search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sickle Cut"

    • ராஜபாளையத்தில் சொத்து பிரச்சினையில் கணவன்-மனைவி உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் மேல ஆவாரம்பட்டி பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் கோபால் (வயது 60). இவரது மனைவி அழகம்மாள் (57). கோபால் வீட்டின் அருகே அவரது சகோதரர் கிருஷ்ணன் (58) வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணன் தனது அண்ணியின் உறவினருக்கு சொந்தமான வீட்டை வாங்கியதாக தெரிகிறது. அதை ஏமாற்றி வாங்கி விட்டதாக கோபாலும், அவரது மனைவியும் கருதினர். இதனால் சகோதரர்களுக்கு இடையே முன் விரோதம் ஏற்பட்டது. அடிக்கடி 2 குடும்பத்தினரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் நேற்று கிருஷ்ணன், தனது மனைவி பொன்னுத்தாயுடன் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது அரிவாளுடன் வந்த அண்ணி அழகம்மாள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென 2 பேரையும் சரமாரியாக வெட்டினார். இதில் கிருஷ்ணன், அவரது மனைவிக்கு தலை, கைகளில் வெட்டு விழுந்தது.

    அப்போது கிருஷ்ணன் அங்கிருந்த மண்வெட்டியால் அழகம்மாளை தாக்கினார். இதில் அவரும் படுகாயமடைந்தார். 3 பேரும் ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மணிராஜை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்
    • பலத்த காயம் அடைந்த மணிராஜை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் முத்தையா புரம் சுந்தர் நகரை சேர்ந்தவர் மணிராஜ் ( வயது 60). பெயிண்டிங் காண்ட்ராக்டரான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளது.

    இவர் நேற்று பணி முடிந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். பாரதிநகர் அருகே மணிராஜ் வந்த போது அவரை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

    பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த மணிராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்கை அளிக்கப்பட்டு வருகிறது.

    சம்பவம் குறித்து முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் வழக்குப்பதிவு செய்து மணிராஜை அரிவாளால் வெட்டியவர்கள் யார்? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மாதேஷ் அரிவாளோடு சிவனேசன் வீட்டிற்குச் சென்று மீண்டும் தகராறு செய்துள்ளார்.
    • குமரேசன் வீட்டில் சித்தாளாக வேலை பார்த்து வந்த பாஸ்கர் தடுக்க முயன்றபோது வெட்டு பட்டு படுகாயமடைந்தார்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள பாவட்டக்குடி அரண்மனை தெருவில் உள்ள சிவனேசன் என்பவரது வீட்டில் வேலை நடந்து வரும் நிலையில் தொழிலாளர்களுக்கு டீ வாங்க கடைத் தெருவுக்குச் சென்று திரும்பி வந்துள்ளார்.

    அப்போது பாவட்டக்குடி, வஉசி தெருவை சேர்ந்த மணிவண்ணன் மகன் மாதேஷ் (வயது 17), சிவனேசன் மீது இருசக்கர வாகனத்தில் வந்து மோதுவது போல் சென்றுள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் சிவனேசன் வீட்டுக்கு சென்ற நிலையில் மாதேஷ் அரிவாளோடு சிவனேசன் வீட்டிற்குச் சென்று மீண்டும் தகராறு செய்துள்ளார்.

    அப்போது மாதேஷ் அரிவாளை எடுத்து சிவனேசனை வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த குமரேசன் வீட்டில் சித்தாளாக வேலை பார்த்து வந்த பாஸ்கர் (49) தடுக்க முயன்றபோது வெட்டு பட்டு படுகாயமடைந்தார். அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாஸ்கர் கொடுத்த புகாரின் பேரில் மாதேஷ் மீது வழக்கு பதிவு செய்து பேரளம் போலீசார் கைது செய்தனர்.


    தேவர்குளம் அருகே விவசாயிக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள சுண்டன்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 47), விவசாயி.

    இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவன் (65) என்பவருக்கும் இடப்பிரச்சினை காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இரண்டு குடும்பத்திற்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த பரமசிவன், அவரது மனைவி சீலக்காரி, மகன் வேல்முருகன் ஆகிய 3 பேரும் சேர்ந்து, கருப்பசாமியை சரமாரி அடித்து உதைத்து அரிவாளால் வெட்டி விட்டு ஓடி விட்டனர்.

    பலத்த காயமடைந்த கருப்பசாமிக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து கருப்பசாமி தேவர்குளம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நெல்லை டவுனில் பட்டாசு வாங்குவதில் தகராறில் அண்ணன்-தம்பிக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் பாரதியார் தெருவை சேர்ந்தவர் மாரிச்செல்வம் (வயது 29). இவரது தம்பி சுடலைமுத்து (27). இவர்கள் நேற்று முன்தினம் பட்டாசு வாங்குவதற்காக அங்குள்ள கடைக்கு சென்றனர்.

    அப்போது வரிசையில் நிற்பது தொடர்பாக அங்கு பிரச்சினை ஏற்பட்டது. இது குறித்து அங்கு டீக்கடை நடத்தி வரும் முத்தையா என்பவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    நேற்று அவரது கடைக்கு சென்ற மாரிச்செல்ம் மற்றும் சுடலைமுத்து ஆகியோர் எப்படி போலீசில் புகார் செய்யலாம் என கேட்டு அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் கடையில் உள்ள பொருட்களை அடித்து உடைத்துள்ளனர்.

    இதனால் ஆத்திரமடைந்த முத்தையா இருவரையும் அரிவாளால் வெட்டினார். இதில் இருதரப்பினருக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது தொடர்பான புகாரின் பேரில் இருதரப்பினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுரண்டை அருகே குடும்பம் நடத்த வர மறுத்த தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
    ஆலங்குளம்:

     சுரண்டை அருகே உள்ள சாம்பவர் வடகரை மாஞ்சோலை தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். தொழிலாளி. இவரது மனைவி ஈஸ்வரி (வயது 26). கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. 

    இதையடுத்து கணவரை பிரிந்து ஈஸ்வரி தனது தாய் வீடான பூலாங்குளத்திற்கு வந்துவிட்டார். இந்நிலையில் பாலமுருகன் பூலாங்குளத்தில் உள்ள தனது மனைவி வீட்டிற்கு சென்று குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த பாலமுருகன், ஈஸ்வரியை அரிவாளால் வெட்டினார். 
     
    இதில் காயமடைந்த அவர் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் வழக்குப்பதிந்து பாலமுருகனை கைது செய்தார்.
    ஆரல்வாய்மொழி அருகே டாஸ்மாக் ஊழியரை வெட்டி ரூ.5½ லட்சம் பணத்தை மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    நாகர்கோவில்:

    ஆரல்வாய்மொழி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 42). இவர் ஆரல்வாய்மொழி அருகே குமாரபுரத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.

    இந்த கடையில் தாழக்குடியை சேர்ந்த புஷ்பராஜ், பழவூரை சேர்ந்த முனியாண்டி ஆகியோர் ஊழியர்களாக வேலை செய்து வருகிறார்கள். இந்த டாஸ்மாக் கடையில் ஒவ்வொரு நாளும் வசூலாகும் பணத்தை இவர்கள் எண்ணி கணக்கு பார்த்துவிட்டு அதை பாதுகாப்பாக கொண்டு செல்வது வழக்கம்.

    நேற்று இரவு 10 மணிக்கு மதுபான விற்பனை முடிந்ததும் வசூல் தொகையை எண்ணி கணக்குப் பார்த்து உள்ளனர். அப்போது ரூ.5 லட்சத்து 33 ஆயிரத்து 880 ரூபாய் இருந்தது தெரியவந்தது.

    அந்த பணத்தை கண்காணிப்பாளர் முருகன் தனது மோட்டார் சைக்கிளில் வைத்துக்கொண்டு ஆரல் வாய்மொழி நோக்கி சென்று கொண்டிருந்தார். கடை ஊழியர்களில் ஒருவரான முனியாண்டி பழவூர் நோக்கி சென்றுவிட்டார். மற்றொரு ஊழியரான புஷ்பராஜ் தனது மோட்டார் சைக்கிளில் பின்னால் சென்று கொண்டிருந்தார்.

