search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "research"

    • சாத்தூர் பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் அதனை தரமானதாகவும், விரைந்து முடித்தும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.

    சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் கத்தாளம்பட்டி ஊராட்சியில் ரூ.42.65 லட்சம் மதிப்பில் கட்டப் பட்டு வரும் புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தினையும், பொது நிதியின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டப்பட்டு வருவதையும், முதலமைச்சர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.28.17 லட்சம் மதிப்பில் அம்மா பட்டி சாலையிலிருந்து கே.புதூர் சாலை வரை அமைக்கப்பட்டுள்ள சாலை பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    நென்மேனி ஊராட்சியில் ரூ.42.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி மன்ற அலுவல கத்தினையும், பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டத்தின் கீழ் ரூ.18 கோடி மதிப்பில் நென்மேனி-வன்னிமடை சாலையில் பாலம் அமைக்கப்பட்டு வருவதையும் கலெக்டர் பார்வையிட்டார்.

    முதல்-அமைச்சர் கிராம சாலைமேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.64.13 லட்சம் மதிப்பில் வன்னி மடை முதல் பெரியகுளம் கண்மாய் வரை சாலை அமைக்கப்பட்டு வரும் பணிகளையும், வன்னிமடை ஆதிதிராவிடர் காலனியில் ரூ.37.43 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

    இதேபோல் சிந்து வார்பட்டி, போத்தி ரெட்டியாபட்டி, உப்பத்தூர், முள்ளிசெவல் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் அதனை தரமான தாகவும், விரைந்து முடித்தும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    • அலங்காநல்லூர் பகுதியில் ஆவின் பொது மேலாளர் ஆய்வு செய்தார்.
    • ஆய்வின்போது உதவி பொது மேலாளர் ரவிச்சந்தி ரன், பால் உற்பத்தி சங்க மேலாளர் செல்வம், சங்க செயலாளர்கள் உடனிருந்த னர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள முடுவார்பட்டி, மாணிக்கம்பட்டி, மரியம்மாள்குளம் உள்ளிட்ட பால் உற்பத்தியா ளர்கள் சங்கங்களில் மதுரை ஆவின் பொது மேலாளர் சிவகாமி ஆய்வு மேற்கொண் டார். தொடர்ந்து சங்க உறுப்பினர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    பசு கடன், பால் மாடு பராமரிப்பு கடன் வங்கிகள் மூலம் பெற்று தருவது, பால் கொள்முதல் விலையை உயர்த்தி தருவது, மானிய விலையில் கால்நடை தீவனம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அவரிடம் முன்வைக்கப்பட்டது. பகுதி அலுவலர்களை அழைத்து அதற்கான ஏற்பாடுகள் செய்து உறுப்பினர்களுக்கு உதவ வேண்டும் என ஆவின் பொது மேலாளர் கூறினார்.

    ஆய்வின்போது உதவி பொது மேலாளர் ரவிச்சந்திரன், பால் உற்பத்தி சங்க மேலாளர் செல்வம், சங்க செயலாளர்கள் உடனிருந்தனர்.

