search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pujara"

    மெல்போர்னில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணிக்கு 399 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்திய அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றியை நெருங்கியது. #AUSvIND
    மெல்போர்ன்:

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட்டுக்கு 443 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா அணி மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் எந்த ஒரு வீரரும்  25 ரன்களை கூட தொடவில்லை. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 66.5 ஓவர்களில் 151 ரன்களில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. பும்ரா 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    292 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பாலோ-ஆன் வழங்கவில்லை. ஒரு வேளை கடைசி நாளில் பேட்டிங் செய்யும் நிலை ஏற்பட்டால் சேசிங் செய்வது மிகவும் கடினம் என்று கருதிய இந்திய அணி நிர்வாகம் 292 ரன்கள் முன்னிலையுடன் தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடுவது என்று முடிவு செய்தது.


    ஆனால் 2-வது இன்னிங்ஸ் இந்தியாவுக்கு திருப்திகரமாக அமையவில்லை. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் மிரட்டினார். இந்திய வீரர்கள் மயங்க் அகர்வாலை தவிர முன் வரிசை வீரர்கள் அனைவரும் சொதப்பினார். இதனால் இந்திய அணி 2-வது இன்னிங்சில் நேற்றைய ஆட்ட நேர முடிவில், 27 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்திருந்தது.

    இன்று தொடர்ந்து ஆடிய இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் சேர்த்து இருந்த போது தனது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்சின் 292 ரன்கள் முன்னிலையுடன் சேர்த்து இந்திய அணி, 399 ரன்களை ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

    இதனைத்தொடர்ந்து இமாலய இலக்குடன் 2-வது இன்னிங்சை துவங்கி ஆஸ்திரேலிய அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச், மார்கஸ் ஹாரிஸ் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மைதானம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் பேட்ஸ்மேன்கள் நிதானமாக ரன் சேர்த்தனர்.


    நிதானமாக ஆடிக்கொண்டிருந்த கவாஜா, 33 ரன்கள் சேர்த்த நிலையில் முகமது ஷமியிடம் விக்கெட்டை இழந்தார்.  இதேபோல் ஷேன் மார்ஷ் (44) விக்கெட்டை பும்ரா கைப்பற்றினார். மிட்செல் மார்ஷ் 10 ரன்கள் எடுத்த நிலையில் அவரை ஜடேஜா அவுட் ஆக்கினார். நீண்டநேரம் தாக்குப்பிடித்து ஆடிய ஹெட் 34 ரன்களில் அவுட் ஆனார். 157 ரன்களுக்குள் 6 விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலியா. வெற்றிக்கு 242 ரன்கள் தேவைப்பட்டது.

    ஆஸ்திரேலியாவின் மிடில் ஆர்டர் வீரர்கள் வெளியேறியதையடுத்து, இந்தியா வெற்றியை நெருங்கியது. எனினும் விக்கெட்டைக் காப்பாற்ற பின்வரிசை வீரர்கள் தீவிர முயற்சி எடுத்தனர். மிகவும் நிதானமாக ஆடிய டிம் பெயின் 26 ரன்களில் ஜடேஜாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். ஸ்டார்க் 18 ரன்கள் மட்டுமே சேர்த்து பெவிலியன் திரும்பினார். அப்போது அணியின் ஸ்கோர் 215/8

    கடும் நெருக்கடிக்கு மத்தியிலும் பொறுப்புடன் ஆடிய கம்மின்ஸ் அரை சதம் கடந்தார்.  அவர் 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது. அப்போது ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருந்தது. கம்மின்சுடன் லயன் (6 ரன்) களத்தில் உள்ளார்.

    ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு இன்னும் 141 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 2 விக்கெட்டுகளே உள்ளன. இதன்மூலம் இந்தியா வெற்றியை நெருங்கி உள்ளது. நாளை கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் 2 விக்கெட்டுகளையும் இந்தியா கைப்பற்றி, கணிசமான ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  #AUSvIND #TeamIndia
    மெல்போர்ன் டெஸ்டில் 6 ரன்களுக்குள் புஜாரா, விராட் கோலி, ரகானே, ரோகித் சர்மா ஆட்டமிழந்து 72 வருடகால மோசமான சாதனையை சமன் செய்துள்ளனர். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலியா 151 ரன்னில் சுருண்டது. 292 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. கம்மின்ஸ் வீசிய 13-வது ஓவரின் கடைசி பந்தில் விஹாரி ஆட்டமிழந்தார். அவர் 13 ரன்கள் எடுத்தார்.

