search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sathish"

    ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `பூமராங்' படத்தின் முன்னோட்டம். #Boomerang #Atharvaa #MeghaAkash #Indhuja
    மசாலா பிக்ஸ் நிறுவனம் சார்பில் கண்ணன் தயாரித்துள்ள படம் `பூமராங்'.

    அதர்வா நாயகனாகவும், மேகா ஆகாஷ் நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில் இந்துஜா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், சுஹாசினி மணிரத்னம், மகேந்திரன், உபேன் பட்டேல், நாராயண் லக்கி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இசை - ரதன், ஒளிப்பதிவு - பிரசன்ன எஸ்.குமார், படத்தொகுப்பு - ஆர்.கே.செல்வா, கலை - சிவ யாதவ், சண்டைப்பயிற்சி - ஸ்டண்ட் சில்வா, பாடல்கள் - விவேக், நடனம் - பிருந்தா, ஆடை வடிவமைப்பு - பூர்னிமா, தயாரிப்பு - ஆர்.கண்ணன், எழுத்து, இயக்கம் - ஆர்.கண்ணன்.



    படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஆர்.கண்ணன் பேசியதவது, “கடைக்குட்டி சிங்கம் படத்துக்கு பிறகு விவசாயத்தை பற்றிய ஒரு படம் பூமராங். 130 கோடி மக்கள் இருந்தும் நஷ்டத்தில் போகிற ஒரு துறை விவசாய துறை தான். அதை படம் பேசும். இது கமர்சியல் படமாகவும், நல்ல கருத்தை சொல்லும் படமாகவும் இருக்கும். அதர்வா இந்த படத்தில் அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்“.

    அதர்வா பேசும்போது “நாம் நல்லதோ, கெட்டதோ எது செய்தாலும் அது ஒரு நாள் நம்மை வந்து சேரும் என்பதுதான் பூமராங். கண்ணன் தயாரிப்பாளர்களின் இயக்குநர் என்பது உண்மை தான் என்றார். #Boomerang #Atharvaa #MeghaAkash

    பூமராங் டிரைலர்:

    'பூமராங்' படத்தை தொடர்ந்து ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கவிருக்கும் ஆக்‌ஷன் படத்திற்கு நேற்று பூஜை போடப்பட்ட நிலையில், படப்பிடிப்பு ஏப்ரலில் துவங்குகிறது. #Atharvaa #RKannan
    அதர்வா நடிப்பில் 'பூமராங்' வருகிற மார்ச் 1-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. அதர்வா தற்போது ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் 'குருதி ஆட்டம்' படத்தில் நடித்து வருகிறார்.

    அதனைத் தொடர்ந்து ஆர்.கண்ணன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த படத்தை இயக்குவதுடன், தனது 'மசாலா பிக்ஸ்' நிறுவனம் மூலமாக ஆர்.கண்ணன் தயாரிக்கவும் செய்கிறார். சமுத்திரகனி, சதீஷ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள்.



    ரதன் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. ஆக்‌‌ஷன் கதையில் உருவாகும் 
    இந்த படத்திற்கு தற்காலிகமாக `தயாரிப்பு எண் : 3' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்துக்கான பூஜை நேற்று நடைபெற்றது. #Atharvaa #RKannan

    மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் - ஆத்மிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் `கண்ணை நம்பாதே' படத்தின் படப்பிபை்பு இன்று துவங்குகிறது. #KannaiNambathe #UdhayanidhiStalin #Aathmika
    சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் `கண்ணே கலைமானே' படம் வருகிற பிப்ரவரி 22-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உதயநிதி தனது அடுத்த படத்தை துவக்கியிருக்கிறார்.

    சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்திற்கு கடந்த வாரம் பூஜை போடப்பட்ட நிலையில், படப்பிடிப்பு இன்று துவங்குவதாக படக்குழு அறிவித்துள்ளது.

    `இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தை இயக்கிய மு.முாறன் இயக்கும் இந்த படத்திற்கு `கண்ணை நம்பாதே' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சதீஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


    லிபி சினி கிராப்ட்ஸ் சார்பில் வி.என்.ரஞ்சித் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்க, ஸ்ரீதர் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பை கவனிக்கிறார். #KannaiNambathe #UdhayanidhiStalin #Aathmika

    ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘மிஸ்டர்.லோக்கல்’ படத்தின் திரையரங்கு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. #MrLocal #Nayanthara
    எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ‘மிஸ்டர்.லோக்கல்’. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

    ‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - நயன்தாரா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். காதல் கலந்த காமெடி படமாக உருவாகும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.


    இந்த நிலையில், படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை சக்தி பிலிம் பேக்டரி கைப்பற்றியிருக்கிறது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே,இ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதி இசையமைக்கிறார். #MrLocal #Sivakarthikeyan #Nayanthara

    ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘மிஸ்டர்.லோக்கல்’ படத்தின் தனது காட்சியை முடித்துவிட்ட நயன்தாரா, படக்குழுவுக்கு வாட்ச் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். #MrLocal #Nayanthara
    எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ‘மிஸ்டர்.லோக்கல்’. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

    ‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - நயன்தாரா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    ‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதி இசையமைக்கிறார். சென்னையின் பல்வேறு இடங்கள் மற்றும் சில வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. கடந்த புதன்கிழமையுடன் நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிவடைந்தது.



