search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PM Narendra Modi"

    நகர்ப்புற மாவோயிஸ்டு களை காங்கிரஸ் ஆதரிக் கிறது என்று சத்தீஷ்கார் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். #NarendraModi #Congress
    ஜக்தல்பூர்:

    90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஷ்கார் மாநில சட்டசபைக்கு வருகிற 12 மற்றும் 20-ந்தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அந்த மாநிலத்தில் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பிரதமர் மோடி, பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து சத்தீஷ்கார் மாநிலத்தில் முதல் முறையாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பஸ்தார் பகுதியில் நேற்று அவர் பிரசாரம் மேற்கொண்டார். அங்குள்ள ஜக்தல்பூர் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மோடி காங்கிரசை கடுமையாக தாக்கிப் பேசினார்.

    அவர் கூறியதாவது:-

    பழங்குடியின மக்கள் என்றாலே காங்கிரசுக்கு கேலியாக தெரிகிறது. ஒரு முறை இங்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்க நான் வந்தபோது பழங்குடியினர் அணியும் தொப்பியை அணிந்தேன். அதை காங்கிரஸ் மிகவும் கிண்டல் செய்தது. இது பழங்குடியின மக்களை அவமதிக்கும் செயல்.

    மறைந்த பிரதமர் வாஜ்பாயின் லட்சியம் சத்தீஷ்கார் மாநிலத்தை வளமாக்கவேண்டும் என்பது ஆகும். அதை நிறைவேற்றும் வரை ஓயமாட்டேன். மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பஸ்தார் பகுதியின் வளர்ச்சிக்கு எதையும் காங்கிரஸ் செய்யவில்லை. மாவோயிஸ்டு பயங்கரம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

    தலித்துகள், நலிவடைந்த பிரிவினர், பழங்குடியினர் பற்றி காங்கிரஸ் நிறைய பேசுகிறது. அதே நேரம் அவர்களை ஓட்டு வங்கியாக மட்டுமே கருதுகிறதே தவிர ஒருபோதும் மனிதர்களாக மதிப்பதில்லை.

    நகர்ப்புற மாவோயிஸ்டுகள் நகரங்களில் குளுகுளு வசதி கொண்ட வீடுகளில் சுகபோகமாக வசிக்கின்றனர். மிகவும் பளிச்சென்று காணப்படுகிறார்கள். அவர்களுடைய குழந்தைகள் வெளிநாடுகளில் படிக்கின்றனர். ஆனால் இவர்கள்தான் பழங்குடியின இளைஞர்களை ரிமோட் கன்ட்ரோல் மூலம் தாக்குதல் நடத்துவதற்கு தூண்டி விடுகின்றனர். இவர்கள் ஏழ்மையில் உழலும் பழங்குடியின இளைஞர்களின் வாழ்க்கையை சீரழித்துவிட்டனர்.

    இதுபோன்ற நகர்ப்புற மாவோயிஸ்டுகள் மீது நடவடிக்கை எடுக்க முயன்றாலோ, பஸ்தார் பகுதிக்கு வந்து மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பேசினாலோ அதை காங்கிரஸ் எதிர்க்கிறது?. இது போன்றவர்களை காங்கிரஸ் ஆதரிப்பது ஏன்?... மாவோயிஸ்டு ஆதரவு மனோபாவத்தில் இருந்து காங்கிரஸ் வெளியே வரவேண்டும்.

    மாவோயிஸ்டுகளை ஆதரிப்பவர்கள் யாரும் இங்கே வெற்றி பெறக்கூடாது. பஸ்தார் பகுதியில் உள்ள அத்தனை சட்டசபை தொகுதிகளிலும் பா.ஜனதாவுக்கு நீங்கள் வெற்றியைத் தரவேண்டும். வேறு யாராவது இங்கே வெற்றி பெற்றால் அது பஸ்தார் பகுதிக்கே கறையாக அமைந்துவிடும்.

    இவ்வாறு அவர் பேசினார். 
    டெல்லியில் சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்துக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டி, சிறப்புரையாற்றினார். #PMNarendraModi #IICC #Delhi
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள துவாரகா பகுதியில் அமையவுள்ள சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்துக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். இந்த அடிக்கல் நாட்டு விழாவில் அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

    புதிதாக அமையவுள்ள இந்த மையத்தில் மாநாட்டுக்கான அரங்கம், கண்காட்சி அரங்கம், ஆலோசனைக்கூடம், விடுதிகள், சந்தை மற்றும் பணியாளர்களுக்கான அலுவலகம் ஆகிய அனைத்தும் ஒரே சுற்றுவட்ட எல்லைக்குள் அமையவுள்ளது.



