search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "research"

    • ஒப்பிலியப்பன் கோவிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • சி.சி.டி.வி கேமராக்களை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளோம்.

    திருநாகேஸ்வரம்:

    கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவில் வெங்கடாசலபதி சுவாமி கோயில் 108 திவ்ய தேசங்களில் புகழ்பெற்றதும் நம்மாழ்வார் திருமங்கையாழ்வார் பொய்கையாழ்வார் பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதுமான தலமாகும்.

    இந்த கோவிலில் விமானங்கள், கோபுரங்கள், பிரகாரங்கள், சிறு சிறு சன்னதிகள் முதலியன சுமார் ரூ.3.50 கோடி மதிப்பில் புனரமைத்து திருப்பணி வேலைகள் அனைத்தும் பூர்த்தி அடைந்துள்ளன. இதையடுத்து வரும் 29-ம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் வெங்கடாசலபதி சுவாமி கோவில், வடக்கு வீதியில் எழுந்தருளி இருக்கும் ஜெயவீரஆஞ்சநேயர் கோவிலுக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று மாலை ஆலய வளாகத்தில் திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    ஒப்பிலியப்பன் கோவிலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் 29ஆம் தேதி சுமார் 20000 பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வாகனங்கள் நிறுத்துவதற்கு வி.ஏ.ஓ நகர், அங்காளம்மன் கோவில், நாகநாதசுவாமி கோவில், பிரத்தியங்கிராதேவி கோவில் என நான்கு புறமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கோவில் கூட்டங்களை பயன்படுத்தி நகை திருட்டு போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் விதத்தில் சுமார் 25 இடங்களில் உள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் தொடர்ந்து கவனிக்கும் வகையில் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளோம். நான்கு இடங்களில் சுகாதாரத்துறை மூலமாக முகாம் அமைக்கப்படுகிறது. 200-க்கும் மேற்பட்ட போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    29 ஆம் தேதி அன்று கும்பாபிஷேகம் நடைபெறும் நேரம் வரை கோவிலுக்குள் 1000 பேர் மட்டுமே இருக்க முடியும் என்பதால் பொதுமக்களும் பக்தர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். மதியம் 12 மணிக்கு மேல் அனைவரும் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். 29ஆம் தேதி நாள் முழுவதும் தரிசனம் செய்யலாம். நிலமாலை, வஸ்திரம் சாத்துதல், அர்ச்சனை ஆகியவை கிடையாது. சுவாமி தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. உப்பிலியப்பன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருநாகேஸ்வரத்தில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் கடைகள் இரண்டையும் 28 மற்றும் 29ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களும் மூடுவதற்கு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு இன்று முதல் 29ஆம் தேதி முடிய ஐந்து நாட்களுக்கு பூமி தேவி திருமண மண்டபத்தில் அன்னதானம் போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது கோவில் உதவி ஆணையர் கூடுதல் பொறுப்பு சாந்தா, கண்காணிப்பாளர் சக்திவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • சுமார் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பருத்தி பயிரடப்பட்டுள்ளது.
    • பருத்தியில் நோய் தாக்குவதாக விவசாயிகள் வேளாண் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், குடவாசல் மற்றும் வலங்கைமான் வட்டாரங்களில் நடப்பாண்டு சுமார் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பருத்தி பயிரடப்பட்டுள்ளது.

    அவ்வாறு பயிரடப்பட்டுள்ள பருத்தியில் தற்போது இலை சிவந்து, காய்ந்து விடுவதாக விவசாயிகள் வேளாண் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

    இந்நிலையில், நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், தொழில்நுட்ப வல்லுநர் கருணாகரன் மற்றும் குடவாசல் வட்டார வேளாண்மை, உழவர் நலத்துறை உதவி இயக்குனர் ஜெயசீலன் மற்றும் துணை வேளாண்மை அலுவலர் ரவி ஆகியோர் குடவாசல் வட்டாரத்தில் ஒரு விவசாயியின் பருத்தி வயலில் ஆய்வு மேற்கொண்டனர்.

    • இந்திய வம்சா வளியினரை இணைப்பதற்கு புதிய ஆராய்ச்சி உதவித்தொகைத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
    • இந்த உதவித் தொகைக் கான விண்ணப்பங்கள் ஜூன் 15-ந்தேதி முதல் ஜூலை மாதம் 31-ந்தேதி வரை பெறப்படும்.

