search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Arjun Reddy"

  தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்ற ஷாலினி பாண்டே, அர்ஜுன் ரெட்டி போல் ஒருவர் கிடைத்தால் நிச்சயம் காதலிப்பேன் என்று கூறினார். #ShaliniPandey
  தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமான ஷாலினி பாண்டே, தமிழில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 100 சதவீதம் காதல், ஜீவா ஜோடியாக கொரில்லா, விஜய் ஆண்டனியுடன் அக்னி சிறகுகள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

  சினிமா பிரவேசம் குறித்து அவர் கூறியதாவது:-

  “படிக்கும்போதே சினிமாவில் நடிக்க ஆர்வம் இருந்தது. அப்பாவுக்கு நான் நடிகையாவதில் விருப்பம் இல்லை. ஏதாவது வேலைக்குசெல்லும்படி வற்புறுத்தினார்.

  மும்பையில் தங்கி சினிமா வாய்ப்புகள் தேடினேன். அப்போது சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டேன். சில மாதங்களுக்கு பிறகு அர்ஜுன் ரெட்டி படத்துக்கு தேர்வாகி படப்பிடிப்பில் பங்கேற்றேன்.  இயக்குனரிடம் முத்த காட்சி, நெருக்கமான காட்சிகள் இருக்கக்கூடாது என்று அப்பா கண்டிப்பாக கூறினார். படம் திரைக்கு வந்ததும் பெரிய பாராட்டுகள் குவிந்தன. நிஜ வாழ்க்கையில் அர்ஜுன் ரெட்டி போல் ஒருவர் கிடைத்தால் நிச்சயம் காதலிப்பேன். இந்த படத்துக்கு பிறகு தமிழில் நிறைய பட வாய்ப்புகள் வந்துள்ளன.

  2 வருட சினிமா பயணத்தில் நிறைய கற்றுக்கொண்டேன். சமூக வலைத்தளத்தில் படங்கள் வெளியிடுவதில் விருப்பம் இல்லை. நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் மணிரத்னம் ஆகியோருக்கு நான் தீவிர ரசிகை. உணவு கட்டுப்பாடு இல்லை. வாரத்தில் ஐந்து நாட்கள் உடற்பயிற்சி செய்வேன். புத்தகங்கள் படிப்பேன். எனக்கு தோழிகள் குறைவு.”

  இவ்வாறு அவர் கூறினார். #ShaliniPandey #ArjunReddy

  தொடரி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பூஜா ஜவேரி, அடுத்ததாக அதர்வா மற்றும் பரத்துக்கு ஜோடியாக தமிழ் படங்களில் நடிக்கிறார். #PoojaJhaveri
  தெலுங்கில் முன்னணி கதாநாயகியான பூஜா ஜவேரி தொடரி படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்த படத்தில் சின்ன வேடத்தில் நடித்த அவர் தொடர்ந்து அதர்வா, பரத்துடன் தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

  பூஜா, விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற துவாரகா படம் அர்ஜூன் ரெட்டி என்ற பெயரில் தமிழில் வரும் 15-ந் தேதி வெளியாகிறது. படத்தை தமிழாக்கம் செய்து வெளியிடும் ஏ.என்.பாலாஜி அளித்த பேட்டியில் ‘விஜய் தேவரகொண்டாவுக்கு தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் பெருகி வருகிறார்கள்.  தமிழில் வசனத்தை ஆண்டனி ரிச்சர்டும், பாடல்களை நெல்லை பாரதியும் எழுதி இருக்கிறார்கள். பாடல்கள் நேரடி தமிழ் படங்களின் பாடல்கள் அளவுக்கு சிறப்பாக அமைந்து இருப்பதாக பாராட்டுகள் குவிகின்றன.

  நான் ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் நிறுவன படங்களை தெலுங்கில் வெளியிட்டு சினிமாவில் காலடி எடுத்து வைத்தேன். பின்னர் இந்த துறைக்கு வந்தேன்’ என்றார். #PoojaJhaveri #ArjunReddy #VijayDevarakonda #Atharvaa #Bharath

  வர்மா படத்தில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்த இயக்குனர் பாலா, தயாரிப்பாளர் உடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும் வெளியிட்டுள்ளார். #Varma #DhruvVikram #Megha
  சென்னை:

  தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தை ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்துள்ளனர். பாலா இயக்க விக்ரம் மகன் துருவ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது.

  பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தை கைவிடுவதாக படத் தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் அறிவித்துள்ளது.

  இதுகுறித்து டுவிட்டரில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இ4 என்டர்டெயின்மெண்ட் அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் வர்மா என்ற தலைப்பில் தயாரித்துள்ளது. தயாரிப்பு நிறுவனத்திடம் கொடுக்கப்பட்ட படத்தின் இறுதி வடிவம் எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. படத்தின் உருவாக்கத்தில் பல்வேறு வேறுபாடுகள் இருப்பதால், படத்தை கைவிட முடிவு செய்துள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தரப்பட்ட தவறான தகவலால், இந்த விளக்கத்தை தரவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன் என இயக்குநர் பாலா தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தரப்பட்ட தவறான தகவலால், இந்த விளக்கத்தை தர வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன்.