    அடிக்கல் நாட்டு விழாவைத்தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, இந்த திட்டத்துக்கான மதிப்பு 26 ஆயிரம் கோடி ரூபாய் என தெரிவித்தார். மேலும், 80 கோடி இளைஞர்களின் ஆற்றல் மற்றும் திறனுக்காக இந்த மையம் அமைக்கப்படுவதாகவும், இது மாநாடு மற்றும் கண்காட்சி மையம் மட்டுமன்றி, சர்வதேச தொழில் மையமாகவும் விளங்கும் எனவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

    இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, தவுலா கவுன் என்ற இடத்தில் இருந்து துவாரகா வரையில் மெட்ரோ ரெயில் மூலம் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #PMNarendraModi #IICC #Delhi
    2014-ல் இருந்ததை விட மிகப்பெரிய பாஜக அலை நாடு முழுவதும் வீசுவதால் எதிர்க்கட்சிகள் அச்சத்தில் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #PMModi #BJP
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி, ‘நமோ’ செல்போன் செயலி மூலம் அடிக்கடி பாஜக தொண்டர்களிடையே உரையாற்றி வருகிறார். அந்தவகையில் அருணாச்சல் மேற்கு, காசியாபாத், ஹசாரிபாக், ஜெய்ப்பூர் ஊரகம் மற்றும் நவடா பாராளுமன்ற தொகுதிகளை சேர்ந்த பாஜக தொண்டர்களிடம் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    2013 - 2014ம் ஆண்டுகளில் இருந்ததை விட தற்போது நாடு முழுவதும் மிகப்பெரிய பாஜக அலை வீசுகிறது. இதைப்பார்த்து எதிர்க்கட்சிகள் அச்சமடைந்துள்ளன. இந்த அலையே எதிர்க்கட்சிகளை ஒன்றிணைய வைத்துள்ளது. இல்லையென்றால் அவை ஒவ்வொன்றும் அடித்துச் செல்லப்படும்.

    எதிர்க்கட்சிகள் தங்கள் நம்பிக்கையின் நெருக்கடியை உணர்ந்துள்ளன. அவை தூக்கத்தில் இருந்து எழும்ப மறுக்கின்றன. பிற பிரச்சினைகளை பற்றி பேசுவதாலும், அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை அடுக்குவதாலும் வாக்காளர்களிடம் நம்பிக்கையை பெற முடியும் என நினைக்கின்றன. ஆனால் இந்திய மக்கள் இன்று உணர்திறன் மிக்கவர்களாகவும், அனைத்தையும் அறிந்தவர்களாகவும் இருக்கின்றனர்.



    கடந்த நான்கரை ஆண்டுகளில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் குட்டு அம்பலமாகி இருக்கிறது. பாஜகவுக்கு வாக்களித்த மக்கள், ஊழலில் திளைத்த காங்கிரசை ஆட்சியில் இருந்து தூக்கி எறிந்தனர். ஆனால் எதிர்க்கட்சியாக கூட தங்கள் கடமையை அவர்கள் ஆற்றவில்லை.

    ஊழலில் மூழ்கி இருந்த நிலக்கரி, தொலைத்தொடர்பு போன்ற துறைகளை அதிலிருந்து வெளியே எடுத்த எங்கள் அரசு, இன்று வேகமாக வளர்ச்சியடையும் துறையாக தொலைத்தொடர்பு துறையை மாற்றி இருக்கிறது.

    பாஜகவில் மட்டுமே சாதாரண தொண்டரும் அதன் தலைவராக முடியும். நாளை என்னுடைய இடத்துக்கும் வேறு ஒருவரால் வர முடியும். ஆனால் காங்கிரஸ் கட்சியோ ஒரு குடும்பத்தின் கட்சி. அந்த குடும்பத்தின் நலனுக்காக பல தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தியாகம் செய்து வருகின்றனர். அதைப்பார்த்து பரிதாபம் அடைகிறேன்.

