இடம் பிடித்தார்.

    இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா முதல் முறையாக 3வது இடத்தைக் கைப்பற்றியுள்ளார். காமன்வெல்த் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக மந்தனா 63 ரன் எடுத்ததால் இரு இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளார். இந்தியாவின் ஷபாலி வர்மா 5ம் இடத்தில் உள்ளார்.

    டி20 தரவரிசையில் பந்துவீச்சில் இந்தியாவின் தீப்தி வர்மா 5வது இடத்தில் உள்ளார்.

    இதேபோல, ஆல்-ரவுண்டருக்கான பட்டியலில் இந்திய அணியின் தீப்தி வர்மா 5-வது இடத்தில் நீடிக்கிறார்.

    • இந்திய அணி 11.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து பாகிஸ்தானை தோற்கடித்தது.
    • இந்திய அணி வீராங்கனை மந்தனா 63 ரன்கள் குவித்தார்.

    பர்மிங்காம்:

    72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் மோதியது.

    இந்த போட்டியின் தொடக்கத்தில் மழை குறுக்கிட்டதன் காரணமாக டாஸ் போடுவது தாமதமானது. மழையின் காரணமாக போட்டியில் இரு ஓவர்கள் குறைக்கப்பட்டு 18 ஓவர்களாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி 18 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 11.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஸ்மிரிதி மந்தனா அரை சதம் அடித்ததன் மூலம் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.

    டி20 கிரிக்கெட்டில் சேசிங்கில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்குப் பிறகு 1000-க்கும் மேற்பட்ட ரன்களைக் கடந்த மூன்றாவது இந்திய பேட்டர் என்ற பெருமையை மந்தனா பெற்றுள்ளார். மந்தனா 1059 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். கோலி மற்றும் ரோகித் முறையே 1789 மற்றும் 1375 ரன்கள் குவித்துள்ளனர்.

    வெஸ்ட் இண்டீஸில் நடைபெற இருக்கும் ஐசிசி பெண்கள் உலகக்கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணி கேப்டனாக ஹர்மன்ப்ரீத் நியமிக்கப்பட்டுள்ளார். #WWT20
    வெஸ்ட் இண்டீஸில் வருகிற நவம்பர் மாதம் 9-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை ஐசிசி பெண்கள் உலகக்கோப்பை டி20 தொடர் நடைபெறுகிறது. இதற்கான இந்திய அறிவிக்கப்பட்டுள்ளது.

    சமீப காலமாக டி20 போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்மிரிதி மந்தனா துணைக் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.



    உலகக்கோப்பைக்கான பெண்கள் அணியில் இடம்பிடித்துள்ள வீராங்கனைகள் விவரம்:-

    1. ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), 2. ஸ்மிரிதி மந்தனா, 3. மிதாலி ராஜ், 4. ஜெமிமா ரோட்ரிக்ஸ், 5. வேதா கிருஷ்ணமூர்த்தி, 6. தீப்தி ஷர்மா, 7. தன்யா பதியா (விக்கெட் கீப்பர்). 8. பூணம் யாதவ், 9. ராதா யாதவ், 10. அனுஜா பாட்டீல், 11. ஏக்தா பிஸ்ட், 12. ஹேம்லதா, 13. மன்சி ஜோஷி, 14. பூஜா வாஸ்ட்ராகர், 15. அருந்ததி ரெட்டி.
    தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன், ஹீமா தாஸ், ஸ்மிருதி மந்தனா உள்ளிட்ட வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது வழங்கப்படும் என விளையாட்டு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. #SatyanGnanasekaran #SmritiMandhana #HimaDas #ArjunaAward
    புதுடெல்லி:

    மத்திய அரசால் ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சிறந்த விளங்கும் வீரர்களுக்கு அர்ஜூனா விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம்.

    இந்த விருதுக்கான பெயரை அந்தந்த விளையாட்டு சங்கங்கள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யும். வீரர்களின் செயல்பாட்டை ஆராய்ந்து மத்திய அமைச்சகம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும்.

    இதற்கிடையே, தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன், ஹீமா தாஸ், ஸ்மிருதி மந்தனா உள்பட பல்வேறு வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது வழங்க மத்திய அரசுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.