    • வளர்ச்சி திட்டபணிகளை ஆணையாளர் பிரவீன்குமார் ஆய்வு செய்தார்.
    • மாமன்ற உறுப்பினர் ராதிகா, சுகாதார அலுவலர் ராஜ் கண்ணன், சுகாதார ஆய்வாளர் அலாவுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை கிழக்கு மண்டலம் 8-வது வார்டில் தாகூர் நகர், ஆர்.ஆர்.நகர், கம்பர் நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் 8-வது வார்டு சந்தானம் நகர் மெயின் தெருக்கள், 11-வது வார்டு ஜி.ஆர்.நகர் 5, 6-வது தெருக்க ளில் ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் முடிவடைந்துள்ள தார் சாலை பணிகள், சந்தானம் நகர் உள் தெருக்கள், மெயின் கிழக்கு தெருக்களில் ரூ.1.91 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப் பட்டுள்ள தார் சாலைப்பணிகள் என மொத்தம் ரூ.5.73 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலைப்பணிகளை ஆணையாளர் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து மாட்டுத்தாவணி சர்வேயர் காலனி மெயின் சாலையில் நடைபெற்று வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் திருப்பாலை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆணையாளர் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது உதவி ஆணையாளர் காளிமுத்தன், செயற்பொறியாளர் (திட்டம்) மாலதி, உதவி செயற்பொறி யாளர்கள் ஆரோக்கிய சேவியர், முருகேச பாண்டியன், உதவிப்பொறியாளர் முருகன், மாமன்ற உறுப்பினர் ராதிகா, சுகாதார அலுவலர் ராஜ் கண்ணன், சுகாதார ஆய்வாளர் அலாவுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குப்பை கிடங்கில் கட்டப்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆய்வு செய்யப்பட்டது.
    • குப்பை கிடங்கு சேமிப்பு வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    வேதாரண்யம் நகராட்சி சார்பில் நாகை சாலையில் 4 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணியினையும், காலை உணவு திட்ட சமையல் கூடத்தை நகராட்சி இயக்குனர் சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து ரூ.2 கோடியே 85 லட்சம் மதிப்பில் கடற்கரை சாலையில் கசடு கழிவு மேலாண்மை குப்பை கிடங்கில் கட்டப்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தையும், நகராட்சி குப்பை கிடங்கையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சரஸ்வதி, மண்டல செயற்பொறியாளர் பார்த்திபன், நகர்மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் வெங்கட லட்சுமணன், பொறியாளர் கோவிந்தராஜ், ஓவர்சியர் குமரன் உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் குப்பை கிடங்கு சேமிப்பு வளாகத்தில் நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு மரக்கன்றுகளை நட்டார். நிகழ்ச்சியில் குப்பை கிடங்கில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
    • கொத்தடிமைத் தொழிலாளர்கள் எவரும் வேலை செய்யவில்லை என உறுதி செய்யப்பட்டது.

    சிவகங்கை

    சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் ஆணையின்படியும், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஜெயபாலன், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிர மணியன் ஆலோசனை யின் பேரில், சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) முத்து தலைமையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் சைல்டுலைன் உறுப்பி னர்கள், ஆள்கடத்தல் பிரிவு காவலர்கள், தொழிலாளர் துணை ஆய்வாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் மானாமதுரை பகுதியில் உள்ள ஊதுபத்தி தயார் செய்யும் இடங்களில் கூட்டாய்வு மேற்கொண்டனர். இதில் 18 வயதிற்குட்பட்ட குழந்தை கள், வளரிளம் பருவத் தொழிலாளர்கள், கொத்தடிமைத் தொழி லாளர்கள் எவரும் வேலை செய்யவில்லை என உறுதி செய்யப்பட்டது.

    மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முத்து தெரிவித்துள்ளார்.

    • புதுவை மாநிலத்தை சேர்ந்தவர்கள் இங்கு மீன்பிடிப்பது, தங்களின் வாகனங்களை கழுவுதல் வழக்கம்.
    • ஆய்வுக்கு அனுப்ப கடலூர் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் தென்பெண்ணையாறு உள்ளது. நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்காகவும், அப்பகுதியில் வசிப்பவர்கள் கடலூருக்கு வந்து செல்வதற்காகவும் புதுவை மாநில அரசால் தடுப்பணையுடன் கூடிய தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தரைப்பாலத்தில் எப்போதும் தண்ணீர் தேங்கி நிற்கும். இதனால், கடலூர் மற்றும் புதுவை மாநிலத்தை சேர்ந்தவர்கள் இங்கு மீன்பிடிப்பது, தங்களின் வாகனங்களை கழுவுதல் வழக்கம். பள்ளி விடுமுறை நாட்களில் சிறுவர்கள் அதிகளவில் வலை விரித்தும், தூண்டில் போட்டும் மீன்களை பிடிப்பார்கள். அதன்படி கடலூர் பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள் இன்று தரைப்பாலம் அருகே மீன்களை பிடிக்க வலை விரித்தனர். சிறிது நேரம் கழித்து வலையை மேலே எடுத்தனர். வலையில் கைத்துப்பாக்கி ஒன்று இருந்தது. இதனை பார்த்த சிறுவர்கள், பொம்மை துப்பாக்கி என நினைத்து கையில் எடுத்து சென்றனர்.

