search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெய்மர்"

    • அவரது காயம் பெரிய அளவில் இருக்காது என அணியின் கேப்டன் கேகேமிரோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    • அவர் எங்களுக்கு முக்கியமான வீரர், அவர் தொடர்ந்து ஆடவேண்டும் என மிகவும் விரும்புகிறோம்.

    உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் பிரேசில் அணி உருகுவே அணியை எதிர்கொண்டது. முதல் பாதி ஆட்டத்தின்போது பிரேசில் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான நெய்மர் (வயது 31) பலத்த காயமடைந்து துரதிர்ஷ்டவசமாக வெளியேறினார்.

    காலில் அடிபட்டு நடக்க முடியாத நிலை ஏற்பட்டதால் அவரை ஸ்டிரெச்சரில் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் இல்லாத நிலையில் பிரேசில் அணி 2-0 என தோல்வியடைந்தது. நெய்மர் காயமடைந்தது பிரேசில் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    அவரது காயம் பெரிய அளவில் இருக்காது என அணியின் கேப்டன் கேகேமிரோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    "அவர் எங்களுக்கு முக்கியமான வீரர், அவர் தொடர்ந்து ஆடவேண்டும் என மிகவும் விரும்புகிறோம். ஆனால் அவர் காயங்களால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார். காயத்தில் இருந்து குணமடைந்து பார்முக்கு திரும்பும்போது மீண்டும் காயமடைகிறார்" என்றும் கேப்டன் கேசேமிரோ கூறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல்கணக்கில் பெரு அணியை வீழ்த்தியது. அர்ஜென்டினா அணியின் இரண்டு கோல்களையும் மெஸ்சி அடித்தார். வெனிசுலா அணி சிலி அணியை 3-0 என்ற கோல்கணக்கிலும், பராகுவே அணி பொலிவியா அணியை 1-0 என்ற கோல்கணக்கிலும் வென்றன. ஈக்வடார்- கொலம்பியா அணிகள் மோதிய ஆட்டம் கோல்கள் இன்றி டிரா ஆனது.

    இதற்கிடையே ஆசிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் குரூப் சுற்று ஆட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதில், சவுதி அரேபிய கிளப் அணியான அல் ஹிலால் அணிக்காக விளையாடி வரும் நெய்மர், அடுத்து நவம்பர் 6-ம் தேதி மும்பை சிட்டி எப்.சி. அணிக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்பது சந்தேகம்தான். இப்போட்டி நவி மும்பையில் நடைபெற உள்ளது. நெய்மர் காயமடைந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

    • நெய்மர் கோல் அடிக்க கூடாது என பெரு நாட்டில் உள்ள மாந்திரீகர்கள் சடங்குகள் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
    • உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் பெருவுக்கு எதிரான ஆட்டத்தில் பிரேசில் வெற்றி பெற்றுள்ளது.

    பிரேசிலியா:

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள பிபா உலகக்கோப்பை கால்பந்துக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரேசில் மற்றும் பெரு அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெருவை வீழ்த்தி வெற்றி பெற்றது. பிரேசில் வீரர் மார்கினோஸ் வெற்றிக்குரிய கோலை அடித்தார்.

    இந்த ஆட்டத்திற்கு முன்னதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் கோல் அடிக்க கூடாது என பெரு நாட்டில் உள்ள மாந்திரீகர்கள் சடங்குகள் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பெரு நாட்டு மாந்திரீகர்கள் தங்கள் நாட்டின் வெற்றிக்காக ஆசீர்வாதங்களைக் கோரி, சடங்குகள் செய்து பிரார்த்தனை செய்தனர். இதில் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் ஆட்டத்தை மாற்றும் திறமை கொண்டவர் என்பதால் அவர் கோல் அடிப்பதைத் தடுக்க தனித்துவமான சடங்குகளைச் செய்தனர்.

    நெய்மர் படத்தின் மீது பழுப்பு நிற துணியை போர்த்தி, அவரது இடது காலை கட்டி, வலது காலின் மேல் ஒரு வாளை வைத்து வழிபாடு செய்தனர். எனினும்,பெருவுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் நெய்மர் கோல் அடிக்கவில்லை என்றாலும் பிரேசில் வெற்றி பெற்றுள்ளது.