    அடுத்து 3-வது வீரராக களம் இறங்கிய புஜாரா (0), 4-வது வீரராக களம் இறங்கிய விராட் கோலி (0), 5-வது வீரராக களம் இறங்கிய (1) ரகானே, 6-வது வீரராக களம் இறங்கிய ரோகித் சர்மா (5) ஆகியோர் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ஆட்டமிழந்து வெளியேறினார்கள். ரோகித் சர்மாவைத் தவிர மற்ற மூன்று பேரையும் கம்மின் 6 பந்தில் ரன்ஏதும் விட்டுக்கொடுக்காமல் வீழ்த்தினால். இதில் விராட் கோலி, ரகானேவை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்தார்.



    கடந்த 25 வருடங்களாக இப்படி 3 முதல் 6-ம் நிலை வரை களம் இறங்கும் பேட்ஸ்மேன்கள் சொதப்பியது கிடையாது. நான்கு பேரும் சேர்ந்து 6 ரன்கள் மட்டுமே எடுத்ததன் மூலம் குறைவாக பெற்ற ரன்கள் என்று கடந்த 72 ஆண்டு காலமாக இருக்கும் மோசமான சாதனையை சமன் செய்துள்ளனர்.

    இதற்கு முன் 1946-ல் மான்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் (3 முதல் 6 வரை) 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளனர். அதன்பின் தற்போதுதான் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளனர்.



    1969-ல் ஐதராபாத்தில் நியூசிலாந்திற்கு எதிராக 9 ரன்களும், 1983-ல் அகமதாபாத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 9 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்துள்ளனர்.
    மெல்போர்னில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் விராட் கோலி, புஜாரா, ரகானேவை சாய்த்தார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலியா 151 ரன்னில் சுருண்டது.

    292 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஜோடியான ஹனுமா விஹாரி - மயாங்க் அகர்வால் 12-வது ஓவர்கள் தாக்குப்பிடித்தனர்.

    கம்மின்ஸ் வீசிய 13-வது ஓவரின் கடைசி பந்தில் விஹாரி ஆட்டமிழந்தார். அவர் 13 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த புஜாரா கம்மின்ஸ் வீசிய 15-வது ஓவரின் 2-வது பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி ரன்ஏதும் எடுக்காமல் அதே ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். கம்மின்ஸ் வீசிய 17-வது ஓவரின் முதல் பந்தில் ரகானே 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    இந்தியாவின் நட்சத்திர வீரர்களான புஜாரா, விராட் கோலி, ரகானே ஆகியோரை ரன்ஏதும் விட்டுக்கொடுக்காமல் வெறும் 6 பந்தில் வீழ்த்தி இந்தியாவிற்கு அதிர்ச்சி அளித்தார். இதனால் 28 ரன்கள் வரை விக்கெட் ஏதும் இழக்காத இந்தியா 32 ரன்னிற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது.

    அடுத்து வந்த ரோகித் சர்மா 5 ரன்கள் எடுத்த நிலையில் ஹசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். இந்தியா 3-வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்சில் 292 ரன்கள் முன்னிலை பெற்றிருந்ததால் இந்தியா வலுவான நிலையில் உள்ளது.
    மெல்போர்ன் ஆடுகளம் ரன்கள் சேர்க்க மிகவும் கடினமாக இருந்தது. ஒருநாளைக்கு 200 ரன்கள் என்பது மிகக் கடினமானது என்று புஜாரா தெரிவித்துள்ளார். #AUSvIND
    மெல்போர்னில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில் இந்திய பேட்ஸ்மேன் புஜாரா சதம் அடித்தார். 280 பந்தில் சதம் அடித்த புஜாரா, 319 பந்தில் 106 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். விராட் கோலி 204 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்தார். இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    இன்றைய 2-வது நாள் ஆட்டம் முடிந்த பின்னர் சதம் அடித்த புஜாரா நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்  ‘‘மெல்போர்ன் ஆடுகளம் ரன்கள் சேர்க்க மிகவும் கடினமாக உள்ளது. முதல் இரண்டு நாட்களில் இந்தியாவின் ஸ்கோரை பார்த்தீர்கள் என்றால் மிகவும் குறைவு. இதைத்தை ஒருநாளைக்கு 200 ரன்கள் என்பது மிகவும் கடினமானது என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். நான்கள் போதுமான ரன்கள் குவித்துள்ளோம்’’ என்றார்.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. #AUSvIND #Pujara #Viratkohli
    மெல்போர்ன்:

    வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் தொடரில் அடிலெய்டுவில் நடந்த போட்டியில் இந்தியா 31 ரன் வித்தியாசத்திலும், பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் எம்.சி.ஜி. மைதானத்தில் நேற்று தொடங்கியது. அகர்வால் இந்த டெஸ்டில் அறிமுகம் ஆனார்.

