search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gareth Bale"

    லா லிகாவில் பென்சிமா, காரேத் பேலே ஆட்டத்தால் ரியல் மாட்ரிட் 4-1 என சிடி லெகன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. #LaLiga #Benzema
    லா லிகா கால்பந்து தொடரில் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு நடைபெற்ற ஆட்டத்தில் முன்னணி கிளப் அணியான ரியல் மாட்ரிட். சிடி லெகன்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் 4-1 என ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்றது.

    ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் காரேத் பேலே முதல் கோலை பதிவு செய்தார். 24-வது நிமிடத்தில் லெகன்ஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதைப் பயன்படுத்தி லெகன்ஸ் அணியின் கர்லில்லோ கோல் அடித்தார். அதன்பின் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.



    2-வது பாதி நேரத்தில் ரியல் மாட்ரிட் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பென்சிமா 48 மற்றும் 61-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார். 66-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி செர்ஜியோ ரமோஸ் கோல் அடித்தார். அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இதனால் ரியல் மாட்ரிட் 4-1 என வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியுடன் ரியல் மாட்ரிட் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. மூன்று போட்டிகளிலும் 10 கோல்கள் அடித்துள்ளது.
    ரொனால்டோ வெற்றிடத்தை காரேத் பேலேவால் நிரப்ப முடியும் என ரியல் மாட்ரிட் அணியின் புதிய பயிற்சியாளர் ஜூலென் லோப்டெகுய் தெரிவித்துள்ளார். #Ronaldo
    போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டனான கிறிஸ்டியானோ ரொனால்டா, கிளப் அளவிலான போட்டியில் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து 2018 சீசன் வரை ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடினார். இந்தக் காலக்கட்டத்தில் கால்பந்து விளையாட்டின் உச்சாணிக்கே சென்றார். ரியல் மாட்ரிட் அணிக்காக அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    ரொனால்டோ அணியில் இருந்து சென்றதும், அவர் இடம் வெற்றிடமாகவே உள்ளது. அவருக்கு இணையான எந்த வீரரையும் ரியல் மாட்ரிட் இதுவரை ஒப்பந்தம் செய்யவில்லை. இந்நிலையில் அந்த அணியில் உள்ள காரேத் பேலே ரொனால்டோ இடத்தை நிரப்புவார் என்று பயிற்சியாளர் ஜூலென் லோப்டெகுய் தெரிவித்துள்ளார்.



    ஷினேடின் ஷிடேன் பயிற்சியாளராக இருக்கும்போது பேலேவிற்கு ஆடும் லெவனில் தொடர்ச்சியாக இடம் கிடைக்காமல் இருந்தது. லிவர்பூல் அணிக்கெதிரான சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தற்போது ரொனால்டோ இல்லாததால் இவருக்கு தொடர்ந்து இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.

    ரியல் மாட்ரிட் அணிக்காக 126 போட்டிகளில் விளையாடி 70 கோல்கள் அடித்துள்ளார்.
    நெய்மருக்காக நான்கு முன்னணி வீரர்களை வெளியேற்ற ரியல் மாட்ரிட் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #Neymar #RealMadrid
    ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் லா லிகா கால்பந்து லீக்கில் விளையாடும் முன்னணி அணி ரியல் மாட்ரிட். அதேபோல் பார்சிலோனா அணியும் முக்கியத்துவம் வாய்ந்த அணி. ரியல் மாட்ரிட்டிற்கு முக்கிய எதிரி பார்சிலோனாதான்.



    பார்சிலோனா அணியில் பிரேசில் நாட்டின் தலைசிறந்த வீரரான நெய்மர் விளையாடி கொண்டிருந்தார். அவரை வாங்குவதற்கு ரியல் மாட்ரிட் விரும்பியது. ஆனால், அதில் பல சிக்கல்கள் இருந்ததால் நெய்மர் பிஎஸ்ஜி-க்கு சென்றார். கால்பந்து கிளப் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு 200 மில்லியன் பவுண்டுக்கு டிரான்ஸ்பர் ஆனார்.



    பிஎஸ்ஜி-க்கு சென்ற நெய்மர் 30 போட்டியில் 20 கோல்கள் அடித்தார். தற்போது நெய்மர் ரியல் மாட்ரிட் அணிக்கு செல்ல விரும்புகிறார். ரியல் மாட்ரிட் அணியும் அவரை வாங்க விரும்புகிறது. நெய்மர் வேண்டுமென்றால் ரியல் மாட்ரிட் ஏராளமான பணத்தை இழக்க வேண்டியிருக்கும்.



    இதை சரிகட்டும் வகையில் காரேத் பெலே, கரின் பென்சிமா, ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ், இஸ்கோ ஆகியோரை 1745 மில்லியன் பவுண்டு அளவிற்கு விற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நெய்மர் ரியல் மாட்ரிட் அணிக்கு வந்தால் நீண்ட காலமாக அந்த அணிக்காக விளையாடுவார்.
    ×