    கடைசி நாளில் படக்குழுவினர் அனைவருக்கும் வாட்ச் பரிசளித்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் நயன்தாரா. அவரது நடிப்பில் ‘ஐரா’, ‘கொலையுதிர் காலம்’ ஆகிய இரண்டு படங்களும் ரிலீசுக்குத் தயாராகி வருகின்றன. தற்போது விஜய் ஜோடியாக ‘தளபதி 63’ படத்தில் நடித்து வருகிறார். #MrLocal #Sivakarthikeyan #Nayanthara

    கதிர் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சசிகுமார் ஜோடியாக நடிக்க நிக்கி கல்ராணி ஒப்பந்தமாகி இருக்கிறார். #Sasikumar #NikkiGalrani
    சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த `பேட்ட' படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. சசிகுமார் நடிப்பில் அடுத்ததாக `நாடோடிகள் 2' ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. பிப்ரவரியில் ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

    சசிகுமார் தற்போது, எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் `கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், சசிகுமாரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சசிகுமாரின் 19-வது படமாக உருவாகும் இந்த படத்தை சுந்தர்.சி.-யிடம் இணை இயக்குநராக பணிபுரிந்த கதிர் இயக்குகிறார்.


    சசிகுமார் ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சதீஷ் நடிக்கிறார். செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் டி.டி.ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ்., இசையமைக்க, சித்தார்த் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். சபு ஜோசப் படத்தொகுப்பையும், சுரேஷ் கலை பணியையும் மேற்கொள்கின்றனர். #Sasikumar #NikkiGalrani #Sasikumar19 #Kathir #Sathish #SamCS

    மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் - ஆத்மிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய படத்திற்கு `கண்ணை நம்பாதே' என்று தலைப்பு வைத்துள்ளார்கள். #KannaiNambathe #UdhayanidhiStalin #Aathmika
    உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் `கண்ணே கலைமானே' பிப்ரவரி 22-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உதயநிதி தனது அடுத்த படத்தை துவக்கியிருக்கிறார்.

    `இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தை இயக்கிய மு.முாறன் இயக்கும் இந்த படத்திற்கு `கண்ணை நம்பாதே' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தின் பூஜை நேற்று போடப்பட்ட நிலையில், பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.



    இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சதீஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது. வி.என்.ரஞ்சித் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஸ்ரீதர் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பை கவனிக்கிறார். #KannaiNambathe #UdhayanidhiStalin #Aathmika

    எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா இணைந்து நடிக்கும் சிவகார்த்திகேயனின் 13-வது படத்திற்கு ‘மிஸ்டர்.லோக்கல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. #SK13 #Sivakarthikeyan
    சிவகார்த்திகேயன் தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்திலும் ரவிக்குமார் இயக்கத்திலும் நடித்து வருகிறார். இதில் ராஜேஷ் இயக்கும் படத்துக்கு ‘ஜித்து ஜில்லாடி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. ‘ஜித்து ஜில்லாடி’ என்பது விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் முதல் வரியாகும்.

    படத்திற்கு தலைப்பு இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்று இயக்குநர் ராஜேஷ் மறுப்பு தெரிவித்த நிலையில், தற்போது படத்திற்கு ‘மிஸ்டர்.லோக்கல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



    தொடக்கத்தில் ‘ஜித்து ஜில்லாடி’ என்று தலைப்பையே வைக்க படக்குழு முடிவு செய்ததாகவும், பின்னர் ‘மிஸ்டர்.லோக்கல்’ தலைப்பு படத்திற்கு பொருத்தமாக இருக்கும் படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. 

    காமெடி என்டெர்டெயினராக உருவாகும் இந்த படத்தில் இரண்டாவது முறையாக சிவகார்த்தி கேயனுடன் ஜோடி சேர்கிறார் நயன்தாரா. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. #SK13 #Sivakarthikeyan #MrLocal #Nayanthara'

    சமூக வலைத்தளத்தில் தற்போது டிரெண்டாகி வரும் 10 இயர் சேலஞ்ச், சினிமா நட்சத்திரங்களை வெகுவாக கவர்ந்துள்ளது. #10YearChallenge
    சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சேலஞ்ச் என்ற பெயரில் பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள் கலந்துக் கொண்டு ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்கள். ஐஸ் பக்கெட் சேலஞ்ச், தோசை சேலஞ்ச், சமீபத்தில் கிகி சேலஞ்ச் என்று சமூக வலைத்தளத்தில் பிரபலமானது.