    பாஜகவின் ஒவ்வொரு தொண்டரும் தனது வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதியில் கட்சியை பலப்படுத்த வேண்டும். எனது வாக்குச்சாவடியே வலிமையானது என்பதை ஒவ்வொருவரும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். #PMModi #BJP
    உகாண்டா நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அங்கு சர்தார் வல்லபாய் படேலின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார். #ModiinUganda
    கம்பாலா:

    அரசுமுறை பயணமாக நேற்று உகாண்டா வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் மத்திய பகுதியில் உள்ள கடற்கரை நகரமான எண்ட்டெபே நகர விமான நிலையத்தில் உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி தலைமையில் முப்படை அணிவகுப்புடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் இருநாடுகளின் உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக மோடி - யோவேரி முசெவேனி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்தியா - உகாண்டா இடையில் 4 புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. ராணுவ ஒத்துழைப்பு, விசா நீட்டிப்பு, கலாசார பரிவர்த்தனை தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ஏற்படுத்தப்பட்டன.

    மேலும், உகாண்டா தலைநகர் கம்பாலாவில் உள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு இந்தியாவின் அன்பளிப்பாக புற்றுநோய் சிகிச்சைக்கான அதிநவீன கருவிகள் வழங்கப்படும் என்றார்.

    இந்நிலையில், தலைநகர் கம்பாலாவில் அமைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேலின் மார்பளவு சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.



    அதன்பின்னர், கம்பாலாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் இடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, அடுத்த ஆண்டு இந்தியாவின் அலகாபாத் நகரில் நடைபெறவுள்ள கும்பமேளா நிகழ்ச்சி மற்றும் வாரணாசியில் நடைபெறும் பிரவாசி பாரதீய திவாஸ் நிகழ்ச்சியில் நீங்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். அந்த விழாவுக்கு உங்களை அழைக்கவே நான் இங்கு வந்துள்ளேன்.

    உகாண்டாவில் அடுத்த தடவை நீங்கள் வாங்கும் ஸ்மார்ட்போன்களில் ஒன்று இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

    உகாண்டா பாராளுமன்றத்தில் சிறப்புரையாற்றும் பிரதமர் மோடிக்கு எண்ட்டெபி நகரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் அதிபர் யோவேரி முசெவேனி விருந்து அளிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #ModiinUganda
    நொய்டாவில் உலகின் மிகப்பெரிய செல்போன் தொழிற்சாலையை இன்று திறந்து வைத்த பிரதமர் மோடி கொரியா தயாரிப்பு இல்லாத நடுத்தர இந்திய வீடுகள் கிடையாது என குறிப்பிட்டார்.
    புதுடெல்லி:

    புதுடெல்லி அருகே உள்ள தொழில் நகரமான நொய்டாவில் தென்கொரியா நாட்டு பிரபல மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனமான சாம்சங் 35 ஏக்கர் பரப்பளவில் அமைத்துள்ள உலகின் மிகப்பெரிய செல்போன் தொழிற்சாலையை இன்று மாலை தென்கொரியா அதிபர் மூன் ஜே இங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.

    இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, தற்கால டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் மனிதர்களின் வாழ்க்கை முறைகள் மிகவும் சுலபமாகி விட்டதாக குறிப்பிட்டார்.


    இந்தியாவில் சுமார் 40 கோடி மக்கள் ஸ்மார்ட் போன்களையும், 32 கோடி பேர் இண்டர்நெட் வசதியையும் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளில் 120 செல்போன் தொழிற்சாலைகள் உருவாகியுள்ளன.

    இவற்றில் 50 சதவீதம் தொழிற்சாலை நொய்டா நகரில் அமைந்துள்ளது. இதன் மூலம் சுமார் 4 லட்சம் மக்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

    இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில் கொரியா நிறுவனமான சாம்சங் தனி இடத்தை பிடித்துள்ளது என்பதில் சந்தேகமே இல்லை.

    நான் சில தொழிலதிபர்களை சந்திக்கும்போது நடுத்தர இந்திய மக்களின் வீடுகளில் கொரியா நாட்டு பொருட்கள் இல்லாத வீடுகளே இருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளேன் எனவும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். #NoidaSamsungmobilefactory #MoonJae-inModi
    டெல்லியில் அமைக்கப்பட உள்ள மத்திய அரசின் வர்த்தக அமைச்சக கட்டிடத்தின் அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். #VanijyaBhawan #PMModi
    புதுடெல்லி:

    டெல்லி அக்பர் சாலையில் அமைக்கப்பட உள்ள வர்த்தக அமைச்சக கட்டிடமான வன்ஜியா பவன் அடிக்கல் நாட்டுதல் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அடிக்கல் நாட்டினார். அதன் பின் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய மோடி,

    இந்தியா தாமதமாக வேலை செய்யும் பழக்கத்திலிருந்து விடுபட்டுள்ளது. தொழில்துறையில் ஜி.எஸ்.டி. பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்ட பின் 54 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வரி செலுத்த தொடங்கியுள்ளனர். இதனால் 1 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. புதிய தொழில்நுட்பங்கள் தொழில்முறைகளை எளிதாக்கி உள்ளன. இது ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சி அடைந்து வருகிறது.


