search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Neymar"

    பிரேசில் - அமெரிக்கா அணிகள் இடையே நட்புறவு சர்வதேச கால்பந்து போட்டியில், பிரேசில் 2-0 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது. #BrazilvsUSA #InternationalFriendly
    நியூஜெர்சி:

    பிரேசில் - அமெரிக்கா அணிகள் இடையே நட்புறவு சர்வதேச கால்பந்து போட்டி நேற்று முன்தினம் இரவு நியூஜெர்சி நகரில் நடந்தது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரேசில் 2-0 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது. அமெரிக்காவுக்கு எதிராக பிரேசில் தொடர்ச்சியாக பதிவு செய்த 11-வது வெற்றி இதுவாகும். பிரேசில் அணியில் 11-வது நிமிடத்தில் ராபர்ட்டோ பிர்மினோவும், 43-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மாரும் கோல் அடித்தனர்.

    சர்வதேச போட்டியில் நெய்மாரின் 58-வது கோல் இதுவாகும். உலக கோப்பை போட்டியில் கால்இறுதியுடன் வெளியேறிய பிரேசில் அணி அதன் பிறகு ஆடிய முதல் சர்வதேச போட்டி இதுவாகும். 
    பிரேசில் கால்பந்து அணியின் நிரந்தர கேப்டனாக பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடும் நெய்மர் நியமிக்கப்பட்டுள்ளார். #Neymar
    பிரேசில் கால்பந்து அணியின் முன்னணி வீரரான நெய்மர் தற்போதைய காலத்தில் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். பார்சிலோனா அணிக்காக விளையாடிய நெய்மர் தற்போது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார்.



    இவர் பிரேசில் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் தொடர்ச்சியாக அவர் கேப்டன் பதவியை ஏற்கவில்லை. ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையில் கூட சில்வா, மார்சிலோ ஆகியோர் கேப்டனாக செயல்பட்டனர். இந்நிலையில் நெய்மர் நிரந்தர கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    நான் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியில்தான் இருக்கிறேன் என்று பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் உறுதிபட தெரிவித்துள்ளார். #PSG #Neymar
    பிரேசில் கால்பந்து அணியின் முன்னணி வீரர் நெய்மர். பார்சிலோனாவிற்காக விளையாடி வந்த இவர், கடந்த சீசனில் பிரான்ஸில் உள்ள பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு டிரான்ஸ்பர் ஆனார். இதற்காக பிஎஸ்ஜி அணி 222 மில்லியன் யூரோ பார்சிலோனாவிற்கு கொடுத்தது. இதுதான் கால்பந்து வரலாற்றிலேயே அதிகமான டிரான்ஸ்பர் பீஸ் ஆகும்.

    பிஎஸ்ஜி-க்கு சென்ற நெய்மர் இந்த சீசனில் ரியல் மாட்ரிட் அணிக்கு மாறலாம் என்ற செய்திகள் வந்த வண்ணமே இருக்கிறது. இதற்கு ஏற்றாற்போல் தற்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் இருந்து வெளியேறியுள்ளார்.



    இதனால் நெய்மர் டிரான்ஸ்பர் செய்தி உண்மையாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ‘‘எனக்கு பிஎஸ்ஜி அணியுடன் ஒப்பந்தம் இருக்கிறது. நான் இங்குதான் தங்கியிருக்கிறேன்’’ என்று நெய்மர் கூறியுள்ளார்.

    இதனால் நெய்மர் இந்த சீசனிலும் பிஎஸ்ஜி அணிக்காகத்தான் விளையாட இருக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.
    பிலிப்பே கவுட்டினோவிற்கு 239 மில்லியன் பவுண்டு கொடுக்க தயாராக இருக்கும் பிஎஸ்ஜி விருப்பத்தை ஏற்க மறுத்தது பார்சிலோனா. #Barcelona #PSG
    பிரான்ஸ் நாட்டின் கால்பந்த் கிளப் அணியான பிஎஸ்ஜி மிகப்பெரிய பணக்கார கிளப் அணியாகும். இந்த அணி கடந்த சீசனில் கால்பந்து வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 200 மில்லின் பவுண்டு கொடுத்து பிரேசில் வீரர் நெய்மரை பார்சிலோனாவில் இருந்து வாங்கியது.

