search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Real Madrid"

    இத்தாலி கால்பந்து கிளப்பான யுவான்டஸில் கிறிஸ்டியானோ ரொனால்டோ வாரத்திற்கு 4.65 கோடி ரூபாய் சம்பளமாக வாங்க இருக்கிறார். #CR7 #Ronaldo
    உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக கருதப்படுபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கலை சேர்ந்த 33 வயதாகும் இவர் கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து ஸ்பெயின் கிளப் அணியான ரியல் மாட்ரிட்டிற்காக விளையாடி வந்தார்.

    இந்த வருடம் யூரோப்பா சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்ற பின்னர் ரயில் மாட்ரிட் அணியில் இருந்து விலகுவதாக ஒரு செய்தி வந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் ரொனால்டோ இத்தாலி கிளப்பான யுவான்டஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் ரியல் மாட்ரிட் அணி இந்த செய்தியை நேற்று உறுதிப்படுத்தியது.

    ரியல் மாட்ரிட் அணியுடன் 2021 வரை ஒப்பந்தம் இருந்த போதிலும் சம்பள பிரச்சனையால்தான் ரொனால்டா வெளியேறினார். ரொனால்டோவிற்காக ரியல் மாட்ரிட் அணிக்கு யவான்டஸ் டிரான்ஸ்பர் தொகையாக 100 மில்லியன் பவுண்டு கொடுக்கிறது.



    ஆனால், கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் ரசிகர்கள் இருந்தனர். இந்நிலையில் ரொனால்டோவின் சம்பளம் குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

    அவர் யுவான்டஸில் வாரத்திற்கு 5,10,483 பவுண்டு சம்பளமாக பெற இருக்கிறார். இது இந்திய பணமதிப்பில் 4 கோடியே 64 லட்சத்து 90 ஆயிரத்து முன்னூற்று பத்து ரூபாய் ஆகும்.
    ரொனால்டோ யுவான்டஸ் கால்பந்து கிளப்பில் இணைகிறார் என்ற செய்தியை உறுதிப்படுத்தியது ரியல் மாட்ரிட். #CR7 #Realmadrid #Juventus
    உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக கருதப்படுபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கலை சேர்ந்த 33 வயதாகும் இவர் கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து ஸ்பெயின் கிளப் அணியான ரியல் மாட்ரிட்டிற்காக விளையாடி வந்தார்.

    இந்த வருடம் யூரோப்பா சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்ற பின்னர் ரயில் மாட்ரிட் அணியில் இருந்து விலகுவதாக ஒரு செய்தி வந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் ரொனால்டோ இத்தாலி கிளப்பான யுவான்டஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் ரியல் மாட்ரிட் அணி இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது.



    ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் இருந்து விலகி யுவான்டஸ் அணியில் சேர இருப்பதாக தெரிவித்துள்ளது. 103 மில்லியன் யூரோ டிரான்ஸ்பர் தொகையாக கொடுக்க இத்தாலி கால்பந்து கிளப் அணியான யுவான்டஸ் விருப்பம் தெரிவித்ததாகவும், ரியல் மாட்ரிட் அதை ஏற்றுக்  கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காக 292 போட்டிகளில் விளையாடி 311 கோல்கள் அடித்துள்ளார்.
    ரொனால்டோவிற்கான யுவான்டஸின் 800 கோடி ரூபாய் விருப்பத்தை ஏற்க தயாராகி வருகிறது ரியல் மாட்ரிட். #RealMadrid #CR7
    கால்பந்து போட்டியில் சிறந்த வீரராக திகழ்ந்து வருபவர் போர்ச்சுக்கல் அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 2003 முதல் 2009 வரை மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடினார். அதன்பின் 2009-ல் இருந்து தற்போது வரை ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். இவரது சிறப்பான ஆட்டத்தால் ரியல் மாட்ரிட் தொடர்ந்து மூன்று முறை சாம்பியன்ஸ் லீக் தொடரை கைப்பற்றியது.

    ரியல் மாட்ரிட் அணிக்காக ரொனால்டோ இதுவரை 292 போட்டிகளில் விளையாடி 311 கோல்கள் அடித்துள்ளார். தற்போது அவருக்கு 33 வயதாகிறது. ரியல் மாட்ரிட் அணியுடனான ரொனால்டோவின் ஒப்பந்தம் 2021 வரை இருக்கிறது.