    உலக அளவில் இந்தியாவின் வர்த்தகத்தை 3.4 சதவீதம் உயர்த்த வேண்டும். அதற்காக எண்ணெய் போன்ற துறைகளில் பொருட்களை இறக்குமதி செய்வதை காட்டிலும், நம் நாட்டிலேயே உருவாக்குவதை ஊக்குவிக்க வேண்டும். கடந்த ஆண்டு ஜி.டி.பி. 7.7 சதவீதமாக இருந்தது. அதனை அதிகரிக்க வேண்டும்.

    வன்ஜியா பவனின் கட்டிடப்பணிகள் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்பாகவே முடிவடைந்து விடும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். #VanijyaBhawan  #PMModi

    பிரதமர் நரேந்திர மோடி திருமணம் ஆகாதவர் என்று மத்திய பிரதேச மாநில கவர்னர் ஆனந்தி பென் பட்டேல் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #PMModi
    போபால்:

    நரேந்திர மோடி குஜராத் முதல்-மந்திரியாக இருந்து பின்னர் பிரதமர் ஆனார். அவர், முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகியதும் ஆனந்தி பென் பட்டேல் முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டார்.

    அவர், தற்போது மத்திய பிரதேச மாநில கவர்னராக இருந்து வருகிறார். அங்குள்ள கர்தா மாவட்டத்தில் அவர் சுற்றுப்பயணம் செய்தார்.

    திமாரி என்ற இடத்தில் அங்கன்வாடி நிகழ்ச்சி ஒன்றில் கவர்னர் ஆனந்தி பென் பட்டேல் கலந்து கொண்டு அங்கன்வாடி ஊழியர்கள் மத்தியில் பேசினார்.

    அப்போது பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் குறித்து புகழ்ந்து பேசிய ஆனந்தி பென் பட்டேல், நரேந்திர மோடி திருமணம் ஆகாதவர் என்று கூறினார்.

    அவர், தனது பேச்சில் நரேந்திர மோடி திருமணம் ஆகாதவர் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அவர் திருமணம் ஆகாதவர் என்றாலும் கூட பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரச்சனைகள் குறித்து நன்றாக அறிந்தவர்.

    குழந்தைகள் பிறப்பதற்கு முன்பும், பிறந்த பிறகும் ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும் தெரிந்தவர் என்று குறிப்பிட்டார்.


    பிரதமர் மோடி ஜசோதா பென் என்பவரை இளம் வயதில் திருமணம் செய்திருந்தார். ஆனால், திருமணமான குறுகிய காலத்திலேயே அவர்கள் பிரிந்து வாழ்ந்தனர்.

    மோடி திருமணம் ஆகாதவர் என்றே முதலில் கருதப்பட்டது. 2014 பாராளுமன்ற தேர்தலின் போது கூட வேட்பு மனுவில் ஜசோதா பென் தனது மனைவி என்று குறிப்பிட்டு இருந்தார்.

    ஆனால், ஆனந்தி பென் பட்டேல் நரேந்திர மோடி திருமணம் ஆகாதவர் என்று குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் பேசியவற்றை செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். #PMModi
    மத்திய அரசு திட்டங்களின் செயல்பாடு குறித்து, மந்திரிகளுடன் பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை நடத்துகிறார். #NarendraModi
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இந்த 4 ஆண்டுகால ஆட்சியில் மோடி அரசு பல்வேறு மக்கள் நல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

    அடுத்த ஆண்டில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற இருப்பதால், இந்த திட்டங்களின் செயல்பாடுகள் எப்படி உள்ளன? அவற்றின் பலன் மக்களை முழுமையாக சென்று அடைந்து இருக்கிறதா? என்பது பற்றி பிரதமர் மோடி நாளை (புதன்கிழமை) மந்திரிகள் குழுவுடன் முக்கிய ஆலோசனை நடத்த இருக்கிறார். நாடாளுமன்ற இல்லத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

    மந்திரிகள் குழு கூட்டம் நடந்து 7 மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில், இப்போது இந்த கூட்டம் நடைபெறுகிறது.