    நெய்மர் சென்றதால் லிவர்பூல் அணியில் விளையாடிய மற்றொரு பிரேசில் வீரரான பிலிப்பே கவுட்டினோவை 142 மில்லியன் பவுண்டு கொடுத்து பார்சிலோனா வாங்கியது.

    கவுட்டினோ கடந்த 2-வது பாதி நேரத்தில் 22 போட்டிகளில் 10 கோல் அடித்துள்ளார். 6 கோல் அடிக்க துணைபுரிந்துள்ளார். தற்போது கவுட்டினோவை வாங்க பிஎஸ்ஜி விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்காக 239 மில்லியன் பவுண்டு கொடுக்க தயாராக இருப்பதாக பார்சிலோனாவிற்கு ஆசை தூதுவிட்டது.



    6 மாதத்திலேயே சுமார் 100 மில்லியன் டாலர் வருமானம் கிடைக்கும் என்றாலும், பார்சிலோனா மறுத்துவிட்டது. தற்போது கவுட்டினோவின் டிரான்ஸ்பர் விலை 352 மில்லியன் பவுண்டு எனவும் உயர்த்திவிட்டது.

    ஏற்கனவே பிஎஸ்ஜி அணி வீரர்கள் டிரான்ஸ்பரில் விதிமுறையை மீறியதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனால் இந்த டிரான்ஸ்பர் நடப்பதில் சந்தேகமே.
    காலிறுதியில் தோல்வியடைந்தது எனது கால்பந்து வாழ்க்கையில் மிகவும் சோகமான தருணம் என நெய்மர் தனது வேதனை வெளிப்படுத்தியுள்ளார். #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. காலிறுதி ஒன்றில் பிரேசில் - பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் நெய்மர், கவுட்டினோ, மார்சிலோ, வில்லியன் போன்ற நட்சத்திர வீரர்களை கொண்ட பிரேசில் 1-2 என பெல்ஜியம் அணியிடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

    பிரேசில் வீரர்கள் சோகம் நிறைந்த முகத்துடன் சொந்த நாடு திரும்பினார்கள். இந்நிலையில் பெல்ஜியத்திடம் 1-2 எனத் தோல்வியடைந்தது எனது கால்பந்து வாழ்க்கையில் மிகவம் சோகமான தருணம் என்று நெய்மர் தனது வேதனையை தெரிவித்துள்ளார்.



    பெல்ஜியத்திற்கு எதிரான தோல்வி குறித்து நெய்மர் கூறுகையில் ‘‘எனது கால்பந்து வரலாற்றில் இது மிகவும் சோகமான தருணம் என்பதை என்னால் கூற முடியும். இதன் வழி மிகவும் அதிகமானது. ஏனென்றால், உலகக்கோப்பையை வென்று சாதனைப் படைக்க வாய்ப்பு இருந்தது என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், இந்த முறை அந்த வாய்ப்பு அமையவில்லை’’ என்றார்.
    நெய்மார் களத்தில் போலியாக நடிப்பது கால்பந்து விளையாட்டுக்கு நல்லதல்ல என்று மெக்சிகோ பயிற்சியாளர் கூறியுள்ளார். #FIFA2018 #Neymar
    சமரா:

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் நடந்த 2-வது சுற்றில் முன்னாள் சாம்பியன் பிரேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது. பிரேசில் அணியில் நட்சத்திர வீரர் நெய்மார் (51-வது நிமிடம்), பிர்மினோ (88-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர்.

    முன்னதாக 71-வது நிமிடத்தில் நெய்மாரின் கணுக்காலில் மெக்சிகோ வீரர் மிக்யூல் லாயூன் மிதித்ததால் மைதானத்தில் விழுந்து துடித்தார். வலது காலை பிடித்துகொண்டு உருண்டு, புரண்டு அலறினார். சக வீரர்கள், போட்டி நடுவர் மற்றும் மருத்துவ குழுவினர் அவரை சூழ்ந்தனர். சில நிமிடங்களுக்கு பிறகு சகஜநிலைக்கு திரும்பிய நெய்மார் பிறகு ஆட்டம் முழுவதும் விளையாடினார்.