    சேலம்:

    அறிவியல் மற்றும் தொழில் துறையில் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதற்கு ஒருங்கி ணைந்த ஆராய்ச்சிப் பணிக்காக இந்தியக் கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவ னங்களுடன் அறிவியல், தொழில்நுட்பம், பொறியி யல், கணிதம், மருத்துவத் துறைகளைச் சேர்ந்த இந்திய வம்சா வளியினரை இணைப்பதற்கு புதிய ஆராய்ச்சி உதவித்தொகைத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

    அதாவது, வைஷ்விக் பாரதீய வைகியானிக் ஆராய்ச்சி உதவித்தொகைத் திட்டம் (விஏஐபிஹெச்ஏவி) இந்திய அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை யால் அமல்படுத்தப்பட்டுள் ளது. இந்த உதவித்தொகை, ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சிறந்த அறிவி யல் மற்றும் தொழில்நுட்ப த்துறையைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினருக்கு வழங்கப்பட உள்ளது.

    இதற்கான திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் பங்கேற்றனர்.

    70-க்கும் மேற்பட்ட நாடு களில் வசிக்கும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியி யல், கணிதம், மருத்துவத் துறைகளைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினர் பங்கேற்றனர்.

    அறிவியல், ஆராய்ச்சி மற்றும் புதுமை கண்டு பிடிப்புகளை ஊக்கப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சமூகப் பொருளா தார மாற்றத்திற்கான நமது முயற்சியில் அறிவியல் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறினார்.

    இந்த உதவித் தொகைக் கான விண்ணப்பங்கள் ஜூன் 15-ந்தேதி முதல் ஜூலை மாதம் 31-ந்தேதி வரை பெறப்படும்.

    • ரூ.75 லட்சம் மதிப்பில் புதிய நகர்புற நலவாழ்வு மையத்தை கலெக்டர் பார்வையிட்டார்.
    • கலெக்டர் விஷ்ணு சந்திரன் குத்துவிளக்கேற்றி பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதை பார்வையிட்டார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகராட்சிக் குட்பட்ட லேதம்ஸ் பங்களா, பரமக்குடி சந்தை கடை தெரு, மஞ்சள்பட்டினம் ஆகிய 3 இடங்களில் தலா ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய அரசு நகர்ப்புற சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள் கட்டப்பட்டுள் ளன. இதனை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    தொடர்ந்து நலவாழ்வு மையத்தில் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து சிகிச்சை அளிப்பதை பார்வை யிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஒவ்வொரு நலவாழ்வு மையத்திலும் தலா, ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார ஆய்வாளர் மற்றும் மருத்துவமனை பணியாளர் என பணிபுரிவார்கள். மேலும் இங்கு காலை 8 மணி முதல் 12 மணி வரை மற்றும் 4 மணி முதல் இரவு 8 மணி வரை ஆகிய நேரங்களில் 12 வகையான மருத்துவ சேவைகள், 14 வகையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படும். மேலும் இலவசமாக மருந்துகள் வழங்கப்படும். நகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் தேவையான மருத்துவ சிகிச்சைகள் பெற்று பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இந்த திறப்பு விழாவில் முருகேசன் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள்அர்ஜூன் குமார் (ராமநாதபுரம்), இந்திரா (பரமக்குடி), ராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் கார்மேகம், ராமநாதபுரம் நகர் மன்ற துணைத்தலைவர் பிரவீன் தங்கம், நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன், நகர்மன்ற உறுப்பி னர் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கையில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • பணியாளர்களின் கூடுதல் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறை களின் சார்பில் அனைத்துப் பகுதிகளிலும் பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வாறு மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளின் நிலை குறித்து கலெக்டர் ஆஷா அஜீத் கள ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.

    அதன்படி சிவகங்கை ஊராட்சி ஒன்றி யத்திற்கு உட்பட்ட ஒக்கூர், ஓ.புதூர், கீழப்பூங்குடி ஆகியப்ப குதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், கண்மாய், வரத்து வாய்க்கால்களில் அகழிகள் வெட்டும் பணி மற்றும் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் நியாய விலைக்க டைகளின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.

    பொது சுகாதாரத் துறையின் சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்களின் செயல்பாடுகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள் குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    ஓ.புதூர் ஊராட்சிப் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், தலா ரூ.13.07 லட்சம் மதிப்பீட்டில் கருங்கா ப்பட்டி குடிகாட்டுக்கண்மாய் அகழிகள் வெட்டுதல் பணி, கொளக்கட்டைப்பட்டி கண்மாய் வரத்து வாய்க்கால் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.

    மாடுமுறிச்சான் கண்மாயில் அகழிகள் வெட்டுதல் பணி, ரூ.9.98 லட்சம் மதிப்பீட்டில் எல்ல முத்து ஊரணிக் கண்மாயில் அகழிகள் வெட்டுதல் பணி என மொத்தம் ரூ.120.23 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக கலெக்டர் ஆஷா அஜீத் ஆய்வு செய்தார்.

