search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Petrol Diesel Price"

    • சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
    • தொடர்ந்து 278-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.

    சென்னை:

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

    இந்த நிலையில், சென்னையில் கடந்த 277 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    அந்த வகையில் தொடர்ந்து 278-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாகிஸ்தானில் பெட்ரோல் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.22.20 உயர்த்தப்பட்டு ரூ.272-க்கு விற்கப்படுகிறது.
    • மண்ணெண்ணெய் ஒரு லிட்டருக்கு ரூ.12.90 அதிகரிக்கப்பட்டு ரூ.202.73 ஆக உள்ளது.

    பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். ஒரு லிட்டர் பால் ரூ.210-க்கு விற்கப்படுகிறது. கோழிகறி கிலோ ரூ.780 ஆக உள்ளது.

    இந்த நிலையில் பாகிஸ்தானில் பெட்ரோல் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.22.20 உயர்த்தப்பட்டு ரூ.272-க்கு விற்கப்படுகிறது. அதே போல் மண்ணெண்ணெய் ஒரு லிட்டருக்கு ரூ.12.90 அதிகரிக்கப்பட்டு ரூ.202.73 ஆக உள்ளது. டீசல் லிட்டருக்கு ரூ.9.60 உயர்த்தப்பட்டு ரூ.196.68-க்கு விற்கப்படுகிறது.

    இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக அரசு அறிவித்துள்ளது. அதே போல் பொது விற்பனை வரி 17 சதவீதமாக இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    • 2022 ஏப்ரல் 6-ந்தேதிக்கு பிறகு கடந்த 278 நாட்களாக, எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
    • தொடக்கத்தில் சில மாதங்கள் கச்சா எண்ணெய் விலை உயர்வால் இழப்பு ஏற்பட்டாலும், அதன்பின் பல மாதங்களாக பெட்ரோல் விற்பனையில் லாபம் கொட்டிக்கொண்டிருக்கிறது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவதன் காரணமாக பெட்ரோல் விற்பனையில் எண்னெய் நிறுவனங்களுக்கு ரூ.10 கூடுதல் லாபம் கிடைக்கிறது. ஆனாலும், சில்லரை விற்பனை விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முன்வராதது கண்டிக்கத்தக்கது.

    2022 ஏப்ரல் 6-ந்தேதிக்கு பிறகு கடந்த 278 நாட்களாக, எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தொடக்கத்தில் சில மாதங்கள் கச்சா எண்ணெய் விலை உயர்வால் இழப்பு ஏற்பட்டாலும், அதன்பின் பல மாதங்களாக பெட்ரோல் விற்பனையில் லாபம் கொட்டிக்கொண்டிருக்கிறது.

    கடந்த நவம்பர் மாதத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.6 லாபம் கிடைத்த நிலையில், பெட்ரோல், டீசல் ஆகிய இரண்டின் விலைகளையும் லிட்டருக்கு ரூ. 2 குறைக்கப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. ஆனால், திடீரென அம்முடிவு கைவிடப்பட்டதன் காரணம் புரியவில்லை.

    மக்களை வருத்தி எண்ணெய் நிறுவனங்கள் லாபம் ஈட்டக்கூடாது. பெட்ரோல் விற்பனையில் கிடைக்கும் கூடுதல் லாபத்தை மக்களுக்கு வழங்கும் வகையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.10 குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இரண்டு முறை பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்திருப்பதாக மத்திய மந்திரி தெரிவித்தார்.
    • சமையல் எரிவாயு விலையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.

    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்ததை அடுத்து பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் கடந்த சில வாரங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. கச்சா எண்ணெய் விலை குறைந்ததற்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

    எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்து பெட்ரோலியத் துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி பேசியதாவது:-

    இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளில் எரிபொருள் விலை மிக குறைந்த அளவில் மட்டுமே உயர்த்தப்பட்டு இருக்கிறது. சர்வதேச அளவில் கச்சா எண்னெய் விலை உயர்வால் எண்னெய் நிறுவனங்களுக்கு ரூ.27276 கோடி இழப்பு ஏற்பட்டபோதும், 2022 ஏப்ரல் 6-க்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவில்லை. இதனால் 3 பெட்ரோலிய நிறுவனங்களும் இழப்பை சந்தித்துள்ளன.