    காயம் அடைந்ததும் நெய்மார் உணர்ச்சிகளை வெளிக்காட்டிய விதம் கொஞ்சம் மிகைப்படுத்தும் வகையில் இருந்ததாக சமூக வலைதளங்களிலும், கால்பந்து உலகிலும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. ‘இந்த நடிப்புக்காக அவருக்கு ஆஸ்கார் விருதே கொடுக்கலாம்’ என்று சில ரசிகர்கள் டுவிட்டரில் கிண்டலடித்துள்ளனர்.



    மெக்சிகோ அணியின் பயிற்சியாளர் ஜூவான் கார்லஸ் ஓசோரியா, நெய்மார் மீது கடுமையாக சாடியுள்ளார். அவர் கூறுகையில், ‘இந்த ஆட்டத்தில் குறிப்பிட்ட ஒரு வீரருக்காக நிறைய நேரத்தை வீணடித்தது துரதிர்ஷ்டவசமானது. உண்மையிலேயே இது கால்பந்து விளையாட்டுக்கு அவமானகரமானதாகும். இத்தகைய செயல் கால்பந்து விளையாட்டை தேர்வு செய்யும் வருங்கால சந்ததியினருக்கு தவறான முன்னுதாரணமாகி விடும். போட்டி நடுவர், தேவையில்லாமல் ஆட்டத்தை அடிக்கடி நிறுத்தியதால் பிற்பாதியில் எங்களது வழக்கமான பாணியை இழக்க வேண்டியதாகி விட்டது. அது மாதிரியான சமயத்தில் எங்களது வீரர்களும் உத்வேகத்தை இழந்து சோர்ந்து போனார்கள்.

    இது ஆண்களுக்குரிய விளையாட்டாக இருக்கவேண்டுமே தவிர, கேலிக்கூத்துக்குரிய இடமாக இருக்கக்கூடாது. அளவுக்கு அதிகமான நடிப்புக்கும் இடம் தரக்கூடாது. நெய்மாரின் நடிப்பு கால்பந்து விளையாட்டுக்கு நல்லதல்ல. இந்த ஆட்டம் முற்றிலும் பிரேசிலுக்கு சாதகமாகவே இருந்தது. நடுவரின் குறுக்கீடும் அதிகமாக காணப்பட்டது.’ என்றார்.



    இதே போல் நெய்மாரை குறைகூறியுள்ள அயர்லாந்து அணியின் பயிற்சியாளர் மார்ட்டின் ஓ நியல் ‘நெய்மார் உயர்தரமான ஒரு வீரர். அதே சமயம் உயர்தரமான நடிகரும் ஆவார்’ என்று குறிப்பிட்டார்.

    இந்த தொடரில் இதுவரை 23 ஷாட்டுகள் அடித்துள்ள 26 வயதான நெய்மார் அதில் 2-ஐ கோலாக மாற்றி இருக்கிறார். எதிரணியினரால் அதிக முறை ‘பவுல்’ (23 முறை) செய்யப்பட்ட வீரரும் நெய்மார் தான். அவர் கூறுகையில், ‘இந்த தொடரில் மற்றவர்களை காட்டிலும் என்மீதே அதிகமாக தாக்குதல் தொடுத்து, அதன் மூலம் பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள். பொதுவாக விமர்சனங்களையோ அல்லது பாராட்டுகளையோ எதையும் நான் கண்டுகொள்வதில்லை. ஏனெனில் அதன் மீது கவனம் செலுத்தினால், அது நமது செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தி விடும். எனது வேலை, களம் இறங்கி அணிக்காகவும், சக வீரர்களுக்காகவும் உதவுவது மட்டுமே’ என்றார். 
    நெய்மரை 2480 கோடி ரூபாய் கொடுத்து வாங்க விருப்பம் தெரிவித்ததாக வந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை என ரியல் மாட்ரிட் தெரிவித்துள்ளது. #Neymar
    பிரேசில் கால்பந்து அணியின் முன்னணி வீரராக திகழ்ந்து வருபவர் நெய்மர். இவர் 2017 வரை பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்தார். அவர் ரியல் மாட்ரிட் அணிக்கு மாற விரும்பினார். இதற்கு பல பிரச்சினைகள் இருந்ததால் பிரான்ஸ் நாட்டின் முன்னணி அணியான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு கடந்த சீசன் போது மாறினார். இதற்காக பிஎஸ்ஜி அணி 222 மில்லியன் யூரோ டிரான்ஸ்பர் தொகையாக வழங்கியது. கால்பந்து வரலாற்றில் ஒரு வீரருக்கான அதிகப்படியான டிரான்ஸ்பர் தொகை இதுவாகும்.

