search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரகானே"

    • ஆந்திர பிரதேசத்துக்கு எதிரான கடந்த போட்டியில் ரகானே கோல்டன் டக் அவுட் ஆனார்.
    • கேரளா அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்திலும் ரகானே கோல்டன் டக் அவுட் ஆனார்.

    இங்கிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதில் முதல் 2 போட்டிகளில் விளையாடப் போகும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் நட்சத்திர சீனியர் வீரர்கள் புஜாரா மற்றும் ரகானே ஆகியோர் கழற்றி விடப்பட்டுள்ளார்கள்.

    ரஞ்சி கோப்பையில் கடினமாக போராடி மீண்டும் கம்பேக் கொடுத்து இந்தியாவுக்காக 100-வது போட்டியில் விளையாடி சாதனை படைப்பதை லட்சியமாக வைத்திருப்பதாக ரகானே சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் ரஞ்சிக்கோப்பையில் ஆந்திர பிரதேசத்துக்கு எதிரான கடந்த போட்டியில் ரகானே கோல்டன் டக் ஆனார். இதனையடுத்து இன்று நடைபெற்ற ஒரு போட்டியில் மும்பை- கேரளா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய மும்பை அணி 0 ரன்னில் 2 விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க வீரரான ஜெய் கோகுல் பிஸ்தா முதல் பந்திலும் ரகானே 2-வது பந்திலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் மும்பை அணி 10 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் எடுத்தது.

    கடைசி 2 இன்னிங்சில் 0 (1), 0 (1) என அடுத்தடுத்து டக் அவுட்டான அவர் இன்னும் 2024 ரஞ்சி கோப்பையில் 1 ரன் கூட எடுக்கவில்லை. அதனால் ஏமாற்றமடைந்துள்ள ரசிகர்கள் இப்படி செயல்பட்டால் எப்படி கம்பேக் கொடுக்க முடியும்? என்றும் 100 போட்டிகளில் விளையாடி சாதனை படைக்கும் எண்ணத்தை மறந்து விடுங்கள் என்றும் ரகானே மீது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    • சிஎஸ்கே அணிக்காக அதிரடியாக விளையாடினார்.
    • ஒரு வார்த்தையில் கேட்ட கேள்விக்கு இந்திய வீரர் பதிலளித்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் ரகானே. இவர் இந்திய டெஸ்ட் அணியில் மட்டும் விளையாடி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் சிஎஸ்கே அணிக்காக அதிரடியாக விளையாடி மீண்டும் இந்திய டெஸ்ட் அணியின் இடம் பிடித்தார்.

    இந்நிலையில் யூடிப்பர் மதன் கவுரியுடன் வீடியோ காலில் பேசிய ரகானே, தமிழ் நடிகரான விஜய் தனக்கு பிடித்த நடிகர் என தெரிவித்துள்ளார். மதன் கவுரி கேட்ட சில கேள்விகள் ரகனே தமிழ் மட்டும் ஆங்கிலத்தில் பதில் அளித்தார்.

    ஒரு வார்த்தையில் மதன் கேட்ட கேள்விக்கு ரகானே பேசியது பின்வருமாறு:-

    மதன்: வணக்கம் ப்ரோ நல்ல இருக்கீன்களா

    ரகானே : நல்லா இருக்கேன். சாப்பிடீங்களா? (என தமிழில் பதில் அளித்தார்)

    மதன்: சிஎஸ்கே

    ரகானே: குடும்பம்

    மதன்: டோனி

    ரகானே: தல

    மதன்: ஜடேஜா

    ரகானே: நல்ல நண்பன் (என தமிழில் பதில் அளித்தார்)

    மதன்: தோசை

    ரகானே: ருசி

    மதன்: தமிழ் நடிகர் பற்றி தெரியுமா?

    ரகானே: ஆமா தெரியும்

    மதன்: யார் உங்களுக்கு பிடித்த நடிகர்

    ரகானே: விஜய்

    இவ்வாறு அவர் பதிலளித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • நான் இளமையாக இருக்கிறேன். என்னுள் நிறைய கிரிக்கெட் உள்ளது.
    • கடந்த ஒரு ஆண்டாக எனது உடற்தகுதிக்காக நான் நிறைய உழைத்துள்ளேன்.

