search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Serious injury"

    • கூரை வீட்டின் மேற்கூரையை பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
    • வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து தனமணி மீது விழுந்தது.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் அருகே பூந்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் தனமணி (வயது 55).

    கூலி தொழிலாளி சம்பவத்தன்று இவர், அதே கிராமத்தை சேர்ந்த அன்பரசி என்பவரின் கூரை வீட்டின் மேற்கூரையை பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது திடீரென்று அந்த வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து தனமணி மீது விழுந்தது.

    இதில் இடிபாடுகளில் சிக்கி அவர் படுகாயம் அடைந்தார்.

    அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆலங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்கைகாக அனுமதித்தனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • வினித்குமார் தந்தை விநாயகமூர்த்தியுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் தங்களது விவசாய நிலத்திற்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினர்.
    • விபத்தில் படுகாயம் அடைந்த தந்தை, மகனை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த வீரப்பெருமாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி. இவரது மகன் வினித்குமார் (வயது 11) அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று விடுமுறை தினம் என்பதால் வினித்குமார் தந்தை விநாயகமூர்த்தியுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் தங்களது விவசாய நிலத்திற்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினர். அப்ேபாது பண்ருட்டியில் இருந்து வேகமாக வந்த கார் இவர்கள் மோட்டார் சைக்கிளில் மீது மோதியது. இந்த விபத்தில் விநாயகமூர்த்தி, மகன் வினித்குமார் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    இதனையடுத்து அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் படுகாயம் அடைந்த தந்தை, மகனை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வினித்குமார் பரிதாபமாக உயிர் இழந்தார். மேலும் இந்த விபத்துகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பல இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
    • 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    திருவோணம்:

    திருவோணம் அருகே உள்ள நெய்வேலி தென்பாதி மற்றும் வடபாதி கிராமங்களில் நாய்கள் அதிகமாய் சுற்றி திரிந்து வருகின்றனர். இதனால் பொது மக்களும், வாகன ஓட்டிகளும் பல இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று நெய்வேலி கடை வீதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த நெய்வேலி தென்பாதி கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் (வயது 24), மருதேஷ், நெய்வேலி வடபாதி கிராமத்தை சேர்ந்த புவனேஸ்வரன், ஆகிய மூவரையும் சுற்றி திரிந்த வெறிநாய் கடித்தது.

    இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    இதைத் தொடர்ந்து படுகாயம் அடைந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் நாய் தொல்லையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரமேஷ் சொந்த பணிக்காக சின்சேலத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்.
    • அவ்வழியே சென்றவர்கள் இது குறித்து கீழக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்த வீரங்கனூரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 44). வியாபாரி. இவர் சொந்த பணிக்காக சின்சேலத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது கொரல் அருகேயுள்ள சாலையில் வந்த போது, நிலை தடுமாறி சாலை அருகே இருந்த பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    அவ்வழியே சென்றவர்கள் இது குறித்து கீழக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரமேஷின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோகுலுக்கு தலை யில் பலத்த அடிப்பட்டு படுகாயம் அடைந்தார்.
    • பஸ் மோதி விபத்துக்குள்ளானதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    கடலூர்:

    வடலூர் எம்.ஆர்.கே பகுதியை சேர்ந்தவர் பால முருகன் மகன் கோகுல் (வயது 23). தெங்குத்து திருவள்ளூர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி மகன் ஜெகதீசன்(25).இருவரும் நண்பர்கள். இவர்கள் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வட லூர்-பண்ருட்டி சாலை யில் சென்று கொண்டி ருந்தனர். அங்குள்ளள தனி யார் மருத்துவமனை அருகில் மோட்டார்சைக்கிள் சென்றபோது, இவர்களுக்கு முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளி லிருந்து நிலைதடு மாறி கோகுல், ஜெகதீசன் ஆகியோர் கீழே விழுந்தனர். சாலையில் விழுந்த இவர்கள் மீது பண்ருட்டியில் இருந்து வடலூர் நோக்கி சென்ற அரசு பஸ் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் உடல் நசுங்கி ஜெகதீசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் கோகுலுக்கு தலை யில் பலத்த அடிப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    இவர்கள் மீது மோதிய அரசு பஸ் தொடர்ந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த வழியாக சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் மற்றும் சாலை ஓரமாக நடந்து சென்ற நபர் உள்பட 3 பேர் மீது மோதி விபத்துக்குள் ளானது. உடனே பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் அலறினர். இந்த விபத்தில் ஆண்டி குப்பம் இளங்கோ நகரை சேர்ந்த குமார் (43), புவன கிரி வள்ளலார் நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (64), கடலூர் புதுநகரை சேர்ந்த குமார் மகன் மணி கண்டன் ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அந்த வழியாக சென்றவர்கள் அங்கு வந்து பஸ் மோதி விபத்துக்குள்ளா னதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து வடலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் படுகாயம் அடைந்த கோகுல் உள்பட 4 பேரையும் மீட்டு 108 ஆம்பு லன்ஸ் மூலம் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக் காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் உயிரி ழந்த ஜெகதீசனின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரி சோதனைக்காக குறிஞ்சிப் பாடி அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்த தொட்டியின் மீது ஏறி ஹரிகரன் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தான்.
    • மாணவனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள ராமநாதன்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 46). இவரது மகன் ஹரிகரன் (13) சி.முட்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார். ராமநாதன்குப்பம் பகுதியில் சுமார் 40 அடி உயர தண்ணீர் தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியின் மீது ஏறி ஹரிகரன் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது பட்டத்தின் நூல் அறுந்தது. உடனே பட்டத்தை பிடிப்பதற்காக தண்ணீர் தொட்டியின் மீது ஓடிய ஹரிகரன் கால் தவறி எதிர்பாராத விதமாக தொட்டியில் இருந்து கீழே விழுந்தான். பயங்கர சத்தத்துடன் அலறி கொண்டு தரையில் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் உடனே சம்பவ இடத்திற்கு ஓடி வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே வலியால் உயிருக்கு போராடிய மாணவனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே ஹரிகரன் பரிதாபமாக உயிர் இழந்தான். இதுகுறித்து தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாடிக் கொண்டிருக்கும் போது கால் தவறி கீழே விழுந்து மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு கணவன் மனைவி காரில் சென்று கொண்டிருந்தனர்.
    • முன்னால் சென்ற கார் தடுப்புக் கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது.

    கள்ளக்குறிச்சி:

    புதுவையில் இருந்து மீன் ஏற்றிக்கொண்டு மினி லாரி தூத்துக்குடி நோக்கி சென்றது. இந்த மினி லாரியை புதுவை தேங்காய்திட்டை சேர்ந்த தீனதயாளன் (வயது 30) ஓட்டிச் சென்றார். இந்த மினி லாரி இன்று காலை 10.50 மணியளவில் மடப்பட்டு மேம்பாலம் அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது லாரிக்கு முன்னால், சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு கணவன் மனைவி காரில் சென்று கொண்டிருந்தனர்.

    இந்த காரை மீன் ஏற்றிச் சென்ற மினி லாரி முந்த முயன்றது. அப்போது கார் மீது மினி லாரி உரசியது. இதில் நிலை தடுமாறிய மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. முன்னால் சென்ற கார் தடுப்புக் கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் சென்ற கணவன், மனைவி, மினி லாரி டிரைவர் படுகாயமடைந்தனர். அப்பகுதி இளைஞர்கள் 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்சில் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அந்த பகுதியில் உள்ள விவசாய விளைநிலத்தில் 10-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.
    • அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே பொண்ணங்குப்பத்தில் நேற்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. அப்போது அந்த பகுதியில் உள்ள விவசாய விளைநிலத்தில் 10-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அங்கிருந்த தென்னை மரத்தை இடி தாக்கியது. தனால் தென்னை மரம் தீ பற்றி எரிந்தது. இதனை தொடர்ந்து மேலும் ஒரு இடி விழுந்து அங்கு வேலை செய்து கொண்டிருந்த விவசாயி மகாதேவன் (வயது 49) படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • சிதம்பரம் அருகே சமைக்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மூதாட்டி பலியானார்.
    • மருதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்குபதிவு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே மருதூர் பகுதியை சேர்ந்தவர் யசோதா மூதாட்டி. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் சமைத்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென்று இவரது சேலையில் எதிர்பாராத விதமாக தீ பிடித்தது. இதனால் மூதாட்டி படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்கு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி யசோதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மருதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்குபதிவு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நீலமங்கலம் ஆற்று பாலத்தில் வந்தபோது டிரைவரின் கட்டுபாட்டை இழந்த சொகுசு பஸ் சாலையோர தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்து.
    • இந்த விபத்தால் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 போக்குவரத்து பாதிக்கபட்டது.