    குமாரபுரம் பெட்ரோல் பங்க்கை தாண்டி இருளான பகுதியில் முருகனின் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே ஒரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் முருகன் அருகே வந்ததும் தங்கள் மோட்டார் சைக்கிளால் அவரை வழிமறித்து தடுத்து நிறுத்தினார்கள். மோட்டார் சைக்கிளில் வந்தவர்களில் ஒரு வாலிபர் இறங்கிச் சென்று தன் கையில் இருந்த அரிவாளால் முருகனை சரமாரியாக வெட்டினார்.

    இதனால் அவர் அலறிய படி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். உடனே அந்த வாலிபர் ரூ.5½ லட்சம் பணத்துடன் முருகனின் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டார். மற்ற கொள்ளையர்கள் 2 பேரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் அவரை பின் தொடர்ந்து சென்று விட்டனர்.

    இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் புஷ்பராஜ் தனது மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தார். நடுரோட்டில் ரத்த காயத்துடன் முருகன் விழுந்து கிடப்பதை பார்த்ததும் அவர் அதிர்ச்சி அடைந்தார். அவரிடம் நடந்த விவரங்களை கேட்டறிந்தார்.

    பிறகு அவர் ஆரல்வாய் மொழி போலீஸ் நிலையம் சென்று துணிகர கொள்ளை பற்றி புகார் செய்தார். உடனே ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆம்புலன்சை வரவழைத்து முருகனை சிகிச்சைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    இந்த துணிகர கொள்ளை பற்றி ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகதேவி, சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். டாஸ்மாக் கடையில் விற்பனையாகும் பணத்தை ஊழியர்கள் எடுத்துச் செல்வதை நோட்ட மிட்ட கும்பல் இந்த கொள்ளையில் ஈடுபட் டது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த கொள்ளையர்களை கைது செய்ய ஏ.டி.எஸ்.பி. ஜவகர் தலைமையில் தனி போலீஸ் படையும் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் கொள்ளையர்களை கைது செய்ய தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

    சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளிலும் உள்ள போலீசார் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர். கொள்ளையர்கள் டாஸ்மாக் கண்காணிப்பாளர் முரு கனின் மோட்டார் சைக் கிளுடன் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதால் அந்த மோட்டார் சைக்கிளின் எண்ணை போலீஸ் சோதனைச்சாவடியில் தெரிவித்து அதன் மூலமும் கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    களக்காடு அருகே விவசாயியை வெட்டிய தொழிலாளி கைது செய்யப்பட்டார். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள பொத்தைசுத்தியை சேர்ந்தவர் பழனி (வயது 45). விவசாயி. அதே ஊரைச் சேர்ந்த துரைகுட்டி (30), செல்வம் (21), கார்த்திக் (23), சுடலைமுத்து (24). இவர்கள் 4 பேரும்  இரவில் தெருவில் நின்று கொண்டு பெண்கள், குழந்தைகள் மீது கற்களை வீசினார்களாம். இதனை பழனி தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் பழனியை அரிவாளால் வெட்டினர். இதில் அவரது இடது கை நடுவிரல் துண்டானது. 

    மேலும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் கொலை முயற்சி வழக்குபதிந்து விசாரணை நடத்தி துரைகுட்டியை கைது செய்தனர். செல்வம், கார்த்திக், சுடலைமுத்து ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.
    நிதி நிறுவன அதிபரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் பந்தநல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே பந்தநல்லூர் அடுத்த செருகுடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 45), நிதி நிறுவன அதிபர். இந்த நிலையில் நேற்று இரவு ராஜேந்திரன், வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தனர். அவர்கள் கண் இமைக்கும் நேரத்துக்குள் ராஜேந்திரனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அவர் அலறியடித்து கூச்சல் போட்டார். உடனே மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    அரிவாள் வெட்டில் காயம் அடைந்த ராஜேந்திரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பற்றி பந்தநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் முன் விரோதம் காரணமாக ராஜேந்திரனை, மர்ம கும்பல் வெட்டியது தெரியவந்தது. தப்பிசென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    நாகர்கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தி.மு.க. பிரமுகரை தடுத்து நிறுத்தி வெட்டிய ரவுடி மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர் .

