search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "US Police"

    • சியாட்டில் நகரில் சாலையை கடந்தபோது அந்த வழியாக வேகமாக வந்த போலீஸ் கார் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
    • மாணவியின் இறப்பை கிண்டல் செய்த போலீஸ் அதிகாரியை பணிநீக்கம் செய்யுமாறு புகார்கள் குவிந்து வருகின்றன.

    சியாட்டில்:

    ஆந்திராவை சேர்ந்த ஜானவி கண்டுலா (வயது 23) என்ற மாணவி அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வடகிழக்கு பல்கலைக்கழகத்தில் தகவல் அமைப்புகள் பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்த ஆண்டுடன் படிப்பு முடிந்து, வருகிற டிசம்பர் மாதம் பட்டம் பெற இருந்தார்.

    ஆனால் கடந்த ஜனவரி 23-ந்தேதி இரவு சியாட்டில் நகரில் சாலையை கடந்தபோது அந்த வழியாக வேகமாக வந்த போலீஸ் கார் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

    இது அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

    இந்த சம்பவத்தின்போது காரில் இருந்த டேனியல் ஆடரர் என்ற போலீஸ் அதிகாரி, விபத்து தொடர்பாக உயர் அதிகாரியிடம் தெரிவித்தபோது நடந்த உரையாடல் அவரது உடலில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகி இருந்தது.

    அதில் அவர், இளம்பெண்ணை வழக்கமான ஒரு நபர்தான் என்றும், அவரது உயிருக்கு குறைந்த மதிப்புதான் எனவும் கூறுகிறார். மேலும் வெறும் 11 ஆயிரம் டாலருக்கான ஒரு காசோலையை உடனே எழுதுங்கள் என்றும் கூறும் அவர், இளம்பெண்ணுக்கு ஒரு 26 வயது இருக்கும் என்றும் அலட்சியமாகவும், கிண்டலாகவும் கூறுகிறார்.

    இந்த வீடியோ பதிவு சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவிடம் மத்திய அரசு கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளதுடன், அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியது.

    அதன்படி, இது குறித்து விசாரணை நடத்தப்படும் என அமெரிக்கா உறுதியளித்து உள்ளது.

    இந்த நிலையில் விபத்தில் பலியான மாணவி ஜானவிக்கு வருகிற டிசம்பர் மாதம் பட்டம் வழங்கப்படும் (இறப்புக்குப்பின்) என பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.

    இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் கென்னத் ஹெண்டர்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஜானவியின் இழப்பை மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆழமாக உணருவார்கள். ஜானவிக்கு மரணத்திற்குப் பின் பட்டம் வழங்கி அதை அவரது குடும்பத்தினரிடம் வழங்க பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது' என குறிப்பிட்டு இருந்தார்.

    மேலும் மாணவியின் இறப்பு தொடர்பாக நடந்து வரும் விசாரணையில் நீதி கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.

    இதற்கிடையே மாணவியின் இறப்பை கிண்டல் செய்த போலீஸ் அதிகாரியை பணிநீக்கம் செய்யுமாறு புகார்கள் குவிந்து வருகின்றன.

    ஆனால் இந்த குற்றச்சாட்டை போலீஸ் அதிகாரிகள் சங்கம் மறுத்து உள்ளது. அந்த வீடியோவில் உரையாடலின் ஒரு பகுதி மட்டுமே இடம்பெற்றுள்ளதாகவும், மேலும் பல விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றும் அந்த சங்கம் கூறியுள்ளது.

    • காரை போலீஸ் அதிகாரி கெவின் டேவ் என்பவர் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டி வந்துள்ளார்.
    • அமெரிக்கா சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரகம் ஜானவி கண்டூலா மரணம் ஆழ்ந்த கவலை அளிப்பதாக உள்ளது.

    வாஷிங்டன்:

    ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜானவி கண்டூலா (வயது 23). இவர் அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணம் சியாட்டி நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் தகவல் அமைப்பு தொடர்பான முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார்.

