என் மலர்
நீங்கள் தேடியது "Shalini pandey"
டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி இருக்கும் `கொரில்லா' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ராகுல் தாத்தா, இயக்குநர் டான் சாண்டி, சாதாரண டான் கிடையாது, டானுக்கு எல்லாம் டான் கூறினார்.
ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் விஜய் ராகவேந்திரா தயாரிப்பில், டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா - ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `கொரில்லா'. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
விழாவில் ராகுல் தாத்தா பேசியதாவது,
"இந்த படத்தில் நான் ஒரு சாதாரண கேரக்டர் பண்ணிருக்கேன். இந்த காலத்தில் கொரில்லாவை வைத்து படமெடுப்பது ரொம்ப கஷ்டம். நிறைய செலவு செய்திருக்கிறார்கள். அற்புதமா படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் டான் சாண்டி. எனக்கு அற்புதமான கேரக்டர் கொடுத்திருக்கிறார்கள். இந்த படம் ஓகோன்னு ஓடணும். படத்தைப் பார்த்த விநியோகஸ்தர்கள் அனைவரும் ஹிந்தி, தெலுங்கு, என ஒவ்வொன்றையும் வாங்கி கொண்டுப் போய்விட்டார்கள்.

இந்த இயக்குநர் டான் கிடையாது, டானுக்கு எல்லாம் டான். சாம்.சி.எஸ் பிரமாதமாக வேலை செய்திருக்கிறார். இந்தப் படத்திற்குப் பின் இப்படக்குழு அனைவரும் வேறு லெவலுக்கு செல்வார்கள்" என்றார்.
ராகுல் தாத்தா பேசிய வீடியோ:
டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி இருக்கும் `கொரில்லா' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ராதாரவி, இந்த படத்தில் விருப்பமில்லாமல் ஒரு வசனம் பேசியிருப்பதாக கூறினார்.
ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் விஜய் ராகவேந்திரா தயாரிப்பில், டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா - ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `கொரில்லா'. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
விழாவில் நடிகர் ராதாரவி பேசியதாவது,
"என்னை அன்பாக அழைத்த இயக்குநர் சாண்டி அவர்களுக்கும், கதாநாயகன் ஜீவா அவர்களுக்கும் நன்றி. அவர் அப்பா கொடுத்த பணத்தில் தான் நாங்கள் வாழ்ந்திருக்கோம். ஜீவாவிற்கு யாரும் காம்படிஷனே கிடையாது. அது அவரது பெரிய பலம். அவர் அற்புதமான நடிகர். அவரை முதல் படத்தில் இருந்தே பார்த்து வருகிறேன்.

மனிதர்களை வைத்தே படமெடுப்பது பெரிய கஷ்டம். இவர்கள் மிருகத்தை வைத்து மிக அழகாக எடுத்திருக்கிறார்கள். நான் சில காட்சிகளைப் பார்த்தேன் நன்றாக இருக்கிறது. எனக்கும் ஒரு நல்ல வேடம் தந்திருக்கிறார்கள். படத்தில் ஒரு வசனம் எனக்குப் பிடிக்காமல் பேசி இருக்கிறேன். யோகிபாபு நெகட்டிவ் விசயங்களை பாஸிட்டிவாக எடுத்துக் கொள்ளும் நடிகர்.
இந்தப்படத்தில் அவரையும் மிகச்சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார்கள். தயவுசெய்து தியேட்டர்காரர்கள், விநியோகஸ்தர்கள், பொதுமக்கள் அனைவரும் இந்தப்படத்தை ஆதரிக்க வேண்டும்" என்றார்.
ராதாரவி பேசிய வீடியோ:
தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்ற ஷாலினி பாண்டே, அர்ஜுன் ரெட்டி போல் ஒருவர் கிடைத்தால் நிச்சயம் காதலிப்பேன் என்று கூறினார். #ShaliniPandey
தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமான ஷாலினி பாண்டே, தமிழில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 100 சதவீதம் காதல், ஜீவா ஜோடியாக கொரில்லா, விஜய் ஆண்டனியுடன் அக்னி சிறகுகள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
சினிமா பிரவேசம் குறித்து அவர் கூறியதாவது:-
“படிக்கும்போதே சினிமாவில் நடிக்க ஆர்வம் இருந்தது. அப்பாவுக்கு நான் நடிகையாவதில் விருப்பம் இல்லை. ஏதாவது வேலைக்குசெல்லும்படி வற்புறுத்தினார்.
மும்பையில் தங்கி சினிமா வாய்ப்புகள் தேடினேன். அப்போது சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டேன். சில மாதங்களுக்கு பிறகு அர்ஜுன் ரெட்டி படத்துக்கு தேர்வாகி படப்பிடிப்பில் பங்கேற்றேன்.

