search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Netherlands"

    நெதர்லாந்து - கனடா அணிகள் நாளை மோத உள்ள நிலையில் நெதர்லாந்து அணி பலம் பொருந்தியவை என்பதால் கால் இறுதி ஆட்டத்தில் அந்த அணி இந்தியாவுடன் மோத வாய்ப்பு உள்ளது. #worldcuphockey2018
    புவனேஷ்வர்:

    14-வது உலக கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் நடைபெற்று வருகிறது.

    இந்தப் போட்டியில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘லீக்’ முடிவில் ஒவ்வொரு பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக கால் இறுதிக்கு தகுதி பெறும்.

    2-வது, 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றில் விளையாடும். கடைசி இடத்தை பிடிக்கும் அணிகள் வெளியேற்றப்படும்.

    மன்பிரித்சிங் தலைமையிலான இந்திய அணி ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. தொடக்க ஆட்டத்தில் 5-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் பெல்ஜியத்துடன் 2-2 என்ற கணக்கில் ‘டிரா’ செய்தது. கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் 5-1 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தியது. இதன் மூலம் 7 புள்ளிகளுடன் கோல்கள் அடிப்படையில் இந்தியா கால்இறுதிக்கு தகுதி பெற்றது.

    இதேபோல அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி அணிகளும் கால்இறுதிக்கு தகுதி பெற்றன. மீதியுள்ள 4 அணிகள் 2-வது சுற்று மூலம் நுழையும்.

    கிராஸ் ஓவர் என்று அழைக்கப்படும் 2-வது சுற்றில் பிரான்ஸ், நியூசிலாந்து, இங்கிலாந்து, சீனா, பெல்ஜியம், கனடா, நெதர்லாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் விளையாடுகின்றன. ஸ்பெயின், அயர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, மலேசியா அணிகள் வெளியேற்றப்பட்டன.

    இன்று நடைபெறும் 2-வது சுற்று ஆட்டங்களில் இங்கிலாந்து- நியூசிலாந்து. பிரான்ஸ், சீனா அணிகளும், நாளை நடைபெறும் ஆட்டத்தில் பெல்ஜியம்- பாகிஸ்தான், நெதர்லாந்து, - கனடா அணிகள் மோதுகின்றன.

    இந்திய அணி கால் இறுதியில் நெதர்லாந்து- கனடா மோதும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் மோதும். இந்த ஆட்டம் 13-ந்தேதி நடக்கிறது.

    நெதர்லாந்து அணி பலம் பொருந்தியவை என்பதால் அந்த அணி வெற்றி பெறலாம். இதனால் இந்திய அணி கால் இறுதியில் நெதர்லாந்துடன் மோத அதிகமான வாய்ப்பு உள்ளது. #worldcuphockey2018
    ஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் நெதர்லாந்து அணியை 4 -1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. #HockeyWorldCup2018 #Germany #Netherlands
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் டி பிரிவில் இடம் பெற்றுள்ள ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து அணிகள் இன்று மோதின.

    ஆட்டத்தின் ஆரம்பத்தில் 13-வது நிமிடத்தில் நெதர்லாந்து அணி வீரர் மிர்கோ புருஜ்சர் ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். 

    அதன்பின்னர் ஜெர்மனி அணி ஆட்டத்தை தனது கையில் எடுத்துக் கொண்டது. ஜெர்மனி வீரர் மதியாஸ் முல்லர் 30வது நிமிடத்திலும், லூகாஸ் விண்ட்பெடர் 52வது நிமிடத்திலும், மார்கோ மில்டாகு 54 வது நிமிடத்திலும், கிறிஸ்டோபர் ரூர் 58வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்து அசத்தினர்.