    கடந்த ஜனவரி மாதம் இவர் சவுத் லேக் யூனியன் பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அதிவேகமாக வந்த போலீஸ் வாகனம் மாணவி ஜானவி கண்டூலா மீது பயங்கரமாக மோதியது. இதில் 100 மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அந்த காரை போலீஸ் அதிகாரி கெவின் டேவ் என்பவர் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டி வந்ததாக அவருடன் பயணித்த மற்றொரு போலீஸ் அதிகாரி டேனியல் ஆடரர் தெரிவித்துள்ளார். விபத்து நடந்ததும் அவர் உயர் அதிகாரி மைக்கோலன் என்பவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

    விபத்து நடந்தது குறித்து எடுத்துக்கூறிய டேனியல் ஆடரர் விபத்தில் இறந்தது வழக்கமான பெண்தான் 11ஆயிரம் டாலர் காசோலையை தயார் செய்து வையுங்கள். அவருக்கு 26 வயது தான் இருக்கும், எனவே பெரிய மதிப்பு இல்லை என்று சொல்லி விட்டு பலத்த சத்தத்துடன் சிரிக்கிறார். மைக்கோலனும் கேலி செய்து சிரிக்கிறார்.

    இந்த பேச்சுகள் அனைத்தும் போலீஸ் அதிகாரியின் சீருடையில் பொருத்தபட்டு இருந்த கேமராவில் (பாடிகேம்) வீடியோவாக பதிவாகி இருந் தது.

    விபத்தில் இறந்த இந்திய வம்சாவளி மாணவியை பற்றி 2 போலீஸ் அதிகாரிகளும் கேலி, கிண்டல் செய்யும் வீடியோவினை தற்போது போலீசார் வெளியிட்டு உள்ளனர். இந்த வீடியோ பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

    அமெரிக்கா சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரகம் ஜானவி கண்டூலா மரணம் ஆழ்ந்த கவலை அளிப்பதாக உள்ளது. இந்த மோசமான வழக்கில் தொடர்புடைய அதிகாரிகள் மீது முழுமையான விசாரணை நடத்தி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சியாட்டிலில் உள்ள உள்ளூர் அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளது. மேலும் வாஷிங்டனில் உள்ள மூத்த அதிகாரிகளிடமும் இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருப்பதாக இந்திய துணை தூதரகம் தெரிவித்து உள்ளது.

    • அலிஸா மெக்காமன் 2 குழந்தைகளின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது
    • பல குழந்தைகளுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பியுள்ளார்

    அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள மாநிலம் டென்னிசி. இதன் தலைநகரம் நாஷ்வில்.

    டென்னிசி மாநில டிப்டன் கவுன்டி பகுதியை சேர்ந்த கோவிங்டன் நகரத்தில் உள்ளது சார்ஜர் அகாடமி எனும் தொடக்கப்பள்ளி. இங்கு 4-வது வரை படிக்கும் குழந்தைகளுக்கு ஆசிரியையாக பணியாற்றியவர் 38 வயதான அலிஸா மெக்காமன் (Alissa McCommon). இவர் இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

    2021-ல் இவர் தன்னிடம் படித்த ஒரு 12-வயது முன்னாள் மாணவரிடம் தனது வீட்டில் பாலியல் அத்துமீறல் புரிந்தார். இது மட்டுமின்றி பல மாணவர்களிடம் தகாத பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டார்.

    இது தெரிய வந்ததும் அந்த மாணவரின் பெற்றோர் பள்ளியில் புகாரளித்தனர். இதனைத் தொடர்ந்து இவர் பள்ளியில் இருந்து ஊதியமின்றி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

    சில நாட்களுக்கு பிறகு இக்குற்றச்சாட்டு தொடர்பாக காவல்துறையிடமும் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை விசாரித்த காவல்துறையினர் குற்றச்சாட்டு உண்மை என கண்டறிந்து வழக்கு பதிவு செய்து அலிஸாவை அவரது வீட்டில் கைது செய்தனர். காவல்துறை விசாரணையில் பல மாணவர்களுடன் தகாத பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதை அவர் ஒப்பு கொண்டதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.