    அப்போது தரைப்பாலத்தில் சென்ற ஒருவர், சிறுவர்களிடமிருந்து இதனை வாங்கி பார்த்தார். இதையெல்லாம் நீங்கள் வைத்திருக்க கூடாது, பெரியவர்களிடம் தான் இருக்க வேண்டுமென கூறி வாங்கி சென்றுள்ளார். இதனால் குழப்பமடைந்த சிறுவர்கள் கலெக்டர் அலுவலகம் எதிரில் பணியில் இருந்த போலீசாரிடம் இது குறித்து கூறினார்கள். உடனடியாக தரைப்பாலத்திற்கு சென்ற போலீசார், அந்த நபரை வழிமறித்து, அவரிடமிருந்த கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இதனைக் கண்ட போலீசார், இது ஒரு வகையான ஏர் பிஸ்டல் என்பதை உறுதி செய்தனர். இந்த கைத்துப்பாக்கியை கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த துப்பாக்கியில் குண்டுகள் உள்ளதா? இது வேறு ஏதேனும் குண்டுகளுடன் ஒத்துப்போகிறதா? இந்த கைத்துப்பாக்கி எந்த காலக்கட்டத்தில் பயன்படுத்தப்பட்டது? என்பது குறித்து கண்டறிய ஆய்வுக்கு அனுப்ப கடலூர் போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன்பிறகே இந்த கைத்துப்பாக்கி யாருடையது? எவ்வாறு தென்பெண்ணையாற்றுக்கு வந்தது என்பது குறித்து தெரியவரும் என கடலூர் புதுநகர் போலீசார் தெரிவித்தனர். சிறுவர்களின் மீன்பிடி வலையில் கைத்துப்பாக்கி சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஞாபக சக்தி, வாய்மொழி கற்றல் திறன், திட்டமிடல், மற்றும் கவனம் மாற்றும் திறன் உட்பட பல நரம்பியல்-உளவியல் திறன்கள் பரிசீலிக்கப்பட்டது
    • நுகரும் தன்மை குறித்து குறைவான அளவிலேயே ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன

    ஐம்புலங்களின் செயல்பாடுகளில் ஒலி, ஒளி சம்பந்தமான ஆராய்ச்சிகள் உலகில் அதிகம் நடைபெற்று வருகிறது. ஆனால், மனிதர்களின் நாசியையும், அதன் நுகரும் தன்மை குறித்தும் குறைவான அளவிலேயே ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன.

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள இர்வின் கலிபோர்னியா பல்கலைகழகத்தில் ஒரு ஆராய்ச்சி நடைபெற்றது. இந்த ஆய்வில் 20 பேர் பங்கேற்றனர்.

    முதலில் இவர்களின் ஞாபக சக்தி, வாய்மொழி கற்றல் திறன், திட்டமிடல், மற்றும் கவனம் மாற்றும் திறன் உடபட பல நரம்பியல்-உளவியல் செயல்பாடுகள் கவனிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

    பிறகு ஆராய்ச்சியாளர்கள் இவர்களை இரு குழுக்களாக பிரித்தனர்.

    அவர்களில் ஒரு குழுவினரிடம் ரோஜா, ஆரஞ்சு, யூகலிப்டஸ், எலுமிச்சை, மிளகுக்கீரை, ரோஸ்மேரி மற்றும் லாவெண்டர் முதலிய வாசம் கொண்ட இயற்கையான எண்ணெயை தொடர்ந்து நுகர வைத்தனர். ஒரு கருவியை கொண்டு காற்றில் செலுத்தப்படும் இந்த வாசத்தை தினமும் இரவில் 2 மணி நேரம், வீட்டில் பல இடங்களிலிருந்தும் அவர்கள் முகரும்படி செய்யப்பட்டது.

    இதே போன்று தினமும் 2 மணி நேரம், மற்றொரு குழுவினரிடம் தரமான வாசமில்லாத ஒரு பொருள் முகர செய்யப்பட்டது. 6 மாதங்கள் இந்த நடவடிக்கை தொடர்ந்தது.

    6 மாதங்கள் கடந்ததும், அவர்களிடம் மீண்டும் நரம்பியல்-உளவியல் திறன் பரிசோதிக்கப்பட்டது.

