search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Real Madrid"

    லா லிகாவில் பென்சிமா, காரேத் பேலே ஆட்டத்தால் ரியல் மாட்ரிட் 4-1 என சிடி லெகன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. #LaLiga #Benzema
    லா லிகா கால்பந்து தொடரில் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு நடைபெற்ற ஆட்டத்தில் முன்னணி கிளப் அணியான ரியல் மாட்ரிட். சிடி லெகன்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் 4-1 என ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்றது.

    ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் காரேத் பேலே முதல் கோலை பதிவு செய்தார். 24-வது நிமிடத்தில் லெகன்ஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதைப் பயன்படுத்தி லெகன்ஸ் அணியின் கர்லில்லோ கோல் அடித்தார். அதன்பின் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.



    2-வது பாதி நேரத்தில் ரியல் மாட்ரிட் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பென்சிமா 48 மற்றும் 61-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார். 66-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி செர்ஜியோ ரமோஸ் கோல் அடித்தார். அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இதனால் ரியல் மாட்ரிட் 4-1 என வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியுடன் ரியல் மாட்ரிட் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. மூன்று போட்டிகளிலும் 10 கோல்கள் அடித்துள்ளது.
    லா லிகா கால்பந்து தொடரில் முன்னணி கிளப்புகளான பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் தங்களது 2-வது ஆட்டத்தில் வெற்றி பெற்றது. #Laliga #Barcelona
    லா லிகா கால்பந்து தொடரின் 2-வது வார ஆட்டம் கடந்த வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற்றன. ஒரு ஆட்டத்தில் பார்சிலோனா - ஆர். வல்லாடோலிட் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டெம்பேல் 57-வது நிமிடத்தில் கோல் அடிக்க பார்சிலோனா 1-0 என வெற்றி பெற்றது.



    நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் கிரோனா எப்.சி-யை எதிர்கொண்டது. இதில் ரியல் மாட்ரிட் 4-1 என வெற்றி பெற்றது. 16-வது நிமிடத்தில் கிரோனா எப்சி அணியின் போர்ஜா முதல் கோலை அடித்தார்.



    39-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி செர்ஜியோ ரமோஸ் கோல் அடித்தார். அதன்பின் 52-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி பென்சிமா கோல் அடித்தார். காரத் பேலே 59-வது நிமிடத்திலும், 80-வது நிமிடத்தில் பென்சிமாவும் கோல் அடித்தனர்.
    சூப்பர் கோப்பை கால்பந்தில் ரியல் மாட்ரிட்டை 4-2 என வீழ்த்தி அட்லெடிகோ மாட்ரிட் சாம்பியன் பட்டம் வென்றது. #RealMadrid #AtleticoMadrid
    சூப்பர் கோப்பை கால்பந்து சாம்பியனுக்கான ஆட்டம் எஸ்டோனியாவில் நேற்று நடைபெற்றது. இதில் ஐரோப்பிய சாம்பியன் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ரியல் மாட்ரிட் அணியும், ஐரோப்பா லீக்கில் சாம்பியன் பட்டம் வென்ற அட்லெடிகோ மாட்ரிட் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

    ரியல் மாட்ரிட் கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளியேறியதற்குப் பிறகு முதன்முறையாக மிகப்பெரிய தொடரை சந்தித்து. ஆட்டத்தின் முதல் நிமிடத்தில் அட்டிலெடிகோ மாட்ரிட் அணியின் டியேகோ கோஸ்டா முதல் கோலை பதிவு செய்தது. 27-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் கரிம் பென்சிமா பதில் கோல் அடித்தார்.



