search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
    X

    சிவகங்கை யூனியன் ஒக்கூர் ஊராட்சியில் உள்ள நியாயவிலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து கலெக்டர் ஆஷாஅஜீத் ஆய்வு செய்தார்.

    வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு

    • சிவகங்கையில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • பணியாளர்களின் கூடுதல் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறை களின் சார்பில் அனைத்துப் பகுதிகளிலும் பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வாறு மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளின் நிலை குறித்து கலெக்டர் ஆஷா அஜீத் கள ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.

    அதன்படி சிவகங்கை ஊராட்சி ஒன்றி யத்திற்கு உட்பட்ட ஒக்கூர், ஓ.புதூர், கீழப்பூங்குடி ஆகியப்ப குதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், கண்மாய், வரத்து வாய்க்கால்களில் அகழிகள் வெட்டும் பணி மற்றும் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் நியாய விலைக்க டைகளின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.

    பொது சுகாதாரத் துறையின் சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்களின் செயல்பாடுகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள் குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    ஓ.புதூர் ஊராட்சிப் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், தலா ரூ.13.07 லட்சம் மதிப்பீட்டில் கருங்கா ப்பட்டி குடிகாட்டுக்கண்மாய் அகழிகள் வெட்டுதல் பணி, கொளக்கட்டைப்பட்டி கண்மாய் வரத்து வாய்க்கால் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.

    மாடுமுறிச்சான் கண்மாயில் அகழிகள் வெட்டுதல் பணி, ரூ.9.98 லட்சம் மதிப்பீட்டில் எல்ல முத்து ஊரணிக் கண்மாயில் அகழிகள் வெட்டுதல் பணி என மொத்தம் ரூ.120.23 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக கலெக்டர் ஆஷா அஜீத் ஆய்வு செய்தார்.

    மேற்கண்ட திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் பணியாளர்களின் கூடுதல் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வுகளின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கோ.ஜினு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொ றியாளர் வெண்ணிலா, உதவி செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், மாவட்ட வழங்கல் அலுவலர் நஜிமுன்னிசா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பத்மநாதன், ஜெகநாத சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×