  படைப்பு சுதந்திரம் கருதி வர்மா படத்தில் இருந்து விலகிக் கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்த முடிவு. துருவ் விக்ரமின் எதிர்காலம் கருதி இதுகுறித்து மேலும் பேச விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

  மேலும், தயாரிப்பாளர் உடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும் வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். #DirectorBala #Tamilcinema #Varmaa
  பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வர்மா’ படத்தின் டிரைலரை நடிகர் சூர்யா இன்று வெளியிட்டுள்ளார். #Varma #VarmaTrailer
  தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படம் ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. பாலா இயக்கியுள்ள இந்தப் படத்தில், விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகிறார். மேகா சவுத்ரி என்ற மாடல் துருவ் விக்ரம் ஜோடியாக நடித்துள்ளார். 

  படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. இதை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த டிரைலர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  இப்படம் பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
  ‘திமிரு புடிச்சவன்’, ‘கொலைகாரன்’ படத்தை அடுத்து விஜய் ஆண்டனி நடிக்க இருக்கும் புதிய படத்தில் கதாநாயகியின் பெயர் வெளியாகியுள்ளது. #VijayAntony
  ‘காளி’ படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் ‘திமிரு புடிச்சவன்’, ‘கொலைகாரன்’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. மேலும் நவீன் இயக்கவிருக்கும் புதிய படத்திலும் நடிக்க இருக்கிறார் விஜய் ஆண்டனி. இப்படம் ஆக்ஷன் த்ரில்லர் கதையம்சத்தில் உருவாக இருக்கிறது.

  இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் டி.சிவா தயாரிக்க இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கான பூஜை சமீபத்தில் போடப்பட்டது. தற்போது படத்தின் முதற்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ஷாலினி பாண்டே நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
  பாலா இயக்கத்தில் `அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக்காக உருவாகும் `வர்மா' படத்தில் துருவ் விக்ரம் ஜோடியாக நடிக்க பெங்கால் நடிகை ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். #Varma #DhruvVikram
  தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற `அர்ஜுன் ரெட்டி' படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தின் மூலம் நடிகர் விக்ரம் மகன் துருவ் தமிழ் சினிமாவில் நாயனாக அறிமுகமாகிறார். 

  பாலா இயக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நேபாளத்தில் முடிந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், துருவ் ஜோடியாக நடிக்க வங்காளத்தை சேர்ந்த நடிகை மேகா சவுத்ரி ஒப்பந்தமாகி இருக்கிறார். முன்னதாக ஷ்ரியா சர்மா, சுப்புலெட்சுமி, ஜான்வி கபூர் உள்ளிட்ட பெயர்கள் அடிபட்ட நிலையில் துருவ் ஜோடியாகி இருக்கிறார் மேகா.  `வர்மா' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்திற்கு `குக்கு', `ஜோக்கர்' பட இயக்குநர் ராஜு முருகன் வசனங்களை எழுதுகிறார். இ4 என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். #Varma #DhruvVikram

  `அர்ஜுன் ரெட்டி' படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஷாலினி பாண்டே, `அர்ஜுன் ரெட்டி' படத்தில் கதாநாயகனுடன் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்தபோது நரக வேதனையை அனுபவித்தாக கூறியிருக்கிறார். #ShaliniPandey
  `அர்ஜுன் ரெட்டி' தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. முதல் படத்திலே நல்ல பெயரை பெற்றதால் அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். சமீபத்தில் வெளியான `நடிகையர் திலகம்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

  தற்போது ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக `100% காதல்', ஜீவா ஜோடியாக `கொரில்லா' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சினிமாவுக்கு வந்தது பற்றி ஷாலினி பாண்டே கூறியதாவது:-  “சினிமாவில் நடிக்க எனது வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். ஐ.டி. நிறுவனத்தில் வேலை தேடும்படி நிர்ப்பந்தித்தனர். அதை மீறி நாடகங்களில் நடித்தேன். பிறகு சினிமா வாய்ப்பு தேட வீட்டில் சண்டை போட்டுவிட்டு மும்பை சென்றேன். அப்போது எனது தந்தை நீ தெருவில் பிச்சைதான் எடுப்பாய் என்று திட்டினார். மும்பையில் பெண்களுக்கோ ஆண்களுக்கோ தனியாக வீடு கொடுப்பது இல்லை.

  இதனால் இரண்டு ஆண்கள் இருந்த வீட்டில், நானும் இன்னொரு பெண்ணும் தங்கினோம். அந்த ஆண்கள் நல்ல குணம் உள்ளவர்கள். நன்றாக கவனித்தனர். ஒரு முறைகூட என்னை தவறாக பார்க்கவில்லை. அவர்கள் தொடர்பால் புதிய உலகத்தை பார்த்தேன்.  அர்ஜுன் ரெட்டி படம் பெரிய வெற்றி பெற்று பெயர் வாங்கி கொடுத்ததும் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டனர். என் வாழ்க்கையில் கல்லூரியில் படிக்கும்போதும், சினிமாவுக்கு வந்த பிறகும் 2 முறை காதல் வந்து தோல்வியில் முடிந்தன. அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்தபோது காதல் தோல்வியால் தவித்தேன். அப்போது கதாநாயகனுடன் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்தபோது நரக வேதனையை அனுபவித்தேன்.”

  இவ்வாறு ஷாலினி பாண்டே கூறினார். #ShaliniPandey #ArjunReddy

  ×