    கள்ளக்குறிச்சி:

    சென்னையில் இருந்து தனியார் சொகுசு பஸ் 29 பயணிகளை ஏற்ற க்கொண்டு கோயம்புத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சை தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் (வயது 26) டிரைவர் ஓட்டிவந்தார். அப்போது கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் நீலமங்கலம் ஆற்று பாலத்தில் வந்தபோது டிரைவரின் கட்டுபாட்டை இழந்த சொகுசு பஸ் சாலையோர தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்து.

    இதில்பஸ்சில் பயணம் செய்த 5 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கள்ள க்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 போக்குவரத்து பாதிக்கபட்டது. இதனால் மாற்று வழியில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டது. தொ டர்ந்து புறவழிச்சாலையில் கவிழ்ந்து கிடந்த தனியார் சொகுசு பஸ்சை பொக்லின் உதவியுடன் போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அருள்பிரகாஷ் ரம்யா மற்றும் குழந்தையுடன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று விட்டார்.
    • மருத்துவர்கள் கவிஷ்மிதா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே மங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்பிரகாஷ் (வயது 53) இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈய்யனூரில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்காக குடும்பத்துடன் வந்து அங்கிருந்த தனது வீட்டில் தங்கி உள்ளார். இந்நிலையில் நேற்று காலை தனது 2-வது குழந்தை சஷ்மிதாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் தனது மனைவி ரம்யா மற்றும் குழந்தையுடன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று விட்டார்.

    அப்போது மூத்த மகள் கவிஷ்மிதா (2) என்பவர் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த கார் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கவிஷ்மிதாவை அக்கம், பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்க அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கவிஷ்மிதா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து அருள்பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் கிருஷ்ணன் மகன் மூர்த்தி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • தொழிலாளி பரிதாப சாவு; வாலிபர் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.
    • காயமடைந்த ஜான்சன் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், மழவராயனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 33). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் திருப்பாச் சேத்திக்கு சென்றுவிட்டு ஊருக்கு வந்து கொண்டி ருந்தார். அப்போது பரமக்குடியில் இருந்து எதிர்புறமாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாய மடைந்த கருப்புசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து திருப்பாச் சேத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் பிரவீன்குமார் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

    காளையார்கோவில் அருகே உள்ள உருவாட்டி கொங்கந்திடல் பகுதியை சேர்ந்தவர் ராக்கு (57). இவர் காளையார் கோவில் பஸ் நிறுத்தம் அருகே நடந்த சென்றபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் ராக்கு காயமடைந்தார். விபத்து குறித்து காளையார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    உருவாட்டி பாப்பாக் கோட்டையை சேர்ந்தவர் சிவக்குமார் (43), இவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    மானாமதுரை அருகே உள்ள இடையமேலூரை சேர்ந்தவர் குருசாமி (48). இவர் அங்குள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயமடைந்தார். விபத்து தொடர்பாக மானாமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திருப்பாச்சேத்தியை சேர்ந்தவர் சுந்தரம் (75). இவர் அந்தபகுதியில் நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிள் மோதி காயமடைந்து ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    காரைக்குடி அருகே உள்ள செக்காலை பகுதியை சேர்ந்தவர் ஜான்சன் (25). இவர் சம்பவத்தன்று காரை ஓட்டிச்சென்றபோது நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த ஜான்சன் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    ×