    சமையல் எரிவாயு விலை உயர்ந்த போதும் நுகர்வோருக்கு பாதிப்பின்றி அதை கட்டுப்பாட்டில் வைத்திருக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. நவம்பர் 2021 மற்றும் மே 2022 என 2 முறை பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்திருக்கிறது. இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை குறைவாகவே இருக்கிறது.

    எரிபொருள் விலையை கட்டுப்படுத்த வாட் வரியை குறைக்குமாறு மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தும் பாஜக ஆளும் மாநிலங்கள் தவிர பிற மாநிலங்கள் வரியை குறைக்கவில்லை. தமிழகம், மேற்கு வங்காளம், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கேரளா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் வரியை குறைக்காததால் அங்கெல்லாம் விலை அதிகமாக இருக்கிறது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இந்த மாநிலங்களில் வரியை குறைக்கச் சொல்லவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மத்திய மந்திரியின் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    • பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு பத்து ரூபாய் வரை குறைத்திருக்க முடியும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
    • பணவீக்கம் காரணமாக மக்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ள நிலையில், பிரதமர் தனது வரி வசூலில் மூழ்கி இருப்பதாக விமர்சித்துள்ளார்.

    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வெகுவாக குறைந்தாலும், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்கவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

    இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு பத்து ரூபாய் வரை குறைத்திருக்க முடியும் என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கடந்த 6 மாதங்களில் கச்சா எண்ணெய் விலை 25 சதவிகிதம் குறைந்திருப்பதாகவும், ஆனால் மத்திய அரசோ பெட்ரோல், டீசல் விலையில் ஒரு ரூபாயைக் கூட குறைக்கவில்லை என்று கூறியுள்ளார். பணவீக்கம் காரணமாக மக்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ள நிலையில், பிரதமர் தனது வரி வசூலில் மூழ்கி இருப்பதாக விமர்சித்துள்ளார்.

    இதேபோல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் மத்திய அரசை கடுமையாக சாடி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'மே 16, 2014 அன்று (டெல்லி) - ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 107.09 அமெரிக்க டாலர். பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.71.51, டீசல் விலை ரூ.57.28 ஆக இருந்தது. டிசம்பர் 1, 2022 அன்று - ஒரு பேரல் கச்சா எண்ணெய் 87.55 அமெரிக்க டாலர்களாக இருந்தது. பெட்ரோல் விலை ரூ.96.72, டீசல் விலை ரூ 89.62 ஆக உள்ளது. கச்சா எண்ணெய் விலையானது 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்தது, ஆனால் பாஜகவின் கொள்ளை அதிகமாக உள்ளது' என கூறி உள்ளார்.

    • 191-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.
    • சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சென்னை:

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

    அந்த வகையில், கடந்த 190 நாட்களாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து 191-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.

    இதனால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • பெட்ரோல் விற்பனையில் கூடுதல் லாபம் லிட்டருக்கு 6 ரூபாயைத் தாண்டி விட்டது;
    • டீசல் விற்பனையில் இழப்பு லிட்டருக்கு 5 ரூபாய்க்கும் கீழாக குறைந்து விட்டது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகளை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் மறுத்து வருகின்றன.

    சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக சமையல் எரிவாயு உற்பத்திச் செலவும் பெருமளவில் குறைந்துள்ளது. அதன்படி வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 6 மாதங்களில் ரூ.615 குறைத்துள்ளன. ஆனால், வீட்டுப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை ஒரு பைசா கூட குறைக்கப்படவில்லை. மாறாக, மே, ஜூலை காலத்தில் இந்த வகை சமையல் எரிவாயு விலை ரூ.103 உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த பாகுபாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது.

    சர்வதேச சந்தையில் இனிவரும் காலங்களில் கச்சா எண்ணெய் விலைகள் தொடர்ந்து வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் விற்பனையில் கூடுதல் லாபம் லிட்டருக்கு 6 ரூபாயைத் தாண்டி விட்டது; டீசல் விற்பனையில் இழப்பு லிட்டருக்கு 5 ரூபாய்க்கும் கீழாக குறைந்து விட்டது. சமையல் எரிவாயு விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ரூ.22,000 கோடி மானியம் கொடுத்து மத்திய அரசு ஈடு செய்து விட்ட நிலையில், இப்போது எரிவாயு விற்பனையில் ஓரளவு லாபம் கிடைக்கத் தொடங்கியுள்ளது. ஒட்டு மொத்தமாக எரிபொருள் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு லாபம் கிடைக்கும் நிலையில் அதன் பயன்களை வாடிக்கையாளர்களுக்கும் பகிர்ந்தளிக்க முன்வர வேண்டும்.

