பண்ருட்டியில் இடி தாக்கி விவசாயி படுகாயம்

அந்த பகுதியில் உள்ள விவசாய விளைநிலத்தில் 10-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பண்ருட்டியில்  இடி தாக்கி விவசாயி படுகாயம்
Published on

கடலூர்:

பண்ருட்டி அருகே பொண்ணங்குப்பத்தில் நேற்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. அப்போது அந்த பகுதியில் உள்ள விவசாய விளைநிலத்தில் 10-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அங்கிருந்த தென்னை மரத்தை இடி தாக்கியது. தனால் தென்னை மரம் தீ பற்றி எரிந்தது. இதனை தொடர்ந்து மேலும் ஒரு இடி விழுந்து அங்கு வேலை செய்து கொண்டிருந்த விவசாயி மகாதேவன் (வயது 49) படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com