    நெய்மர் படத்தை வைத்து சடங்குகள் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    • உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.
    • 2026 உலக கோப்பை கால்பந்து போட்டியை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகியவை நடத்துகின்றன.

    சாபாவ்லோ:

    உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. கடந்த ஆண்டு கத்தாரில் நடந்த உலக கோப்பை போட்டியில் அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் பெற்றது.

    வரும் 2026-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகிறது. இதற்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், தென் அமெரிக்க கண்டத்தில் நடைபெற்ற தகுதிச்சுற்று ஆட்டம் ஒன்றில் பிரேசில், பொலிவியா அணிகள் மோதின. இதில் பிரேசில் 5-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

    இதில் நட்சத்திர வீரர் நெய்மர் 61 மற்றும் 93-வது நிமிடத்தில் என 2 கோல்கள் அடித்தார். இதன்மூலம் பீலேயின் சாதனையை நெய்மர் முறியடித்தார்.

    மறைந்த பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே சர்வதேச போட்டிகளில் 77 கோல்கள் அடித்து இருந்தார். 1957 முதல் 1971 வரையிலான காலகட்டத்தில் 92 போட்டிகளில் இந்த கோல்களை அடித்தார்.

    அவரது சாதனையை நெய்மர் ஏற்கனவே சமன் செய்தார். தற்போது அடித்த 2 கோல்கள் மூலம் பீலேயின் சாதனையை அவர் முறியடித்தார்.

    31 வயதான நெய்மர் 125 சர்வதேச போட்டியில் விளையாடி 79 கோல்கள் அடித்துள்ளார். இதன்மூலம் அதிக கோல்கள் அடித்துள்ள பிரேசில் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    சர்வதேச அளவில் அதிக கோல்களை அடித்த வீரர்களில் நெய்மர் 9-வது இடத்தில் உள்ளார். அவர் 2010 முதல் சர்வதேச போட்டிகளில் ஆடி வருகிறார்.

    கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுக்கல்) 123 கோல் அடித்து (200 போட்டி) முதல் இடத்தில் உள்ளார். மற்றொரு நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்சி (அமெரிக்கா) 103 கோல்களுடன் (175 ஆட்டம்) 3-வது இடத்தில் உள்ளார்.

    • உரிய அனுமதியின்றி கட்டுமான பணிகளை நெய்மர் மேற்கொண்டு வருவதாக எழுந்த புகாரை தொடர்ந்து அந்த பணிகளை தொடர கடந்த மாதம் தடை விதிக்கப்பட்டது.
    • ரியோடிஜெனீரோ மாகாண அரசு நெய்மருக்கு ரூ.28.6 கோடியை அபராதமாக விதித்துள்ளது.

    ரியோடிஜெனீரோ:

    பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மருக்கு ரியோடிஜெனீரோ மாகாணத்தின் தெற்கு கடற்கரை பகுதியையொட்டி சொகுசு பங்களா உள்ளது. செழுமையான மரங்களை கொண்ட அந்த பண்ணை வீட்டின் அருகில் செயற்கை ஏரி அமைத்தல் உள்பட பல்வேறு வசதிகளை உருவாக்கும் வகையில் உரிய அனுமதியின்றி கட்டுமான பணிகளை நெய்மர் மேற்கொண்டு வருவதாக எழுந்த புகாரை தொடர்ந்து அந்த பணிகளை தொடர கடந்த மாதம் தடை விதிக்கப்பட்டது.

    அத்துடன் அந்த இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் நெய்மர் சுற்றுப்புற சூழல் விதிமுறைகளை கடைபிடிக்காததுடன் முறையான அனுமதி பெறாமல் நதி நீரை திசைதிருப்புதல், மரங்களை வெட்டுதல், கற்களை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து ரியோடிஜெனீரோ மாகாண அரசு நெய்மருக்கு ரூ.28.6 கோடியை அபராதமாக விதித்துள்ளது. அத்துடன் இந்த விதிமீறல் செயல்கள் குறித்து உள்ளூர் அட்டர்னி ஜெனரல் அலுவலகம், சிவில் போலீஸ், சுற்றுச்சுழல் பாதுகாப்பு அலுவலகம் ஆகியவை தொடர்ந்து விசாரணை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நமது வாழ்க்கையின் ஒரு பகுதியான நீ என்னுடன் வேண்டும்.
    • புருனா, நான் ஏற்கனவே எனது தவறுகள், தேவையற்ற சர்ச்சைகளுக்காக மன்னிப்பு கேட்டு விட்டேன்.

    பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மர், தமது கர்ப்பிணி காதலியிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார். இதனை சமூக ஊடக பக்கத்தில் தமது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பகிர்ந்துள்ளார். 31 வயதான நெய்மர் தமது காதலி புருனா பியான்கார்டி-ஐ தாம் கனவு கண்டிருந்த பெண் என கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் இதனை உனக்காகவும் உனது குடும்பத்துக்காகவும் செய்கிறேன். இது பிரச்சினைகளை தீர்க்குமா என்பது எனக்கு தெரியாது. ஆனால் நான் முயற்சி செய்ய விரும்புகிறேன் என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன். நமக்கான தேவை, நம் குழந்தை மீது நாம் வைத்திருக்கும் அன்பு வெல்லும். நாம் இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் காதல் நம்மை பலப்படுத்தும்.

    நமது வாழ்க்கையின் ஒரு பகுதியான நீ என்னுடன் வேண்டும். அதுமட்டுமின்றி, உங்களை பற்றி வெளிவந்த செய்திகள் உங்களை எவ்வளவு காயப்படுத்தியது, நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டீர்கள் என்பது எனக்கு தெரியும். இந்த சூழலில் உனக்கு ஆதரவாக இருக்கிறேன்.

    களத்தின் உள்ளே மற்றும் வெளியே நான் பல தவறுகளை செய்திருக்கிறேன். நான் செய்த தவறுக்கு தினந்தோறும் மன்னிப்பு கேட்க தயங்குகிறேன். வீட்டில் எனது தனிமை, குடும்பத்தார், நண்பர்களிடம் மட்டுமே நான் எனது தவறுகளை திருத்திக்கொள்ள முடியும்.

    இவை அனைத்தும் என் வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நபரை அதிக அளவில் பாதித்துள்ளது. என்னுடன் பயணிக்க வேண்டும் என்று நான் விரும்பிய பெண், எனது குழந்தையின் தாய் இதில் அடங்குவர். இது எனது குடும்பத்தை காயப்படுத்தி இருக்கிறது.

    அவள் சமீபத்தில்தான் கருவுற்று மகிழ்ச்சியான காலக்கட்டத்தை துவங்கி இருக்கிறாள். புருனா, நான் ஏற்கனவே எனது தவறுகள், தேவையற்ற சர்ச்சைகளுக்காக மன்னிப்பு கேட்டு விட்டேன். இதற்காக பொதுவெளியில் பேச வேண்டும் என்று கருதுகிறேன். ஒரு தனிப்பட்ட விஷயம் பொதுவெளிக்கு வந்து விட்டால், அதற்கான மன்னிப்பும் பொதுவெளியிலேயே கேட்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    நெய்மரின் இந்த பதிவுக்கு ஆதரவு குவிந்து வருகிறது. அவர் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே 7 மில்லியன் ரசிகர்கள் தங்கள் ஆதரவை பதிவு செய்துள்ளனர்.

    • அவருக்கு கணுக்காலில் தசைநார் பாதிப்புக்கு அறுவை சிகிச்சையை டாக்டர்கள் பரிந்துரைத்து உள்ளனர்.
    • ஆபரேசனின் அவசியத்தை அனைத்து நிபுணர்களும் உறுதிபடுத்தி உள்ளனர்.

    பிரபல கால்பந்து நட்சத்திர வீரர் நெய்மர். பிரேசிலை சேர்ந்த அவர், பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் கிளப் அணியில் விளையாடி வருகிறார். சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடி வரும் நெய்மர், கடந்த 20-ந்தேதி லில்லே அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது கணுக்காலில் காயம் அடைந்தார். அவரது காயத்தின் தன்மை குறித்து ஆராயப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் காயம் காரணமாக நெய்மர், எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகி உள்ளார். மேலும் அவருக்கு காலில் ஆபரேசன் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் கிளப் அணி உறுதிபடுத்தியது. இது தொடர்பாக அந்த அணி வெளியிட்ட அறிக்கையில் கணுக்காலில் காயம் அடைந்துள்ள நெய்மர் குறைந்தது 3 மாதங்களுக்கு விளையாட முடியாத சூழ்நிலை உள்ளது.