    இதனால் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் 1-1  என சமநிலைப் பெற்றது. 2-வது பாதி நேர ஆட்டம் தொடங்கியதும், ஆட்டத்தின் 63-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி செர்ஜியோ ரமோஸ் கோல் அடித்தார். 79-வது நிமிடத்தில் டியேகோ கோஸ்டா கோல் அடித்தார். இதனால் 2-2 என ஸ்கோர் சமநிலைப் பெற்றது. கடைசி 11 நிமிடத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

    இதனால் கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது. இதில் 98-வது நிமிடத்தில் அட்லெடிகோ மாட்ரிட்டின் நிகுயெஸ், 104-வது நிமிடத்தில் கோக் ஆகியோர் கோல் அடித்ததால் அட்டிலெடிகோ மாட்ரிட் 4-2 என ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
    பார்சிலோனா மெஸ்சி அறிமுகம் ஆன பிறகு ரியல் மாட்ரிட் அணியை விட அதிக கோப்பைகளை வென்று சாதனைப் படைத்துள்ளது. #Messi
    அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் மெஸ்சி. 31 வயதாகும் இவர் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிளப் அணிகளில் ஒன்றான பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். சிறுவயதில் இருந்தே பார்சிலோனா கிளப்பில் வளர்ந்த மெஸ்சி 2003 முதல் 2004 வரை சி அணிக்காகவும், 2004 முதல் 2005 வரை பார்சிலோனா பி அணிக்காகவும் விளையாடினார்.

    2004-ல் இருந்து பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 418 போட்டிகளில் விளையாடி 383 கோல்கள் அடித்துள்ளார். பார்சிலோனா அணிக்கு பரம எதிரி ரியல் மாட்ரிட் கிளப்பாகும். யார் அதிக கோப்பைகள் வெல்வது என்பதில் இரு அணிகளுக்கும் பனிப்போர் நடக்கும்.



    மெஸ்சி பார்சிலோனா அணிக்கு விளையாட வருவதற்கு முன்பு ரியல் மாட்ரிட் 72 பதக்கங்களை வென்றிருந்தது. பார்சிலோனா 62 பதக்கங்களுடன் பின்தங்கியிருந்தது.

    மெஸ்சி பார்சிலோனா அணிக்கு வந்த பிறகு பல கோப்பைகளை வாங்கிக் கொடுத்தது. இதன்காரணமாக தற்போது பார்சிலோனா 95 சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ரியல் மாட்ரிட் 92 பதக்கத்துடன் பின்தங்கியுள்ளது.
    ரொனால்டோ வெற்றிடத்தை காரேத் பேலேவால் நிரப்ப முடியும் என ரியல் மாட்ரிட் அணியின் புதிய பயிற்சியாளர் ஜூலென் லோப்டெகுய் தெரிவித்துள்ளார். #Ronaldo
    போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டனான கிறிஸ்டியானோ ரொனால்டா, கிளப் அளவிலான போட்டியில் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து 2018 சீசன் வரை ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடினார். இந்தக் காலக்கட்டத்தில் கால்பந்து விளையாட்டின் உச்சாணிக்கே சென்றார். ரியல் மாட்ரிட் அணிக்காக அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    ரொனால்டோ அணியில் இருந்து சென்றதும், அவர் இடம் வெற்றிடமாகவே உள்ளது. அவருக்கு இணையான எந்த வீரரையும் ரியல் மாட்ரிட் இதுவரை ஒப்பந்தம் செய்யவில்லை. இந்நிலையில் அந்த அணியில் உள்ள காரேத் பேலே ரொனால்டோ இடத்தை நிரப்புவார் என்று பயிற்சியாளர் ஜூலென் லோப்டெகுய் தெரிவித்துள்ளார்.



    ஷினேடின் ஷிடேன் பயிற்சியாளராக இருக்கும்போது பேலேவிற்கு ஆடும் லெவனில் தொடர்ச்சியாக இடம் கிடைக்காமல் இருந்தது. லிவர்பூல் அணிக்கெதிரான சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தற்போது ரொனால்டோ இல்லாததால் இவருக்கு தொடர்ந்து இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.