    இந்நிலையில், தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரனுக்கு அர்ஜுனா விருது வழங்கப்படும் என விளையாட்டு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

    மேலும், நீரஜ் சோப்ரா, ஹீமா தாஸ், ஜின்சன் ஜான்சன், நிலாகுருதி சிக்கி ரெட்டி, சுபேதார் சதீஷ்குமார், ஸ்மிருதி  மந்தானா, போபண்ணா, ஸ்ரீ சுமித், சுபாங்கர் சர்மா ஆகியோருக்கும் அர்ஜூனா விருதுகள் வழங்கப்பட உள்ளன. இவை டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளது. #Satyanarayanan #SmritiMandhana #HimaDas #ArjunaAward
    ஹீமா தாஸ், ஸ்மிருதி மந்தனா உள்ளிட்ட 20 வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது வழங்க மத்திய அரசுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. #SmritiMandhana #HimaDas
    புதுடெல்லி:

    மத்திய அரசால் ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சிறந்த விளங்கும் வீரர்களுக்கு அர்ஜூனா விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம்.

    இந்த விருதுக்கான பெயரை அந்தந்த விளையாட்டு சங்கங்கள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யும். வீரர்களின் செயல்பாட்டை ஆராய்ந்து மத்திய அமைச்சகம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். 



    இந்நிலையில், ஹீமா தாஸ், ஸ்மிருதி மந்தனா உள்பட 20 வீரர், வீராங்கனைகளின் பெயர்கள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது.

    இதில், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் ஸ்மிருதி மந்தனா, ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, ஜின்சன் ஜான்சன், தடகள வீராங்கனை ஹீமா தாஸ் மற்றும் டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா, ஹாக்கி வீரர் மன்பிரீத் சிங் உள்ளிட்ட 20 பேருக்கு அர்ஜூனா விருது வழங்க மத்திய அரசுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. #SmritiMandhana #HimaDas
    நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘கனா’ படத்தின் பாடல்களை இந்திய கிரிக்கெட் அணியில் பிரபலமானவர் வெளியிட இருக்கிறார். #Kanaa #Sivakarthikeyan
    சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படம் ‘கனா’. நடிகரும், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்ட அருண்ராஜா காமராஜ் இயக்குநராக அறிமுகமாகும் இந்த படம் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது.

    நடுத்தர வீட்டுப் பெண் ஒருவர், தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. கிரிக்கெட்டை மையப்படுத்தி பல படங்கள் வந்தாலும் பெண் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் முதல் படம் இது.

    இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் டீசர் மற்றும் இசையை ஆகஸ்ட் 23ம் தேதி வெளியிட இருப்பதாக சிவகார்த்திகேயன் அறிவித்திருந்தார்.



    தற்போது கனா படத்தின் பாடல்களை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் மிகவும் பிரபலமான ஸ்மிரிதி மந்தனா வெளியிட இருக்கிறார். இதை சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். 
    இந்திய வீராங்கனை இங்கிலாந்தில் நடைபெற்று வரும் பெண்களுக்கான சூப்பர் லீக்கில் ஒட்டுமொத்த சாதனைகளையும் படைத்துள்ளார். #SmritiMandhana
    இங்கிலாந்து பெண்களுக்கான சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று விளையாடும் வெஸ்டர்ன் ஸ்டோர்ம் அணியில் முதன்முறையாக இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா இடம்பிடித்து விளையாடி வருகிறார்.

    அறிமுக தொடரிலேயே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை நடைபெற்றுள்ள 6 போட்டிகளில் ஒரு சதம், இரண்டு அரைசதங்களுடன் 338 ரன்கள் குவித்துள்ளார். இதில் இரண்டு முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.



    இதன்மூலம் ஒட்டுமொத்த பேட்டிங் சாதனைக்கும் சொந்தக்காரராகியுள்ளார். இந்த தொடரில் அதிக ரன்கள் (338) அடித்ததுடன் அதிகபட்ச ஸ்கோர் (102), அதிக சராசரி (85), ஸ்டிரைக் ரேட் (184), அதிக பவுண்டரி (34), அதிக சிக்ஸ் (19) சாதனைகளையும் படைத்துள்ளார்.