    மேற்கண்ட திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் பணியாளர்களின் கூடுதல் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வுகளின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கோ.ஜினு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொ றியாளர் வெண்ணிலா, உதவி செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், மாவட்ட வழங்கல் அலுவலர் நஜிமுன்னிசா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பத்மநாதன், ஜெகநாத சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கூத்தலூர் அரசு தொடக்கப்பள்ளியில் சமையலறை கட்டிடம் கட்டும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • பள்ளி திறப்பதற்குள் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், குடவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட 52.புதுக்குடி ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் பகுதியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டத்தின் கீழ் பழுதடைந்த வீடுகள் புதுப்பித்தல் மற்றும் புதிதாக வீடு கட்டும் பணி, மேலபாலையூர் ஊராட்சி அலுவலக கட்டிடம் கட்டும் பணி, 42.அன்னவாசல் ஊராட்சியில் ரூ.4.33 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் சம்பா கட்டளை வாய்க்காலில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணி, கூத்தலூர் அரசு தொடக்கப்பள்ளியில் சமையலறை கட்டிடம் கட்டும் பணி, எரவாஞ்சேரி மணவா ளநல்லூர் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டும் பணி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பள்ளிகளில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை பள்ளி திறப்பதற்குள் விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    ஆய்வின்போது குடவாசல் வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் பாஸ்கர், சுவாமிநாதன் (ஊராட்சிகள்) உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • சட்டநாதர் சுவாமி கோயிலில் 32ஆண்டுகளுக்கு பிறகு வரும் 24-ம் தேதி கும்பாபிஷேகம் நடை பெற உள்ளது.
    • வடக்குகோபுர வாசல் பகுதியில் தேங்கி கிடந்த குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது.

    சீர்காழி:

    சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் 32ஆண்டுகளுக்கு பிறகு வரும் 24-ம் தேதி கும்பாபிஷேகம் நடை பெறவுள்ளது.

    இதற்கான திருப்பணிகள் தொடங்கி தற்போது நிறைவ டைந்துவருகிறது.

    இதனிடையே சட்டநாதர் சுவாமி கோயில் வடக்கு கோபுர வாசல் பகுதியில் தேங்கி கிடந்த குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது. நகராட்சி தூய்மை பணியாளர்கள் பலர் இப்பணியில் ஈடுப்பட்டனர்.

    அங்கிருந்த தேங்காய் மட்டைகள், குப்பைகள் முழுமையாக அகற்றப்பட்டுவருகிறது.

    மேலும் கும்பாபிஷேத்திற்கு பல முக்கிய பிரமுகர்கள் வரயிருப்பதால் வடக்கு கோபுர வாசல் எதிரே உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிட நகராட்சி நிர்வாகம் கடை நடத்துபவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    தூய்மை பணிகள் நடைபெறுவதை நகர்மன்ற தலைவர் துர்காபர மேஸ்வரி, ஆணையர் வாசுதேவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் நாகூர் பேருந்து நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • வரைபடத்துடன் திட்ட மதிப்பீடு தயார் செய்து தரும்படி அதிகாரிகளிடம் கூறினார்.

    நாகப்பட்டினம்:

    நாகூர் பேருந்து நிலையம் மிகவும் சிதிலமடைந்து உள்ளதாகவும், அதனை சீரமைத்து, வணிக வளாகம் உள்ளிட்ட வசதிகளுடன் பேருந்துகள் உள்ளே சென்று வரும்படி மேம்படுத்த வேண்டுமென்று மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் நாகூர் பேருந்து நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதன் உட்கட்ட மைப்பை மேம்படுத்துவது தொடர்பாக வரைபடத்துடன் திட்ட மதிப்பீடு தயார் செய்து தரும்படி அதிகாரிகளிடம் கூறினார்.

    விரைவில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரை சந்தித்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்த உள்ளதாகவும், நாகை புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படுவது போல், நாகூர் பேருந்து நிலைய சீரமைப்பும் நிறைவேறும் என்று அவர் உறுதியளித்தார்.

    ஆய்வின் போது நகர்மன்ற தலைவர் இரா.மாரிமுத்து, துணைத் தலைவர் எம்.ஆர்.செந்தில்குமார், நகராட்சி செயற் பொறியாளர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • நீர்ப்பாசன திட்டப் பணிகள் குறித்து கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு செய்தார்.
    • நெல் கொள்முதல் செய்யப்பட்டதற்கான காசோலையை கூடுதல் தலைமைச் செயலாளர் வழங்கினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றி யத்தில் நீர்ப் பாசன மேலாண்மை நவீனமய மாக்கல் திட்டத்தின் கீழ் நடைபெறும் பல் வேறு பணிகளை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரும், திட்ட இயக்குநருமான தென்காசி ஜவகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தெற்கு கீரனூர் கிராமத்தில் கால்நடை மருத் துவ முகாமை தொடங்கி வைத்த அவர் இதன்மூலம் பயன் பெற்று வரும் பயனாளிகளுடன் கலந்து ரையாடினார்.