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே வெள்ளமடம் வேம்பத்தூர் கண்ணாநகரைச் சேர்ந்தவர் இம்மானுவேல், (வயது 52). இவர் பீமநேரி தி.மு.க. ஊராட்சி செயலாளராக உள்ளார். இவர், தனது நண்பர்கள் ரீமாஸ் (30), சுந்தருடன் மோட்டார் சைக்கிளில் கடம்படி விளாகம் பகுதியில் உள்ள துக்க வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். சந்தைவிளை பகுதியில் உள்ள செங்கட்டி பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது இவர்களது மோட்டார் சைக்கிளை அனந்தபத்மநாபபுரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (28) மற்றும் அவரது நண்பர்கள் சிலர் தடுத்து நிறுத்தி தகராறு செய்தனர்.

    திடீரென இம்மானுவேலுவை அரிவாளால் வெட்டினார்கள். இதை தடுக்க வந்த ரீமாசுக்கும் வெட்டு விழுந்தது. இவர்களது சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதையடுத்து ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் தப்பியோடி விட்டனர்.

    படுகாயம் அடைந்த இம்மானுவேல் ரீமாஸ் ஆகியோர் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து இம்மானுவேல் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் ராஜ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனைச்சட்டம் 341, 294 (பி), 324, 327, 506(2) ஆகிய 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதுவரை யாரும் சிக்க வில்லை. ராஜ்குமார் மீது ஏற்க னவே பல்வேறு வழக்குகள் உள்ளது. ரவுடிகள் பட்டியலிலும் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது.

    ஓடும் பஸ்சில் டிக்கெட் பரிசோதகரை கத்தியால் வெட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை சாமிபிள்ளை தோட்டம் அகத்தியர் தெருவை சேர்ந்தவர் தமிழ்வழி. தனியார் பஸ் டிக்கெட் பரிசோதகர்.

    இவர் நேற்று காலாபட்டில் இருந்து புதுவை வரும் போது பஸ்சில் பயணம் செய்த தமிழ்வழியிடம் சிலர் குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தமிழ்வழியை வெட்டினார்கள். உடனே அவர் உயிர் பிழைக்க ஓடும் பஸ்சில் இருந்து இறங்கி ஓடினார். ஆனாலும் அவரை விடாமல் தூரத்தி சென்று சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த தமிழ்வழியை அருகில் இருந்தவர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தமிழ்வழியை ஓடும் பஸ்சில் வெட்டியது முத்தியால்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி ராஜ் என்ற புஷ்பராஜ் என்பதும் மற்றும் அதே பகுதியை சேர்ந்த கணேஷ், கோட்டக்குப்பத்தை சேர்ந்த தென்னரசு என்பதும் தெரியவந்தது.

    இதில் ராஜ் என்ற புஷ்பராஜை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பல்வேறு அடி-தடி, கொலை வழக்குகளும் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தப்பி ஓடிய 2 பேரை பிடிக்க போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    சேலத்தில் இன்று முன்விரோத தகராறில் வெள்ளி பட்டறை தொழிலாளியை வெட்டி சாய்த்த மனைவியின் கள்ளக்காதலன் போலீசில் சரண் அடைந்தார்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் குகை, பாபுநகர் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 38). இவர் திருவாக்கவுண்டனூரில் உள்ள ஒரு வெள்ளிப் பட்டறையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    இவர், தனது உறவினரான சேலம் பட்டைக்கோவில், குமரன் தெருவை சேர்ந்த நாகேந்திரன் மகன் சாந்தாராமனிடம் (30) இருந்து ரூ. 40 ஆயிரம் கடனாக கந்து வட்டிக்கு வாங்கியதாக கூறப்படுகிறது.

    சாந்தாராமன் குகை லைன்ரோடு கறிக்கடை வீதியில் உள்ள ஒரு கறிக்கடையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த கறிக்கடை செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலையம் அருகிலேயே உள்ளது.