    விலைவாசி உயர்வால் இந்திய மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வரும் நிலையில், அவர்களின் துயரத்தைப் போக்க வேண்டியது எண்ணெய் நிறுவனங்களின் கடமையாகும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை குறைப்பதன் மூலம் அக்கடமையை எண்ணெய் நிறுவனங்கள் நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இந்த ஆண்டு ரஷியா, உக்ரைன் நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட போரால், கச்சா எண்ணெய் விலை மிகவும் அதிகரித்தது.
    • 137 நாட்களுக்கு பின், மார்ச் 22-ந் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது.

    சென்னை:

    பொதுத்துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன.

    சர்வதேச சந்தையில், 2021ல் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. இதனால், உள்நாட்டில் தலா ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.100யை தாண்டியது.

    அப்போது தீபாவளி பண்டிகையின் போது மத்திய அரசு தீபாவளி பரிசு வழங்கும் வகையில், அதற்கு முந்தைய நாள் இரவு, பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 10 ரூபாயும் குறைத்தது.

    இந்த ஆண்டு ரஷியா, உக்ரைன் நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட போரால், கச்சா எண்ணெய் விலை மிகவும் அதிகரித்தது. இதனால் 137 நாட்களுக்கு பின், மார்ச் 22-ந் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது.

    பின்னர், தமிழகத்தில் மே 21-ந்தேதி லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய்க்கும், டீசல் 104.77 ரூபாய்க்கும் விற்பனையானது. அன்று, மத்திய அரசு, பெட்ரோல் மீதான கலால் வரியை ரூ. 8, டீசல் மீதான வரியை ரூ.6 குறைத்தது. இதையடுத்து, தமிழகத்தில் பெட்ரோல் விலை, 102.63, டீசல் விலை ரூ.94.24 ஆக குறைந்தன.

    இதுவரை 150 நாட்கள் முடிவடைந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை மாற்றப்படவில்லை. இமாச்சல் பிரதேசத்தில் அடுத்த மாதமும், பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், இந்தாண்டின் இறுதியிலும் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.

    எனவே, மத்திய அரசு, வருகிற தீபாவளிக்கு மக்களுக்கு பரிசாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அரியலூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைக்க கோரி மத்திய அரசை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் பேரணியில் ஈடுபட்டனர்.

    அரியலூர்:

    அரியலூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைக்க கோரி மத்திய அரசை வலியுறுத்தி காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில், மாநிலத் துணைத் தலைவர் ராஜேந்திரன் முன்னிலையில், காமராஜர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,

    பின்னர் பேரணியாக அண்ணாசிலை, தேரடி, கடைத்தெரு, சத்திரம், மாதா கோவில் வழியாக பேரணி ஒற்றுமைதிடலில் முடிவுற்றது.

    பேரணியில் நகர காங்கிரஸ் தலைவர் சந்திர சேகர், மாவட்ட பொருளாளர் மனோகர், சிவகுமார், மாவட்ட துணைத்தலைவர் ராகவன், பழனிச்சாமி, தியாகராஜன், மகளிர் அணி சகுந்தலா, நகர பொறுப்பாளர் ஆண்டனி, செந்தில், சேவா தளம் சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தமிழக அரசை வலியுறுத்தி கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பாரதிய ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சென்னை:

    தேர்தல் நேரத்தில் தி.மு.க. அளித்த வாக்குறுதிப்படி பெட்ரோல்- டீசல் விலையை குறைக்க தமிழக அரசை வலியுறுத்தியும், மழை வெள்ள பாதிப்புக்கு குடும்பத்துக்கு ரூ.5 ஆயிரம் நிவாரண உதவி வழங்க கோரியும் பா.ஜனதாவினர்தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே இன்று நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    காளைகள் பூட்டப்பட்ட மாட்டு வண்டியில் பா.ஜனதாவினர் நின்றபடி கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினார்கள். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பெட்ரோல்


    “தி.மு.க. அரசே, தமிழக அரசே கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்று”, “பெட்ரோல்- டீசல் விலையை குறைத்திடு”, “மழைக்கால நிவாரணம் ரூ.5 ஆயிரம் வழங்கிடு” என்று கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் காளிதாஸ், கராத்தே தியாகராஜன், வி.பி.துரைசாமி, எம்.என்.ராஜா உள்பட பல நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

    வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக கலெக்டர் அலுவலகம் எதிரில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மறுக்கும் தி.மு.க அரசை கண்டித்து இளைஞரணி சார்பாக மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    வேலூர்:

    வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக கலெக்டர் அலுவலகம் எதிரில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மறுக்கும் தி.மு.க அரசை கண்டித்து இளைஞரணி சார்பாக மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட இளைஞர்ணி தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார்.