    அந்த ஆசிரியை இவ்வாறு முறைகேடான உரையாடல்களில் ஈடுபட்டதாகவும், பல குழந்தைகளுக்கு ஆபாச புகைப்படங்கள் அனுப்பியதாகவும், முறையற்ற உறவுக்கு அழைப்பு விடுத்ததாகவும் தற்போது பல குழந்தைகள் புகாரளித்துள்ளனர்.

    இதனையடுத்து சுமார் ரூ.20 லட்சம் ($25,000) பிணையில் வெளிவரும் வகையில் காவலில் அடைக்கப்பட்டார். ஆனால் அலிஸா இக்குற்றச்சாட்டுகளை மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்டவர்களுடன் காவல்துறை பேசி விவரங்களை சேகரித்து வருகிறது.

    அலிஸா பணியிலிருந்து நீக்கப்பட்ட அன்றே பள்ளி நிர்வாகம் அவர் மீது காவல்துறையில் புகாரளித்து அப்போதே அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என சில பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    அக்டோபர் 13 அன்று அலிஸா அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

    • போலீஸ் அதிகாரியிடம் தாக்குவதை நிறுத்தும்படி, இந்த சம்பவத்தை பதிவு செய்தவர் வலியுறுத்தினார்.
    • விசாரணை நடந்து வருவதாக கூறி லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் அலுவலகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

    சில நாட்களுக்கு முன் பிரான்ஸ் நாட்டில் 17-வயது சிறுவனை காவல்துறை அதிகாரி சுட்டுக் கொன்றதால், அங்கு கலவரம் வெடித்தது. காவல்துறையினரின் அத்துமீறலை பலர் கண்டித்தனர்.

    இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி பகுதியில் போலீஸ் அதிகாரி ஒருவர், ஒரு பெண்ணை தரையில் தள்ளிவிட்டு, அவர் முகத்தில் மிளகுத்தூள் தூவி சித்ரவதை செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது.

    இச்சம்பவம் ஜூன் 24 அன்று லான்காஸ்டரில் உள்ள வின்கோ (WinCo) மளிகை கடைக்கு வெளியே நடந்திருக்கிறது. ஆனால், கடைக்குள் திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு ஆணையும், பெண்ணையும் கைது செய்ததாகவே காவல்துறை தெரிவித்திருக்கிறது.

    அந்த வீடியோவில், ஒரு காவல்துறை அதிகாரி, ஒரு ஆணுக்கு விலங்கிடுவது தெரிகிறது. அதே நேரம் ஒரு பெண் இந்த நிகழ்வுகளை பதிவு செய்கிறார். அப்போது ஒரு அதிகாரி அந்த பெண்ணை நோக்கிச் சென்று, அவளைப் பிடித்து கீழே தள்ளுகிறார். பின்னர், அப்பெண்ணின் முகத்தில் "பெப்பர் ஸ்பிரே" (Pepper Spray) தூவுகிறார். அப்பெண் சத்தமிட்டு, "என்னை தொடாதே" என்று கெஞ்சுவதும், கைது செய்யப்பட்ட நபர், "அவளை தாக்காதீர்கள். அவளுக்கு புற்றுநோய் இருக்கிறது" என கூறுவதையும் காண முடிகிறது.

    இந்த சம்பவத்தை பதிவு செய்தவரும், அந்த பெண்ணை கீழே தள்ளிய அதிகாரியிடம் தாக்குவதை நிறுத்துமாறு கத்துகிறார்.

    காவலரின் முழங்கால் அந்த பெண்ணின் கழுத்தில் இருந்ததா அல்லது முதுகில் இருந்ததா என்பது தெளிவாக தெரியவில்லை.