    இருந்தாலும் மெஸ்சியின் சம்பளத்தை விட தன்னுடைய சம்பளம் மிகவும் குறைவாக இருக்கிறது என்பதால் சம்பளத்தை அதிகப்படுத்தி தர வேண்டும் என்று ரியல் மாட்ரிட் அணியிடம் வலியுறுத்தி வந்தார். வருடத்திற்கு 65 மில்லியன் பவுண்டு சம்பளம் தரவேண்டும் என்று கேட்டார். ஆனால், ரியல் மாட்ரிட் 30 மில்லியன் பவுண்டு மட்டுமே வழங்க முடியும் என்று கூறியது. இதை ரொனால்டோ மறுத்துவிட்டார்.

    இதனால் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்குச் செல்லலாம் என்ற செய்தி வெளியாகிக் கொண்டு வருகிறது.



    இந்நிலையில் இத்தாலி கிளப்பான யுவான்டஸ் கிறிஸ்டியானோ ரொனால்டோவை வாங்க இருப்பதாகவும், ரொனால்டோவுடன் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே 100 மில்லியன் யூரோவிற்கு (சுமார் 800 கோடி ரூபாய்) யுவான்டஸ் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இந்த தொகைக்கு ரியல் மாட்ரிட் சம்மதம் தெரிவிக்க தயாராக இருப்பதாக கூறப்படுகுிறது. இதனால் ரொனால்டோ இந்த சீசனில் யுவான்டஸ் அணிக்காக விளையாட இருக்கிறது. 
    நெய்மரை 2480 கோடி ரூபாய் கொடுத்து வாங்க விருப்பம் தெரிவித்ததாக வந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை என ரியல் மாட்ரிட் தெரிவித்துள்ளது. #Neymar
    பிரேசில் கால்பந்து அணியின் முன்னணி வீரராக திகழ்ந்து வருபவர் நெய்மர். இவர் 2017 வரை பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்தார். அவர் ரியல் மாட்ரிட் அணிக்கு மாற விரும்பினார். இதற்கு பல பிரச்சினைகள் இருந்ததால் பிரான்ஸ் நாட்டின் முன்னணி அணியான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு கடந்த சீசன் போது மாறினார். இதற்காக பிஎஸ்ஜி அணி 222 மில்லியன் யூரோ டிரான்ஸ்பர் தொகையாக வழங்கியது. கால்பந்து வரலாற்றில் ஒரு வீரருக்கான அதிகப்படியான டிரான்ஸ்பர் தொகை இதுவாகும்.

    இந்நிலையில் ஓராண்டு முடிந்துள்ள நிலையில், ரியல் மாட்ரிட் அணி நெய்மரை வாங்க விருப்பம் தெரிவிப்பதாக தகவல் வெளியானது. ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரெனால்டோ, பென்சிமா போன்ற வீரர்கள் வெளியேற இருப்பதாக கூறப்பட்ட தகவலே காரணம்.



    நெய்மரை ரியல் மாட்ரிட் வாங்குவது எளிதான காரியம் அல்ல. அவருக்காக சுமார் 310 மில்லியன் யூரோ ரியல் மாட்ரிட் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியானது. நேற்று பிரேசில் அணி வெற்றி பெற்றதும் இந்த செய்தி தீயாக பரவியது. இந்த மதிப்பில் 2480 கோடி ரூபாயாகும். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே யூரோப்பா கால்பந்து அசோசியேசனும் பிஎஸ்ஜிக்கு நெருக்கடி கொடுத்தது.

    இந்நிலையில் நெய்மருக்கு நாங்கள் 2480 கோடி ரூபாய் கொடுக்க விருப்பம் தெரிவித்ததாக வந்த செய்தியில் துளியளவும் உண்மையில்லை என்று ரியல் மாட்ரிட் தெரிவித்துள்ளது.
    நெய்மர் ரியல் மாட்ரிட் அணிக்கு வந்தால் அவரை வரவேற்போம் என்று ஸ்பெயின் வீரர் டேனி கார்வாஜல் தெரிவித்துள்ளார். #RealMadrid #Neymar
    பிரேசில் அணியின் முன்னணி கால்பந்து வீரராக நெய்மர் திகழ்ந்து வருகிறார். இவர் பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்தது. 2017-18 சீசனில் பிரான்ஸின் முன்னணி கிளப்பான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு கால்பந்து வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு சுமார் 200 மில்லியன் பவுண்டிற்கு மாறினார்.

