என் மலர்
நீங்கள் தேடியது "Satyan Gnanasekaran"
- சிறப்பு புலனாய்வு குழு பரிந்துரையின் பேரில் சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
- திருட்டு உள்ளிட்ட 20 வழக்குகள் ஞானசேகரன் மீது உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பல்வேறு வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளது.
இது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணைக் குழு அதிகாரிகள் இன்று காலை ஞானசேகரன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
சுமார் 5 மணி நேரம் சோதனை நடத்தினர். இதில் ஞானசேகரன் பயன்படுத்தி வந்த லேப்டாப் மற்றும் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
சிறப்பு புலனாய்வு குழு பரிந்துரையின் பேரில் சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
ஞானசேகரன் மீது ஏற்கனவே 3 முறை குண்டாஸ் போடப்பட்ட நிலையில், 4வது முறையாக ஞானசேகரன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருட்டு உள்ளிட்ட 20 வழக்குகள் ஞானசேகரன் மீது உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மத்திய அரசால் ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சிறந்த விளங்கும் வீரர்களுக்கு அர்ஜூனா விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம். இந்த விருதுக்கான பெயரை அந்தந்த விளையாட்டு சங்கங்கள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யும். வீரர்களின் செயல்பாட்டை ஆராய்ந்து மத்திய அமைச்சகம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும்.
தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன், ஹீமா தாஸ், ஸ்மிருதி மந்தனா உள்பட பல்வேறு வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது வழங்க மத்திய அரசுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் சமீபத்தில் பரிந்துரை செய்துள்ளது.
இதற்கிடையே, தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரனுக்கு அர்ஜுனா விருது வழங்கப்படும் என விளையாட்டு துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் மேலும் பல வெற்றிகளை குவித்து சாதனை சிகரங்களை தொட அன்பான வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். #ArjunaAward | #SathiyanGnanasekaran #EdappadiPalaniswami
மத்திய அரசால் ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சிறந்த விளங்கும் வீரர்களுக்கு அர்ஜூனா விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம்.
இந்த விருதுக்கான பெயரை அந்தந்த விளையாட்டு சங்கங்கள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யும். வீரர்களின் செயல்பாட்டை ஆராய்ந்து மத்திய அமைச்சகம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும்.
இதற்கிடையே, தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன், ஹீமா தாஸ், ஸ்மிருதி மந்தனா உள்பட பல்வேறு வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது வழங்க மத்திய அரசுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

மேலும், நீரஜ் சோப்ரா, ஹீமா தாஸ், ஜின்சன் ஜான்சன், நிலாகுருதி சிக்கி ரெட்டி, சுபேதார் சதீஷ்குமார், ஸ்மிருதி மந்தானா, போபண்ணா, ஸ்ரீ சுமித், சுபாங்கர் சர்மா ஆகியோருக்கும் அர்ஜூனா விருதுகள் வழங்கப்பட உள்ளன. இவை டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளது. #Satyanarayanan #SmritiMandhana #HimaDas #ArjunaAward