    வழக்கம்போல் இவரும், கோபிநாத்தும் கறிக்கடை வீதி அருகே உள்ள அம்பலவானர் தெருவில் இருக்கும் ஒரு டீக் கடையில் டீ குடிப்பது பழக்கம். அப்போது வட்டி பணம் குறித்து தகராறு ஏற்பட்டுள்ளது.

    மேலும் சாந்தாராமுக்கும், கோபிநாத்தின் மனைவி கமலாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கிடையே முன் விரோதம் இருந்து வந்தது.

    கோபிநாத்தை தீர்த்துக்கட்ட சாந்தாராமன் முடிவு செய்தார். அதன்படி இன்று காலை அவர் கறி வெட்டும் கத்தியை எடுத்து தனது மோட்டார் சைக்கிளில் வைத்துக்கொண்டு வழக்கமாக சந்திக்கும் டீக்கடை முன்பு காத்திருந்தார்.

    அப்போது அவர் செல்போனில் தொடர்பு கொண்டு, தான் அம்பலவானர் தெருவில் உள்ள டீக்கடையில் இருப்பதாகவும், அங்கு வருமாறும் கோபிநாத்திடம் கூறினார்.

    இதையடுத்து கோபிநாத் அந்த டீக்கடைக்கு சென்றார். அங்கிருந்து சாந்தாராமன் தான் கொடுத்த ரூ.40 ஆயிரம் பணத்தை வட்டியுடன் திருப்பி கொடு என்று கேட்டார்.

    அதற்கு கோபிநாத் தன்னிடம் தற்போது பணம் எதுவும் இல்லை என்று கூறவே, டீக்கடை பக்கத்தில் நிறுத்தி வைத்திருந்த தனது மோட்டார் சைக்கிளில் இருந்து வெட்டுவதற்கு கத்தியை எடுத்தார்.

    இதை பார்த்ததும் கோபிநாத் அங்கிருந்து ஓடினார். ஆனால் சாந்தா ராமன் அவரை விடாமல் விரட்டிச் சென்று ஓட ஓட வெட்டினார். முதலில் முகத்தில் ஓங்கி வெட்டினார்.

    முகத்தில் இருந்து மளமளவென ரத்தம் வழிந்த நிலையில் கோபிநாத் வலியால் அலறினார். பின்னர் காது, முகம், வாய், கை உள்ளிட்ட இடங்களில் ஓங்கி வெட்டினார். மேலும் சாந்தா ராமன் ஆத்திரம் அடங்காமல் கோபிநாத்தின் இடது கையை வெட்டினார். இதில் கோபிநாத்தின் இடது கை தொங்கியது.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தில் கடை வைத்திருப்பவர்கள் ஓடி வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, கொலை வெறி தாக்குதல் நடத்திய கறிக்கடை தொழிலாளி சாந்தாராமன் கத்தியுடன் நேராக சென்று செவ்வாய்ப் பேட்டை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

    போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கமலாவுடனான கள்ளத் தொடர்பு தகராறு காரணமாக ஏற்கனவே கோபிநாத் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சாந்தாராமை ஆள் வைத்து தாக்கியதும், இதில் ஏற்பட்ட முன் விரோதத்தில் தற்போது கோபிநாத்தை, அவர் வெட்டி சாய்த்ததும் தெரிய வந்தது.

    கமலாவுக்கு ஏற்கனவே வேறு ஒருவருடன் திருமணம் ஆகி மஞ்சு பாஷினி (18), தர்ஷினி(14), என்ற 2 மகள்கள் உள்ள நிலையில் கோபிநாத் அவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லாவண்யா (11) என்ற மகளும் உள்ளார்.

    கமலாவுடன் போலீசார் விசாரித்த போது, பிறந்த குழந்தைகளை கழுவும் வேலைக்கு சென்று வந்த எனக்கு எனது மாமா மகனான சாந்தாராமுடன் முன்பு கள்ளத்தொடர்பு இருந்தது. இதனால் அவர் மோட்டார் சைக்கிளில் அடிக்கடி அழைத்து செல்வார் என்று கூறினார். தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகிறார்கள்.

    ×