    இதில் நல்ல வாசனையை முகர்ந்தவர்களின் முடிவெடுக்கும் திறன் முன்பிருந்ததை விட அதிகரித்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டனர். மேலும், அந்த குழுவில் உள்ளவர்களுக்கு நல்ல தூக்கம் கிடைத்ததாகவும் கண்டறிந்துள்ளனர்.

    நம்மை சுற்றியுள்ள காற்று மண்டலத்தில் நல்ல வாசம் இருக்கும்படியாக வைத்து கொண்டால் நமது மூளையின் செயல்பாடு அதிகரிக்கும் என்றும் வயதானால் தோன்றும் ஞாபக சக்தி குறைபாடுகள் சம்பந்தமான நோய்கள் குறையும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் அறிவித்திருக்கின்றனர்.

    • தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக மேட்டூர் அணை பூங்கா விளங்கி வருகிறது.
    • பூங்கா முன்பு உள்ள சுற்றுலாத் துறைக்கு சொந்தமான தமிழ்நாடு ஓட்டல் இயங்கி வருகிறது.

    நங்கவள்ளி:

    தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக மேட்டூர் அணை பூங்கா விளங்கி வருகிறது. இந்த பூங்காவிற்கு சேலம், ஈரோடு ,நாமக்கல், தர்மபு ரியை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    பூங்கா முன்பு உள்ள சுற்றுலாத் துறைக்கு சொந்தமான தமிழ்நாடு ஓட்டல் இயங்கி வருகிறது. பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த ஓட்டலில் உணவு அருந்திவிட்டு ஓய்வெடுத்து செல்கின்றனர். இந்நிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று மேட்டூருக்கு வந்தார்.

    தமிழ்நாடு ஓட்டலில் அவர் ஆய்வு மேற்கொண்டார். ஓட்டலில் அறைகள் ஒவ்வொன்றாக திறந்து பார்த்த அமைச்சர் பராமரிப்பு பணிகள் மற்றும் வருவாய் குறித்து உடன் வந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து தூக்கணாம் பட்டி காவிரி ஆற்றில் படகு சவாரி செய்வதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர் களிடம் கூறியதாவது:-

    ஏற்காட்டில் சுற்றுலா துறையை மேம்படுத்த 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் முதல்-அமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு அனைத்து துறைகளிலும் முதல் இடத்தை கைப்பற்ற வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

    மருத்துவத் துறையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் அதிக அளவில் கோவில்கள் உள்ளன. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்திற்கு 20 லட்சம் பேர் சுற்றுலா பயணிகளாக வந்துள்ளனர்.

    தற்போது மூன்று மாதத்தில் 30 லட்சம் பேர் வந்து சென்றுள்ளனர். தமிழகத்தில் 300 சுற்றுளா தலங்களை தேர்வு செய்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது சுற்றுலாத்துறை இயக்குனர் சந்திப்பு நந்தூரி, முன்னாள் அமைச்சரும் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான டி.எம். செல்வகணபதி, மேட்டூர் எம்.எல்.ஏ. சதாசிவம். வருவாய் துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • குழந்தைகளுக்கு தண்ணீர் இல்லாமல் அவதி அடைந்து வந்தனர்.
    • குடிநீரை அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு உபயோகிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி 34 -வது வார்டு பாலன் காலனியில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு தண்ணீர் இல்லாமல் அவதி அடைந்து வந்தனர். கடலூர் மாநகராட்சி சார்பில் தற்போது குடிநீர் போர் போடப்பட்டுள்ளது. இந்த குடிநீர் பைப்பை கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் நேரில் சென்று பார்வையிட்டு உடனடியாக இந்த குடிநீரை அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு உபயோகிக்க வேண்டும் என அறிவுறுத்தினர். இதில் நிர்வாகிகள் சொக்கு, சரண், கருணையாளன், ராம்ஜி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • செட்டிநாடு கால்நடை பண்ணையில் கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
    • மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் நேரில் சென்று பார்வையிட்டார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கால்நடைப் பராமரிப்புத்துறையின் சார்பில் செட்டிநாடு ஊராட்சியில் உள்ள கால்நடைப் பண்ணையில் 150 ஏக்கர் பரப்பளவில், கால்நடைகளுக்கு தேவையான கால்நடை தீவனம் மரங்கள் மற்றும் 600 மாடுகள், 1100 ஆடுகள், 1,258 அசில் நாட்டுக்கோழி குஞ்சுகள் வளர்க்கப்படு கின்றன.

