அர்ஜூனா விருது பெறும் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரனுக்கு ஸ்டாலின் வாழ்த்து

அர்ஜூனா விருது வென்ற தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரனுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். #ArjunaAward #SathiyanGnanasekaran #Mkstalin
அர்ஜூனா விருது பெறும் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரனுக்கு ஸ்டாலின் வாழ்த்து
Published on

சென்னை:

மத்திய அரசால் ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சிறந்த விளங்கும் வீரர்களுக்கு அர்ஜூனா விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம். இந்த விருதுக்கான பெயரை அந்தந்த விளையாட்டு சங்கங்கள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யும். வீரர்களின் செயல்பாட்டை ஆராய்ந்து மத்திய அமைச்சகம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். 

தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன், ஹீமா தாஸ், ஸ்மிருதி மந்தனா உள்பட பல்வேறு வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது வழங்க மத்திய அரசுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் சமீபத்தில் பரிந்துரை செய்துள்ளது.

இதற்கிடையே, தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரனுக்கு அர்ஜுனா விருது வழங்கப்படும் என விளையாட்டு துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது.

இந்நிலையில்,  அர்ஜூனா விருது பெறும் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரனுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில்,  அர்ஜூனா விருது பெறும் தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகள்!

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதை தன் இலக்காக கொண்டிருக்கும் சத்யன், தொடர்ந்து பல்வேறு சாதனைகள் புரிந்து நாட்டிற்கு பெருமை சேர்த்திட வேண்டுமென மனதார வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார். #ArjunaAward #SathiyanGnanasekaran #Mkstalin

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com