    2016 ரன்னரும், 2017 சாம்பியனும் ஆன ஸ்டோர்ம் 6 போட்டியில் ஐந்தில் வெற்றி பெற்று லாபோரோவ் லைட்டினிங் அணியுடன் முதல் இடத்தை பகிர்ந்துள்ளார்.
    இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சூப்பர் லீக் தொடரில் இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 18 பந்தில் அரைசதம் விளாசி சாதனைப் படைத்துள்ளார். #smritiMandhana
    இங்கிலாந்தில் பெண்களுக்கான கிரிக்கெட் சூப்பர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் வெஸ்டர்ன் ஸ்டோர்ம் - லாபோரா லைட்னிங் அணிகள் மோதின. மழைக் காரணமாக 6 போட்டியாக குறைக்கப்பட்டது.

    முதலில் வெஸ்டர்ன் ஸ்டோர்ம் அணி பேட்டிங் செய்தது. இந்த அணியில் இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா இடம் பிடித்துள்ளார். இவர் தொடக்க வீராங்கனையாக களம் இறங்கினார்.

    மந்தனா தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 19 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 52 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 18 பந்தில் அரைசதம் அடித்தார். இதன்மூலம் டி20-யில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீராங்கனை என்ற சாதனையை சமன் செய்தார்.



    முதலில் பேட்டிங் செய்த வெஸ்டர் ஸ்டோர்ம் 6 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் குவித்தது. பின்னர் 86 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய லாபோரா லைட்னிங் அணி 67 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் வெஸ்டர்ன் ஸ்டோர்ம் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    இந்திய கிரிக்கெட்டில் மிகவும் மதிப்பு மிக்க விருதாக கருதப்படும் பாலி உம்ரிகர் விருது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு வழங்கப்பட்டது. #ViratKohli #PollyUmrigarAward #HarmanpreetKaur #SmritiMandhana #BCCIAwards

    பெங்களூரு:

    பெங்களூருவில் கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளுக்கான விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய கிரிக்கெட் ஆண்கள், பெண்கள் அணிகள் மற்றும் உள்ளூர் அணிக்காக விளையாடிய வீரர்கள் என பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் சர்வதேச போட்டி, உள்ளூர் போட்டிகளில் மிக சிறப்பாக செயல்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கப்பட்டது. 



    2016-17, 2017-18 ஆகிய இரண்டு சீசன்களில் இந்திய ஆண்கள், பெண்கள் கிரிக்கெட் அணிகள் தொடர்ச்சியாக மிக சிறப்பாக விளையாடியுள்ளன. இந்திய ஆண்கள் அணி பல தொடர்களை வென்றது. அதே போல பெண்கள் கிரிக்கெட் அணி உலககோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 



    இந்த இரு சீசன்களில் மிக சிறப்பாக செயல்பட்ட வீரராக விராட் கோலி அறிவிக்கப்பட்டுள்ளார். அதே போல் பெண்கள் அணியில் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் சர்வதேச அளவில் சிறந்த வீராங்கனைகள் என்ற விருதை முதன்முறையாக பெற்றனர். 



    அதே போல் இந்திய கிரிக்கெட்டை மிக உயரத்திற்கு கொண்டு சென்ற ஜெக்மோகன் டால்மியா பெயரிட்டு 4 விருதுகள் வழங்கப்பட்டன. அதில் அதிக ரன் எடுத்த வீரர், விக்கெட் எடுத்த வீரர், U-16 விஜய் மெர்சண்ட் கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட ஆண் மற்றும் பெண் வீரருக்கான விருது வழங்கப்பட்டன. 