    ‘டாஸ்’ வென்று முதலில் விளையாடிய இந்திய அணி நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன் எடுத்து இருந்தது. தனது முதல் டெஸ்டிலேயே தொடக்க வீரரான அகர்வால் முத்திரை பதித்தார். அவர் 76 ரன்கள் எடுத்தார். புஜாரா 68 ரன்னும், வீராட்கோலி 47 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. புஜாராவும் கோலியும் தொடர்ந்து விளையாடினார்கள்.


    இருவரும் ஆஸ்திரேலிய பந்து வீச்சை தொடர்ந்து நம்பிக்கையுடன் எதிர் கொண்டு சிறப்பாக விளையாடினார்கள். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் கோலி அரை சதத்தை தொட்டார். 110 பந்துகளில் 6 பவுண்டரியுடன் அவர் 50 ரன்னை எடுத்தார். 105. 3-வது ஓவரில் இந்திய அணி 250 ரன்னை தொட்டது.


    மறுமுனையில் இருந்த புஜாரா மிகவும் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 280 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 100 ரன்னை தொட்டார். இந்த டெஸ்ட் தொடரில் இவருக்கு 2-வது செஞ்சூரியாகும். அடிலெய்டு டெஸ்டில் 123 ரன்கள் குவித்து இருந்தார்.

    67-வது டெஸ்டில் விளையாடும் புஜாராவுக்கு இது 17-வது சதமாகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4-வது செஞ்சூரியை பதிவு செய்தார்.

    மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 277 ரன் எடுத்து இருந்தது. புஜாரா 103 ரன்னும், கோலி 69 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர்.

    மதிய உணவு இடைவேளைக்கு பிறகு ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் வீராட்கோலி ஆட்டம் இழந்தார். சதம் அடிப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட அவர் 82 ரன்னில் வெளியேறினார். 204 பந்துகளில் 9 பவுண்டரியுடன் கோலி இந்த ரன்னை எடுத்தார். அவரது விக்கெட்டை ஸ்டார்க் கைப்பற்றினார்.

    கோலி ஆட்டம் இழந்த போது இந்தியாவின் ஸ்கோர் 293 ரன்னாக இருந்தது. அவரும், புஜாராவும் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 170 ரன் எடுத்தனர்.

    அடுத்து ரகானே களம் வந்தார். கோலி ஆட்டம் இழந்த சிறிது நேரத்தில் புஜாராவும் வெளியேறினார். அவர் 319 பந்தில் 10 பவுண்டரியுடன் 106 ரன்கள் எடுத்தார். கும்மின்ஸ் அவரை ‘அவுட்’ செய்தார்.

    5-வது விக்கெட்டுக்கு ரகானேயுடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார். 126.3-வது ஓவரில் இந்திய அணி 300 ரன்னை தொட்டது.

    தேனீர் இடைவேளையின் போது இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 346 ரன் எடுத்து இருந்தது. ரகானே 30 ரன்னிலும், ரோகித்சர்மா 13 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    தேனீர் இடைவேளைக்கு பிறகு ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ரகானே 34 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து ரிசப்பண்ட் களம் வந்தார். 161.5-வது ஓவரில் இந்தியா 400 ரன்னை தொட்டது. ரோகித்சர்மா 97 பந்தில் 4 பவுண்டரியுடன் 50 ரன்னை எடுத்தார்.

    ரிசப்பண்ட் 39 ரன்னும், ஜடேஜா 4 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

    இந்திய அணி 169.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 437 ரன் குவித்த நிலையில் ‘டிக்ளேர்’ செய்தது. கும்மினஸ் 3 விக்கெட்டும், ஸ்டார்க் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை ஆடியது. ஆரோன் பிஞ்சும், ஹாரிசும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    ஹாரிஸ் 5 ரன்களும், பிஞ்சு 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது.  #AUSvIND #Pujara #Viratkohli
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் புஜாரா சதம் அடித்து அசத்தினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் புஜாரா அடிக்கும் 17-வது சதம் இதுவாகும். #AUSvIND #Pujara #Viratkohli
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நேற்று துவங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாளான நேற்று, இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் சிறப்பான பேட்டிங்கை செய்தது.

    அறிமுக வீரர் மயங்க் அகர்வால் 78 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.  முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 89 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் சேர்த்து இருந்தது. புஜாரா 68 ரன்களுடனும் (200 பந்து, 6 பவுண்டரி), விராட் கோலி 47 ரன்களுடனும் (107 பந்து, 6 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.