    இளைஞரணி மாநில துணை தலைவர் குமார் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினார். மாநில செயலாளர் கார்த்தியாயிணி, மாவட்ட தலைவர் தசரதன், மகளிர் அணி மாவட்ட தலைவி கிருஷ்ணகுமாரி இளைஞரணி செயலாளர்கள் ராஜேஷ், சரவணன், கனிமொழி திருமாறன், சத்திஷ், கிஷேர், சுகுணா, லஷ்மி, மாவட்ட துணை தலைவர்கள் ஜெகன், பொது செயலாளர்கள் பாஸ்கர், பாபு செயலாளர்கள் ஏழுமலை, மண்டல் தலைவர்கள் ஜெகன், ஓ.பி.சி. அணி செயலாளர் எஸ்.கே.மோகன் உள்பட சுமார் 200 பேர் கலந்துக்கொண்டனர்.
    மக்களின் அன்றாட வாழ்க்கையை மேலும் மேலும் சிக்கலுக்குள்ளாக்கும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்த பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியைக் குறைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி துணைத் தலைவர் தங்கவேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றத்தில், மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் கலால் வரி பிரதான பங்கு வகிக்கிறது. தீபாவளி அன்று பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.5 என்ற அளவிலும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.10 என்ற அளவிலும் மத்திய அரசு குறைத்தது. இதனை தொடர்ந்து 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வாட் வரியும் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை தமிழ்நாடு அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியைக் குறைக்காமல் இருப்பது ஏமாற்றமளிக்கிறது.

    தி.மு.க. தேர்தல் வாக்குறுதியின்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது என்றாலும், எரிபொருள் விலையின் கிடுகிடு ஏற்றம் தமிழக மக்களுக்கு தாங்கவியலாத கடும்சுமையாகவே இருக்கிறது.

    பலமாநிலங்கள் மதிப்புக் கூட்டு வரியைக் குறைத்திருக்கின்றன. கர்நாடகாவில் மதிப்புக் கூட்டு வரி குறைக்கப்பட்டதன் விளைவாக பெட்ரோல், டீசல் விலை ரூ.7 குறைந்து பெட்ரோல் ரூ.100.14க்கும், டீசல்ரூ.84.60க்கும் விற்பனையாகின்றன. புதுச்சேரியில் பெட்ரோலின் விலை 12 ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.94க்கும், டீசலின் விலை 19 ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.84.60க்கும் விற்கப்படுகின்றன.

    ஆனால் தமிழகத்திலோ, பெட்ரோல் ரூ.101.40 க்கும், டீசல் ரூ.91.43க்கும் விற்பனையாகின்றன. எண்ணெய் அமைச்சகத்தின் பெட்ரோலியத் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள, 1.10.2021 தேதியிட்ட தரவுப்படி, தமிழ்நாட்டில் வாட் வரியாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 13% + ரூ. 11.52 , ஒரு லிட்டர் டீசலுக்கு 11% + ரூ.9.62 வரி விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி 20.87 ரூபாய் பெட்ரோலுக்கும், 17.52 ரூபாய் டீசலுக்கும் வரி வசூலிக்கப்படுகிறது.

    கர்நாடகா, புதுச்சேரி, மிசோரம், ஒடிசா, ஹரியானா, உத்தரகாண்ட், குஜாரத், திரிபுரா, சிக்கிம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது போலவே பெட்ரோல்‌ மற்றும்‌ டீசல்‌ மீதான மதிப்புக்‌ கூட்டு வரியை தமிழகத்திலும் குறைக்க வேண்டும்.

    தமிழக மக்கள் ஏற்கெனவே கொரோனா பெருந்தொற்று, வருவாய் இழப்பு, விலைவாசி உயர்வு, வெள்ளச் சேதங்கள் எனத் தவித்துவருகிறார்கள். மக்களின் அன்றாட வாழ்க்கையை மேலும் மேலும் சிக்கலுக்குள்ளாக்கும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்த பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியைக் குறைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×