    ரியல் மாட்ரிட் அணிக்காக 126 போட்டிகளில் விளையாடி 70 கோல்கள் அடித்துள்ளார்.
    ரியல் மாட்ரிட் அணிக்காக அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள ரொனால்டொ, அந்த அணியின் தலைசிறந்த வீரர் இல்லையாம். #CR7
    கால்பந்து போட்டியில் போர்ச்சுக்கல் அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைசிறந்த வீரராக திகழ்கிறார். 33 வயதாகும் இவர் கடந்த 2009-ம் ஆண்டும் முதல் இந்த ஆண்டு வரை 9 ஆண்டுகளாக ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடினார். அப்போது 292 போட்டிகளில் விளையாடி 311 கோல்கள் அடித்துள்ளார்.

    ரியல் மாட்ரிட் அணிக்காக அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அத்துடன் ரியல் மாட்ரிட் அணிக்காக ஏராளமான வெற்றிகளை தேடிக்கொடுத்துள்ளார். இதனால் ரியல் மாட்ரிட் அணியின் தலைசிறந்த வீரராக ரெனால்டோ திகழ்ந்தார். பெரும்பாலானோர் அவரை தலைசிறந்த வீரராக கருதுகிறார்கள்.



    ஆனால், ரியல் மாட்ரிட் அணியின் டிபென்டர் டேனி கார்வாஜல் ரொனால்டோ தலைசிறந்த வீரர் இல்லை. ரால் கோன்சாலெஸ் பிளான்கோதான் தலைசிறந்த வீரர் என்று குறிப்பிட்டுள்ளார். ரால் ரியல் மாட்ரிட் அணிக்காக 1994 முதல் 2010 வரை சுமார்  16 ஆண்டுகளாக 550 போட்டிகளில் விளையாடி 228 கோல் அடித்துள்ளார்.
    நான் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியில்தான் இருக்கிறேன் என்று பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் உறுதிபட தெரிவித்துள்ளார். #PSG #Neymar
    பிரேசில் கால்பந்து அணியின் முன்னணி வீரர் நெய்மர். பார்சிலோனாவிற்காக விளையாடி வந்த இவர், கடந்த சீசனில் பிரான்ஸில் உள்ள பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு டிரான்ஸ்பர் ஆனார். இதற்காக பிஎஸ்ஜி அணி 222 மில்லியன் யூரோ பார்சிலோனாவிற்கு கொடுத்தது. இதுதான் கால்பந்து வரலாற்றிலேயே அதிகமான டிரான்ஸ்பர் பீஸ் ஆகும்.

    பிஎஸ்ஜி-க்கு சென்ற நெய்மர் இந்த சீசனில் ரியல் மாட்ரிட் அணிக்கு மாறலாம் என்ற செய்திகள் வந்த வண்ணமே இருக்கிறது. இதற்கு ஏற்றாற்போல் தற்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் இருந்து வெளியேறியுள்ளார்.



    இதனால் நெய்மர் டிரான்ஸ்பர் செய்தி உண்மையாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ‘‘எனக்கு பிஎஸ்ஜி அணியுடன் ஒப்பந்தம் இருக்கிறது. நான் இங்குதான் தங்கியிருக்கிறேன்’’ என்று நெய்மர் கூறியுள்ளார்.

    இதனால் நெய்மர் இந்த சீசனிலும் பிஎஸ்ஜி அணிக்காகத்தான் விளையாட இருக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.
    பெல்ஜியம் கேப்டனும், செல்சி வீரரும் ஆன ஈடன் ஹசார்டை 1527 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்ய இறுதி கட்ட முயற்சியில் இறங்கியுள்ளது ரியல் மாட்ரிட். #RealMadrid #RMFC
    பெல்ஜியம் கால்பந்து அணி கேப்டன் ஈடன் ஹசார்டு. அட்டக்கிங் மிட்பீல்டரான இவர் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து செல்சி அணிக்காக விளையாடி வருகிறார். 208 போட்டிகளில் விளையாடி 69 கோல் அடித்துள்ளார். 27 வயதாகும் ஹசார்டு பெல்ஜியம் அணிக்காக 2008-ல் இருந்து விளையாடி வருகிறது. 92 ஆட்டங்களில் 25 கோல் அடித்துள்ளார்.

    ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது யுவுான்டஸ் அணிக்கு டிரான்ஸ்பர் ஆகியுள்ளார். மேலும் சில வீரர்களை வெளியேற்ற ரியல் மாட்ரிட் முடிவு செய்துள்ளது.



    இதனால் ஈடன் ஹசார்டை வாங்க ரியல் மாட்ரிட் விருப்பம் தெரிவித்தது. இதுகுறித்து செல்சியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது 170 மில்லியன் பவுண்டுக்கு (1527 கோடி ரூபாய்) வாங்க ரியல் மாட்ரிட் தயாராக இருப்பதாக தெரிவித்தது.

    மேலும் வருடத்திற்கு 13 மில்லியன் பவுண்டு (117 கோடி ரூபாய்) சம்பளம் கொடுக்கவும் தயார் என்று கூறியது. இதனால் ஈடன் ஹசார்டு ரியல் மாட்ரிட் அணிக்கு மாறுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது. #RealMadrid #chelsea #EdenHazard #ரியல்மாட்ரிட் #செல்சி #ஈடன்ஹசார்டு
    ரியல் மாட்ரிட் கிறிஸ்டியானோ ரொனால்டோவை யுவான்டஸ் அணிக்கு விற்றது வரலாற்றுப் பிழை என்று முன்னாள் தலைவர் கவலை தெரிவித்துள்ளார். #CR7 #RealMadrid
    போர்ச்சுக்கல் கால்பந்து அணி கேப்டனான கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகின் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். இவர் ரியல் மாட்ரிட் அணிக்காக கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து 2018 வரை விளையாடினார். தற்போது யுவான்டஸ் அணிக்கு சென்றுள்ளார். 100 மில்லியன் பவுண்டுக்கு டிரான்ஸ்பர் ஆகியுள்ளார்.



    யுவான்டஸ் அணி மிகவும் மகிழ்ச்சியாக வரவேற்றுள்ளது. ஆனால், ரியல் மாட்ரிட் அணி ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில் முன்னாள் ரியல் மாட்ரிட் அணியின் தலைவரான ரமோன் கால்டெரோன், ரியல் மாட்ரிட் அணி மிகப்பெரிய தவறு செய்துள்ளது. அத்துடன் வரலாற்றுப் பிழை செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
    ரொனால்டோ வெளியேறியதால் ஈடன் ஹசார்டை 150 மில்லியன் பவுண்டு கொடுத்து வாங்க ரியல் மாட்ரிட் தயாராகி வருகிறது. #Realmadrid #Hazard
    போர்ச்சுக்கல் கால்பந்து அணி கேப்டனான கிறிஸ்டியானோ ரொனால்டோ (வயது 33) உலகின் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். இவர் கடந்த 9 ஆண்டுகளாக லா லிகா ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வந்தார். தற்போது சம்பள பிரச்சனை காரணமாக ரியல் மாட்ரிட் அணியில் இருந்து விலகி, இத்தாலியின் யுவான்டஸ் அணியில் இணைந்துள்ளார். ரியல் மாட்ரிட் அணியின் நம்பிக்கை தூணாக இருந்த ரொனால்டோ வெளியேறியதால், அதற்குப் பதிலாக மாற்று வீரரை ரியல் மாட்ரிட் தேடிவருகிறது.

    இந்நிலையில் பெல்ஜியம் அணி கேப்டனான ஈடன் ஹசார்டை 150 மில்லியன் பவுண்டு (1353 கோடி ரூபாய்) கொடுத்து வாங்க இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.