    இந்த நிலையில், இன்று 2-வது நாள் ஆட்டம் துவங்கியதும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. புஜாரா - விராட் கோலி ஜோடி நம்பிக்கையூட்டும் விதத்தில் விளையாடியது. தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த புஜாரா சதம் அடித்து அசத்தினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் புஜாரா அடிக்கும் 17-வது சதம் இதுவாகும்.

    இந்திய அணி 117 ஓவர்கள் நிலவரப்படி 2 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் சேர்த்துள்ளது. புஜாரா 103 ரன்களுடனும் கோலி 69 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.  #AUSvIND #Viratkohli #Pujara
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அகர்வால், புஜாரா, கோலி ஆகியோர் சிறப்பாக ஆடிய நிலையில், இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் சேர்த்துள்ளது. #INDvAUS
    மெல்போர்ன்:

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன் வித்தியாசத்திலும் பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

    இரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5 மணிக்கு மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியது.

    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் விளையாடும் இப்போட்டி ‘பாக்சிங் டே’ டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது. இப்போட்டியில் இந்திய தொடக்க ஜோடியான முரளி விஜய்-லோகேஷ் ராகுல் நீக்கப்பட்டனர். புதுமுக வீரர் மயங்க் அகர்வால், ரோகித்சர்மா, ஜடேஜா ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

    ஆஸ்திரேலிய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டது. பீட்டர் ஹேண்ட்ஸ் கோம்புக்கு பதிலாக மிட்செல் மார்ஷ் சேர்க்கப்பட்டார்.

    டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் விராட்கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால்-ஹனுமா விகாரி களம் இறங்கினர்.

    இருவரும் ஆஸ்திரேலிய பந்துவீச்சை கவனமுடன் எதிர்கொண்டனர். ஆடுகளத்தில் பந்து நன்கு பவுன்ஸ் ஆனது. திடீரென்று பந்து பேட்ஸ்மேன் கால் முட்டிக்கு கீழேயும் சென்றது.

    இதனால் விகாரி மிகவும் பொறுமையுடன் விளையாடினார். மயங்க் அகர்வால் ஓரளவுக்கு ரன்களை சேர்த்தார்.

    பேட் கும்மின்ஸ் வீசிய பவுன்ஸ் பந்தை விகாரி தவிர்க்க முயன்றபோது கையுறையில் பட்டு கேட்ச் ஆனது. விகாரி 66 பந்தில் 8 ரன் எடுத்தார். அப்போது ஸ்கோர் 40 ரன்னாக இருந்தது. அடுத்து புஜாரா களம் வந்தார்.

    மதிய உணவு இடைவேளையின்போது இந்தியா 28 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 57 ரன் எடுத்து இருந்தது. மயங்க் அகர்வால் 34 ரன்னுடனும், புஜாரா 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    உணவு இடைவேளைக்கு பிறகு மயங்க் அகர்வால் 95 பந்தில் அரை சதம் அடித்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. இந்தியா 45-வது ஓவரில் 100 ரன்னை தொட்டது. சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த மயங்க் அகர்வால் 76 ரன்னில் அவுட் ஆனார். அவர் கும்மின்ஸ் பந்தில் விக்கெட் கீப்பர் டிம்பெய்னிடம் கேட்ச் ஆனார். இந்த ரன்னை மயங்க் அகர்வால் 161 பந்தில் எடுத்தார். இதில் 8 பவுண்டரி, 1 சிக்சர் அடங்கும். அறிமுக போட்டியில் அவர் ஆஸ்திரேலிய பந்துவீச்சை திறம்பட சமாளித்து ரன்களை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

    அகர்வால் அவுட் ஆனவுடன் தேனீர் இடைவேளையின்போது இந்தியா 54.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 123 ரன் எடுத்து இருந்தது. புஜாரா 33 ரன்னுடன் களத்தில் இருந்தார்.



    தேனீர் இடைவேளைக்கு பிறகு புஜாரா, கேப்டன் கோலி இருவரும் நிதானமாக விளையாடினார்கள். இந்தியா 63-வது ஓவரில் 150 ரன்னை தொட்டது. தொடர்ந்து ஆடிய புஜாரா அரை சதம் கடந்தார். மறுமுனையில் விராட் கோலியும் அரை சதத்தை நெருங்க, முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆட்டநேர முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்தது. புஜாரா 68 ரன்களுடனும், விராட் கோலி 47 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    ஆஸ்திரேலியாவை சேர்ந்த 7 வயது சிறுவன் ஆர்ச்சி சில்லர் மெல்போர்ன் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியில் இணை கேப்டனாக சேர்க்கப்பட்டான். இதய கோளாறால் பல்வேறு அறுவை சிகிச்சை செய்துள்ள அவனுக்கு ஆஸ்திரேலிய அணி கேப்டனாக வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்ற அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது.