    இந்நிலையில் ஓராண்டு முடிந்துள்ள நிலையில், ரியல் மாட்ரிட் அணி நெய்மரை வாங்க விருப்பம் தெரிவிப்பதாக தகவல் வெளியானது. ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரெனால்டோ, பென்சிமா போன்ற வீரர்கள் வெளியேற இருப்பதாக கூறப்பட்ட தகவலே காரணம்.



    நெய்மரை ரியல் மாட்ரிட் வாங்குவது எளிதான காரியம் அல்ல. அவருக்காக சுமார் 310 மில்லியன் யூரோ ரியல் மாட்ரிட் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியானது. நேற்று பிரேசில் அணி வெற்றி பெற்றதும் இந்த செய்தி தீயாக பரவியது. இந்த மதிப்பில் 2480 கோடி ரூபாயாகும். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே யூரோப்பா கால்பந்து அசோசியேசனும் பிஎஸ்ஜிக்கு நெருக்கடி கொடுத்தது.

    இந்நிலையில் நெய்மருக்கு நாங்கள் 2480 கோடி ரூபாய் கொடுக்க விருப்பம் தெரிவித்ததாக வந்த செய்தியில் துளியளவும் உண்மையில்லை என்று ரியல் மாட்ரிட் தெரிவித்துள்ளது.
    ரஷியாவில் நடந்து வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் மெக்சிகோ அணியை 2-0 என்ற கணக்கில் பிரேசில் அணி வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. #BRAMEX #WorldCup #FIFAWC
    மாஸ்கோ:

    ரஷியாவில் நடந்து வரும் உலக்கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் இன்று மெக்சிகோ - பிரேசில் அணிகள் மோதின. பிரபல வீரர் நெய்மர் அங்கம் வகிக்கும் பிரேசில் அணி மீது பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்த எதிர்ப்பார்ப்பை சிறிதும் நோகடிக்காமல் பிரேசில் அணி சிறப்பாக விளையாடியது.

    ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை என்றாலும் பிரேசில் கட்டுப்பாட்டில் பந்து இருந்தது. இதனை அடுத்து, இரண்டாம் பாதியின் 51வது நிமிடத்தில் நெய்மர் அசத்தலாக கோல் அடித்தார். 90 வது நிமிடத்தில் பிரேசில் அணியின் பிர்மிடோ மற்றொரு கோல் அடித்தார். ஆட்ட நேர முடிவில் பிரேசில் அணி 2-0 என்ற கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

    முன்னாள் சாம்பியன்களான அர்ஜென்டினா, போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் அணிகள் நாக் அவுட் சுற்றில் வெளியேறியதால், பிரேசில் அணியும் வெளியேறும் என பலர் கணித்த நிலையில், அவர்களின் கணிப்பு பொய்யாகியுள்ளது. 
    நெய்மர் ரியல் மாட்ரிட் அணிக்கு வந்தால் அவரை வரவேற்போம் என்று ஸ்பெயின் வீரர் டேனி கார்வாஜல் தெரிவித்துள்ளார். #RealMadrid #Neymar
    பிரேசில் அணியின் முன்னணி கால்பந்து வீரராக நெய்மர் திகழ்ந்து வருகிறார். இவர் பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்தது. 2017-18 சீசனில் பிரான்ஸின் முன்னணி கிளப்பான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு கால்பந்து வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு சுமார் 200 மில்லியன் பவுண்டிற்கு மாறினார்.

