என் மலர்
நீங்கள் தேடியது "பெண் மீது தாக்குதல்"
- சொத்து பிரிக்கும்போது இருகுடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது.
- பெண்ணை தாக்கி அவரது செல்போனை உடைத்தனர்.
தேனி:
தேனி அருகே சுருளிதோட்டத்தை சேர்ந்தவர் திருமுருகன். இவருக்கு முதல் மனைவி மூலம் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்களை திருமுருகனின் அண்ணன் வளர்த்த வருகிறார். இந்த நிலையில் பரமேஸ்வரி என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். சொத்து பிரிக்கும்போது இருகுடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த திருமுருகனின் அண்ணன் திருமேனி, அவரது மனைவி வானதி, சுரேந்தர், சுபாஷினி ஆகியோர் பரமேஸ்வரியை தாக்கி அவரது செல்போனை உடைத்தனர். இதனைதொடர்ந்து அவரது கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரமேஸ்வரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் அளித்தபுகாரி ன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீஸ் அதிகாரியிடம் தாக்குவதை நிறுத்தும்படி, இந்த சம்பவத்தை பதிவு செய்தவர் வலியுறுத்தினார்.
- விசாரணை நடந்து வருவதாக கூறி லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் அலுவலகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன் பிரான்ஸ் நாட்டில் 17-வயது சிறுவனை காவல்துறை அதிகாரி சுட்டுக் கொன்றதால், அங்கு கலவரம் வெடித்தது. காவல்துறையினரின் அத்துமீறலை பலர் கண்டித்தனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி பகுதியில் போலீஸ் அதிகாரி ஒருவர், ஒரு பெண்ணை தரையில் தள்ளிவிட்டு, அவர் முகத்தில் மிளகுத்தூள் தூவி சித்ரவதை செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது.
இச்சம்பவம் ஜூன் 24 அன்று லான்காஸ்டரில் உள்ள வின்கோ (WinCo) மளிகை கடைக்கு வெளியே நடந்திருக்கிறது. ஆனால், கடைக்குள் திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு ஆணையும், பெண்ணையும் கைது செய்ததாகவே காவல்துறை தெரிவித்திருக்கிறது.
அந்த வீடியோவில், ஒரு காவல்துறை அதிகாரி, ஒரு ஆணுக்கு விலங்கிடுவது தெரிகிறது. அதே நேரம் ஒரு பெண் இந்த நிகழ்வுகளை பதிவு செய்கிறார். அப்போது ஒரு அதிகாரி அந்த பெண்ணை நோக்கிச் சென்று, அவளைப் பிடித்து கீழே தள்ளுகிறார். பின்னர், அப்பெண்ணின் முகத்தில் "பெப்பர் ஸ்பிரே" (Pepper Spray) தூவுகிறார். அப்பெண் சத்தமிட்டு, "என்னை தொடாதே" என்று கெஞ்சுவதும், கைது செய்யப்பட்ட நபர், "அவளை தாக்காதீர்கள். அவளுக்கு புற்றுநோய் இருக்கிறது" என கூறுவதையும் காண முடிகிறது.
இந்த சம்பவத்தை பதிவு செய்தவரும், அந்த பெண்ணை கீழே தள்ளிய அதிகாரியிடம் தாக்குவதை நிறுத்துமாறு கத்துகிறார்.
காவலரின் முழங்கால் அந்த பெண்ணின் கழுத்தில் இருந்ததா அல்லது முதுகில் இருந்ததா என்பது தெளிவாக தெரியவில்லை.
வீடியோவை பதிவு செய்த லிசா மிச்செல் காரெட், பாதுகாப்பு பணியில் முன்னர் இருந்ததாக தெரிகிறது. அதிகாரிகள் ஆணையும், பெண்ணையும் சூப்பர் மார்க்கெட்டிலிருந்து வெளியே அழைத்துச் செல்வதை கவனித்தவர் அதனை பதிவு செய்திருக்கிறார்.
வீடியோவில் உள்ள பெண், "என்னால் மூச்சுவிட முடியவில்லை" என்று கூறியதாக லிசா தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் அலுவலகம், விசாரணை நடந்து வருவதாக கூறி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், "தற்போதைய விசாரணைகள் தொடர்பான அறிக்கைகளை இன்னும் வெளியிடவில்லை என்றாலும், ஷெரீஃப் அலுவலக பணியாளர்கள் அனைத்து பொதுமக்களையும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக ஷெரிஃப் தெளிவுபடுத்தியுள்ளார். தங்கள் செயல்களுக்கு பணியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் குறித்த அடையாளங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இருவரும் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக மட்டும் ஷெரீஃப் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் (Minneapolis) நகரில், 2020 ஆம் ஆண்டு ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவர் காவல்துறை அதிகாரிகளால் இதே போன்று கீழே தள்ளப்பட்டு தாக்கப்பட்டதில் இறந்தது பெரும் பிரச்சனையானது குறிப்பிடத்தக்கது.
- எஸ்.மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் மற்றும் இவரது மனைவிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
- அவரது உறவினர்கள் 4 பேரும் பாரதரோஜாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
நிலக்கோட்ைட:
நிலக்கோட்டை அருகே எஸ்.மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 40). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பாரத ரோஜா (வயது 36). இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆனந்தராஜா (30) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
சம்பவத்தன்று பாரதரோஜா வீட்டுக்கு வந்த ஆனந்தராஜ், அவரது உறவினர்கள் குமார், பழனியம்மாள், தோப்புச்சாமி ஆகிய 4 பேரும் பாரதரோஜாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
மேலும் வீட்டுக்குள் வைத்தும் பூட்டினர். இது குறித்து நிலக்கோட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து ஆனந்தராஜா, பழனியம்மாள் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் ஆனந்தராஜா கொடுத்த புகாரின் பேரில் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து பாரதரோஜாவை கைது செய்தனர்.