    இதையடுத்து அவன் ஆஸ்திரேலிய அணியின் 15-வது வீரராக சேர்க்கப்பட்டுள்ளான். டாஸ் போடும்போது கேப்டன்களுடன் சிறுவன் ஆர்ச்சி சில்லரும் வந்திருந்தான். #INDvAUS
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் புஜாராவின் அபார சதத்தால் இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்களை இழந்து 250 ரன்கள் எடுத்துள்ளது. #AUSvIND #Pujara #RohitSharma
    அடிலெய்டு:

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் அடிலெய்டில் இன்று தொடங்கியது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி ‘டாஸ்’ வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். ரோகித் சர்மாவிற்கு 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு கிடைத்தது. விகாரியை பின்னுக்கு தள்ளிவிட்டு அவருக்கு அணி நிர்வாகம் முன்னுரிமை கொடுத்தது.

    லோகேஷ் ராகுலும், முரளி விஜய்யும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் இந்திய அணி திணறியது. 19 ரன் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்தது. விராட் கோலி 3 ரன்னில் ஆட்டம் இழந்து மிகுந்த ஏமாற்றம் அளித்தார். கம்மின்ஸ் முதல் ஓவரில் அவர் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் அடித்த பந்தை ‘கல்லி’ பகுதியில் நின்ற உஸ்மான் குவாஜா ‘டைவ்’ அடித்து இடது கையில் பிடித்தார்.



    அடுத்து வந்த ரகானே 13 ரன்னில் ஹசில்வுட் பந்தில் ஆட்டமிழக்க ஸ்கோர் 41 ஆக இருந்தபோது இந்தியாவின் 4-வது விக்கெட் சரிந்தது. அடுத்து ரோகித் சர்மா களம் வந்தார். அவர் நம்பிக்கையுடன் ஆடினார். 24.4-வது ஓவரில் இந்திய அணி 50-வது ரன்னை தொட்டது. மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 27 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 56 ரன் எடுத்து மோசமான நிலையில் இருந்தது.

    மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இந்த ஜோடியை நாதன் லயன் பிரித்தார். ரோகித் சர்மா 61 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா, புஜாரா ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 45 ரன் எடுத்தது.

    அடுத்து வந்த விக்கெட் கீப்பர் ரிசப் பந்த், நாதன் லயன் பந்தில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 38 பந்துகளில் 25 ரன்கள் (2 பவுண்டரி, 1 சிக்ஸ்) எடுத்திருந்தார். அப்போது இந்திய அணி 6 விக்கெட்டுகளை 127 ரன்களுக்கு எடுத்து தத்தளித்துக் கொண்டிருந்தது.



    இந்நிலையில் புஜாராவுடன் தமிழக வீரர் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அஸ்வின் 76 பந்துகளில் 25 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் வெளியேறினார். அடுத்து வந்த இஷாந்த் சர்மா 4 ரன்னில் ஸ்டார்க் பந்தில் வெளியேற முகமது சமி களம் இறங்கினார்.

    பொறுப்புடன் விளையாடிய புஜாரா தனது 16-வது சதத்தை பதிவு செய்தார். அடுத்து அதிரடியாக விளையாடிய இவர் ஸ்டார்க் ஓவரில் பவுண்டரி, சிக்சர் விளாசினார். இவர் 246 பந்துகளில் 123 ரன்கள் (7 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்த நிலையில் கம்மின்ஸ் இவரை ரன் அவுட் முறையில் வெளியேற்றினார்.



    புஜாரா அவுட் ஆனதும் முதல் நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது. இந்தியா 87.5 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 250 ரன்கள் எடுத்துள்ளது. ஷமி 6 ரன்னுடனும் களத்தில் உள்ளார். ஆஸ்திரேலியா பந்து வீச்சில் ஸ்டார்க், ஹசில்வுட், கம்மின்ஸ், நாதன் லயன் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

    2-வது நாள் ஆட்டம் நாளை காலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. #AUSvIND #Pujara #RohitSharma
    அடிலெய்டில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. #AUSvIND #Pujara #RohitSharma
    அடிலெய்டு:

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடரில் முதல் டெஸ்ட் அடிலெய்டுவில் இன்று தொடங்கியது.

    இந்திய அணி கேப்டன் விராட்கோலி ‘டாஸ்’ வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோகித்சர்மாவுக்கு 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு கிடைத்தது. விகாரியை பின்னுக்கு தள்ளிவிட்டு அவருக்கு அணி நிர்வாகம் முன்னுரிமை கொடுத்தது.