    தற்போது அவர் ரியல் மாட்ரிட் அணிக்கு மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது ஒரு கிசுகிசுவாகத்தான் இருக்கிறது. இந்த கிசுகிசு உண்மையான இருந்தால், நெய்மரை நாங்கள் வரவேற்போம் என்று ரியல் மாட்ரிட் அணியின் டேனி கார்வாஜல் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து கார்வாஜல் கூறுகையில் ‘‘நெய்மர் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடத்தான் நெய்மர் பிறந்தாரா? என்பது எனக்குத் தெரியாது. ரியல் மாட்ரிட் அணி எப்போதுமே உலகின் சிறந்த வீரரைத்தான் விரும்பும். ரியல் மாட்ரிட் அணி தலைவர் அவரை ஒப்பந்தம் செய்ய தீர்மானித்தால், நாங்கள் அவருக்காக லாக்கரை பாதுகாப்போம்’’ என்றார்.
    எல்லோரும் நெய்மரை பற்றி பேசுகையில், பிலிப்பே கவுட்டினோ நிரூபித்துக் கொண்டிருக்கிறார் என ரொபேர்டோ கார்லஸ் தெரிவித்துள்ளார். #WolrdCup2018
    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கோப்பையை வெல்லும் அணிகள் ஒன்றாக பிரேசில் கருதப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் நெய்மர், பிலிப்பே கவுட்டினோ, கேப்ரியல் ஜீசஸ், மார்சிலோ போன்ற வீரர்கள்தான்.

    நெய்மர் காயத்தால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவரால் உலகக்கோப்பையில் விளையாட முடியுமா? என்ற நிலை இருந்தனர். ஆனால் உலகக்கோப்பையில் விளையாடி வருகிறார்.

    நெய்மர் விளையாடினால்தான் பிரேசில் அணி வெற்றி பெறும் என்று அனைவரும் கணித்தார்கள். பிரேசில் முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்தது. இந்த போட்டியில் பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் பிலிப்பே கவுட்டினோதான் கோல் அடித்தார்.

    அதேபோல் கோஸ்டா ரிகாவிற்கு எதிரான ஆட்டத்தில் 2-0 என வெற்றி பெற்றது. இதில் முதல் கோலை கவுட்டினோதான் அடித்தார். அனைவரும் நெய்மரை பற்றி பேசுகையில் பிலிப்பே கவுட்டினோ தனது திறமையை நிரூபித்துக் கொண்டிருக்கிறார் என்று முன்னாள் பிரேசில் வீரர் ரொபெர்டோ கார்லஸ் தெரிவித்துள்ளார்.



    2002-ம் ஆண்டு உலகக்கோப்பையை பிரேசில் வெல்லும்போது அந்த அணியில் இடம்பிடித்திருந்தவர் கார்லஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து கார்லஸ் கூறுகையில் ‘‘ஒவ்வொருவரும் நெய்மரை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பிரேசில் அணிக்கான சிறப்பான வீரர் என்பதை கவுட்டினோ நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அனைத்து தடுப்பாட்டக்காரர்களும் நெய்மர் மீது கவனம் செலுத்தும்போது, கவுட்டினோ மேலெழுந்து, போட்டியை முடிவு செய்கிறார்’’ என்றார்.
    பல முயற்சிகளுக்குப் பிறகு கவுட்டினோ, நெய்மரின் கடைசி நிமிட கோலால் கோஸ்டா ரிகாவை 2-0 என வீழ்த்தியது பிரேசில். #WorldCup2018 #BRACRC
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் ‘ஈ’ பிரிவில் இடம்பிடித்துள்ள பிரேசில் - கோஸ்டா ரிகா அணிகள் மோதின. முதல் ஆட்டத்தை டிரா செய்ததால் இந்த போட்டியில் வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற நிலையுடன் பிரேசில் களம் இறங்கியது.