    இதற்காக அமைக்கப்பட்டுள்ள கால்நடை கொட்டகைகள், கன்றுக் கொட்டகைகள், பால் கறவைக்கூடம், ஆட்டுக்கொட்டகைகள், கோழிக் கொட்டகைகள் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் நேரில் சென்று பார்வையிட்டார்.

    மேலும் செட்டிநாடு மாவட்ட கால்நடைப் பண்ணையில் நாட்டுக்கோழி இனப்பெருக்கப் பண்ணை உருவாக்குதல், தீவன ஆலை அமைத்தல் மற்றும் குஞ்சு பொரிப்பகம் அமைத்தல் திட்டத்தின்கீழ் 13.81 கோடியில் கட்டப்பட்டு வரும் கட்டிடங்களின் கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டார்.

    பண்ணையில் பராமரிக்கப்பட்டு வரும் செம்மறி ஆடுகள் ஜமுனாபாரி இன வெள்ளா டுகள் ஆகியவற்றை அதிக எண்ணிக்கையில் கால்நடை வளர்ப்போருக்கு வழங்கி டவும், தார்பார்கர், சாகிவால் இன மாடுகளின் பால் உற்பத்தியை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது, கால்நடை பராமரிப்புத் துறையின் துணை இயக்குநர் (கூ.பொ) பாலசுப்பி ரமணியன், கால்நடை உதவி மருத்துவர்கள் நட்ராஜன், பிரபாகரன், விவசாய மேலாளர் இதயத்துல்லா உட்பட சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
    • மாணவர்களின் எண்ணிக்கை, அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அரசின் சார்பில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஜெயசீலன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    சாத்தூர் வட்டம், இ.குமாரலிங்கபுரத்தில் உள்ள சிப்காட்-க்கு தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ரூ.26.50 கோடி மதிப்பில் சாலை அமைக்கப்படவுள்ள இடத்தினை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் இ.குமாரலிங்கம் மற்றும் மேட்டமலை ஆகிய இடங்களில் நியாய விலைக் கடைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து, மேட்டமலை ஊராட்சி, மடத்துக்காடு பகுதியில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 112 பயனாளிகளுக்கு, வீடுகட்டும் பணிகள் நடைபெற்று வருவதையும்,மேட்டமலை நடுத்தெருவில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தினையும், சின்னக்காமன்பட்டியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் செயல்படும் அரசு மாணவர் விடுதியினையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது மாணவர்களின் எண்ணிக்கை, வழங்கப் படும் உணவுகளின் தரம், அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், சின்னகாமன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள மாணவ-மாணவி களுடன் கலந்துரையாடி, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகள், உயர்கல்விக்கான வாய்ப்புகள், உதவித்தொகைகள் உள்ளிட்டவைகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும், மாணவர்கள் உயர்கல்வி பயிலவதற்கான துறைகள் மற்றும் கல்லூரிகளை தேர்ந்தெடுப்பது, தனித்திறமைகளை வளர்த்துக் கொள்வது உள்ளிட்டவைகள் குறித்து அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

    • கோடை விழா நாளை 30-ந் தேதி முதல் 2-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ள வேண்டும் என மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தினார்.

    கடலூர்:

    கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் நெய்தல் கொடை விழா நாளை 30-ந் தேதி முதல் 2-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரங்குகள் அமைப்பு, பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை தேவையான குடிநீர், வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். பொதுமக்கள் பாதிக்காத வகையிலும், கோடை விழாவை குடும்பத்துடன் வந்து கண்டுக்களிக்க அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ள வேண்டும் என மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தினார்.

    அப்போது மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி , மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, தி.மு.க மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்தி, மாநகர துணை செயலாளர்கள் சுந்தரமூர்த்தி, அகஸ்டின் பிரபாகரன், மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, இளையராஜா , சங்கீதா, கவுன்சிலர்கள் ஆராமுது , சுபாஷ்ணி ராஜா, பார்வதி, சுதா, செந்தில்குமாரி, சசிகலா ஜெயசீலன், பகுதி துணை செயலாளர் லெனின், கார் வெங்கடேசன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    ×