    இந்திய அணி 2 டெஸ்ட் போட்டி 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

    இந்நிலையில் நான் இளமையாக இருக்கிறேன். என்னுல் நிறைய கிரிக்கெட் உள்ளது என இந்திய அணியின் துணை கேப்டன் ரகானே தெரிவித்துள்ளார்.

    இது குறித்து ரகானே கூறியதாவது:-

    நான் இளமையாக இருக்கிறேன். என்னுள் நிறைய கிரிக்கெட் உள்ளது. கடந்த ஒரு ஆண்டாக எனது உடற்தகுதிக்காக நான் நிறைய உழைத்துள்ளேன். பேட்டிங்கில் சில நுணுக்களை கற்று கொண்டு பயிற்சி எடுத்துள்ளேன். நான் எனது கிரிக்கெட்டை மிகவும் ரசிக்கிறேன், எனது பேட்டிங்கை ரசிக்கிறேன். நான் எதிர்காலத்தைப் பற்றி அதிகம் சிந்திக்கவில்லை. ஒவ்வொரு ஆட்டமும் தனிப்பட்ட முறையில் மற்றும் குழுவின் பார்வையில் முக்கியமானது. நான் அதில் தான் கவனம் செலுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கே.எஸ். பரத் இன்று ரன்ஏதும் எடுக்காமல் அவுட்
    • கம்மின்ஸ் பந்தில பவுண்டரி, சிக்ஸ் அடித்து அரைசதம் கடந்தார்

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 38 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்திருந்தது. ரகானே 29 ரன்களுடனும், கே.எஸ். பரத் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. கே.எஸ். பரத் ரன்ஏதும் எடுக்காமல் நேற்றைய ரன்னுடன் போலண்ட் பந்து வீச்சில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அடுத்து ஷர்துல் தாகூர் களம் இறங்கினார். ஷர்துல் தாகூர் உடலில் அடி வாங்கினாலும் ஆட்டமிழக்காமல் தடுத்து ஆடினார்.

    மறுமுனையில் ரகானே நம்பிக்கையுடன் விளையாடினார். 46-வது ஓவரை கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரகானே, கடைசி பந்தில் சிக்சர் அடித்து அரரைசதம் அடித்தார்.

    92 பந்தில் 6 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் கடந்து விளையாடி வருகிறார். தற்போது இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்துள்ளது. 270 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.

    • 34 வயதான ரகானே 82 டெஸ்டில் விளையாடி உள்ளார்.
    • ரகானே ஐ.பி.எல். போட்டியில் இந்த சீசனில் 5 ஆட்டத்தில் 2 அரை சதத்துடன் 209 ரன்கள் எடுத்துள்ளார்.

    புதுடெல்லி:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டி ஜூன் 7-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கிறது.

    இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்யின்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இன்று அறிவித்தது.

    இந்திய அணியில் ரகானே இடம்பெற்றுள்ளார். 15 மாதங்களுக்கு பிறகு அவர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 34 வயதான ரகானே 82 டெஸ்டில் விளையாடி உள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்டில் ஆடினார்.

    ஸ்ரேயாஸ் அய்யர் முதுகுவலி காயத்தால் அவதிப்படுகிறார். இதற்காக அவர் இங்கிலாந்து சென்று ஆபரேசன் செய்ய உள்ளார். இதனால் அவர் அணியில் இடம்பெறவில்லை. அவர் இடத்துக்கு ரகானே தேர்வாகி உள்ளார்.

    சூர்யகுமார் யாதவ், இஷான்கிஷன் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ரகானே ஐ.பி.எல். போட்டியில் அதிரடியாக விளையாடி வருகிறார். மேலும் டெஸ்டில் அனுபவம் வாய்ந்தவர். இதனால் அவருக்கு முன்னுரிமை கொடுக்கப் பட்டு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் ரகானே ஐ.பி.எல். போட்டியில் இந்த சீசனில் 5 ஆட்டத்தில் 2 அரை சதத்துடன் 209 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்டிரைக்ரேட் 199.4 ஆகும்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் வருமாறு:-

    ரோகித்சர்மா (கேப்டன்) சுப்மன்கில், புஜாரா, வீராட் கோலி, ரகானே, லோகேஷ் ராகுல், கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, அக்ஷர் படேல், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனட்கட்.