    சமீபத்தில் உத்தரபிரதேசம், பீகார், மராட்டியம் உள்ளிட்ட சில மாநிலங்களில் சில நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், சில சட்டசபை தொகுதிகளுக்கும் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் மந்திரிகள் குழு கூட்டத்தை பிரதமர் மோடி கூட்டி இருப்பதால், இந்த பிரச்சினை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று கருதப்படுகிறது.

    போதிய மழை பெய்யாததால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், அதற்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள், அவற்றின் செயல்பாடு போன்றவை பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. 
    ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள சீனா செல்லும் பிரதமர் மோடி, நாளை அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசுகிறார். #NarendraModi #XiJinping
    புதுடெல்லி:

    ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் அமைப்பில் சீனா, ரஷியா, கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்று உள்ளன. இந்தியாவும், பாகிஸ்தானும் கடந்த ஆண்டுதான் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக சேர்ந்தன.

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 18-வது மாநாடு சீனாவின் ஷான்டோங் மாகாணத்தில் உள்ள கிங்தாவோ நகரில் நாளை (சனிக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. சீன அதிபர் ஜின்பிங் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவது, இந்த பிராந்தியத்தில் அமைதியை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.

    மாநாட்டில் கலந்து கொள்ளும் தலைவர்களுக்கு நாளை மாலை ஜின்பிங் விருந்து அளிக்கிறார். இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மேலும் நாளை அவர் ஜின்பிங்கை தனியாக சந்தித்து பேசுகிறார்.

    சீனாவில் உள்ள வூஹன் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் மோடியும், ஜின்பிங்கும் சாதாரண முறையில் சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து பேசினார்கள். அதன்பிறகு இப்போது அவர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள்.

    மாநாட்டில் கலந்து கொள்ள வரும் பிற நாடுகளின் தலைவர்களை மோடி சந்தித்து பேச இருக்கிறார்.

    மேற்கண்ட தகவல்களை வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

    ஆனால் பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் உசைனை பிரதமர் மோடி சந்தித்து பேசுவாரா? என்பது பற்றி தகவல் எதுவும் வெளியாகவில்லை.   #NarendraModi #XiJinping #Tamilnews 
    சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் மோடி ஆகியோருக்கு இடையே நடந்த சந்திப்பின்போது 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. #NarendraModi #Singapore #MOU
    சிங்கப்பூர்:

    இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு 5 நாள் பயணமாக கடந்த 29-ந்தேதி புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் சிங்கப்பூர் போய் சேர்ந்தார். நேற்று அவர் அந்நாட்டு பிரதமர் லீ சியன் லூங்கை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.



    பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகளில் பரஸ்பர நலன்கள், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நட்புறவு கடற்சூழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்தினர். மேலும் இருநாடுகளுக்கு இடையிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தையும் அவர் கள் மறுஆய்வு செய்தனர்.

    இறுதியில் இரு நாடுகளுக்கு இடையே கடற்படை தளவாட ஒத்துழைப்பு உள்பட 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து போடப்பட்டன. பின்னர் இரு தலைவர்களும் கூட்டறிக்கை ஒன்றையும் வெளியிட்டனர். அதில், ‘வருகிற நாட்களில் சைபர் பாதுகாப்பு, பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதம் போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பே பிரதானமாக இருக்கும்’ என பிரதமர் மோடி கூறியிருந்தார்.



    இதைப்போல இருநாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு உறவுகள் வலுவாகி இருப்பதாக பாராட்டியுள்ள லூங், இரு நாட்டு கூட்டு கடற்பயிற்சியின் 25-வது ஆண்டு கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு நடைபெறும் என குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த சந்திப்பின் போது 6-வது நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிற்பம் ஒன்றை சிங்கப்பூர் பிரதமருக்கு மோடி பரிசளித்தார். இந்தியாவில் இருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு புத்தமதம் பரவியதை நினைவுகூரும் வகையில் இந்த பரிசை அவர் வழங்கினார்.



    பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரதமர் மோடி, சிங்கப்பூர் முன்னாள் தூதர் டாமி கோவுக்கு (வயது 80) இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதை வழங்கி கவுரவித்தார். அமெரிக்கா மற்றும் ஐ.நா.வுக்கான சிங்கப்பூர் தூதராக பணியாற்றி இருக்கும் இவர், அமெரிக்கா-சிங்கப்பூர் இடையிலான தாராள வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.