    இறுதியில், நெதர்லாந்து அணியை 4 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜெர்மனி அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் ஜெர்மனி காலிறுதிக்கான வாய்ப்பை நெருங்கியுள்ளது. #HockeyWorldCup2018 #Germany #Netherlands
    பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ஆசியா பீவி நெதர்லாந்துக்கு அழைத்துச் செல்லப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. #AsiaBibi #AsiaBibiReleased #PakBlasphemy
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் மதநிந்தனை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவ பெண் ஆசியா பீவியை (வயது 47) உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 31ம் தேதி விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசியல் கட்சிகள் மற்றும் மதவாத அமைப்புகள் நாடு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டன. சாலைகளில் தடை அமைத்தும், டயர்களை கொளுத்தியும் அந்த அமைப்புகள் நடத்திய போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    தீவிர மதபற்றாளர்கள் பலர், ஆசியாவுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். ஆசியா பீவியின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால், அவர் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
     
    மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பு வெளியாகும் வரை ஆசியா பீவியை நாட்டை விட்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து, தெஹ்ரீ-இ-லப்பாயிக் பாகிஸ்தான் (டிஎல்பி) கட்சி போராட்டத்தை திரும்ப பெற்றது. முக்கிய கட்சியான டிஎல்பி போராட்டத்தைக் கைவிட்டதால் பாகிஸ்தானில் இயல்பு நிலை திரும்பியது.

    இந்த நிலையில், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு பிறகு முல்தானில் உள்ள பெண்கள் சிறையில் இருந்து ஆசியா பீவி விடுவிக்கப்பட்டார்.  ராவல்பிண்டியில்  உள்ள நூர் கான் விமான தளத்துக்கு அழைத்துச்செல்லப்படும் ஆசியா பீவி, அங்கிருந்து நெதர்லாந்து அழைத்துச் செல்லப்பட உள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.



    ‘ஆசியா பீவியை இம்ரான் கான் அரசு விடுதலை செய்துள்ளது. நெதர்லாந்து தூதர் மற்றும் அதிகாரிகள் முல்தான் சிறைக்கு சென்று விடுதலையை உறுதி செய்துள்ளனர். இதையடுத்து ஆசியா பீவியை நெதர்லாந்துக்கு அனுப்பி வைத்துள்ளனர் என டிஎல்பி கட்சி செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார்.

    அதேசமயம் இஸ்லாமாபாத் மற்றும் ராவல் பிண்டியில் டிஎல்பி கட்சி தொண்டர்கள் திரண்டு, ஆசியா பீவியை நாட்டை விட்டு செல்ல அரசு அனுமதிக்கக்கூடாது என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். #AsiaBibi #AsiaBibiReleased #PakBlasphemy
     
    நெதர்லாந்து நாட்டில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கார்கோ சைக்கிள் மீது ரெயில் மோதிய விபத்தில் 4 சிறுவர்கள் பரிதாபமாக பலியாகினர். #Accident
    ஆம்ஸ்டர்டாம்:

    நெதர்லாந்து நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள ஆஸ் நகரில் கார்கோ சைக்கிளில் சிறுவர்கள் சிலர் சென்று கொண்டிருந்தனர்.

    அவர்கள் அங்குள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் சைக்கிள்மீது வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் சைக்கிளில் சென்ற 4 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒரு பெண் படுகாயம் அடைந்தார்.

    தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். கார்கோ சைக்கிள் மீது ரெயில் மோதியதில் 4 சிறுவர்கள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Accident
    நெதர்லாந்து நாட்டில் நடைபெற்றுவரும் ஹாக்கி சாம்பியஸ் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற இந்தியா, நெதர்லாந்து இடையேயான லீக் ஆட்டம் 1-1 என டிரா ஆனது. #IndiaKaGame #INDvNED #NEDvIND #HCT2018

    பிரிடா:

    37-வது சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி நெதர்லாந்து நாட்டில் உள்ள பிரிடா நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த லீக் போட்டியில் இந்திய அணி, நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது. இது கடைசி லீக் போட்டியாகும். இந்த போட்டியை டிரா செய்தாலே இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெரும். நெதர்லாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துடன் களமிறங்கியது.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினருன் தொடர்ந்து கோல் போட முயற்சித்தனர். இருப்பினும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இதனால் முதல் பாதிநேர ஆட்டம் கோல் அடிக்கப்படாமல் சமனில் இருந்தது.



    தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 47-வது நிமிடத்தில் இந்திய வீரர் மந்தீப் சிங் கோல் அடித்து இந்திய அணிக்கு முன்னிலை கொடுத்தார். அதன்பின் 55-வது நிமிடத்தில் நெதர்லாந்து அணியின் பிரிங்மேன் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது.

    அதன்பின் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. இதனால் இந்த போட்டி 1-1 என டிராவில் முடிந்தது. இதன்மூலம் 8 புள்ளிகள் பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது. இந்தியா இறுதிப்போட்டியில் பலம்வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்ள இருக்கிறது. #IndiaKaGame #INDvNED #NEDvIND #HCT2018
    நெதர்லாந்து நாட்டில் நடைபெற்றுவரும் முத்தரப்பு டி20 தொடரின் ஸ்காட்லாந்து, அயர்லாந்து இடையிலான லீக் போட்டி டிராவில் முடிந்தது. #SCOvIRE #IREvSCO

    நெதர்லாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடர் நெதர்லாந்தில் நடைபெற்று வருகிறது. 

    முதல் இரண்டு போட்டியிலும் நெதர்லாந்து அணி அயர்லாந்தை வீழ்த்தியது. மூன்றாவது போட்டியில் அயர்லாந்து, ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தியது. நேற்று நடைபெற்ற நான்காவது போட்டியில் ஸ்காட்லாந்து - அயர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இதையடுத்து ஸ்காட்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜார்ஜ் முன்சே, கைல் கொயிட்சர் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தனர். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முன்சே 25 பந்தில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கொயிட்சர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். 

    கொயிட்சர் 41 பந்தில் 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேலம் மேக்லியாட் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தார். மைக்கெல் லீஸ்க் 4 ரன்னில் ரன்-அவுட் ஆனார். அதன்பின் வந்த மேத்தீவ் கிராஸ் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 186 ரன்களை இலக்காக கொண்டு அயர்லாந்து அணி பேட்டிங் செய்தது.



    அயர்லாந்து அணியின் பால் ஸ்டிர்லிங், ஜேம்ஸ் ஷனான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஷனான் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த ஆண்ட்ரூ பால்பிர்னி 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து ஸ்டிர்லிங் உடன் சிமி சிங் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி ரன் குவித்தனர். 

    சிமி சிங் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த ஸ்டிர்லிங் 41 பந்தில் 81 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் கேரி வில்சன் - கெவின் ஓ பிரெயின் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடினர். கேரி வில்சன் 20 ரன்களில் வெளியேறினார். 



    கடைசி ஓவரில் அயர்லாந்து அணியின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் கெவின் ஓ பிரெயின் 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில் அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. ஸ்காட்லாந்து அணி பந்துவீச்சில் சப்யான் ஷரிப், ஸ்டு ஒயிட்டிங்காம் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது. இதனால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து வருகிற 19-ம் தேதி நடைபெறும் ஐந்தாவது லீக் போட்டியில், ஸ்காட்லாந்து - நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #SCOvIRE #IREvSCO
    நெதர்லாந்து நாட்டில் நடைபெற்றுவரும் முத்தரப்பு டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் அயர்லாந்து அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தியது. #SCOvIRE #IREvSCO

    டெவெண்டெர்:

    நெதர்லாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடர் நெதர்லாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டியிலும் நெதர்லாந்து அணி அயர்லாந்தை வீழ்த்தியது. இத்தொடரின் மூன்றாவது போட்டியில் ஸ்காட்லாந்து - அயர்லாந்து அணிகள் நேற்று மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இதையடுத்து அயர்லாந்து அணியின் பால் ஸ்டிர்லிங், ஜேம்ஸ் ஷனான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஷனான் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஸ்டிர்லிங் உடன் ஆண்ட்ரூ பால்பிர்னி ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி ரன் குவித்தனர். 



    அரைசதம் அடித்த ஸ்டிர்லிங் 29 பந்தில் 51 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து வந்த சிமி சிங் டக்-அவுட் ஆனார். அதன்பின் பால்பிர்னி உடன் கேரி வில்சன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். பால்பிர்னி 40 பந்தில் 74 ரன்கள் (11 பவுண்டரி, ஒரு சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார். கேரி வில்சன் 38 பந்தில் 58 ரன்களில் வெளியேறினார். 

    அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. ஸ்காட்லாந்து அணி பந்துவீச்சில் அலஸ்டையர் எவான்ஸ் 2 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 206 ரன்களை இலக்காக கொண்டு ஸ்காட்லாந்து அணி பேட்டிங் செய்தது.



    ஸ்காட்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜார்ஜ் முன்சே, கைல் கொயிட்சர் ஆகியோர் களமிறங்கினர். கொயிட்சர் 33 ரன்களிலும், முன்சே 41 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ரிச்சி பெர்ரிங்டன் 29 ரன்கள் எடுத்தார். அயர்லாந்து அணியினரின் பந்துவீச்சில் ரன்குவிக்க முடியாமல் ஸ்காட்லாந்து அணியினர் திணறினர்.

    தொடர்ந்து களமிறங்கிய கேலம் மேக்லியாட் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். டைலன் பட்ஜ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 23 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் அயர்லாந்து அணி 46 ரன்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்றது. அயர்லாந்து அணி பந்துவீச்சில் ஜார்ஜ் டாக்ரெல் 2 விக்கெட் வீழ்த்தினார். 

    இதைத்தொடர்ந்து வருகிற 16-ம் தேதி நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில், ஸ்காட்லாந்து - அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #SCOvIRE #IREvSCO
    நெதர்லாந்து நாட்டில் நடைபெற்றுவரும் முத்தரப்பு டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் நெதர்லாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது. #NEDvIRE #IREvNED

    ரோட்டர்டேம்:

    நெதர்லாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடர் நெதர்லாந்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் போட்டியில் நெதர்லாந்து அணி அயர்லாந்தை வீழ்த்தியது. இத்தொடரின் இரண்டாவது போட்டியில் நெதர்லாந்து - அயர்லாந்து அணிகள் நேற்று மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இதையடுத்து அயர்லாந்து அணியின் பால் ஸ்டிர்லிங், ஜேம்ஸ் ஷனான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஸ்டிர்லிங் 27 ரன்களிலும், ஜேம்ஸ் 31 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த வில்லியம் போர்டர்பீல்ட் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் அரைசதம் அடித்த சிமி சிங் 13 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார்.

    கேரி வில்சன் மட்டும் சற்று நிலைத்து நின்று விளையாடினார். எதிர் முனையில் வந்தவர்கள் பிரகாசிக்க தவறியதால் அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. கேரி வில்சன் 45 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நெதர்லாந்து அணி பந்துவீச்சில் ரோலோப் வேன் டெர் மெர்வ் 2 விக்கெட் வீழ்த்தினார்.



    இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி பேட்டிங் செய்தது. நெதர்லாந்து அணியின் தோபியாஸ் விசே, மேக்ஸ் ஓதவ்த் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். தோபியாஸ் 25 ரன்களிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பென் கூப்பர் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மேக்ஸ் ஓதவ்த் நிதானமாக விளையாடி 39 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 

    அதைத்தொடர்ந்து பஸ் டி லீடே 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் ரோலோப் வேன் டெர் மெர்வ், பீட்டர் சீலர் ஆகியோர் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். வேன் டெர் மெர்வ் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். பீட்டர் சீலர் 22 ரன்களுடன் களத்தில் இருந்தார். நெதர்லாந்து அணி 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அயர்லாந்து அணி பந்துவீச்சில் ஜார்ஜ் டாக்ரெல் 2 விக்கெட் வீழ்த்தினார். 

    இதைத்தொடர்ந்து வருகிற 16-ம் தேதி நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில், ஸ்காட்லாந்து - அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #NEDvIRE #IREvNED
    நெதர்லாந்து நாட்டில் நடைபெற்றுவரும் முத்தரப்பு டி20 தொடரின் முதல் போட்டியில் நெதர்லாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது. #NEDvIRE #IREvNED

    ரோட்டர்டேம்:

    நெதர்லாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடர் நெதர்லாந்தில் நேற்று தொடங்கியது. இத்தொடரின் முதல் போட்டியில் நெதர்லாந்து - அயர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இதையடுத்து நெதர்லாந்து அணியின் தோபியாஸ் விசே, மேக்ஸ் ஓதவ்த் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். தோபியாஸ் 15 ரன்களிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பென் கூப்பர் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மேக்ஸ் ஓதவ்த் 20 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார். அதைத்தொடர்ந்து சாகிப் சுல்பிகர் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.



