தியாகதுருகம் அருகே கார் மோதி குழந்தை சாவு

அருள்பிரகாஷ் ரம்யா மற்றும் குழந்தையுடன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று விட்டார்.மருத்துவர்கள் கவிஷ்மிதா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
தியாகதுருகம் அருகே  கார் மோதி குழந்தை சாவு
Published on

கள்ளக்குறிச்சி:

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே மங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்பிரகாஷ் (வயது 53) இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈய்யனூரில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்காக குடும்பத்துடன் வந்து அங்கிருந்த தனது வீட்டில் தங்கி உள்ளார். இந்நிலையில் நேற்று காலை தனது 2-வது குழந்தை சஷ்மிதாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் தனது மனைவி ரம்யா மற்றும் குழந்தையுடன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று விட்டார்.

அப்போது மூத்த மகள் கவிஷ்மிதா (2) என்பவர் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த கார் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கவிஷ்மிதாவை அக்கம், பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்க அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கவிஷ்மிதா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து அருள்பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் கிருஷ்ணன் மகன் மூர்த்தி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com