search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடி தாக்குதல்"

    • மின்சாதன பொருட்கள் வெடித்து சிதறின
    • மக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை திடீரென சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    மழைக்கு முன்னதாக பலத்த காற்று வீசியதில் புழுதி கிளம்பி, பொதுமக்கள் கண்ணில் விழுந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    இதனைத் தொடர்ந்து இரவு முழுவதும் விடிய, விடிய இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதில் கண்ணமங்கலம் அடுத்த படவேடு ஊராட்சி, மங்களாபுரம் பகுதியில் நேற்று இரவு பெய்த மழையின் போது இடி தாக்கி வாழைமரங்கள் பாதியாக முறிந்து விழுந்தன. மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் மின் சாதன பொருட்கள் என வெடித்து சிதறியது.

    இதில் பல்பு, டி.வி. உள்ளிட்ட பொருட்கள் பழுதானது. ஒரு சில வீடுகளில் மின் இணைப்பு துண்டிப்பானதால் பொதுமக்கள் இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்தனர்.

    அதேபோல் கண்ணமங்கலம் அடுத்த கானமலை ஊராட்சி, இருளம்பாறை அடுத்த முத்தாண்டி குடிசையை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் கூரை வீட்டின் மீது இடி விழுந்து தீ பிடித்து எரிந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.

    இருப்பினும் குடிசை வீடு முழுவதும் தீப்பிடித்து எறிந்து துணிகள், வீட்டு உபயோக பொருட்கள், நகை மற்றும் பணம் உள்ளிட்டவை தீயில் கருகி நாசமானது.

    • பெரம்பண்டூரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ஏழுமலை என்பவரது மாட்டு கொட்டகையில் இடி விழுந்தது.
    • இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மயிலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதில் மயிலம் அடுத்த பெரம்பண்டூரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ஏழுமலை என்பவரது மாட்டு கொட்டகையில் இடி விழுந்தது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் முற்றிலும் தீயில் கருகி சாம்பலானது.

    மேலும் அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த கால் நடைகளுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துறை சார்ந்த அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • அந்த பகுதியில் உள்ள விவசாய விளைநிலத்தில் 10-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.
    • அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே பொண்ணங்குப்பத்தில் நேற்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. அப்போது அந்த பகுதியில் உள்ள விவசாய விளைநிலத்தில் 10-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அங்கிருந்த தென்னை மரத்தை இடி தாக்கியது. தனால் தென்னை மரம் தீ பற்றி எரிந்தது. இதனை தொடர்ந்து மேலும் ஒரு இடி விழுந்து அங்கு வேலை செய்து கொண்டிருந்த விவசாயி மகாதேவன் (வயது 49) படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • சாயல்குடி அருகே இடி தாக்கி 8 ஆடுகள் பலியாயின.
    • கிராம நிர்வாக அதிகாரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    சாயல்குடி

    தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் கிராமத்தை சேர்ந்தவர் தேவசகாயம் (வயது 56). இவர் தற்போது ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள கடுகுசந்தை சத்திரம் கிராமத்தில் பனை தொழில் செய்து வருகிறார். மேலும் வெள்ளாடுகளையும் வளர்த்து வருகிறார்.

    நேற்று இரவு வழக்கம் போல் வெள்ளாடுகளை கொட்டகையில் அடைத்து வைத்தார். இதற்கிடையில் இன்று அதிகாலை 2 மணியளவில் சாயல்குடி சுற்றுவட்டார பகுதியில் இடி-மின்னலுடன் சாரல் மழை பெய்தது. கடுகுசந்தை சத்திரம் கிராமத்தில் இடி தாக்கியதில், கொட்டகையில் இருந்த 8 வெள்ளாடுகள் பரிதாபமாக இறந்தது.

    இன்று காலை தேவசகாயம் வீட்டில் இருந்து வெளியே வந்தபோது 8 ஆடுகள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அதிகாரி ஜெயக்கொடி மற்றும் சாயல்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    ×