    தற்போது அவர் ரியல் மாட்ரிட் அணிக்கு மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது ஒரு கிசுகிசுவாகத்தான் இருக்கிறது. இந்த கிசுகிசு உண்மையான இருந்தால், நெய்மரை நாங்கள் வரவேற்போம் என்று ரியல் மாட்ரிட் அணியின் டேனி கார்வாஜல் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து கார்வாஜல் கூறுகையில் ‘‘நெய்மர் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடத்தான் நெய்மர் பிறந்தாரா? என்பது எனக்குத் தெரியாது. ரியல் மாட்ரிட் அணி எப்போதுமே உலகின் சிறந்த வீரரைத்தான் விரும்பும். ரியல் மாட்ரிட் அணி தலைவர் அவரை ஒப்பந்தம் செய்ய தீர்மானித்தால், நாங்கள் அவருக்காக லாக்கரை பாதுகாப்போம்’’ என்றார்.
    கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்காக டோட்டன்ஹாம், செல்சி உள்பட ஐந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #Ronaldo #RealMadrid #PSG
    போர்ச்சுக்கல் கால்பந்து அணி கேப்டனான கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகின் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். 33 வயதாகும் இவர் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறது. ரியல் மாட்ரிட் அணி கடந்த மூன்று வருடமாக சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்ல இவர்தான் முக்கிய காரணம்.

    கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்சி ஆகியோருக்கு இடையே விளையாட்டில் அதிக அளவில் போட்டி நிலவி வருகிறது. இந்த சம்பளத்திலும் நீடிக்கிறது. தற்போது ரொனால்டோவை விட மெஸ்சி அதிக சம்பளம் வாங்குகிறார். அவரை விட கூடுதல் சம்பளம் வாங்க ரொனால்டோ விரும்புகிறார். ஆனால் 33 வயதாகிவிட்டால் ரியல் மாட்ரிட் அவருடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க யோசிக்கிறது.



    இந்நிலையில் அவர் தனது பழைய கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு செல்லலாம் என்ற கிசுகிசு வந்து கொண்டே இருக்கிறது. இதற்கிடையே டோட்டன்ஹாம், செல்சி அணிகளும் அவரை இழுக்க முயற்சி செய்கிறது. இதற்கிடையே பணக்கார கிளப்பான பிஎஸ்ஜி மற்றும் பேயர்ன் முனிச் அணிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    ஆனால், ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு மட்டுமே செல்ல விரும்புவதாக கூறப்படுகிறது. தற்போது ரொனால்டோவின் வாரச் சம்பளம் 3 லட்சத்து 65 ஆயிரம் பவுண்டு எனக்கூறப்படுகிறது. ஆனால் மெஸ்சியின் சம்பளம் 5 லட்சம் பவுண்டு எனக்கூறப்படுகிறது.
    போர்ப்ஸ் பத்திரிகையின் ஆய்வின்படி 4.12 பில்லியன் டாலருடன் மான்செஸ்டர் யுனைடெட் முதல் இடம் பிடித்துள்ளது. #MUFC #RealMadrid
    கால்பந்து கிளப் அணிகளில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட், மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அதேபோல் யுவான்டஸ், பேயர்ன் முனிச் அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

    போர்ப் பத்திரிகை கால்பந்து கிளப் அணிகளில் எது மதிப்புமிக்க அணி என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மான்செஸ்டர் யுனைடெட் 4.12 பில்லியன் கோடியுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்திய பணமதிப்பில் சுமார் 2 லட்சத்து 78 ஆயிரம் கோடி ரூபாயாகும். கடந்த 2016-17 சீசனை விட 12 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ரியல் மாட்ரிட் 4.08 பில்லியன் டாலருடன் 2-வது இடத்திலும், பார்சிலோனா 4.06 பில்லியன் டாலருடன் 3-வது இடத்திலும் உள்ளது.