    பின்னர் மானாமதுரை, சிவகங்கை, திருப்புவனம் வட்டா ரங்களைச் சேர்ந்த உறுப்பினர்களிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டதற்கான காசோலையை கூடுதல் தலைமைச் செயலாளர் வழங்கினார்.

    முனைவென்றி கிரா மத்தில் தோட்டக்கலை, மலைப் பயிர்கள் துறையின் நீர்வள ஆதாரத் துறை சார்பில் தமிழ்நாடு பாசன மேலாண்மை நவீனப்படுத் தும் திட்டத்தின் கீழ் செயல் படுத்தப்பட்டு வரும் திட்டங் கள் குறித்து கேட்டறிந்தார்.

    மேலநெட்டூர் கிராமத் தில் ரூ.29.45 லட்சத்தில் விதைப்பு கருவி மூலம் நெல் வரிசை விதைப்பு தொடர்பாக விவசாயி களுடன் கூடுதல் தலைமை செயலாளர் ஜவகர் கலந் துரையாடினார்.

    கச்சாத்தநல்லூர் பகுதியில் நடைபெற்று வரும் இடது பிரதானக் கால்வாய் சீரமைப்புப் பணிகளைகள், வைகை ஆற் றில் உள்ள பார்த்திபனூர் மதகு அணைக்கு கீழ் இடது பிரதான கால்வாய் சீர மைப்புப் பணிகள், பிரிவு வாய்க்கால்கள், சாலைக் கிராமம் கால்வாய், மேல்,கீழ் நாட்டார் கால்வாய் ஆகிய வற்றைத் தூர்வாரி சீரமைக் கும் பணிகளையும் கூடுதல் தலைமை செயலாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கலெக்டர் மதுசூதன் ரெட்டி, நீர்வள மேலாண்மை நிபுணர் கிருஷ்ணன், தோட்டக்கலை நிபுணர் வித்தியாசாகர், வேளாண்மைத் துறை நிபு ணர் ஷாஜகான், வேளாண் விற்பனை நிபுணர்

    ராஜசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • உப்பு உற்பத்தி பாத்திகள், நிறுவனங்களுக்கு சென்று உப்பு சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தனர்.
    • ஆய்வு குழுவினர்களுடன் சென்று தொழில்வாய்ப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் பகுதியில் நடைபெறும் உப்பு உற்பத்தியை அடிப்படையாக கொண்டு புதிதாக தொழில் தொடங்குவது தொ டர்பாக சென்னையில் செயல்படும் முன்னணி நிறுவனங்களின் தொழில்நுட்ப வல்லுநர்கள் பி.எஸ்.ஆர்.பாபு, ஜி.வி.விஸ்வநாதன் உள்ளிட்ட குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த குழுவினர் தென்னடார், கடிநெல்வயல், அகஸ்தியம்ப ள்ளி ஆகிய இடங்களில் உள்ள உப்பு உற்பத்தி பாத்திகள், நிறுவனங்களுக்கு சென்று உப்பு சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது, முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. ஆய்வு குழுவினர்களுடன் சென்று தொழில்வாய்ப்புகள் பற்றி விளக்கி, ஆய்வுகள் குறித்து கேட்டறிந்தார்.

    ஆய்வி ன்போது மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுப்பையன், வக்கீல் தங்க.கதிரவன், வருவாய்த்து றையினர் உடன் இருந்தனர்.

    குமாரபாளையம் அருகே ஆதரவற்றோர் மையத்தில் சமூக நலத்துறை அதிகாரி ஆய்வு செய்தார்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் எதிர்மேடு அன்னை ஆதரவற்றோர் மையத்தில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி கீதா ஆய்வு செய்தார். 

    ஆய்வின்போது மையத்தில் எத்தனை ஆதரவற்றவர்கள் உள்ளனர்? அவர்களுக்கு முறையாக உணவு 3 வேலையும் வழங்க–படுகிறதா? மையம் நடத்த தேவையான ஆவணங்கள் தயார் நிலையில் உள்ளதா? என்பது குறித்து கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது ஆதரவற்றோர் மைய நிர்வாகி ஹேமமாலினி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
    குமாரபாளையம் அருகே ஆதரவற்றோர் மையத்தில் சமூக நலத்துறை அதிகாரி ஆய்வு செய்தார்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் எதிர்மேடு அன்னை ஆதரவற்றோர் மையத்தில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி கீதா ஆய்வு செய்தார். 

    ஆய்வின்போது மையத்தில் எத்தனை ஆதரவற்றவர்கள் உள்ளனர்? அவர்களுக்கு முறையாக உணவு 3 வேலையும் வழங்க–படுகிறதா? மையம் நடத்த தேவையான ஆவணங்கள் தயார் நிலையில் உள்ளதா? என்பது குறித்து கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது ஆதரவற்றோர் மைய நிர்வாகி ஹேமமாலினி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
    ×