    வீடியோவை பதிவு செய்த லிசா மிச்செல் காரெட், பாதுகாப்பு பணியில் முன்னர் இருந்ததாக தெரிகிறது. அதிகாரிகள் ஆணையும், பெண்ணையும் சூப்பர் மார்க்கெட்டிலிருந்து வெளியே அழைத்துச் செல்வதை கவனித்தவர் அதனை பதிவு செய்திருக்கிறார்.

    வீடியோவில் உள்ள பெண், "என்னால் மூச்சுவிட முடியவில்லை" என்று கூறியதாக லிசா தெரிவித்தார்.

    இச்சம்பவம் குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் அலுவலகம், விசாரணை நடந்து வருவதாக கூறி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதில், "தற்போதைய விசாரணைகள் தொடர்பான அறிக்கைகளை இன்னும் வெளியிடவில்லை என்றாலும், ஷெரீஃப் அலுவலக பணியாளர்கள் அனைத்து பொதுமக்களையும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக ஷெரிஃப் தெளிவுபடுத்தியுள்ளார். தங்கள் செயல்களுக்கு பணியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் குறித்த அடையாளங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இருவரும் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக மட்டும் ஷெரீஃப் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் (Minneapolis) நகரில், 2020 ஆம் ஆண்டு ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவர் காவல்துறை அதிகாரிகளால் இதே போன்று கீழே தள்ளப்பட்டு தாக்கப்பட்டதில் இறந்தது பெரும் பிரச்சனையானது குறிப்பிடத்தக்கது.

    விபசாரத்துக்கு வந்தாரா என அமெரிக்க போலீசார் விசாரணை நடத்தியது எனக்கு அதிர்ச்சியாகவும், அசிங்கமாகவும் இருந்தது என `நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தில் நடித்த மெஹ்ரீன் பிர்சாடா கூறியிருக்கிறார். #MehreenPirzada
    விபசார வழக்கில் தெலுங்கு தயாரிப்பாளரும், அவரது மனைவியும் கைது ஆனதை தொடர்ந்து அமெரிக்கா செல்லும் தென் இந்திய நடிகைகளை கடும் சோதனைகளுக்கு பிறகே அனுமதிக்கிறது அமெரிக்க போலீஸ்.

    தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா படங்களில் நடித்த நடிகை மெஹ்ரீனும் இந்த விசாரணையால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    தெலுங்கு படங்களில் நடித்து வரும் மெஹ்ரீன் பிர்சாடா கனடாவின் வான்கூவர் நகரில் நடந்த தெலுங்கு பட ஷூட்டிங்கில் கலந்து கொண்ட பிறகு தனது குடும்பத்தாரை சந்திக்க அமெரிக்கா சென்றுள்ளார்.

    அப்போது அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இது குறித்து மெஹ்ரீன் கூறி இருப்பதாவது:-

    நான் தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருப்பதால் எனக்கு நடந்த வி‌ஷயம் தெரியாது. நான் ஒரு நடிகை, அதுவும் தெலுங்கு நடிகை என்றதுமே 30 நிமிடம் விசாரணை நடத்தினார்கள்.



    எனக்கு அதிர்ச்சியாகவும், அசிங்கமாகவும் இருந்தது. நடிகைகள் அமெரிக்காவுக்கு வந்து விபச்சாரத்தில் ஈடுபட்டது குறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர்.

    அதனால் அமெரிக்காவுக்கு வரும் அனைத்து தெலுங்கு நடிகைகளிடமும் விசாரணை நடத்துவதாக அவர்கள் மேலும் கூறினார்கள். பின்னர் அவர்கள் மன்னிப்பும் கேட்டனர்’

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிகாகோவில் வசித்து வந்து தெலுங்கு படங்களை தயாரித்த கி‌ஷன் மற்றும் அவரின் மனைவி சந்திரா ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தெலுங்கு, கன்னட நடிகைகளை கலாச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அமெரிக்காவுக்கு வருமாறு அழைத்து அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. #MehreenPirzada

    ×