    முதல் 10 இடங்களை பிடித்துள்ள அணிகள் விவரம்:-

    1. மான்செஸ்டர் யுனைடெட் (4.12 பில்லியன் டாலர்)
    2. ரியல் மாட்ரிட் (4.08 பில்லியன் டாலர்)
    3. பார்சிலோனா (4.06 பில்லியன் டாலர்)
    4. பேயர்ன் முனிச் (3.06 பில்லியன் டாலர்)
    5. மான்செஸ்டர் சிட்டி (2.47 பில்லியன் டாலர்)
    6. அர்செனல் (2.23 பில்லியன் டாலர்)
    7. செல்சியா (2.06 பில்லியன் டாலர்)
    8. லிவர்பூல் (1.94 பில்லியன் டாலர்)
    9. யுவான்டஸ் (1.47 பில்லியன் டாலர்)
    10. டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் (1.23 பில்லியன் டாலர்)
    சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் முகமது சாலா காயத்திற்கு காரணமான செர்ஜியோ ரமோஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என 3 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
    யூரோப்பா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி கடந்த சனிக்கிழமை நள்ளிரவு உக்ரைனில் நடைபெற்றது. இதில் ரியல் மாட்ரிட் - லிவர்பூல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. காரேத் பேலே இரண்டு கோலும், பென்சிமா ஒரு கோலும் அடித்தனர். லிவர்பூல் ஒரு கோல் அடிக்க ரியல் மாட்ரிட் 3-1 என வெற்றி பெற்று தொடர்ச்சியாக 3-வது முறை கோப்பையை கைப்பற்றியது.

    போட்டியின் முதல் பாதி நேரத்தில் லிவர்பூல் அணியின் முன்னணி வீரரான முகமது சாலா பந்தை கோல் நோக்கி கடத்திச் சென்றார். அப்போது ரியல் மாட்ரிட் கேப்டனும், பின்கள வீரரும் ஆன செர்ஜியோ ரமோஸ் சாலாவின் கோல் முயற்சியை தடுக்க அவருடன் மோதிக்கொண்டே பந்தை தடுக்கச் சென்றார்.



    அப்போது ரமோஸ் கைக்குள் சாலா கை மாட்டியது. அப்போது சாலாவை ரமோஸ் தள்ளியதால் சாலா கீழே விழுந்தார். இதில் சாலாவின் வலது கை தோள்பட்டை பலமாக தரையில் சென்று தாக்கியது. இதனால் சாலா வலியால் துடித்தார். பின்னர் சிறிது நேரம் விளையாடிய பின்னர் வலி தாங்க முடியாமல் வெளியேறினார். ஆனால் ரமோஸிற்கு நடுவர் எந்த தண்டனையும் வழங்கவில்லை.

    இதனால் லிவர்பூல் ரசிகர்கள் கடும் கோபம் அடைந்தனர். அத்துடன் அமெரிக்காவில் பாதிப்படைந்த மக்களுக்காக உதவும் சேஞ்ச்.ஓர்ஜி (Change.org) என்ற இணைய தளத்தில் பிபா மற்றும் யூஈஎஃப்ஏ செர்ஜியோ ரமோஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 3 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
    போர்சுக்கல் கால்பந்து அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனைப் படைத்துள்ளார். #CR7
    யூரோப்பா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி நேற்றி நள்ளிரவு உக்ரைன் கீவ் நகரில் நடைபெற்றது. இதில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிளப் அணியான ரியல் மாட்ரிட் - இங்கிலீஷ் பிரீமியர் லீக்கின் முன்னணி கிளப் அணியான லிவர்பூல் பலப்பரீட்சை நடத்தின.

    இதில் 3-1 ரியல்மாட்ரிட் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. 2015-16 சீசன் முதல் தற்போது 2017-18 சீசன் வரை தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றி பெற்று ரியல் மாட்ரிட் ஹாட்ரிக் சாதனைப் படைத்துள்ளது. அத்துடன் 2013-14 சீசனிலும் கோப்பையை கைப்பற்றியது.



    ரியல் மாட்ரிட் அணிக்காக போர்சுக்கல் கால்பந்து அணி கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோடி விளையாடி வருகிறார். 2013-ல் இருந்து ரியல் மாடரிட் கைப்பற்றிய நான்கு முறையும் அந்த அணியில் ரொனால்டோ இடம்பிடித்திருந்தார்.