    இந்தியா ஆசியான் கூட்டமைப்பின் வெள்ளிவிழா ஆண்டையொட்டி கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு இந்த விருதை அறிவித்து இருந்தது.   #NarendraModi #Singapore #MOU

    மன் கி பாத் வானொலி உரையில் இன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக பேசிய பிரதமர் மோடி, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை மக்கள் கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். #Mannkibaat #PMModi #shunplastic
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மன் கி பாத்’ என்னும் நிகழ்ச்சியின் மூலம் வானொலி வழியாக நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார்.

    இன்றைய உரையில்சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக பேசிய பிரதமர் மோடி, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை மக்கள் கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.  

    உலகச் சுற்றுச்சூழல் தினமான ஜுன் ஐந்தாம் தேதியை அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என தெரிவித்த மோடி, செடிகளை நடுவது மட்டும் போதாது, அது மரமாக வளரும்வரை நாம் அக்கறை செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

    கடுமையான வெயில், அளவில்லாத மழை, வெள்ளம் மற்றும் அதிகமான குளிரால் பாதிக்கப்படும்போது அனைவருமே நிபுணர்களாக மாறி புவி வெப்பமயமாதலைப் பற்றியும், பருவநிலை மாற்றத்தை பற்றியும் பேசுகிறோம்.

    ஆனால், வெற்றுப் பேச்சுகளால் இந்த பிரச்சனைகளுக்கு ஏதாவது தீர்வு உண்டா? சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், இயற்கைச் சூழலை பராமரிக்கவும் தேவையான அக்கறை நமக்குள் உருவாக வேண்டும். இந்த ஆண்டின் சுற்றுச்சூழல் தினத்தை முன்னின்று நடத்துவதில் இந்தியா பெருமிதம் கொள்கிறது.

    பிளாஸ்டிக்கால் ஏற்படும் மாசுப்பாட்டை ஒழிப்பது இந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினத்துக்கான கருப்பொருளாக முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த கருப்பொருளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, மாசு விளைவிக்கும் குறைந்ததரம் கொண்ட பிளாஸ்டிக் பொருட்களையும், பாலிதீனையும் பயன்படுத்த வேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன்.

    பிளாஸ்டிக் பயன்பாடு நமது இயற்கையிலும், வனவிலங்கு வாழ்க்கை முறையிலும், நனது ஆரோக்கியத்திலும் எதிர்விளைவான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார். #Mannkibaat #PMModi #shunplastic
    தலைநகர் டெல்லியை உ.பி மாநிலத்தின் மீரட் நகருடன் இணைக்கும் 135 கி.மீ நீளமுள்ள இந்தியாவில் முதல் ஸ்மார்ட் நெடுஞ்சாலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். #delhimeerutexpressway #smarthighway
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் வரை, ரூ.11,000 கோடி செலவில் ஸ்மார்ட் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதுவே நாட்டின் முதல் ஸ்மார்ட் மற்றும் பசுமை வழிச் சாலை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த சாலையின் முதல்கட்ட பாதையை இன்று காலை பொத்தானை அழுத்தி, திறந்து வைத்த பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணம் செய்தார். இதனைத் தொடர்ந்து, திறந்த ஜீப்பில் இந்த சாலை வழியே பயணம் செய்தார். சாலையின் இருபுறத்திலும் திரண்டிருந்த மக்கள் பிரதமரை பார்த்து உற்சாகமாக கைகளை அசைத்து வாழ்த்து தெரிவித்தனர்.



    மொத்தம் 135 கி.மீ நீளம் கொண்ட இந்த சாலையில், ஒவ்வொரு 500 மீட்டருக்கும் மழைநீர் சேமிப்பு வசதி உள்ளது. வழிநெடுகிலும் உள்ள விளக்குகள் சூரிய ஒளி மின்சக்தி மூலம் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.



    வாகனங்களின் வேகத்தை கேமராக்கள் மூலம் கணக்கிட்டு, அதிவேக வாகனங்களுக்கு தானாக அபராத ரசீது வழங்கப்படுகிறது. மேலும், இந்த சாலையில் பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் வசதியும் உள்ளது.

    இந்த புதிய ஸ்மார்ட் நெடுஞ்சாலை வழியாக  டெல்லியில் இருந்து 85 கி,மீ தூரத்தில் உள்ள மீரட் நகரை 45 நிமிட பயண நேரத்தில் சென்றடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது. #delhimeerutexpressway #smarthighway
    ×