இயக்குனரிடம் முத்த காட்சி, நெருக்கமான காட்சிகள் இருக்கக்கூடாது என்று அப்பா கண்டிப்பாக கூறினார். படம் திரைக்கு வந்ததும் பெரிய பாராட்டுகள் குவிந்தன. நிஜ வாழ்க்கையில் அர்ஜுன் ரெட்டி போல் ஒருவர் கிடைத்தால் நிச்சயம் காதலிப்பேன். இந்த படத்துக்கு பிறகு தமிழில் நிறைய பட வாய்ப்புகள் வந்துள்ளன.
2 வருட சினிமா பயணத்தில் நிறைய கற்றுக்கொண்டேன். சமூக வலைத்தளத்தில் படங்கள் வெளியிடுவதில் விருப்பம் இல்லை. நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் மணிரத்னம் ஆகியோருக்கு நான் தீவிர ரசிகை. உணவு கட்டுப்பாடு இல்லை. வாரத்தில் ஐந்து நாட்கள் உடற்பயிற்சி செய்வேன். புத்தகங்கள் படிப்பேன். எனக்கு தோழிகள் குறைவு.”
இவ்வாறு அவர் கூறினார். #ShaliniPandey #ArjunReddy
ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் சைலண்ட் த்ரில்லராக உருவாகும் புதிய படத்தில் மாதவனுடன் அனுஷ்கா ஷெட்டி, அஞ்சலி, ஷாலினி பாண்டே இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். #Madhavan #AnushkaShetty
இரண்டு படத்தில் மாதவன் ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அனுஷ்கா. சுமார் 12 வருடங்களுக்கு பிறகு இந்த ஜோடி மீண்டும் ஒரு படத்தில் இணைகிறது.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் சைலண்ட் திரில்லராக உருவாகும் இந்த படத்தை ஹேமந்த் மதுகர் இயக்குகிறார். கோபி மோகன், கோனா வெங்கட் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் சுப்பாராஜு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரும் பணியாற்றவிருக்கும் இந்த படத்திற்கு, கோபி சுந்தர் இசையமைக்கிறார்.

ஷானியேல் டியோ ஒளிப்பதிவு செய்ய, யனா ருசனோவா கலை பணிகளை கவனிக்கிறார். காஸ்மோஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ், கிரண் ஸ்டுடியோஸ் மற்றும் பீப்பிள் மீடியா ஃபேக்டரி இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. #Madhavan #AnushkaShetty #Anjali #ShaliniPandey
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாதவன், அனுஷ்கா இணைந்து நடிக்கும் புதிய படத்தில் ஹாலிவுட் நடிகர்கள், பலரும் இணைந்து பணியாற்ற உள்ளனர். #Madhavan #Anushka #HappyPongal2019
பீப்பள் மீடியா பேக்ட்ரி மற்றும் கோனா பிலிம் கார்ப்பரேஷன் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தமிழ், தெலுங்கு, ஹாலிவுட் நடிகர்கள் நடிக்கும் புதிய படமொன்றை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளனர்.
நடிகர்கள் மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுபா ராஜு, அவசராலா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கவுள்ள இப்படத்தில் மேலும் பிரபல ஹாலிவுட் நடிகர்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும் பணியாற்றவுள்ளனர். ஹேமந்த் மதுக்கர் இயக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது.
திகில் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் அமெரிக்காவில் தொடங்கவுள்ளதாகவும் இவ்வருடமே (2019) வெளியாகும் எனவும் தயாரிப்பளர்கள் டி.ஜி.விஸ்வபிரசாத் மற்றும் கோனா வெங்கட் அறிவித்துள்ளனர்.

