search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அயர்லாந்து"

    • ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது.
    • முதல் போட்டியில் அயர்லாந்தும், 2-வது போட்டியில் ஆப்கானிஸ்தானும் வெற்றி பெற்றன.

    ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சார்ஜாவில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது.

    அதிகபட்சமாக இப்ராகிம் ஜட்ரான் 72 ரன்கள் எடுத்தார். பின்னர் விளையாடிய அயர்லாந்து 17.2 ஓவரில் 98 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதனால் ஆப்கானிஸ்தான் 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ஒமர்சாய் 4 விக்கெட்டும், நவீன்-உல்-ஹக் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இந்த வெற்றி மூலம் மூன்று ஆட்டம் கொண்ட 20 ஓவர் தொடரை ஆப்கானிஸ்தான் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் போட்டியில் அயர்லாந்தும், 2-வது போட்டியில் ஆப்கானிஸ்தானும் வெற்றி பெற்றன.

    • டி20 வரலாற்றில் 400 பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ஸ்டிர்லிங் படைத்தார்.
    • இவருக்கு அடுத்த இடத்தில் பாபர் அசாம் 395 பவுண்டரிகள் அடித்துள்ளார்.

    துபாய்:

    ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. அதில் அயர்லாந்து வெற்றி பெற்றது.

    இதில் அயர்லாந்து கேப்டன் பால் ஸ்டிர்லிங் 2 பவுண்டரிகள் உட்பட 25 ரன்கள் அடித்தார். இந்தப் போட்டியில் அடித்த 2 பவுண்டரிகள் சேர்த்து இதுவரை டி20 போட்டிகளில் அவர் அடித்த பவுண்டரிகளின் எண்ணிக்கை 401 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் சர்வதேச டி20 வரலாற்றில் 400 பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் என்ற மகத்தான சாதனையை அவர் படைத்துள்ளார்.

    டி20 போட்டிகளில் அதிக பவுண்டரிகள் அடித்தவர்களின் பட்டியல் வருமாறு:

    பால் ஸ்டிர்லிங் - 401 பவுண்டரிகள்

    பாபர் அசாம் - 395 பவுண்டரிகள்

    விராட் கோலி - 361 பவுண்டரிகள்

    ரோகித் சர்மா - 359 பவுண்டரிகள்

    டேவிட் வார்னர் - 320 பவுண்டரிகள்.

    • அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்தியா கைப்பற்றிவிட்டது.
    • தொடரை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய அணி கடைசி போட்டியை எதிர்கொள்ள இருக்கிறது.

    இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையில் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றி விட்டது.

    இந்த நிலையில், இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று துவங்க இருந்த நிலையில், போட்டி மழை காரணமாக தடைப்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே மழை பெய்து வந்ததால், போட்டியில் டாஸ் கூட போடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    அயர்லாந்தில் கருக்கலைப்பு செய்வதை சட்டபூர்வமாக அங்கீகரிக்க அந்நாட்டு அரசு எடுத்துள்ள முடிவுக்கு பின்னர், இந்திய வம்சாவளி பெண்ணின் உயிர் தியாகம் உள்ளது. #IrishAbortionLaws
    டப்ளின்:

    ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில் கருக்கலைப்பு செய்வது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. கருக்கலைப்பு குறித்து கடினமான சட்டம் நடைமுறையில் உள்ளது. கர்ப்பிணித் தாயின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே கருக்கலைப்பு செய்ய சட்டம் அனுமதிக்கிறது.

    கருக்கலைப்பு தண்டனைக்குரிய குற்றம் என்பதால், உரிய நேரத்தில் கருக்கலைப்பு செய்ய முடியாமல், இந்திய வம்சாவளி பல் மருத்துவர் சவிதா 2012ம் ஆண்டு உயிரிழந்தார். இது அயர்லாந்து மக்களிடையே அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

    அத்துடன், கருக்கலைப்பு சட்டத்தை மறுவரையறை செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் பேரணி நடத்தினர். இதையடுத்து சட்டத்தை மாற்ற அரசு முன்வந்தது. அதன்படி கருக்கலைப்புக்கு எதிரான சட்டத்தை திரும்பப் பெறுவது தொடர்பாக, மக்கள் கருத்தினை அறியும் வகையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    நேற்று முன்தினம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் கருக்கலைப்புக்கு ஆதரவாக சுமார் 66 சதவீதம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, இந்த கடுமையான கருக்கலைப்பு தடைச்சட்டத்தை ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

    ‘ஆறு வருட போராட்டத்திற்கு பின்னர் இந்த சட்டத்தை நீக்க அரசு முன்வந்துள்ளது. சவிதாவின் ஆத்மா இப்போது சாந்தியடைந்திருக்கும்’ என அவரது பெற்றோர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். #IrishAbortionLaws
    ×