    • ராஜஸ்தான் அணி கடைசி வரை போராடி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
    • பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக 4 விக்கெட்கள் எடுத்த நாதன் எலிஸ் ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார்.

    ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 5-ம் தேதியன்று நடைபெற்ற 8-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த பஞ்சாப் கிங்ஸ் இந்த சீசனில் 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    அதை தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி கடைசி வரை போராடி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக 4 விக்கெட்கள் எடுத்த நாதன் எலிஸ் ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார்.

    முதல் போட்டியில் அரை சதமடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய சாம்சன் இந்த போட்டியில் எடுத்து 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிக ரன்களை குவித்த வீரர் என்ற ரகானேவின் சாதனையை உடைத்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

    அந்த பட்டியல்:

    1. சஞ்சு சாம்சன் : 3138* ரன்கள் (118 போட்டிகள்) 2. ரகானே : 3098 ரன்கள் (106 போட்டிகள்) 3. ஷேன் வாட்சன் : 2474 ரன்கள் (84 போட்டிகள்) 4. ஜோஸ் பட்லர் : 2378* ரன்கள் (60 போட்டிகள்) 5. ராகுல் டிராவிட் : 1324 ரன்கள் (52 போட்டிகள்)

    குறிப்பாக கடந்த வருடம் 400க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த அவர் 2008-ல் ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு பின் ராஜஸ்தானை ஃபைனலுக்கு அழைத்துச் சென்ற கேப்டன் என்ற சாதனையும் படைத்தார். 

    • சி.எஸ்.கே. குடும்பத்தில் ஒரு அங்கமாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
    • டோனியின் கேப்டன்ஷிப் கீழ் மீண்டும் விளையாட ஆவலுடன் இருக்கிறேன்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள அஜிங்க்யா ரகானே அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நான் 20 ஓவர் கிரிக்கெட்டில் எப்போதும் தொடக்க வீரராக களம் இறங்கி இருக்கிறேன். ஆனால் நிர்வாகமும், கேப்டனும் என்னிடம் என்ன கேட்டாலும் அதை செய்ய தயாராக இருக்கிறேன்.

    என்னை பொறுத்தவரை எப்போதும் அணிதான் முக்கியம். எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிறப்பாக செயல்படுவேன். எந்த வரிசையிலும் விளையாட தயாராக இருக்கிறேன்.

    டோனியின் கேப்டன்ஷிப் கீழ் மீண்டும் விளையாட ஆவலுடன் இருக்கிறேன். இது நான் கற்று கொள்ள சிறந்த வாய்ப்பு. அவரது தலைமையின் கீழ் இந்திய அணியில் விளையாடி இருக்கிறேன்.

    முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுகிறேன். சி.எஸ்.கே. குடும்பத்தில் ஒரு அங்கமாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 4 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஐபிஎல் தொடர் நடைபெறுவதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.
    • சென்னை அணி நிர்வாகம் இன்று தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றினை பகிர்ந்துள்ளது.

    சென்னை:

    ஐபிஎல் 2023-ம் ஆண்டு கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 31-ம் தேதி முதல் நடைபெறுகிறது. கடந்த சீசன் முதல் 10 அணிகள் இந்த தொடரில் விளையாடுகிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஐபிஎல் தொடர் நடைபெறுவதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இந்த தொடரை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

    இந்நிலையில் சென்னை அணி நிர்வாகம் இன்று தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றினை பகிர்ந்துள்ளது. அதில் மாஸ்டர் படத்தில் விஜய் பஸ்சில் ஏறுவது போல உள்ள காட்சியில் விஜய்க்கு பதிலாக ரகானே இடம் பெற்றுள்ளார்.


    இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இங்கிலாந்து கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாட பிசிசிஐ-யிடம் அனுமதி கேட்டுள்ளார் இந்திய டெஸ்ட் அணி துணைக் கேப்டன் ரகானே #Rahane
    இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டனாக இருப்பவர் ரகானே. இவர் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடர் முடிந்த உடன் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதற்கான இந்திய அணியில் ரகானே இடம் பெறவில்லை.