கோனா வெங்கட், கோபி சுந்தர், ஷானியேல் டியோ, கோபி மோகன், நீராஜா கோனா ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றும் இப்படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் அதிகார்ப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. #Madhavan #Anushka #HappyPongal2019
சந்திரமவுலி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாகி இருக்கும் `100 சதவீதம் காதல்' படத்தின் தணிக்கை சான்றிதழ் மற்றும் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #100PercentKaadhal #GVPrakashKumar
நாகசைதன்யா - தமன்னா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம், `100 சதவீதம் லவ்.' இந்த படம் `100 சதவீதம் காதல்' என்ற பெயரில் தமிழில் உருவாகி இருக்கிறது.
சந்திரமவுலி எம்.எம். இயக்கியிருக்கியிருக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் - ஷாலினி பாண்டே நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். நாசர், தம்பிராமய்யா, `தலைவாசல்' விஜய், ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தணிக்கைக் குழுவில் படத்திற்கு `யு' சான்றிதழ் கிடைத்துள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு 2019 பிப்ரவரியில், படம் ரிலீசாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
A Valentine's day 2019 release it is for @gvprakash's #100percentkaadhal! Stay tuned for more updates 🥰
— Sony Music South (@SonyMusicSouth) December 20, 2018
➡️ https://t.co/JGz4cByCfMpic.twitter.com/vynSkIUNl2
கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவருக்கும், மாணவிக்கும் இடையே நடக்கும் போட்டியை காதலும், நகைச்சுவையும் கலந்து படமாக உருவாக்கி இருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு கணேஷ்.ஆர். ஒளிப்பதிவை கவனித்துள்ளார். #100PercentKaadhal #GVPrakashKumar #ShaliniPandey
‘மூடர் கூடம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நவீன் அடுத்ததாக இயக்கவிருக்கும் புதிய படத்திற்காக ‘அக்னிச் சிறகுகள்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். #AgniSiragugal #Naveen
‘மூடர் கூடம்’ படத்தின் மூலம் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், நடிகராகவும் அறிமுகமானவர் நவீன். முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நவீன் அடுத்ததாக அலாவுதீனின் அற்புதக் கேமரா என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இந்த நிலையில், நவீனின் அடுத்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்க இருப்பதாகவும், விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க இருப்பதாகவும் படக்குழு முன்னதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், சமீபத்தில் நடிகர் அருண் விஜய்யும் படக்குழுவில் இணைந்தார்.
ஷாலினி பாண்டே நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக படக்குழு அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டது.
#AgniSiragugal@vijayantony@arunvijayno1@TSivaAmma@shalinipandeyyy@Natarajanmusic
— Naveen.M (@NaveenFilmmaker) November 1, 2018
Thnx @ikamalhaasan sir pic.twitter.com/eFKfMQNfGm
அக்னிச் சிறகுகள் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்டார். #AgniSiragugal #VijayAntony #ArunVijay #Naveen
சந்திரமவுலி எம்.எம். இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - ஷாலினி பாண்டே இணைந்து நடித்துள்ள `100 சதவீதம் காதல்' படத்தை செப்டம்பரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. #100PercentKaadhal #GVPrakashKumar
நாகசைதன்யா - தமன்னா நடித்து ஆந்திராவில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம், `100 சதவீதம் லவ்.' இந்த படம் `100 சதவீதம் காதல்' என்ற பெயரில் தமிழில் உருவாகி வருகிறது.
ஜி.வி.பிரகாஷ் - ஷாலினி பாண்டே இணைந்து நடிக்கும் இந்த படத்தை சந்திரமவுலி எம்.எம். இயக்கியிருக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் நாசர், தம்பிராமய்யா, `தலைவாசல்' விஜய், ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குநர் சந்திரமவுலி பேசும் போது,
``கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவருக்கும், மாணவிக்கும் இடையே நடக்கும் `ஈகோ' பிரச்சினைதான் கதையின் கரு. யார் முதல் மார்க் வாங்குவது? என்று இரண்டு பேருக்கும் இடையே போட்டி இருந்து வருகிறது. அவர்களுக்கு இடையே நடக்கும் போட்டியை காதலும், நகைச்சுவையும் கலந்து திரைக்கதையாக்கி இருக்கிறோம்.