    ரியல் மாட்ரிட் அணிக்கு முன்பு மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடினார். அப்போது 2007-08 சீசனில் மான்செஸ்டர் யுனைடெட் யூரோப்பா சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது.

    இதன்மூலம் ஐந்து முறை யூரோப்பா சாம்பியன் லீக் கோப்பையை ரொனால்டோ ருசித்துள்ளார்.
    ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட் அணி லிவர்பூல் அணியை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. #2018UEFAChampionsLeague
    ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டம் கீவ் நகரில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்) அணியும், லிவர்பூல் (இங்கிலாந்து) அணியும் மோதின.

    போட்டியின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் அபாரமாக ஆடின. இதனால் போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.



    இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் கரிம் பென்சிமா முதல் கோல் அடித்தார். இதற்கு  பதிலடி கொடுக்கும் வகையில் லிவர்பூல் அணியின் சாடியோ மேன் 54-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்தன.

    தொடர்ந்து ரியல் மாட்ரிட் அணி சிறப்பாக ஆடியது. அந்த அணியின் கரேத் பாலே 63 மற்றும் 82 வது நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்தார். இதனால் ரியல் மாட்ரிட் அணி 3-1 என்ற கணக்கில் லிவர்பூல் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக கைப்பற்றி அசத்தியது. #2018UEFAChampionsLeague
    ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரியல்மாட்ரிட் - லிவர்பூல் அணிகள் இன்று இரவு கீவ் நகரில் மோதுகின்றன. #2018UEFAChampionsLeague
    இந்த சீசனுக்கான ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரியல்மாட்ரிட் (ஸ்பெயின்)- லிவர்பூல் (இங்கிலாந்து) அணிகள் இன்று இரவு கீவ் நகரில் மோதுகின்றன. ரியல்மாட்ரிட் அணியில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஆட்டம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. உலக கோப்பைக்கு முன்பாக நடக்கும் மிகப்பெரிய போட்டி இதுவாகும். இந்திய நேரப்படி நள்ளிரவு 12.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை டென்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. #2018UEFAChampionsLeague
    லா லிகா சீசனின் கடைசி ஆட்டத்தில் வில்லாரியலுக்கு எதிராக டிரா செய்து 3-வது இடத்தை பிடித்தது ரியல் மாட்ரிட். #laliga #Realmadrid
    ஸ்பெயின் நாட்டின் முதன்மையான கால்பந்து லீக் தொடரான லி லிகா இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. ரியல் மாட்ரிட் தனது கடைசி லீக் ஆட்டத்தில் வில்லாரியலை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய 11-வது நிமிடத்தில் காரேத் பேலே முதல் கோலை பதிவு செய்தார். வில்லாரியலின் ஐந்து வீரர்களை ஏமாற்றி அற்புதமாக கோல் அடித்தார்.

    ஆட்டத்தின் 32-வது நிமிடத்தில் மார்சிலோ கொடுத்த பந்தை கிறிஸ்டியானோ ரொனால்டோ தலையால் முட்டி கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் ரியல் மாட்ரிட் 2-0 என முன்னிலைப் பெற்றது.



    2-வது பாதி நேரத்தில் வில்லாரியல் அணி வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடினார்கள். 61-வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளியேறினார். அவருக்குப் பதிலாக பென்சிமா களம் இறங்கினார். 70-வது நிமிடத்தில் வில்லாரியல் அணியின் ரோஜர் மார்டினெஸ், 85-வது நிமிடத்தில் சாமு கேஸ்டிலியேஜோ ஒரு கோலும் அடிக்க போட்டி 2-2 என டிராவில் முடிந்தது.

    இந்த டிரா மூலம் ரியல் மாட்ரிட் 38 போட்டிகளில் 22 வெற்றி, 10 டிரா, 6 தோல்விகளுடன் 76 புள்ளிகள் பெற்று 3-வது இடதில் உள்ளது. பார்சிலோனா 37 போட்டிகள் முடிவில் 27 வெற்றி, 9 டிரா, ஒரு தோல்வியுடன் 90 புள்ளிகள் பெற்று முதல் இடம் வகிக்கிறது.
    ×