    அதன்பின் பஸ் டி லீடே, பீட்டர் சீலர் ஆகியோர் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். சீலர் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். லீடே 33 ரன்கள் எடுத்தார். நெதர்லாந்து அணி 19.5 ஓவர்களில் 144 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அயர்லாந்து அணி பந்துவீச்சில் பேரி மெக்கர்த்தி, சிமி சிங் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். 

    அதைத்தொடர்ந்து 145 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் அயர்லாந்து அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்டூவர்ட் தாம்ப்சன், பால் ஸ்டிர்லிங் ஆகியோர் களமிறங்கினர். தாம்ப்சன் 15 ரன்களிலும், ஸ்டிர்லிங் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்தவர்கள் நெதர்லாந்து அணியின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.



    இதனால் அயர்லாந்து அணி 63 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்தது. இறுதியில் சிமி சிங் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நெதர்லாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. சிமி சிங் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 29 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். நெதர்லாந்து அணி பந்துவீச்சில் பீட்டர் சீலர் 3 விக்கெட்களும், ஷேன் ஸ்னாடர் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

    இன்று நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில், நெதர்லாந்து - அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #NEDvIRE #IREvNED
    அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து அரசி மேக்ஸிமா இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #QueenMaxima
    புதுடெல்லி:

    நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். இரு நாடுகளுக்கு இடையிலான பல்வேறு நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடியுடன் அவர் ஆலோசனை நடத்திச் சென்றார்.

    இந்நிலையில், நான்குநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து அரசி மேக்ஸிமா இன்று மாலை டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    நிதி ஆயோக் துணை தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியை சந்தித்து ஆலோசனை நடத்தவும் அரசி மேக்ஸிமா திட்டமிட்டுள்ளார். #QueenMaxima  
    நேபாள கிரிக்கெட் அணி சர்வதேச அரங்கில் தனது முதல் ஒருநாள் தொடரில் வருகிற ஆகஸ்ட் மாதம் நெதர்லாந்துடன் விளையாட உள்ளது. #ICC #Nepal #ODIdebut #Netherlands

    ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச் சுற்றுப் போட்டியில் நெதர்லாந்து அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங் அணியை வீழ்த்தியதையடுத்து நேபாளத்துக்கு ஒருநாள் சர்வதேச அணி அந்தஸ்து கிடைத்தது.

    நெதர்லாந்து அணிக்கு 2022 வரை ஒருநாள் சர்வதேச அணி அந்தஸ்து ஏற்கெனவே பெற்றுவிட்டதால் நெதர்லாந்து அணியின் இந்த வெற்றி மூலம் ஹாங்காங் அணியைப் பின்னுக்குத் தள்ளி நேபாளம் ஒருநாள் கிரிக்கெட் அணி தகுதியைப் பெற்றது. அசோசியேட் அணிகளில் 3வது இடம் பிடித்ததால் நேபாளத்துக்கு இந்த ஒருநாள் சர்வதேச அணி அந்தஸ்து வழங்கப்பட்டது. நேபாளத்துக்கு 2022-ம் ஆண்டு வரை ஒருநாள் சர்வதேச அணி அந்தஸ்து கிடைத்துள்ளது.


    நேபாளம் பந்துவீச்சாளர் சந்தீப் லமிச்சானே 

    இதையடுத்து, சர்வதேச ஒருநாள் அந்தஸ்து பெற்றுள்ள நேபாளம், தனது முதல் சர்வதேச ஒருநாள் தொடரில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது. வருகிற ஆகஸ்ட் 1 மற்றும் 3-ம் தேதிகளில் நெதர்லாந்து நாட்டில் நடைபெறும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.  #ICC #Nepal #ODIdebut #Netherlands
    ×