    அவருக்கு கணுக்காலில் தசைநார் பாதிப்புக்கு அறுவை சிகிச்சையை டாக்டர்கள் பரிந்துரைத்து உள்ளனர். ஆபரேசனின் அவசியத்தை அனைத்து நிபுணர்களும் உறுதிபடுத்தி உள்ளனர். அவர் பயிற்சிக்கு திரும்புவதற்கு 3 முதல் 4 மாதங்கள் ஆகும். அவருக்கு தோகாவில் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

    • எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க நாங்கள் இன்னும் திட்டமிடவில்லை.
    • காயம் காரணமாக நெய்மர் அடுத்த போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    செர்பியாவுக்கு எதிரான போட்டியில் பிரேசிலின் கேப்டனும், நட்சத்திர வீரருமான நெய்மர் காயம் அடைந்தார். 79-வது நிமிடத்தில் நெய்மர் பந்தை கடத்தி சென்ற போது எதிரணி வீரர் பறிக்க முயன்றார். அப்போது கால் இடறி நெய்மர் கீழே விழுந்தார். இதில் கணுக்காலில் ஏற்பட்ட வலியால் அவர் துடித்தார்.

    உடனே அணியின் மருத்துவர் களத்துக்குள் வந்து நெய்மரை பரிசோதித்தார். பின்னர் நெய்மர் போட்டியில் இருந்து வெளியேறினார். மைதானத்துக்கு வெளியே அமர்ந்திருந்த அவரது கண்கள் கலங்கி இருந்தன.

    காயம் காரணமாக நெய்மர் அடுத்த போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக பிரேசில் அணியின் மருத்துவர் ரோட்ரிகோ லாஸ்மர் கூறியதாவது:-

    நெய்மரின் காயத்தின் தன்மை குறித்து மதிப்பீட்டை பெற நாங்கள் 24 முதல் 48 மணி நேரம் காத்திருக்க வேண்டும். எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க நாங்கள் இன்னும் திட்டமிடவில்லை. நாளை (இன்று) காயம் குறித்து புதிய மதிப்பீட்டை பெறுவோம் என்றார். பயிற்சியாளர் டைட் கூறும் போது, நெய்மர் உலக கோப்பையில் அடுத்த போட்டிகளில் விளையாடுவார் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம் என்றார்.

    ரஷியாவில் நடந்து வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் மெக்சிகோ அணியை 2-0 என்ற கணக்கில் பிரேசில் அணி வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. #BRAMEX #WorldCup #FIFAWC
    மாஸ்கோ:

    ரஷியாவில் நடந்து வரும் உலக்கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் இன்று மெக்சிகோ - பிரேசில் அணிகள் மோதின. பிரபல வீரர் நெய்மர் அங்கம் வகிக்கும் பிரேசில் அணி மீது பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்த எதிர்ப்பார்ப்பை சிறிதும் நோகடிக்காமல் பிரேசில் அணி சிறப்பாக விளையாடியது.

    ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை என்றாலும் பிரேசில் கட்டுப்பாட்டில் பந்து இருந்தது. இதனை அடுத்து, இரண்டாம் பாதியின் 51வது நிமிடத்தில் நெய்மர் அசத்தலாக கோல் அடித்தார். 90 வது நிமிடத்தில் பிரேசில் அணியின் பிர்மிடோ மற்றொரு கோல் அடித்தார். ஆட்ட நேர முடிவில் பிரேசில் அணி 2-0 என்ற கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

    முன்னாள் சாம்பியன்களான அர்ஜென்டினா, போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் அணிகள் நாக் அவுட் சுற்றில் வெளியேறியதால், பிரேசில் அணியும் வெளியேறும் என பலர் கணித்த நிலையில், அவர்களின் கணிப்பு பொய்யாகியுள்ளது. 
    ×