    27 வயதாகும் ஈடன் ஹசார்டு தலைசிறந்த அட்டக்கிங் மிட்பீல்டர் ஆவார். மேலும் வேகமாக ஓடுவதில் வல்லவர். அத்துடன் பந்தை பாஸ் செய்வதில் வல்லவர். இவரை சூப்பர் பாஸ்ஸர் (Super Passer)  என்றும் அழைப்பதுண்டு.

    கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து செல்சி அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணிக்காக 208 போட்டிகளில் விளையாடி 69 கோல் அடித்துள்ளார். பெல்ஜியம் அணிக்காக 91 போட்டிகளில் விளையாடி 24 கோல்கள் அடித்துள்ளார்.
    இத்தாலி கால்பந்து கிளப்பான யுவான்டஸில் கிறிஸ்டியானோ ரொனால்டோ வாரத்திற்கு 4.65 கோடி ரூபாய் சம்பளமாக வாங்க இருக்கிறார். #CR7 #Ronaldo
    உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக கருதப்படுபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கலை சேர்ந்த 33 வயதாகும் இவர் கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து ஸ்பெயின் கிளப் அணியான ரியல் மாட்ரிட்டிற்காக விளையாடி வந்தார்.

    இந்த வருடம் யூரோப்பா சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்ற பின்னர் ரயில் மாட்ரிட் அணியில் இருந்து விலகுவதாக ஒரு செய்தி வந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் ரொனால்டோ இத்தாலி கிளப்பான யுவான்டஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் ரியல் மாட்ரிட் அணி இந்த செய்தியை நேற்று உறுதிப்படுத்தியது.

    ரியல் மாட்ரிட் அணியுடன் 2021 வரை ஒப்பந்தம் இருந்த போதிலும் சம்பள பிரச்சனையால்தான் ரொனால்டா வெளியேறினார். ரொனால்டோவிற்காக ரியல் மாட்ரிட் அணிக்கு யவான்டஸ் டிரான்ஸ்பர் தொகையாக 100 மில்லியன் பவுண்டு கொடுக்கிறது.



    ஆனால், கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் ரசிகர்கள் இருந்தனர். இந்நிலையில் ரொனால்டோவின் சம்பளம் குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

    அவர் யுவான்டஸில் வாரத்திற்கு 5,10,483 பவுண்டு சம்பளமாக பெற இருக்கிறார். இது இந்திய பணமதிப்பில் 4 கோடியே 64 லட்சத்து 90 ஆயிரத்து முன்னூற்று பத்து ரூபாய் ஆகும்.
    ரொனால்டோ யுவான்டஸ் கால்பந்து கிளப்பில் இணைகிறார் என்ற செய்தியை உறுதிப்படுத்தியது ரியல் மாட்ரிட். #CR7 #Realmadrid #Juventus
    உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக கருதப்படுபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கலை சேர்ந்த 33 வயதாகும் இவர் கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து ஸ்பெயின் கிளப் அணியான ரியல் மாட்ரிட்டிற்காக விளையாடி வந்தார்.

    இந்த வருடம் யூரோப்பா சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்ற பின்னர் ரயில் மாட்ரிட் அணியில் இருந்து விலகுவதாக ஒரு செய்தி வந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் ரொனால்டோ இத்தாலி கிளப்பான யுவான்டஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் ரியல் மாட்ரிட் அணி இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது.



    ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் இருந்து விலகி யுவான்டஸ் அணியில் சேர இருப்பதாக தெரிவித்துள்ளது. 103 மில்லியன் யூரோ டிரான்ஸ்பர் தொகையாக கொடுக்க இத்தாலி கால்பந்து கிளப் அணியான யுவான்டஸ் விருப்பம் தெரிவித்ததாகவும், ரியல் மாட்ரிட் அதை ஏற்றுக்  கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காக 292 போட்டிகளில் விளையாடி 311 கோல்கள் அடித்துள்ளார்.
    ×