    லோகேஷ் ராகுலும், முரளிவிஜய்யும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் இந்திய அணி திணறியது. 19 ரன் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்தது.

    ஆட்டத்தின் 2-வது ஓவரில் ராகுல் 2 ரன்னில் ஹசில்வுட் பந்தில் ‘அவுட்’ ஆனார். முரளிவிஜய் 11 ரன்னில் வெளியேறினார். ஸ்டார்க் அவரது விக்கெட்டை வீழ்த்தினார்.


    ராகுல் விக்கெட்டை கைப்பற்றிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹசில்வுட்டை சக வீரர்கள் பாராட்டும் காட்சி


    அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட்கோலி 3 ரன்னில் ஆட்டம் இழந்து மிகுந்த ஏமாற்றம் அளித்தார்.

    கம்மின்ஸ் முதல் ஓவரில் அவர் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் அடித்த பந்தை ‘கல்லி’ பகுதியில் நின்ற உஸ்மான் குவாஜா ‘டைவ்’ அடித்து இடது கையில் பிடித்தார். இந்த எதிர்பாராத கேட்சால் கோலி அதிர்ச்சியுடன் வெளியேறினார்.

    4-வது விக்கெட்டுக்கு புஜாராவுடன், ரகானே ஜோடி சேர்ந்தார். ஆட்டத்தின் 16-வது ஓவரில் நாதன் லயன் பந்தில் ரகானே முதல் சிக்சரை அடித்தார்.

    இந்த ஜோடியையும் ஆஸ்திரேலிய பவுலர்கள் நீடிக்க விடவில்லை. ஸ்கோர் 41 ஆக இருந்தபோது இந்தியாவின் 4-வது விக்கெட் சரிந்தது. ரகானே 13 ரன்னில் ஹசில்வுட் பந்தில் ஆட்டம் இழந்தார்.

    அடுத்து ரோகித்சர்மா களம் வந்தார். அவர் நம்பிக்கையுடன் ஆடினார். 24.4-வது ஓவரில் இந்திய அணி 50-வது ரன்னை தொட்டது. கம்மின்ஸ் வீசிய அதற்கு அடுத்த ஓவரில் ரோகித்சர்மா சிக்சர் அடித்தார்.

    மதிய உணவு இடை வேளையின் போது இந்தியா 27 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 56 ரன் எடுத்து மோசமான நிலையில் இருந்தது. புஜாரா 11 ரன்னுடனும், ரோகித்சர்மா 15 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இருவரும் தொடர்ந்து விளையாடினர். கம்மின்ஸ், லயன் பந்துகளில் ரோகித்சர்மா சிக்சர் அடித்தார்.

    நன்றாக ஆடிக்கொண்டிருந்த ரோகித்சர்மாவை சுழற்பந்து வீரர் நாதன் லயன் வெளியேற்றினார். அவர் 61 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 37 ரன்கள் எடுத்தார்.



    அப்போது இந்தியாவின் ஸ்கோர் 86 ஆக இருந்தது. 5-வது விக்கெட் ஜோடி 45 ரன் எடுத்தது. இதில் ரோகித்சர்மாவின் பங்களிப்பு தான் அதிகமாக இருந்தது.

    6-வது விக்கெட்டுக்கு புஜாராவுடன், விக்கெட் கீப்பர் ரிசப் பந்த் ஜோடி சேர்ந்தார். புஜாரா தொடர்ந்து நிதானமாக ஆடினார். இந்திய அணி 40.2 ஓவர்களில் 100 ரன்னை தொட்டது.

    நாதன் லயன் வீசிய 49- வது ஓவரின் முதல் பந்தில் ரிஷப் பந்த் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 38 பந்துகளில் 25 ரன்கள் (2 பவுண்டரி, 1 சிக்ஸ்) எடுத்திருந்தார்.

    அடுத்து புஜாராவுடன் தமிழக வீரர் அஸ்வின் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர்.

    புஜாரா 153 பந்துகளில் தனது 20-வது டெஸ்ட் அரை சதத்தை கடந்தார். தற்போது வரை 66 ஓவருக்கு 167 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. #AUSvIND #Pujara #RohitSharma
    ‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சிறப்பாக பந்து வீசுவார்’ என்று இந்திய அணியின் பேட்ஸ்மேன் புஜாரா நம்பிக்கை தெரிவித்தார். #Pujara #Ashwin #AustralianTest
    அடிலெய்டு:

    இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை மறுநாள் அடிலெய்டில் தொடங்குகிறது.

    ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை 11 முறை டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி இருக்கும் இந்திய அணி ஒருமுறை கூட தொடரை வென்றது கிடையாது. பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கி தடை விதிக்கப்பட்டுள்ள ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோர் அணியில் இடம் பெறாததால் ஆஸ்திரேலியா பலவீனம் அடைந்துள்ளது. எனவே இந்த முறை இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்று சரித்திரத்தை மாற்றும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.



    ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் பந்து வீச்சில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது இல்லை. 64 டெஸ்ட் போட்டியில் விளையாடி 336 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கும் அஸ்வின், ஆஸ்திரேலிய மண்ணில் 6 டெஸ்ட் போட்டியில் ஆடி 21 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தி இருக்கிறார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் தமிழகத்தை சேர்ந்த ஆர்.அஸ்வின் சிறப்பாக பந்து வீசுவார் என்று இந்திய அணியின் பேட்ஸ்மேன் புஜாரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அடிலெய்டில் அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அஸ்வின் புத்திசாலியான பந்து வீச்சாளர் என்று நான் எப்பொழுதும் சொல்வேன். அவர் பேட்ஸ்மேன்களின் செயல்பாட்டை நன்றாக கணித்து செயல்படக்கூடியவர். அவர் தனது பந்து வீச்சு முறையில் நிறைய மாற்றங்கள் செய்து இருக்கிறார். அது என்ன என்பதை நான் விவரிக்க விரும்பவில்லை. ஆனால் அவர் செய்துள்ள மாற்றங்கள் நிச்சயம் அவருக்கு உதவும். அவர் இந்த ஆண்டில் கவுண்டி போட்டியில் போதுமான அளவில் விளையாடி இருக்கிறார். அத்துடன் வெளிநாட்டு மண்ணில் பல்வேறு விதமான ஆடுகளங்களில் ஆடிய அனுபவம் அவருக்கு உண்டு. 2014-15-ம் ஆண்டில் நடந்த ஆஸ்திரேலிய தொடரில் அஸ்வின் விளையாடி உள்ளார். எனவே ஆஸ்திரேலிய மண்ணில் எப்படி செயல்பட வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அதனால் அவர் நல்ல நம்பிக்கையுடன் இருப்பார்.

    நமது அணியின் வேகப்பந்து வீச்சு உலகின் சிறந்த பந்து வீச்சுகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஐ.பி.எல். போட்டியின் மூலம் நமது நாட்டில் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் உருவாகி வருகிறார்கள். இது இந்திய டெஸ்ட் அணிக்கு தற்போது உதவிகரமாக இருக்கிறது. நமது அணியில் ஆடும் லெவனில் இடம் பெறாத வேகப்பந்து வீச்சாளர்கள் கூட நல்ல நிலையில் உள்ளனர்.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் 544 ரன்கள் விட்டுக்கொடுத்தது பெரிய விஷயம் இல்லை. அது டெஸ்ட் போட்டி அல்ல. எனவே அது குறித்து கவலைப்படவில்லை. நமது பவுலர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். நமது பந்து வீச்சாளர்களில் பெரும்பாலானவர்கள் கடந்த முறை இங்கு நடந்த தொடரில் விளையாடி இருக்கிறார்கள். எனவே இங்கு எந்த மாதிரி பந்து வீச வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். பந்து வீச்சாளர்கள் நல்ல நம்பிக்கையுடன் உள்ளனர்.

    பேட்டிங்கில் எங்களுக்கு சில இலக்குகள் உள்ளன. பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி இருப்பதாக நான் நினைக்கவில்லை. நமது அணியில் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் போதுமான அனுபவம் கொண்டவர்கள். கடந்த காலங்களில் ஆஸ்திரேலிய அணி வீரர்களில் சிலரது பந்து வீச்சை நான் சந்தித்து இருக்கிறேன். எனவே அவர்களது பலம், பலவீனம் எனக்கு தெரியும். அந்த அனுபவம் இந்த போட்டி தொடரில் எனக்கு உதவும். ஆனால் இந்த போட்டி தொடர் புதியதாகும். எனவே கடந்த காலங்களில் நான் செய்தது பற்றி அதிகம் கவனம் செலுத்த விரும்பவில்லை. நான் நல்ல நம்பிக்கையுடன் உள்ளேன். அதேநேரத்தில் எதிரணிக்கும் மதிப்பளிக்க விரும்புகிறேன்.

    தற்போது நாங்கள் இந்தியாவுக்கு வெளியிலும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம். இந்த போட்டி தொடரில் சிறப்பாக செயல்பட எங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக இருப்பதால் எல்லா போட்டி தொடரிலும் வெற்றி பெற வேண்டும் என்று தான் எப்பொழுதும் நாங்கள் நினைக்கிறோம். இந்த போட்டி தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும் என்றும் நல்ல தொடக்கம் காண வேண்டும் என்றும் விரும்புகிறோம். இந்த போட்டி தொடரை நிச்சயம் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறோம். அதேநேரத்தில் தற்போது முதல் டெஸ்ட் போட்டியில் தான் எங்கள் கவனம் உள்ளது. ஒவ்வொரு போட்டியாக கருத்தில் கொண்டு செயல்படுவோம்.

