என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    ஆர்.சி.பி.க்கு எதிராக அரைசதம் விளாசிய ரகானே
    X

    ஆர்.சி.பி.க்கு எதிராக அரைசதம் விளாசிய ரகானே

    • கொல்கத்தா பவர் பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் குவித்தது.
    • ரகானே 26 பந்தில் அரைசதம் விளாசிய நிலையில், 56 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    ஐபிஎல் 2025 சீசனின் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக ஆர்சிபி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் குயின்டான் டி காக், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை ஹேசில்வுட் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் டி காக். 3-வது பந்தில் கேட்ச் கொடுத்தார். அதை சுயாஷ் சர்மா தவறவிட்டார்.

    ஆனால் 5-வது பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து சுனில் நரைன் உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். முதல் 3 ஓவரில் கொல்கத்தா 1 விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் அதிரடியாக ரன் குவித்தது.

    4-வது ஓவரை ரஷிக் சலாம் வீசினார். இதனால் ஓவரில் 16 ரன்கள் விளாசியது கொல்கத்தா. குருணால் பாண்ட்யா வீசிய அடுத்த ஓவரில் 15 ரன்களும், யாஷ் தயால் வீசிய 6-வது ஓவரில் 20 ரன்களும் சேர்த்தது. இதனால் பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் குவித்தது.

    9-வது ஓவரை சுயாஷ் சர்மா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை சிக்சருக்கு தூக்கி ரகானே 25 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஓவரில் கொல்கத்தா 22 ரன்கள் சேர்த்தது. அணியின் ஸ்கோர் 10 ஓவரில் 107 ரன்கள் எடுத்திருக்கும்போது சுனில் நரைன் 26 பந்தில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து வெங்கடேஷ் அய்யர் களம் இறங்கினார். சிறப்பாக விளையாடிய ரகானே 11ஆவது ஓவரின் 3 பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 31 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 109 ரன்கள் எடுத்திருந்தது.

    Next Story
    ×