    இதை பயன்படுத்தி இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்ட்டி கிரிக்கெட் விளையாட விரும்புகிறார். இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என பிசிசிஐ-யிடம் கேட்டுள்ளார்.



    பிசிசிஐ அனுமதி வழங்கினால் ஹம்ப்ஷைர் அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    டெஸ்ட் போட்டியில் துணைக் கேப்டனாக இருக்கும் ரகானே, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இடம் கிடைக்காதது குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். #Rahane
    இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டன் ரகானே. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆன இவர் ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக இடம்பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.

    தொடக்க பேட்ஸ்மேன் முதல் மிடில் வரிசையில் எந்த இடத்திலும் களம் இறங்கி விளையாட தயாராக இருக்கிறார். 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியை சந்தித்தது.

    இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்தாலும், ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை. அதன்பின் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் சென்று விளையாடியது. இந்தத் தொடரில் தொடக்க வீரராக களம் இறங்கிய ரகானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர் நாயகன் விருதை பெற்றார்.

    ஆனால் ரோகித் சர்மா, தவான் ஆகியோர் அணிக்கு திரும்பிய பிறகு ரகானேவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அணியில் சேர்ப்பதும், நீக்குவதுமாக இருப்பதால் அவர் தொடர்ச்சியாக விளையாட முடியவில்லை. இதனால் அவரது ஆட்டத்திறன் குறைந்துள்ளது.

    தற்போது உள்ளூர் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.

    அணியில் இருந்து நீக்கப்பட்ட போதிலும் தேர்வுக்குழு குறித்து விமர்சனம் செய்தது கிடையாது. ஆனால் தற்போது தொடர்ச்சியாக வாய்ப்புகள் பெற நான் தகுதியானவன் என்று தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ரகானே கூறுகையில் ‘‘தொடர்ச்சியாக அணிக்கு தேர்வு செய்யப்படாதது எனக்கு வெட்கமாக இருக்கிறது. நான் எனது பேட்டிங் மூலம் திறமையை நிரூபிக்க விரும்புகிறேன். ஆனால், சில சமயங்களில் உண்மைகளை சொல்வதும் முக்கியமானதாக இருக்கிறது.

    நான் எப்போதுமே அணிக்கு முன்னுரிமை கொடுத்து, அணியின் நிர்வாகம் மற்றும் தேர்வுக் குழுவினரின் முடிவில் நம்பிக்கை வைத்திருக்கிறேன். அந்த நம்பிக்கை தொடரும். எனினும் எனது திறமை அங்கீகரிக்கப்பட வேண்டியதும் அவசியம்.

    ஒரு வீரராக நான் அணிக்காகவே விளையாடி இருக்கிறேன். அதனால் எனக்கு தொடர் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். இது மட்டுமே எனது விருப்பம்’’ என்றார்.
    அயர்லாந்து, இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இருந்து ரஹானே நீக்கம் செய்யப்பட்டது கடினமான முடிவாகும் என்று கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். #Rahane #Ganguly
    கொல்கத்தா:

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரஹானே, அயர்லாந்து 20 ஓவர் தொடர் மற்றும் இங்கிலாந்தில் நடைபெறும் 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.

    இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கருத்து தெரிவிக்கையில், ‘ஒருநாள் மற்றும் 20 ஓவர் அணியில் இருந்து ரஹானே நீக்கம் செய்யப்பட்டது கடினமான முடிவாகும். நான் தேர்வாளராக இருந்தால் அம்பத்தி ராயுடுவுக்கு பதிலாக ரஹானேவை தான் தேர்வு செய்து இருப்பேன். அம்பத்தி ராயுடுவை விட இங்கிலாந்து சூழ்நிலையில் ரஹானே சிறப்பாக செயல்படக்கூடியவர்.

    இங்கிலாந்து ஆடுகளங்களில் ரஹானே நல்ல சாதனை படைத்து இருக்கிறார்’ என்றார். #Rahane #Ganguly #ENGvIND
    ×