    தற்போது 10 இயர் சேலஞ்ச் ஒன்று டிரெண்டாகி வருகிறது. பத்து வருடத்திற்கு முன்பு உள்ள புகைப்படத்தையும், தற்போது இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு பகிர்ந்து வருகிறார்கள். மேலும், தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கும் இந்த சேலஞ்ச்-யை செய்ய சொல்லி பகிர்ந்து வருகிறார்கள்.



    இந்த சேலஞ்ச் சினிமா பிரபலங்களையும் கவர்ந்துள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர்கள் கயல் சந்திரன், பிரேம்ஜி, காமெடி நடிகர் சதீஷ், பாடகர் கிரிஷ் உள்ளிட்ட பலர் இதையேற்று தங்களுடைய புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்கள்.
    சாய் சேகர் இயக்கத்தில் சித்தார்த் - கேத்தரின் தெரசா நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு வித்தியாசமாக `அருவம்' என தலைப்பு வைத்துள்ளனர். #Aruvam #Siddharth
    சாய் சேகர் இயக்கத்தில் சித்தார்த் - கேத்தரின் தெரசா நடிப்பில் உருவாகி வரும் த்ரில்லர் படத்திற்கு `அருவம்' என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தின் தலைப்பு மற்றும் முதல்பார்வை போஸ்டரை, புத்தாண்டை முன்னிட்டு படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

    படம் பற்றி இயக்குநர் சாய் சேகர் பேசும்போது,

    அருவம் என்ற தலைப்பு, இது திகில் படம் என்பதை உறுதி செய்கிறது. அருவம் என்பது உருவம் என்பதின் எதிர் பதமாகும். ஒவ்வொருவரும் நம்ப மறுக்கும், ஆனால் நம்மை சுற்றி நடக்கும் அமானுஷ்ய நிகழ்வுகள் நம்மை நம்பவைக்கும் ஒரு விஷயத்தை பற்றி தான் நாங்கள் பேசுகிறோம். இந்த படத்தை இயக்கியது ஒரு மிகச்சிறந்த உணர்வாகும் என்றார்.

    கபிர் துகான் சிங், மதுசூதன ராவ், ஸ்டண்ட் சில்வா மற்றும் போஸ்டர் நந்தகுமார் இந்த படத்தில் வில்லன்களாக நடித்துள்ளனர். சதீஷ், ஆடுகளம் நரேன், குமரவேல், மயில்சாமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    எஸ்.எஸ்.தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு பணிகளையும், ஜி.துரைராஜ் கலை பணிகளையும் மேற்கொள்கின்றனர். டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ரவீந்திரன் இந்த படத்தை தயாரிக்கிறார். இவர் முன்னதாக சித்தார்த்தின் அவள் படத்தை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #Aruvam #Siddharth 

    சந்திரமவுலி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாகி இருக்கும் `100 சதவீதம் காதல்' படத்தின் தணிக்கை சான்றிதழ் மற்றும் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #100PercentKaadhal #GVPrakashKumar
    நாகசைதன்யா - தமன்னா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம், `100 சதவீதம் லவ்.' இந்த படம் `100 சதவீதம் காதல்' என்ற பெயரில் தமிழில் உருவாகி இருக்கிறது.

    சந்திரமவுலி எம்.எம். இயக்கியிருக்கியிருக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் - ஷாலினி பாண்டே நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். நாசர், தம்பிராமய்யா, `தலைவாசல்' விஜய், ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தணிக்கைக் குழுவில் படத்திற்கு `யு' சான்றிதழ் கிடைத்துள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு 2019 பிப்ரவரியில், படம் ரிலீசாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


    கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவருக்கும், மாணவிக்கும் இடையே நடக்கும் போட்டியை காதலும், நகைச்சுவையும் கலந்து படமாக உருவாக்கி இருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு கணேஷ்.ஆர். ஒளிப்பதிவை கவனித்துள்ளார். #100PercentKaadhal #GVPrakashKumar #ShaliniPandey

    பிரபல காமெடி நடிகர் சதீஷ் திடீர் திருமணம் செய்திருப்பதாக புகைப்படம் ஒன்று வெளியாகி இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. #Sathish
    பல படங்களில் காமெடி வேடம் ஏற்று நடித்து வருபவர் சதீஷ். இவர் ஒரு பெண்ணை திருமணம் செய்யும் போட்டோ ஒன்றை பிரபல இயக்குனர் பிஜி முத்தையா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு திருமண வாழ்த்துக்களை பதிவு செய்திருக்கிறார்.

    இதையறிந்த பலர், சதீஷ் ஒரு பெண்ணை திருமணம் செய்து விட்டதாக அறிந்து பலரும் அந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்கள். மேலும் வாழ்த்துக்களும் கூறி வருகின்றனர். ஆனால், உண்மையில் ஒரு படத்திற்காக எடுக்கப்பட்ட சீன் என்று நடிகர் சதீஷ் கூறியிருக்கிறார்.

    முன்னதாக, பைரவா படத்தில் நடிக்கும் போது கீர்த்தி சுரேஷை திருமணம் செய்ததாக புகைப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×