படத்தில், இசை ஒரு முக்கிய அம்சமாக இருக்கும். பாடல்களுக்கு மிகுந்த சிரத்தை எடுத்து ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார். அந்த பாடல்களை ஏவி.எம். ஸ்டூடியோவில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து படமாக்கியிருக்கிறோம். தெலுங்கு படத்தில் தமன்னா நடித்த கதாபாத்திரத்தை அவர் அளவுக்கு ஷாலினி பாண்டேவினால் திறமையாக நடிக்க முடியுமா? என்ற சந்தேகம் இருந்தது. அந்த சந்தேகம் துளி கூட ஏற்படாத அளவுக்கு ஷாலினி பாண்டே மிக சிறப்பாக நடித்து இருக்கிறார்.
படத்தை அடுத்த மாதம் (செப்டம்பர்) திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறோம்.'' என்றார். #100PercentKaadhal #GVPrakashKumar #ShaliniPandey
‘திமிரு புடிச்சவன்’, ‘கொலைகாரன்’ படத்தை அடுத்து விஜய் ஆண்டனி நடிக்க இருக்கும் புதிய படத்தில் கதாநாயகியின் பெயர் வெளியாகியுள்ளது. #VijayAntony
‘காளி’ படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் ‘திமிரு புடிச்சவன்’, ‘கொலைகாரன்’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. மேலும் நவீன் இயக்கவிருக்கும் புதிய படத்திலும் நடிக்க இருக்கிறார் விஜய் ஆண்டனி. இப்படம் ஆக்ஷன் த்ரில்லர் கதையம்சத்தில் உருவாக இருக்கிறது.
இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் டி.சிவா தயாரிக்க இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கான பூஜை சமீபத்தில் போடப்பட்டது. தற்போது படத்தின் முதற்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ஷாலினி பாண்டே நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜீவா - ஷாலினி பாண்டே நடிப்பில் தயாராகி வரும் கொரில்லா படம் ஹேங் ஓவர் 2 போஸ்டரை பார்த்து உருவானது என்று இயக்குனர் டான் சாண்டி கூறியிருக்கிறார். #Gorila #Jiiva
ஆல் இன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘கொரில்லா’. இதில் ஜீவா, ஷாலினி பாண்டே, சதீஷ், விவேக் பிரசன்னா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நடிகர் ராதாரவி இதில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். ஆர் பி குருதேவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். படதொகுப்பை ரூபன் கவனிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் டான் சாண்டி.
படத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது,‘ இது ஒரு Heist காமெடி ஜேனர் படம். இது தமிழ் ரசிகர்களுக்கு புதிது. ஜீவா, சதீஷ், விவேக் பிரசன்னா இவர்கள் மூன்று பேரும் நண்பர்கள். இவர்களுக்கு பணத் தேவை ஏற்படுகிறது. அதற்காக வங்கி ஒன்றை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார்கள். அவர்கள் தங்களுடன் ஒரு சிம்பன்ஸி குரங்கையும் இணைத்துக் கொள்கிறார்கள். இந்த கூட்டணி வங்கியை கொள்ளையடித்தார்களா? அல்லது போலீஸிடம் சிக்கினார்களா? என்பதை படத்தின் கதை.
இந்த கதையில் முதலில் சிம்பன்ஸி குரங்கு இல்லை. முழு திரைக்கதையையும் எழுதி முடித்துவிட்டு ஒரு நாள் யதேச்சையாக ஹேங் ஓவர் - 2 என்ற படத்தின் போஸ்டரைப் பார்த்தேன். அதில் மூன்று நண்பர்களும், ஒரு சிம்பன்ஸியும் ஜாலியாக இருப்பது போல் போஸ் கொடுத்திருப்பதைப் பார்த்தேன். உடனே நம்முடைய திரைக்கதையிலும் ஒரு குரங்கை கொண்டுவரலாமே? என எண்ணி, திரைக்கதையை சற்று மாற்றியமைத்தேன். இதனை தயாரிப்பாளரிடம் சொன்னவுடன் அவரும் ஒப்புக்கொண்டார்.
மறைந்திருந்து எதிர்பாராமல் தாக்குவதற்கு தான் ‘கொரில்லா தாக்குதல்’ என்பார்கள். அதே போன்ற ஒரு தாக்குதல் இந்த கதையிலும் இடம்பெற்றிருக்கிறது. அதனால் இந்த படத்திற்கு ‘கொரில்லா’ என்று பெயரிட்டோம். மற்றப்படி கொரில்லாவிற்கும் சிம்பன்ஸி குரங்குக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இந்த கதை சென்னையில் நடைபெறுகிறது. ஆனாலும் சிம்பன்ஸி தொடர்பான காட்சிகளை மட்டும் தாய்லாந்திற்கு சென்று படமாக்கிவிட்டு திரும்பினோம். இந்த ‘காங்’என்ற சிம்பன்ஸி குரங்கு ஏற்கனவே ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்திருக்கிறது. அதனால் அதனுடன் பணியாற்றுவது எளிதாக இருந்தது. ஜீவா விட யோகி பாபுவிடம் அந்த காங் விரைவில் ஒட்டிக்கொண்டது. படத்தில் இவர்கள் தோன்றும் காட்சிகளில் சிரிப்பிற்கு உத்தரவாதம் தரலாம்.

ஜீவாவிற்கு ஜோடியாக நடித்திருக்கிறார் ஷாலினி பாண்டே. அர்ஜுன் ரெட்டி அளவிற்கு நடிப்பதற்கு வாய்ப்பில்லை என்றாலும், கிடைத்த சந்தர்ப்பங்களில் தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார் ஷாலினி பாண்டே. சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரியும் இவர் கதையின் திருப்புமுனையான கேரக்டர் என்பதால் அதை உணர்ந்து அற்புதமாக நடித்திருக்கிறார்.
படத்தில் மூத்த நடிகர் ராதாரவி முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். கடும் கோடை என்றும் பாராமல் படப்பிடிப்பு தளத்தில் அவர் கொடுத்த ஒத்துழைப்பு மறக்க முடியாது. இந்த படம் ஆறு முதல் அறுபது வயது வரை உள்ள அனைவரும் பிடிக்கும் காமெடி படமாக உருவாகியிருக்கிறது.’ என்றார்.