    அதே போல் பெங்கால் கிரிக்கெட் சங்கம் சார்பாக 2016-17 சீசனில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரருக்கு விருது வழங்கப்பட்டது. மேலும் பிசிசிஐ சார்பாக வழங்கப்படும் விருதுக்கான பண பரிசுத் தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 



    இந்த விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மாவுடன் கலந்துகொண்டார். தினேஷ் கார்த்திக் தனது மனைவி தீபிகா பல்லிகல் உடன் கலந்துகொண்டார். மேலும் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாட வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி வீரர்களும் இந்த விழாவில் கலந்துகொண்டனர். #ViratKohli #PollyUmrigarAward #HarmanpreetKaur #SmritiMandhana #BCCIAwards
    இந்திய கிரிக்கெட்டில் மிகவும் மதிப்பு மிக்க விருதாக கருதப்படும் பாலி உம்ரிகர் விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். #ViratKohli #PollyUmrigarAward #HarmanpreetKaur #SmritiMandhana

    பெங்களூரு:

    பிசிசிஐ சார்பிலான விருதுகள் வழங்கும் விழா வருகிற 12-ம் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ளது. இந்தியா அளவில் சிறந்த சிரிக்கெட் வீரருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான பாலி உம்ரிகர் விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 12-ம் தேதி பெங்களூருவில் நடைபெறும் விழாவில் கோலிக்கு விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    2016-17, 2017-18 ஆகிய இரண்டு ஆண்டுகளில் இந்திய ஆண்கள், பெண்கள் கிரிக்கெட் அணிகள் தொடர்ச்சியாக மிக சிறப்பாக விளையாடியுள்ளன. இந்த காலகட்டத்தில் இந்திய ஆண்கள் அணி பல தொடர்களை வென்றது. அதே போல பெண்கள் கிரிக்கெட் அணி உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 

    இந்த காலகட்டத்தில் மிக சிறப்பாக செயல்பட்ட வீரராக விராட் கோலி அறிவிக்கப்பட்டுள்ளார். அதே போல் பெண்கள் அணியில் ஹர்மன்பிரீத் கவுர் (2016-17) மற்றும் ஸ்மிரிதி மந்தனா (2017-18) ஆகியோர் சர்வதேச அளவில் சிறந்த வீராங்கனைகள் என்ற விருதை முதன்முறையாக பெருகின்றனர். 



    அதே போல் இந்திய கிரிக்கெட்டை மிக உயரத்திற்கு கொண்டு சென்ற ஜெக்மோகன் டால்மியா பெயரிட்டு 4 விருதுகள் வழங்கப்பட உள்ளன. அதில் அதிக ரன் எடுத்த வீரர், அதிக விக்கெட் எடுத்த வீரர், U-16 விஜய் மெர்சண்ட் கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட ஆண் மற்றும் பெண் வீரருக்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன.

    அதே போல் பெங்கால் கிரிக்கெட் சங்கம் சார்பாக 2016-17 சீசனில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரருக்கு விருது வழங்கப்பட உள்ளது. மேலும் பிசிசிஐ சார்பாக வழங்கப்படும் விருதுக்கான பரிசுத்தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.  #ViratKohli #PollyUmrigarAward #HarmanpreetKaur #SmritiMandhana
    ஐபிஎல் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்பு நடைபெறும் பெண்கள் டி20 காட்சி கிரிக்கெட்டில் ஸ்மிரிதி, ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். #IPL2018
    ஐபிஎல் 11-வது சீசனின் லீக் ஆட்டங்கள் முடியும் தருவாயில் உள்ளன. லீக் ஆட்டங்கள் முடிவடைந்த பின்னர், முதல் குவாலிபையர் மும்பை வான்கடே மைதானத்தில் வருகிற 22-ந்தேதி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதற்கு முன்னதாக பெண்கள் டி20 காட்சி கிரிக்கெட் போட்டியை நடத்த ஐபிஎல் நிர்வாகம் முன்வந்துள்ளது.

    இதில் விளையாடும் இரண்டு அணிகளின் கேப்டன்களாக ஸ்மிரிதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நியூசிலாந்து அணி கேப்டன் சுசி பேட்ஸ், சோபி டெவின், ஆஸ்திரேலியாவின் எலிசே பெர்ரி, அலிசா ஹீலி, மேகன் ஸ்கட், பெத் மூனி, இங்கிலாந்தின் டேனி வியாட், டேனியல் ஹசன் போன்றோர் இதில் கலந்து கொள்கிறார்கள்.


    ஸ்மிரிதி மந்தனா

    இந்திய கிரிக்கெட் வாரியம் இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் பெண்கள் டி20 கிரிக்கெட் தொடரை அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.
    ×