சின்னசேலம் அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து வியாபாரி பலி

ரமேஷ் சொந்த பணிக்காக சின்சேலத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அவ்வழியே சென்றவர்கள் இது குறித்து கீழக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சின்னசேலம் அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து வியாபாரி பலி
Published on

கள்ளக்குறிச்சி:

சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்த வீரங்கனூரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 44). வியாபாரி. இவர் சொந்த பணிக்காக சின்சேலத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது கொரல் அருகேயுள்ள சாலையில் வந்த போது, நிலை தடுமாறி சாலை அருகே இருந்த பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

அவ்வழியே சென்றவர்கள் இது குறித்து கீழக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரமேஷின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com