என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "girl attacked"

    • கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் அனுபா அச்சுதன்.
    • சிறுமியின் முகம் உள்பட பல இடங்களை தாக்கினர்.

    அயர்லாந்தில் சமீபகாலமாக இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த 2 வாரங்களில் மூன்று தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது.

    இந்த நிலையில் இந்திய சிறுமி மீது தாக்குதல் நடந்துள்ளது. கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் அனுபா அச்சுதன். இவர் அயர்லாந்தில் 8 ஆண்டுகளாக நர்சாக பணியாற்றி வருகிறார். அவர் தனது கணவர், 2 குழந்தைகளுடன் தென்கிழக்கு அயர்லாந்தில் உள்ள வாட்டர் போர்டு நகரில் வசித்து வருகிறார்.

    அனுபாவின் 6 வயது மகள் நியா வீட்டு முன்பு விளையாடி கொண்டிருந்தபோது அவரை சில சிறுவர்கள் சரமாரியாக தாக்கினார்கள். சிறுமியின் முகம் உள்பட பல இடங்களை தாக்கினர். பின்னர் இந்தியாவுக்குத் திரும்பி செல்லுங்கள் என்று கூறிவிட்டு தப்பி சென்றனர்.

    இதுதொடர்பாக சிறுமியின் தாய் அனுபா போலீசில் புகார் செய்தார். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆவார்கள். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சங்கரன்கோவில் அருகே மகள் காணாமல் போனது குறித்து போலீஸ் நிலையத்தில் தாய் புகார் கொடுத்தார். இதை வாபஸ் வாங்க கோரி அப்பெண்ணை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள ஈச்சந்தா கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் மனைவி பொன்னுத்தாய் (வயது 45). சம்பவத்தன்று இவரின் மகள் காணாமல் போனது சம்பந்தமாக அதே ஊரை சேர்ந்த கார்த்திக் என்பவரின் மீது போலீசில் புகார் செய்திருந்தாராம். 

    இந்நிலையில் வெளியூர் சென்று விட்டு ஊருக்குள் வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த மாடசாமி (26) என்பவர் பொன்னுத்தாயிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது மாடசாமி தனது உறவினர் கார்த்திக் மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்க கூறியுள்ளார். 

     இதற்கு பொன்னுத்தாய் மறுத்து விட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த மாடசாமி பொன்னுதாயை அவதூறாக பேசி அடித்து உதைத்து விட்டு தப்பி சென்றுவிட்டார். 

    இதுகுறித்து சின்னகோவிலான்குளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாடசாமியை கைது செய்தனர். 
    ×