என் மலர்

  சினிமா

  செப்டம்பரில் திரைக்கு வரும் ஜி.வி.பிரகாஷின் 100 சதவீதம் காதல்
  X

  செப்டம்பரில் திரைக்கு வரும் ஜி.வி.பிரகாஷின் 100 சதவீதம் காதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சந்திரமவுலி எம்.எம். இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - ஷாலினி பாண்டே இணைந்து நடித்துள்ள `100 சதவீதம் காதல்' படத்தை செப்டம்பரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. #100PercentKaadhal #GVPrakashKumar
  நாகசைதன்யா - தமன்னா நடித்து ஆந்திராவில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம், `100 சதவீதம் லவ்.' இந்த படம் `100 சதவீதம் காதல்' என்ற பெயரில் தமிழில் உருவாகி வருகிறது. 

  ஜி.வி.பிரகாஷ் - ஷாலினி பாண்டே இணைந்து நடிக்கும் இந்த படத்தை சந்திரமவுலி எம்.எம். இயக்கியிருக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் நாசர், தம்பிராமய்யா, `தலைவாசல்' விஜய், ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

  படம் பற்றி இயக்குநர் சந்திரமவுலி பேசும் போது,

  ``கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவருக்கும், மாணவிக்கும் இடையே நடக்கும் `ஈகோ' பிரச்சினைதான் கதையின் கரு. யார் முதல் மார்க் வாங்குவது? என்று இரண்டு பேருக்கும் இடையே போட்டி இருந்து வருகிறது. அவர்களுக்கு இடையே நடக்கும் போட்டியை காதலும், நகைச்சுவையும் கலந்து திரைக்கதையாக்கி இருக்கிறோம்.  படத்தில், இசை ஒரு முக்கிய அம்சமாக இருக்கும். பாடல்களுக்கு மிகுந்த சிரத்தை எடுத்து ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார். அந்த பாடல்களை ஏவி.எம். ஸ்டூடியோவில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து படமாக்கியிருக்கிறோம். தெலுங்கு படத்தில் தமன்னா நடித்த கதாபாத்திரத்தை அவர் அளவுக்கு ஷாலினி பாண்டேவினால் திறமையாக நடிக்க முடியுமா? என்ற சந்தேகம் இருந்தது. அந்த சந்தேகம் துளி கூட ஏற்படாத அளவுக்கு ஷாலினி பாண்டே மிக சிறப்பாக நடித்து இருக்கிறார். 

  படத்தை அடுத்த மாதம் (செப்டம்பர்) திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறோம்.'' என்றார். #100PercentKaadhal #GVPrakashKumar #ShaliniPandey

  Next Story
  ×