பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி சிறுவன் பலி

வினித்குமார் தந்தை விநாயகமூர்த்தியுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் தங்களது விவசாய நிலத்திற்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினர். விபத்தில் படுகாயம் அடைந்த தந்தை, மகனை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி சிறுவன் பலி
Published on

கடலூர்:

பண்ருட்டி அடுத்த வீரப்பெருமாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி. இவரது மகன் வினித்குமார் (வயது 11) அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று விடுமுறை தினம் என்பதால் வினித்குமார் தந்தை விநாயகமூர்த்தியுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் தங்களது விவசாய நிலத்திற்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினர். அப்ேபாது பண்ருட்டியில் இருந்து வேகமாக வந்த கார் இவர்கள் மோட்டார் சைக்கிளில் மீது மோதியது. இந்த விபத்தில் விநாயகமூர்த்தி, மகன் வினித்குமார் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

இதனையடுத்து அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் படுகாயம் அடைந்த தந்தை, மகனை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வினித்குமார் பரிதாபமாக உயிர் இழந்தார். மேலும் இந்த விபத்துகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com