சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

கூரை வீட்டின் மேற்கூரையை பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து தனமணி மீது விழுந்தது.
பலியான தொழிலாளி.
பலியான தொழிலாளி.
Published on

நீடாமங்கலம்:

வலங்கைமான் அருகே பூந்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் தனமணி (வயது 55).

கூலி தொழிலாளி சம்பவத்தன்று இவர், அதே கிராமத்தை சேர்ந்த அன்பரசி என்பவரின் கூரை வீட்டின் மேற்கூரையை பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது திடீரென்று அந்த வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து தனமணி மீது விழுந்தது.

இதில் இடிபாடுகளில் சிக்கி அவர் படுகாயம் அடைந்தார்.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆலங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்கைகாக அனுமதித்தனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com