    ஆட்டம் தொடங்கியது முதலே பிரேசில் அணியின் நெய்மர், ஜீசஸ், கவுட்டினோ கோஸ்டா ரிகாவின் கோல் எல்லையை நோக்கி பந்தை கொண்டு சென்றே இருந்தனர். ஆனால் அதிர்ஷ்டமின்மை காரணமாக ஒரு பந்தும் கோல் கம்பத்திற்குள் செல்லவில்லை. அதிர்ஷ்டமின்மை மட்டும் காரணமல்ல. கோஸ்டா ரிகா கோல்கீப்பர் நவாஸும் ஒரு காரணம். பிரேசில் அணியின் அத்தனை முயற்சிகளையும் முறியடித்தார். இதனால் 90 நிமிடம் வரை பிரேசில் அணியால் கோல் அடிக்க முடியவில்லை.



    90 நிமிடம் முடிந்தபிறகு காயம், ஆட்டம் நேரம் நிறுத்தத்தை கணக்கில் கொண்டு 7 நிமிடம் கூடுதலாக கொடுக்கப்பட்டது. இதில் பிரேசில் அணிக்கு அதிர்ஷ்டம் கைகொடுத்தது. முதல் நிமிடத்திலேயே ஃபிர்மினோ தலையால் முட்டி பந்தை கேப்ரியல் ஜீசஸிடம் கொடுத்தார். அந்த பந்தை சரியாக ஜீசஸ் காலில் படாமல் நழுவிச் சென்றது. பந்து சென்றதும் அருகில் நின்றிருந்த பிலிப்பே கவுட்டினோ வேகமாக ஓடிவந்து பந்தை கோல் நோக்கி அடித்தார். பந்து நவாஸை ஏமாற்றி அவரது கால் இடைக்குள்ளோடு சென்று கோல் ஆனது. இதனால் பிரேசில் 1-0 என முன்னிலைப் பெற்றது.



    அதன்பின் பிரேசில் சற்று நிம்மதி அடைந்து, தாக்குதல் ஆட்டத்தை கைவிட்டது. ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் கடைசி நொடியில் டக்ளஸ் வலது பக்கம் கோல் எல்லைக்குள் வைத்து நெய்மரிடம் பந்தை பாஸ் செய்தார். அதை நெய்மர் எளிதாக கோலாக்கினார். இதனால் பிரேசில் 2-0 என வெற்றி பெற்றது.
    பயிற்சியின்போது வலி தாங்க முடியாமல் நொண்டியதால் அடுத்த போட்டியில் நெய்மர் களம் இறங்குவாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. #Neymar
    பிரேசில் கால்பந்து அணி கேப்டனான நெய்மர் பிரான்ஸ் கால்பந்து கிளப் அணியான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் மெர்சைலே அணிக்கெதிரான போட்டியின்போது நெய்மருக்கு வலது கால் பாதத்தில் காயம் ஏற்பட்டது.

    காயம் வீரியமடைந்தால் நெய்மர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். உலகக்கோப்பை தொடருக்கு சில நாட்களுக்கு முன்புதான் மீண்டும் கால்பந்து களத்திற்கு திரும்பினார். குரோசியா, ஆஸ்திரியா அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டத்தில் மோதினார்.



    நேற்றுமுன்தினம் நடைபெற்ற சுவிட்சர்லாந்திற்கு எதிரான ஆட்டத்தில் விளையாடினார். சுவிட்சர்லாந்து வீரர்கள் நெய்மர் குறிபார்த்து தாக்கினார்கள். அடிக்கடி அவரை கீழே தள்ளி FOUL ஆனார்கள்.

    இந்நிலையில் இன்று நெய்மர் சக வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்டார். அணிகளுடன் ஒன்றாக பயிற்சி செய்யும்போது நெய்மர் எந்தவித வலியும் இல்லாமல் சகஜமாக விளையாடினார்.



    அதன்பின் இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடினார்கள். அப்போது வலது காலில் அவருக்கு அதிகமான வலி ஏற்பட்டது. இதனால் நெய்மர் நொண்டி அடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    உடனடியாக அவர் பயிற்சியில் இருந்து வெளியேறினார்கள். ஆகவே, உலகக்கோப்பை தொடரில் மீதமுள்ள போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழும்பியுள்ளது.
    ×