    ஆஸ்திரேலிய அணி வீரர்கள் எதிரணியினரை கோபமூட்டும் வகையில் பேசுவது (சிலெட்ஜிங்) குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. அது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. டெஸ்ட் போட்டி தொடங்கிய பிறகு எதிரணியினர் செய்யும் சீண்டல்களில் நாங்கள் அதிகம் கவனம் செலுத்த மாட்டோம். நன்றாக விளையாடி டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்பதில் தான் நாங்கள் கவனம் செலுத்துவோம்.

    இவ்வாறு புஜாரா கூறினார்.
    ஆஸ்திரேலிய லெவனுடனான 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் கோலி, பிரித்வி ஷா, புஜாரா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். #AUSvIND #ViratKohli
    சிட்னி:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. மூன்று போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

    4 டெஸ்ட் கொண்ட தொடர் வருகிற 6-ந்தேதி அடிலெய்டுவில் தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்பு ஆஸ்திரேலிய லெவனுடன் இந்திய அணி 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டது.

    அதன்படி நேற்று சிட்னியில் தொடங்க இருந்த பயிற்சி ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. ஆஸ்திரேலிய லெவன் ‘டாஸ்’ வென்று இந்திய அணியை முதலில் விளையாட அழைத்தது. பிரித்வி ஷாவும், லோகேஷ் ராகுலும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ராகுல் 3 ரன்னிலேயே வெளியேறினார்.

    அடுத்து புஜாரா களம் வந்தார். இருவரும் ஆஸ்திரேலிய லெவன் பந்து வீச்சை விளாசி தள்ளினர். பிரித்வி ஷா 69 பந்தில் 66 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதில் 11 பவுண்டரிகள் அடங்கும்.

    கேப்டன் விராட்கோலி 4-வது வீரராக ஆடினார். அவரும், புஜாராவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரை சதம் எடுத்தனர்.

    புஜாரா 89 பந்தில் 54 ரன்னும் (6 பவுண்டரி), விராட்கோலி 87 பந்தில் 64 ரன்னும் (7பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழந்தனர்.

    இந்திய அணி 204 ரன்னில் 4 விக்கெட்டை இழந்தது. 5-வது விக்கெட்டுக்கு ரகானே- விகாரி ஜோடியும் சிறப்பாக ஆடியது.

    ரகானே 56 ரன் எடுத்து ரிட்டயர்ட் அவுட்டானர். விகாரி 53 ரன்னும், ரோகித்சர்மா 40 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி 92 ஓவரில் 358 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதன்பின் ஆஸ்திரேலிய லெவன் முதல் இன்னிங்சை விளையாடியது. #AUSvIND #ViratKohli
    வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் புஜாராவிற்கு ஓய்வு கொடுத்திருக்கனும் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார். #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து தொடரில் இந்தியா 1-4 எனத் தோல்வியை தழுவியது.

    இந்திய தொடக்க பேட்ஸ்மேன்கள் ஆன ஷிகர் தவான், முரளி விஜய் ஆகியோர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து நீக்கப்பட்டனர். அவர்களுக்குப் பதிலாக பிரித்வி ஷா, மயாங்க் அகர்வால் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைத்தது.

    நேற்று தொடங்கிய ஆட்டத்தில் பிரித்வி ஷாவிற்கு ஆடும் லெவன் அணியில் இடம்கிடைத்தது. ஆனால் மயாங்க் அகர்வாலுக்கு இடம் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் புஜாராவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டு மயாங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டிருக்கனும் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறுகையில் ‘‘பேட்டிங் தகுதியை வைத்து வீரர்களை தேர்வு செய்ததற்காக நான் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். சீனியர் வீரரான புஜாராவிற்கு ஓய்வு கொடுத்து மற்றொரு புதுமுக வீரரான மயாங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கனும்.

    புஜாரா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக அதிக ரன்கள் குவிப்பார். ஏற்கனவே, சொந்த மண்ணில் புஜாரா அதிக ரன்கள் குவித்துள்ளார். இன்னொரு பேட்ஸ்மேனுக்கு வாய்ப்பு கொடுத்து வெளிநாட்டு மண்ணில் சாதிக்க புதிய பேட்ஸ்மேன்களை உருவாக்க முயற்சி செய்யலாம்’’ என்றார்.
    ×