சங்கரன்கோவில்:
பனவடலிசத்திரம் அருகே உள்ள கற்படத்தை சேர்ந்தவர் வெயிலுமுத்து மனைவி அங்கயற்கண்ணி (வயது 35). இதே ஊரை சேர்ந்த இவரின் தாய்மாமா ராஜேந்திரன் (49). ராஜேந்திரனிடம் கடந்த 20 வருடத்திற்கு முன்பு அங்கயற்கண்ணியின் தாயார் 45ஆயிரம் ரூபாய் கொடுத்து தற்போது குடியிருந்து வரும் வீட்டை வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் இருவரும் உறவினர்கள் என்பதால் நம்பிக்கையின் பேரில் பத்திரம் எழுதி வாங்க வில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் அங்கயற்கண்ணியிடம், ராஜேந்திரன் வீட்டை காலி செய்ய வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதற்கு அங்கயற்கண்ணி நான் தான் வீட்டை விலைக்கு வாங்கி விட்டேனே என கூறி மறுத்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்த அங்கயற்கண்ணியை அங்கு வந்த ராஜேந்திரன் மற்றும் அவரது மகன் கற்பகபாண்டியன் (25) ஆகியோர் சேர்ந்து வீட்டை காலி செய்ய வலியுறுத்தியுள்ளனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த ராஜேந்திரன் அரிவாளால் அங்கயற்கண்ணியை வெட்டி விட்டு வீட்டில் உள்ள பொருள்களை அடித்து உதைத்து சேதப்படுத்தி விட்டு சென்று விட்டார்.
இதில் காயமடைந்த அங்கயற்கண்ணி மருத்து மனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அய்யாபுரம் போலீசார் ராஜேந்திரன் மற்றும் அவரது மகன் கற்பகபாண்டியனை கைது செய்தனர்.
புதுவை தியாகராஜர்வீதியை சேர்ந்தவர் கணபதி ரவி. இவரது மனைவி விமலா (வயது38). இவர் பூமியான்பேட்டையை சேர்ந்த கிரிஜா என்பவரிடம் ஏலச்சீட்டு கட்டி வந்தார். ஏலச்சீட்டு தவணைக்காலம் முடிந்தும் விமலாவுக்கு அதற்கான பணத்தை கிரிஜா கொடுக்காமல் பல்வேறு காரணங்களை கூறி காலம் கடத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு விமலா ஏலச்சீட்டு பணத்தை கேட்க கிரிஜா வீட்டுக்கு சென்றார். அப்போது இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த கிரிஜா மற்றும் அவரது மகன் சரவணன் ஆகிய இருவரும் சேர்ந்து விமலாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து விமலா ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
திண்டுக்கல் அருகே உள்ள வடுகபட்டியைச் சேர்ந்த தாதன் மனைவி முத்துலெட்சுமி (வயது 40). இவர்கள் குடும்ப தேவைக்காக அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் கடன் வாங்கி இருந்தனர். கடந்த சில நாட்களாக கடன் தொகையை கட்டாமல் இருந்தனர். இது குறித்து அவர்களுக்குள் பல முறை வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று சின்னவர், முருகன் ஆகிய 2 பேரும் கடன் தொகையை கேட்டு சென்றுள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில் முத்துலெட்சுமியை அடித்து தாக்கியதுடன் வீட்டில் இருந்த பொருட்களையும் சூறையாடினர்.
படுகாயமடைந்த முத்துலெட்சுமி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வடமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
#tamilnews
பேரையூர்:
திருமங்கலம் அருகே உள்ள நாகையாபுரம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட ஏ.தொட்டியபட்டியை சேர்ந்தவர் முத்தையா. ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவருக்கு நாகஜோதி, சிவசுதா என்ற 2 மகள்களும் முத்துச்செல்வம் என்ற மகனும் உள்ளனர்.
நாகஜோதியின் கணவர் ஆண்டிச்சாமியும், சிவசுதாவின் கணவர் முத்துராஜாவும் ராணுவ வீரர்கள் ஆவார்கள்.
தற்போது முத்தையா தனது மகன் முத்துச் செல்வத்துக்காக புதிய வீடு கட்டி வந்தார். இது தொடர்பாக விடு முறையில் ஊருக்கு வந்திருந்த மருமகன்கள் ஆண்டிச்சாமியும், முத்து ராஜாவும் மாமனாரிடம் கேட்டுள்ளனர். இதில் அவர்களுக்குள் வாக்குவாதமும் ஏற்பட்டது.
நேற்றும் ஆண்டிச்சாமி இதுதொடர்பாக மனைவி நாகஜோதியிடம் பிரச்சினை செய்துள்ளார். அப்போது தன்னை தாக்கியதாக ஆண்டிச்சாமி, முத்துராஜா உறவினர் முத்து ஆகியோர் மீது நாகையாபுரம் போலீசில் நாகஜோதி புகார் செய்தார்.
அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ராணுவ வீரர்கள் ஆண்டிச்சாமி, முத்துராஜா உள்பட 3 பேரை கைது செய்தனர்.






